நக்கீரன் போன்ற பத்திரிகைகளும் நாட்டுக்கு தேவையே

நக்கீரனை பற்றி தெரியாதா என பலர் கிளம்பியிருக்கின்றார்கள்

ஆட்டோ சங்கர் கதை முதல் சசிகலாவின் மர்ம சாம்ராஜ்யம் வரை வெளிகொணர்ந்தது அவர்கள்தான்

சந்தண வீரப்பனை முதலில் வெளி உலகிற்கு காட்டியதும் அவர்கள்தான்

நிர்மலா தேவி மர்மத்தை முதலில் சொன்னவர்களும் அவர்கள்தான்

இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் மூடி மறைக்கபட்ட மாளிகையின் அடிக்கல்லை அசைத்ததும் அவர்கள்தான்

( மற்றபடி இந்த திராவிடம், புலிகள் என கிளம்புவதெல்லாம் அவர்களின் காமெடி ரகம்..)

பொள்ளாச்சி சம்பவத்தை அவர்கள் கிளறிய பின்பே இன்று குற்றவாளிகள் மேல் குண்டர்சட்டம் வரை செல்கின்றது

பொள்ளாச்சி ஜெயராமன் தானாக முன்வந்து என்னமோ சொல்கின்றார்

நக்கீரன் போன்ற பத்திரிகைகளும் நாட்டுக்கு தேவையே அதை மறுக்க முடியாது

யாரும் தொட தயங்கும் விஷயங்களை உயிருக்கு அஞ்சாமல் அவர்களால் மட்டுமே சொல்லமுடிகின்றது

உங்களாலும் என்னாலும் அதை செய்யமுடியாது எனும்பொழுது வரவேற்றே தீரவேண்டும்