அவர் பெரியார், அவர்தான் பெரியார்..

இந்த நாட்டை இந்தியா பாகிஸ்தான் என பிரிக்க கூடாது, வட இந்தியா தென் இந்தியா என பிரிக்க வேண்டும் என சொல்லிகொண்டிருந்தார் ஈரோட்டு ராம்சாமி

“சரியப்பா, அங்கே ஜின்னா பெரும் கூட்டம் கூட்டி தனிநாடு கேட்டான், பெரும் கலவரமும் ஆர்பாட்டமும் அவனால் வந்தது, நிலமை சமாளிக்க முடியாமல் போய்கொண்டிருகின்றது, நீரும் உம் திராவிட கழகத்தை திரட்டி தனி தென்னாடு வேண்டும், திராவிட நாடு வேண்டும் என கேளும்

அட அவ்வளவு வேண்டாம் தென்னக இஸ்லாமியரை திரட்டி பாகிஸ்தானை ஆதரிக்காதீர், வட இந்தியா தென் இந்தியா என பிரிப்பதை ஆதரிப்பீர் என சொல்லி ஜின்னாவினை பலவீனபடுத்துங்கள், அதன் பின் பார்க்கலாம்

முக்கியமாக நீங்கள் சொல்லும் திராவிட நாட்டின் பெரும் பகுதி ஐதரபாத் நிஜாமிடம் உள்ளது, அவர் பாகிஸ்தான் ஆதரவு அல்லது தனி நாடு எனும் முடிவில் இருக்கின்றார், அவரையும் உங்கள் திராவிட நாடு அல்லது தென்னாட்டுக்கு இழுத்து வாருங்கள்” என சொன்னது அந்நாளைய காங்கிரஸ்

“ஈரோடு காஞ்சிபுரம் உட்பட்ட பகுதிகளை இணைத்து திராவிட நாடு முடியுமா?” என்ற ரீதியில் கேட்ட ராம்சாமியிடம் அதன் பின் யாருமே பேசவில்லை

ஆம் கேரள நம்பூதிகள் என்றால் அய்யயோ சமூக நீதி என ஓடிய ராம்சாமி, தனிகாட்டு ராஜாவாக ஆண்டுகொண்டிருந்த ஐதரபாத் சமஸ்தானம் பக்கம் சமூக நீதிக்கு செல்லவே இல்லை, காரணம் சென்றால் வரமுடியாது

இவ்வளவுக்கும் ஐதரபாத்தும் திராவிட பூமிதான்,

அட அவ்வளவு ஏன் பாண்டிச்சேரி எனும் பிரான்ஸ்காரன் பிடித்துவைத்த திராவிட‌ பிரதேசம் திராவிட நாட்டில் வருமா என்பது பற்றி கூட ராம்சாமி யோசிக்கவே இல்லை

ஐதரபாத் சமஸ்தானம் உலகத்துல நம்பர் 1 பணக்கார சம்ஸ்தானம், அவன்கிட்ட போயி திராவிடத்துக்கு வாங்கண்ணா வருவானா?, என்ன செய்யலாம் மீதி இருக்கும் திராவிட நாட்டுக்கு எப்படி மக்களிடம் ஆதரவு திரட்டலாம், ஜின்னா போல் கிளர்ச்சி செய்யலாம் என அண்ணாதுரையினையும் கருணாநிதியினையும் நோக்கினார் ராம்சாமி

இருவரும் கதவுகளை அடைத்து கொண்டு தீவிர சினிமா வசனம் எழுதினர், திராவிட நாட்டு எழுச்சி பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை

தீவிர சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு இருந்த நேரம் இங்கே பிரிவினை, திராவிட தென்னாடு என பேசினால் முடி கூட மிஞ்சாது என்பது அவர்களுக்கு தெரியும்..

இனி ஒன்றும் தேறாது என முடிவு செய்த ராம்சாமி, இனி திராவிட கோட்டையினை கட்டுவதை விட மணியம்மையினை கட்டுவது சரியென முடிவு செய்தார்

அதன் பின் வடநாடு தென்னாடு பிரிவு, திராவிட நாட்டில் ஐதரபாத் சமஸ்தானம் இருக்குமா?, நிஜாம் தன் சமஸ்தானத்தை திராவிட நாட்டில் இணைப்பாரா? பிரான்ஸ்காரன் பாண்டிச்சேரியினை திராவிடத்துக்கு தருவானா?ஆற்காடு நவாபுக்கு திராவிட நாடு கட்டுபடுமா போன்ற கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் அப்படியே அமைதியானார்

ஏன் அப்படி செய்தார் ராம்சாமி

ஏனெனில் அவர் பெரியார், அவர்தான் பெரியார்..

சாதி ஒற்றுமை

பெரியாரால் கூட கொண்டுவரமுடியா சாதி ஒற்றுமையினை பல நூறு சொத்துமதிப்பு கொண்ட சங்கங்களால் செய்ய முடிகின்றது
தெட்சன நாடார் சங்கம் என்பது அபராதத்தில் ஓடும் சங்கம் அல்ல, கிட்டதட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை கொண்டது என சொல்லபட்டாலும் மதிப்பு அதை விட அதிகம் இருக்கலாம்..
வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த சிவகாசி விருதுநகர் நாடார்கள் தங்களுக்காக உருவாக்கியது நாடார் சங்கம்
நாடார்கள் கல்வியிலும் வியாபாரத்திலும் வளர வேண்டும், அச்சமூகம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கபட்டது அது
அதாவது கால சூழல் அப்படியானது, திராவிட குரல்களுக்கும் முந்தைய காலமது
ஆனால் தென்னகத்து நாடார்கள் அதில் ஒட்டமுடியவில்லை, பெயர்தான் நாடார் சங்கமே தவிர, விருதுநகர் நாடாருக்கும் நெல்லை நாடாருக்கும் இடைவெளி அதிகம்
இதில் இந்த ஆதித்த வம்சவளி நாடார்கள் என சொல்லிகொண்டவர்கள் தெட்சன நாடார் சங்கத்தை தொடங்கினார்கள், அவர்கள் தலைநகரம் நெல்லை
வியாபார கோட்டையான சிவகாசி சாத்தூருக்கு பதிலாக தூத்துகுடி மற்றும் நாகர்கோவில் கோட்டார் வளர தொடங்கியதும் சங்கம் உருவாக இன்னொரு காரணம்
சிவந்தி ஆதித்தனின் முப்பாட்டன் காலத்தில் தொடங்கபட்டது , நெல்லை தூத்துகுடி நாடார்கள் பணத்தில் அது வளர்ந்தது
நெல்லையர் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் வளர்ந்தது மும்பையிலும் வளர்ந்தது
பள்ளி, கல்லூரிகள் அது இது என வளர்ந்த சங்கம் பல நூறு கோடிகளை இன்று கொண்டிருக்கின்றது, பெரும் பணம் புரளும் இடம் அது
அப்படிபட்ட சக்திவாய்ந்த சங்கத்தை 
சிவந்தி ஆதித்தன் குடும்பம் அதை வைத்திருந்தது, பின்பு தென்னகத்து அம்பானி வைகுண்டராஜன் கைபற்றினார்
மணல் விவகாரத்தில் அவருக்கு நெருக்கடி வந்தபொழுது எதெல்லாம் தனக்கு இல்லாததை உணர்ந்தார், அவரின் சிந்தனையில் தனக்கென ஒரு ஊடகம் , பெரும் சங்கம் இல்லை என்பது அவருக்கு தெரிந்தது
நியூஸ்7 வந்தது போலவே சங்கமும் அண்ணாச்சி கைக்கு சென்றது, ஆனால் இதுவரை சங்கம் அண்ணாச்சிக்கு ஆதரவாக என்ன குரல் எழுப்பிற்று என்றால் ஒன்றுமே இல்லை, ஒரு முறை விஜயகாந்தினை கண்டித்ததோடு சரி.
இப்படியாக சங்கத்தை ஆளாளுக்கு வைத்திருந்தார்கள், சில நேரங்களில் சில ரவுடிகளின் கரங்களும் இருந்தன‌
இப்பொழுது என்னாயிற்று என தெரியவில்லை
கரகாட்டகாரன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் சிவந்தி வைத்திருந்தார், தூத்துகுடி தொழிலதிபர்கள் வைத்திருந்தனர், வைகுண்டராஜன் வைத்திருந்தார், இப்பொழுது சங்கத்தை யார் வைத்திருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை
ஆனால் முதல் முறையாக தேவர் சமூகம் நாடார் சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் உண்மை நிலவரம் அது அல்ல‌
ஒளித்து சொல்ல ஒன்றுமில்லை, திறந்தே சொல்லலாம். ஒரு காலத்தில் கமுதி மறவருக்கும் சிவகாசி நாடார்களுக்குமான கலவரங்களே இம்மாதிரி சங்கம் தொடர ஆரம்ப புள்ளி
பின் அது தொடர்ந்தது, இரு சமூகத்திற்கும் பசும்பொன் தேவர் காலத்தில் முறுக்கியது, சசிவர்ண தேவர் காலத்திலும் நிலமை சுமூகமாக இல்லை
1997 வரை இருபக்கமும் முட்டிகொண்டேதான் இருந்தது,இன்றும் கணல் உண்டு
இதில் இன்று 
எப்படி சாத்தியம் என்றால் அதுதான் அரசியல் விளையாட்டு
சாதிகள் எல்லாம் அரசியலாகிவிட்ட நிலையில் எல்லா சங்கங்களிலும் எல்லா சாதியினையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிலை
காரணம் சங்கத்து சொத்து, பணம், பதவி, அனுகூலம் இன்னபிற, வளைந்து நெளிந்து செல்லாமல் எதிர்காலம் இல்லை
போதாதா?
நாடார் சங்கத்தை தேவர் வாழ்த்த தொடங்கியாயிற்று
அதைத்தான் சொன்னோம், பெரியாரால் முடியாத சாதி ஒழிப்பினை பணம் செய்கின்றது
அப்புறம் என்ன?
இனி பசும்பொன் குருபூஜைக்கு வரலாற்றில் முதல் முறையாக இந்த நாடார் சங்க தலைவர் காளிதாச நாடார் செல்ல வாய்ப்பு இருக்கின்றது
ஒழிக சாதிகள், பெருகட்டும் ஒற்றுமைகள்
பசும்பொன் தேவரையும், காமராஜரையும் ஒன்றாய் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது
அதற்காக விரைவில் சரத்குமாரையும், கார்த்திக்கையும் ஒரே போஸ்டரில் போடுவார்கள் பாருங்கள் அதுதான் சகிக்க முடியாதது
அதைவிட ஆபத்து இந்த கராத்தே செல்வினும் கட்டதுரையும் ஒரே போஸ்டரில் வந்துவிட்டாலும் உண்டு
அப்படி ஒரு போஸ்டர் வருமா என்றால் நிச்சயம் வரும், காரணம் அரசியலும், பணமும் எல்லாம் செய்யும்
(என்னை அடிக்கடி பஸ்டாண்டுக்கு வா என சொல்லும் சாதி வெறியர்கள் இந்த போஸ்டரை பார்த்து விட்டு எந்த மருத்துவமனையில் கிடக்கின்றார்களோ தெரியாது)
ஒரு கோஷ்டி இதில் தினகரனின் அரசியல் விளையாட்டும் உண்டு என்கின்றது , சொல்லமுடியாது ஆர்.கே நகர் இடைதேர்தலில் இதே நாடார் சங்க கோஷ்டியான சபாபதி, வைகுண்டராஜன் எல்லாம் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் வென்ற சம்பவமும் நடந்தது
அதனால் இதில் டிடிவி தினகரனின் கரங்கங்களும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது
அது ஒரு வேளை உண்மையாக இருந்தால் 
“இரண்டாம் பெரியார்” யார்?
சாட்சாத் டிடிவி தினகரனே தான் [ October 25, 2018 ]
Image may contain: 3 people, people smiling
Image may contain: 9 people, people smiling, people standing

சிதறல்கள்

பெரியார் சிலை அவமதிப்பு: தூண்டியோர் மீதும் கடும் நடவடிக்கை தேவை; ராமதாஸ்

பெரியார் சிலைக்கே இந்தபாடு என்றால், விரைவில் இவர் திறக்க இருக்கும் காடுவெட்டி குருவின் சிலை என்ன பாடுபடும்?

அந்த பயம் டாக்டருக்கு இருக்குமா இருக்காதா?


அடேய் ஆண்டிபெரியார்ஸ் பண்டாரங்களா…

இங்கு பெரியாரின் சித்தாந்தமோ இல்லை அவரின் கொள்கைகளோ அரசியலை பிடிக்கவில்லை, ஆட்சி அமைக்கவில்லை

ஆட்சியினை பிடித்தது சினிமா, இன்றுவரை அதை ஆட்டிவைப்பதும் சினிமா, ஏதோ பெரியார் தங்கள் அரசியல் வாழ்வினை தொடங்கியதற்காக சில காரியங்களை செய்தார்கள், அத்தோடு பெரியாரை தூக்கி வீசினார்கள்

பெரியார் சொன்ன மகத்தான சிந்தனையில் ஒன்று “கூத்தாடிகளை அரசியலில் சேர்க்காதீர்கள்” குறிப்பாக ராமசந்திரன் சுடபட்டபொழுது பெரியார் தீர்க்கமாக சொன்னார்

“இரண்டு கூத்தாடிபயலுக சுட்டுகொண்டதை அரசியலாக்குற அளவு, அந்த ராமசந்திரன் எனும் நடிகனுக்காக இந்த மாகாணமே பதறுற அளவு நாடு கெட்டு போச்சுங்க”

பக்தவச்சலத்திற்கு பின் வந்த சினிமாக்காரர் அல்லாத முதல்வர்கள் பன்னீரும் பழனிச்சாமியும் என்றால் நீங்களே பார்த்துகொள்ளுங்கள்

பெரியாரை திட்டாதீர்கள், அவரை வைத்து அயோக்கிய அரசியலை சினிமா முகங்களை காட்டி செய்த இன்னும் செய்ய துடிக்கும் அயோக்கியர்களை திட்டுங்கள்

அவரை வைத்து பிழைப்பு நடத்துபவனை திட்டுங்கள்

பெரியாரே ஒரு கட்டத்தில் தேசியவாதி காமராஜரைத்தான் ஆதரித்தார் , தன்னால் வளர்ந்த கூட்டத்தை தள்ளியே வைத்திருந்தார்,

இறுதிவரை அவர்களோடு சேரவுமில்லை அவர்களை அழைக்கவுமில்லை என்பதை மறக்காதீர்கள்

இங்கு உடைக்க வேண்டியது பெரியார் சிலையினையோ இல்லை அவரின் சிந்தனையினையோ அல்ல. அதெல்லாம் வேறுரகம்

மாறாக ஒழிக்கவேண்டியது சினிமா எனும் சாக்கடையினையே அன்றி வேறல்ல‌

தமிழ்நாட்டை நாசமாக்கியது நிச்சயம் பெரியார் அல்ல, இந்த சினிமா கூட்டமே

இடிப்பதாக இருந்தால் திரையரங்குகளை இடியுங்கள், செருப்பு வீசுவதாக இருந்தால் அந்த சினிமாக்காரர்கள் மேல் வீசுங்கள்.

(குஷ்புவினை மட்டும் விட்டுவிடுங்கள்)

அதை செய்யாமல் பெரியார் மேல் வன்மம் கொண்டு அலைவது அறிவுடமை ஆகாது

————————————————————————————————————————————-

நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம்: ஹெச்.ராஜா ஆஜராக உத்தரவு

கோர்ட்டில் “நான் அவன் இல்லை” என அன்னார் வசனம் பேசுவார் என எதிர்ப்பார்க்கலாம், இதனால் ஒரிஜினல் எச்.ராசாவினை பிடிக்க கோர்ட் உத்தரவிடலாம்


எல்லா மாநில அரசுகளும் பெட்ரோலுக்கான வரியினை இரண்டு ரூபாய் குறைக்கும் பொழுது பழனிச்சாமி அரசு மட்டும் அப்படி குறைக்காமல் மாறாக அரசு பணியாளர்களுக்கு அகவிலைபடி 2% அதிகரித்துள்ளது

இந்த பழனிச்சாமிதான் முன்பு அரசு ஊழியர்களால் பெரும் நிதி இழப்பு ஏற்படுகின்றது என்றவர், இப்பொழுது அவர்தான் படியினையும் உயர்த்தி இருக்கின்றார்

அரசு ஊழியர்கள் மட்டும்தான் தமிழக மக்கள் என நினைத்துகொண்டார் போலும்


பேசியதை கூட “ஆமாம் நானே பேசினேன்..” என ஒப்புகொள்ள தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் பாகிஸ்தானை பிடித்து அகண்ட பாரதம் அமைத்து சீனாவினை பிடித்து சீறும் பாரதமும் அமைப்பார்களாம்

அட அது டப்பிங் வேலையாகவே இருக்கட்டும், ஆம் நானே சொன்னேன் என தைரியமாக சொல்லி ஸ்கோர் செய்ய வேண்டாமா? அது அல்லவா அரசியல்..

இவர்களை எல்லாம் நம்பி ராமர் வேறு அயோத்தியில் அனாதையாக நிற்கின்றார்


இன்று எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் அரசை கண்டித்து, தமிழகமெங்கும் திமுக போராட்டம் நடத்துகின்றது, நிச்சயம் செய்யவேண்டிய போராட்டம்.

ஆனால் ஒரு பத்திரிகை பரபரப்புமில்லை அதனை பரவலாக்கவில்லை

இதுவே திமுக உட்கட்சி தகறாறு என்றால் ஆளாளுக்கு செய்தியாக வெளியிட்டு கொண்டே இருப்பார்கள், பிளாஷ் நியூஸ் எல்லாம் ஓடும்

அட அதுகூட வேண்டாம், திமுக உறுப்பினர் எங்காவது காமிராவில் சிக்கினாலும் போதும், ஓடிவந்து குவிவார்கள்

ஏன் என்றால் அப்படித்தான்


 

நாளை ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன, பரபரப்பிற்கு பஞ்சமில்லா ஆட்டமிது

இப்பொழுதுவரை பெரியார் வாழ்க, திராவிடம் வாழ்க என சொல்பவன் பூரா பயலும் நாளை இந்தியா வாழ்க , இந்தியா வெல்க என சொல்லிகொண்டிருப்பான்

அவனுக்கு கைதட்ட ஓரு சீசனும், ரீசனும் வேண்டும் அவ்வளவுதான்

பெரியாரின் தமிழ் சீரமைப்பு காலத்தின் தேவை

பெரியார் பிறந்தநாள் அதுவுமாக அவர்மேல் ஏகபட்ட பழிகளை சுமத்துகின்றார்கள்

எப்படி?

பெரியார் தமிழை சீரமைகின்றேன் என கெடுத்தார், தமிழை கொன்றார் என ஏகபட்ட குற்றசாட்டுகள்

காலத்திற்கு ஏற்ப மொழிமாறும், பெரியார் காலத்து தமிழ் சங்க காலத்து தமிழ் அல்ல, அது மாறி இருந்தது. சம்ஸ்கிருதமும் இன்னும் என்னவெல்லாமொ கலந்திருந்தது

ஏட்டு தமிழுக்கும் தமிழர் பேசும் தமிழுக்கும் ஏக சிக்கல் இருந்தது, உதாரணம் “ஸ்ரிமான்களே பந்து மித்திரருடன்” என எப்படியோ இருந்தது

இன்னொன்று பலருக்கு தமிழ் பேச தெரியுமே தவிர எழுதபபடிக்க தெரியாது

பெரியார் பாமரர்களும் படிக்க எளிய தமிழில் பத்திரிகை நடத்தினார், அதனால் தமிழில் சில சமரசங்களை செய்தார்

இது ஒன்றும் வரலாற்றில் புதிதல்ல, இங்கிலாந்திடம் இருந்து விடுதலைபெற்ற அமெரிக்கா ஆங்கிலத்தில் இதனைத்தான் செய்தது, மொழியினை எளிமையாக்கியது

விளைவு அம்மக்கள் வாசித்தார்கள், சிந்தித்தார்கள் அமெரிக்கா வளர்ந்தது

பெரியாரும் இங்கு அதைத்தான் செய்தார், அவர் பாமர தமிழில் எழுதியபின்புதான் இங்கு வாசிக்கும் பழக்கம் வந்தது, மேட்டுகுடி இங்கு அப்படித்தான் சரிந்தது

பெரியாரின் தமிழ் சீரமைப்பு காலத்தின் தேவை,

பாமரனும் வாசிக்கும் பழக்கம் பெரியாரால் தொடங்கிவைக்கபட்டது சந்தேகமில்லை

அக்கால தமிழ் அப்படி ஒரு மேட்டிமையுடன், சம்ஸ்கிருதம் கலந்து யாருக்கும் புரியாமலே இருந்தது, நிச்சயமாக சொல்லலாம் , ஏன் இப்பொழுது படித்தாலும் நமக்கே புரியவில்லை

வேண்டுமென்றால் அக்கால சுதேச மித்திரனையும், பெரியாரின் விடுதலை , குடி அரசு பத்திரிகைகளை படியுங்கள் புரியும்

அடுத்து பெரியார் இட ஓதுக்கீடு கேட்டு சமூகத்தை சீரழித்தார் என்கின்றார்கள், உண்மையில் இட ஒதுக்கீடு கேட்டது நீதிகட்சி, பெரியார் அதன் தொடர்ச்சியினைத்தான் செய்தார்

தாழகிடக்கும் எல்லா இனங்களையும் கை தூக்கிவிட இலங்கை முதல் பல நாடுகளில் இட ஒதுக்கீடு இன்றும் உண்டு

இதுபோக பெரியார் ஒழுக்கம் இல்லாதவர் என்கின்றது ஒரு கும்பல், அப்படி அவர்கள் வீட்டில் எந்த முப்பாட்டி கையினை பிடித்து இழுத்தார் பெரியார் என்பதுதான் தெரியவில்லை

பெரியார் பெண்களை சுதந்திரமாக சிந்திக்க சொன்னார், பெண் விடுதலையினை பெரியாருக்கு முன் பாடியவர் பாரதியார், எப்படி எல்லாமோ சாடினார்

ஆனால் பாரதியினை மறைத்துவிட்டு பெரியாரின் பெண் விடுதலையினை ஒழுக்கம் கெட்ட செயல் என்பது கடுமையான பிற்போக்குதனம்

இந்த உலகில் பெண்களை சரிசமமாக நடத்தும் நாடுகளே இன்று உச்சத்தில் இருக்கின்றன, பெண்களை அடிமையாக நடத்தும் நாடுகள் எல்லா ஆப்கானிஸ்தான் லெவல்

பெரியார் அதைத்தான் செய்ய சொன்னார், தமிழக பெண்கள் ஐரோப்பிய பெண்களை போல் தன் சொந்த காலில் நிற்கவேண்டும், யாரையும் எதிர்பார்க்க கூடாது என்றார்

இது எப்படி தவறாகும்?

பெரியாரின் ஒழுக்கம் எதில்கெட்டது என்றால் மணியம்மையினை திருமணம் செய்தது தவறாம், தத்து எடுத்திருக்க வேண்டுமாம்

பெரியார் தனக்கு வாரிசு வேண்டுமென தவித்தபொழுது அவருக்கு வயது ஏறிற்று, அந்த கலகக்காருடன் முன்பின் தெரியா பெண் ஒருத்தி குடும்பம் நடத்துவது நிச்சயம் சரிவராது

வயதான கிழவனை மணக்க எந்த இளம்பெண் முன்வருவாள்?அதுவும் சமூக கலகக்காரனை மணக்க யார் வருவா? நிச்சயம் வாய்ப்பே இல்லை

இவர்கள் எல்லாம் இக்காலத்தில் வந்தது பெரியாரின் தவறு அல்ல‌

இன்னொன்று மணியம்மையினை அவர் தத்தெடுக்க அக்கால சட்டங்கள் எல்லாம் குறுக்கே நின்றது

இதனை எல்லாம் யோசித்துத்தான், ராஜாஜியின் ஆலோசனையில்தான் பெரியார் மணியம்மையினை மணந்தார்

மணியம்மைக்கே அதில் ஒரு தயக்கமுமில்லை எனும்பொழுது இவர்கள் ஏன் குதிகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

பெரியார் ஏதோ தன் சகாக்களுடன் மணமேடையில் இருந்த மணியம்மையினை கடத்தி வந்து கதற கதற தாலிகட்டியது போல குற்றம் சாட்டுகின்றார்கள்

பெரியார் பெரும் அறிவாளி, தீர்க்கதிரிசியும் கூட, அன்றே அவருக்கு உலக அறிவு நிரம்ப இருந்தது

உலகெல்லாம் சுற்றி அந்நாடுகள் நிலையினையும் தமிழக நிலையினையும் ஒப்பிட்டு பார்த்தார்

அந்த ஐரொப்பிய சுதந்திர மனப்பான்மையில் , சாதி கடந்து மதம் கடந்து, பெண்களை மதிக்க கூடிய சமூகம் உருவாக வேண்டும் என கனவு கண்டார், அதற்காக உழைத்தார்

இறுதிவரை உழைத்தார்

அதனை போற்றவேண்டுமே தவிர தூற்ற கூடாது

பெரியாரை இப்படி எல்லாம் குற்றம் சாட்டுவது யாரென கண்டால் மதவெறியர்கள்

இவர்களுக்கு என்ன வேண்டும் என்றால் ஆப்கன், ஈரான், இன்னபிற நாடுகள் மத இறுக்கத்தால் சீரழிந்துகிடப்பது போல இத்தேசமும் தமிழகமும் சீரழிந்து கிடக்கவேண்டும் என்பது அவர்களின் சீழ்பிடித்த சிந்தையின் ஆசை

அது நடக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் பெரியாரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள்

பெரியார் விரும்பியது பிரான்ஸ் போல, அமெரிக்கா போல சுதந்திர மனப்பான்மையும், பெண்ணை சரிசமமாக நடத்தும் ஒரு சமூகம்

அதுதான் இவர்களுக்கு பொறுக்கவில்லை என்றால் பெரியார் அவர்களுக்கு பிடிக்காமலே போகட்டும்

இவர்களுக்கெல்லாம் என்ன வயிற்றெரிச்சல் என்றால், அந்த கிழவன் இவ்வளவு பெரும் கூட்டத்தை கூட்டிவிட்டான், செத்து இத்தனை வருடமானாலும் அவனின் சிலையினை கூட தொடமுடியவில்லை எனும் வருத்தமும் கோபமும் அழுகையுமன்றி வேறல்ல‌

அவர்கள் சாதி இல்லாமலும், மனிதரை சரிசமமாக நடத்தியும், பெண் சுதந்திரத்தை காத்தும் இருந்தால் பெரியார் ஏன் எழும்பபோகின்றார்? அவருக்கு பின் இவ்வளவு கூட்டம் திரள போகின்றது

அதை எல்லாம் அக்கும்பல் யோசிப்பதில்லை

முதலில் உங்களை சரிபடுத்துங்கள், இல்லையேல் பெரியார் வழியில் பலர் வந்துகொண்டே இருப்பார்கள்

அதுவும் விநாயக சதுர்த்தி அலப்பறைகளை கண்டு இப்பொழுதே பலர் பெரியாருக்கு மாலை போட்டு வணங்கி கொண்டிருக்கின்றனர்

பெரியாரை இன்னும் இங்கு இருக்க வைப்பதும், அவரை தேட வைப்பதும் இக்கும்பலே அன்றி பெரியார் அல்ல.

Image may contain: one or more people, beard and smoking
————————————————————————————————————————————

பெரியார் சிலை மேல் ஆங்காங்கு செருப்பையும், இன்னும் சிலவற்றையும் எறிந்துவிட்டார்களாம், அவர்களை மாவீரர்கள் என ஒரு கூட்டம் சொல்லி கொண்டிருக்கின்றது

வாழும் காலத்தில் தன் போராட்ட வாழ்வில்மட்டும் பெரியார் மலர் மாலைகளை மட்டுமா பெற்றார்?

அப்பொழுதும் அவருக்கு செருப்பும், கற்களுமே பரிசாக மேடைக்கு வந்தன, அப்பொழுது எறிந்தவன் யாரென தெரியாது என்பது வேறு விஷயம்

வாழும் காலத்திலே செருப்புகளையும் கற்களையும் பெற்ற பெரியாரின் சிலைக்கு இப்பொழுது செருப்பு விழுகின்றது என்றால் அவர் இன்னும் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார், போராடி கொண்டிருக்கின்றார் என்றுதான் பொருள்


ராமசந்திரனும், ஜெயலிதாவும் ஏதோ தனிமனித ஒழுக்கத்தில் கரை கண்டவர்கள் போல இந்த பதர்களில் சில பெரியார் ஒழுக்கம் கெட்டவர் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

ராமசந்திரன், ஜெயா ஒழுக்கம் பற்றி எவனாவது பேசுவானா என்றால் பேசமாட்டான், பெரியார் என்றவுடன் ஒழுக்கம்ம்ம்ம் என ஓடிவருவான்

பெரியார் இரு மனைவிகளை கட்டினார், ஆனால் கைவிடவில்லை

மனைவியினை விட்டுவிட்டு சமூகத்தை காக்கின்றேன் என ஓடிவருவதா ஒழுக்கம்?

அப்படிபட்டவர் பிரதமராய் இருக்கும்பொழுது கட்டிய மனைவியினை காப்பாற்றாத, இல்லற ஒழுக்கத்தை காப்பாற்றா நீரா நாட்டை காப்பாற்ற போகின்றீர் என் ஒருபயலும் கேட்கவில்லை

ஆனால் பெரியார் என்றால் மட்டும் ஓடிவந்து ஒழுக்கம் என்ன விலை என கேட்பார்களாம்

தமிழக சட்டமன்றத்திலே திறக்கபட்டிருக்கும் ஜெயா ஒழுக்கம் பற்றி என்றாவது இவர்கள் பேசுவார்களா என்றால் இல்லவே இல்லை

பெரியாரை தவிர வேறு யாரின் ஒழுக்கமும் இவர்கள் கண்ணில் படவே படாது.


 

என்ன சொன்னாலும் பெரியார் ஒழுக்கம் என சொல்பவன் சொல்லிகொண்டேதான் இருக்கின்றான், அவரின் சிந்தனைகளை பார் என்றால் அவரின் வேட்டியினையே பார்த்து கொண்டிருக்கின்றார்
ஆனானபட்ட இயேசு மேலே விபச்சாரிகளோடு பழகுகின்றார் என்ற குற்றசாட்டு இருந்தது, அதனால் அவரின் போதனைகளை தள்ளிவைக்க முடியுமா?
ஒழுக்கம் கெட்ட யேசுவின் போதனை வேண்டாம் என உலகம் சொல்லுமா?
பெரியார் மணியம்மையினை மணமுடிக்க ஏகப்பட்ட காரணம் இருந்தது, அதை எல்லாம் விளக்கிவிட்டுத்தான், சட்ட சிக்கல்களை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் செய்தார்
திருமணம் என்பது தனிபட்ட விஷயம்.
சிலர் இன்னும் மேலாக அதுவும் கலைஞர் அப்படி இப்படி என ஒரே சத்தம்
கேட்டால் கண்ணதாசனின் வனமாசம் என்பார்கள், ஆனால் அவரின் வனவாசம் படியுங்கள் காமராஜரை அவர் கிழித்த கிழி இருக்கும்
கண்ணதாசன் அப்படியான மனிதராக இருந்திருக்கின்றார், உதவினால் உத்தமர் என்பதும் உதவாவிட்டால் போட்டு மிதிப்பதும் அவர் குணம்
இந்த வாஜ்பாய், பொன்னார் போல் எல்லோரும் திருமணம் முடிக்காமல் இருக்க கட்சிகள் ஒன்றும் ஆன்மீக மடம் அல்ல‌
வெளிநாட்டு அதிபர்கள் எல்லாம் மனைவியோடு அல்லது மனைவியரோடுத்தான் வருவார்கள்
கென்னடி பெண்கள் விஷயத்தில் வீக், ஆனால் இன்றுவரை அமெரிக்காவின் மிகசிறந்த அதிபர் அவர்தான்
நேரு மகா உத்தமர் அல்ல, ஆனால் இந்தியாவின் மிகசிறந்த பிரதமர் அவர்தான்
நெப்போலியனின் மஞ்ச கணக்கு சொல்லிமுடியாது ஆனால் வரலாற்றில் மிகபெரிய வீரன் அவனே
லிபிய அதிபர் கடாபியின் தனிகணக்கு பெரிது ஆனால் அவனை போல லிபியாவினை இன்னொருவன் ஆளமுடியாது
இன்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அதிகார பூர்வ கணக்கு மூன்று
டிரம்ப் சாதிக்காமல் இருக்கவுமில்லை சந்நியாசி மோடி சாதிக்கவுமில்லை
நாட்டை வழிநடத்த திறமை போதும் என்பதே வரலாறு சொல்வது
ஒழுக்கமானவர்கள் எல்லாம் அரசை நன்றாக நடத்தியதுமில்லை, ஒழுக்கம் கெட்டவர்கள் எல்லாம் நாட்டை வாழவைக்காமல் கெடுத்ததுமில்லை
நீங்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு என மடங்களுக்கு ஆளெடுக்கும் கட்டுபாட்டை அரசியலுக்கு விதிக்க முடியாது

ஆனான பட்ட இயேசு பிரான் மீதே தீண்டதகாத சமாரியர் பக்கம் சென்றார், பாவியான பெண்களோடு பழகினார் என்ற குற்றசாட்டு உள்ள உலகிது
பெரியாரும் அதைத்தான் செய்தார், ஆனால் ஒழுக்கம் கெட்டவர் என திட்டுகின்றார்கள்
எல்லோரும் முதுகுளத்தூர் கலவரங்களை பற்றி பேச அஞ்சி, முத்துராமலிங்க தேவரை எதிர்க்க யாருமில்லாமல் பதுங்கிய காலத்தில் , எல்லோரும் தேவரய்யா என வணங்கிய காலத்தில் மிக துணிச்சலாக “அந்த முத்துராமலிங்கம் எனும் பயலை பிடிச்சி உள்ளே போடுங்க” என சொன்னார் பெரியார், அந்த தைரியமே சமூக ஒழுக்கம்
“இது நம் கோவில் ஆனால் நாங்கள் வரமுடியாது, இது நம் கிணறு ஆனால் எங்களுக்கு நீர் இல்லை, இது பொதுதெரு ஆனால் நாங்கள் நடக்க முடியாது ஏனென்றால் நாங்கள் தாழ்ந்த சாதி” 
இது கடவுளின் ஏற்பாடாக இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நீங்களும் பொய், உங்கள் மதமும் பொய், அந்த ஆண்டவனே பொய் என தைரியமாக சொன்னதுதான் சமூக ஒழுக்கம்
அந்த சமூக ஒழுக்கம் பெரியாரை தவிர யாரிடமும் இல்லை

பெரும் மனித உரிமை போராளி பெரியார்

எனக்கு கிறிஸ்துவினை பிடிக்கும் ஆனால் அவரை பின்பற்றா கிறிஸ்தவர்களை பிடிக்காது என்றார் காந்தி. அப்படியே எமக்கு பெரியாரை பிடிக்கும் ஆனால் அவரின் கொள்கைகளை தாங்கி பிடிப்பதாக அரசியல் மோசடி செய்யும் பெரியாரிஸ்டுகளை அவ்வளவு பிடிக்காது

பெரியாருக்கு இன்று [ September 17, 2018 ] 140ம் நாள் பிறந்தநாள். கொஞ்சம் அவரை நினைத்துவிட்டு வரலாம்

கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார்.

புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில், பர்மாவில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு அவர்களை மதமற்றோர் பட்டியலில் சேர்த்துவிடுவார்.

தென் தமிழகத்தை பொறுத்தவரை நாம் கண்ட பெரும் மனித உரிமை போராளி பெரியார்.

அவரில் இயேசு கிறிஸ்துவின் சாயல் இருந்தது, ஆம் இயேசு தீண்டதகாதவர்கள் என ஒதுக்கபட்ட மக்களை எல்லாம் அருகில் சேர்த்திருந்தார். பெரியாரிடம் புத்தனின் சாயல் இருந்தது அவர் அப்படி சாதிகளை கடக்க சொன்னார்

பெரியாரிடம் கன்பூசியஸ் சாயலும் இருந்தது, அவர் சிந்திக்கவும் சொன்னார்

ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கலாம், ஆனால் மனிதன் மனிதனாக வாழ சாதி கொடுமை தடையானால், அந்த சாதிக்கு மதம்தான் காரணம் என்றால்? ஆண்டவனே வேண்டாம் எனும் தைரியம் அவருக்குத்தான் வந்தது.

அந்த காலத்தில் மிக தைரியமாக முழங்க பெரியார் ஒருவருக்கே அந்த தைரியம் இருந்தது. அந்த தைரியம் வாழ்த்துகுரியது

அந்தகாலம் விநோதமானது, பிரிட்டிசார் ஆண்டாலும் உண்மையில் இந்தியர்களை நிர்வகித்தது ஒரு உயர்சமூகம், அதுதான் சகல விதங்களில் உயர்ந்தது என்றும், இறைவனின் பிரநிதிகள் நாங்கள் என்பதிலும் உறுதியாக இருந்தது.

இருந்த கொஞ்சம் அரசு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் அவர்கள் ஆதிக்கம் இருந்தது

அவர்கள் படிப்பதுதான் கல்வி, அவர்களுக்கு தனி ஆலயம், தனி உணவகம், தனிபாதை, தனி பத்த்ரிகை என ஏராளமான‌ அட்டகாசம், தாளாத அட்டகாசம். கிட்டதட்ட நபிபெருமான் காலத்தில் மற்ற மக்களை யூதர்கள் ஒதுக்கிவைத்த அதே நிலை.

யூதனாவது அவன் மதத்தில் குறுக்கிடும் வரை கொடியவன் அல்ல, ஆனால் இங்கு சாதியின் பெயரால் சக மனிதனை விலங்குகளை விட, அவன் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டின் சாணத்தைவிட இழிவாக பார்த்த்வர்களை என்ன சொல்வது?

மதத்தை மதத்தால் எதிர்த்தால் அது பெரும் வரலாற்றுபிழை, இன்று உலகில் நடக்கும் மகாகலவரங்களுக்கு காரணம் அதுவே. இதனை அற்புதமாக கண்டுகொண்ட பாமரந்தான் ஈரோட்டு ராமசாமி.

மதத்தை மானுடத்தால் அடிக்கலாம், மனிதன் கல்வி கற்று, மானத்தோடு வாழ்ந்தால் மதத்தின் உண்மை அவனுக்கு தெரியவரும், யாவரும் சமம், மானிட சமூகம் மதத்தால் அல்ல அறிவால் உயரவேண்டியது என்பது அவர்கொள்கை.

கிட்டதட்ட இந்திய எதார்த்தம் அவருக்கு புரிந்தபொழுது வயது 50 நெருங்கிற்று, ஒரு மனிதன் ஒய்வெடுக்கும் வயதில்தான் பெரியார் சமூகத்தை சீர் திருத்த தொடங்கினார்.

இப்பொழுது சமுதாய நலனை 4 அல்லக்கைகளை கொண்டு கூட்டம் போட்டு சொல்லமுடிகின்றது, பலருக்கு முகநூலிலே கணல் தெறிக்க, விரல்கள் தேய தேய‌ புரட்சி செய்ய முடிகின்றது.

பெரியாரின் காலம் அப்படி அல்ல, கடவுளின் பிரதிநிதிகளை எதிர்த்து “கடவுள் இல்லை மனிதம் உண்டு” என முழங்குவது சாமான்யம் அல்ல (இன்றும் தமிழகதில் டிராபிக் ராமசாமி நிலை தெரியும்), அவர் சிங்கமென முழங்கினார்,
பாமரர்களிடம் பாமர தமிழில் விளக்கினார், வாசிக்க தெரிந்தவருக்கு பத்திரிகை நடத்தி விளங்க வைத்தார்.

அன்றைய சென்னை ராஜதானியில் அய்யர்,அய்யங்கார்,நம்பூதிரி, சாஸ்திரி என ஆட்டம்போட்ட அனைவருக்கும் சாட்டையடி கொடுத்தார்.

இன்றைய வாசிக்கும் பழக்கம் அவர் கொடுத்தது, இன்று எல்லா அநீதிகளுக்கும் சில‌ எதிர்குரல்கள் வருகிறது என்றால் அதனை தொடங்கிவைத்த பிதாமகன் அவர்.

பெண்ணடிமைக்கு எதிராக அணலாய் எழுந்த குரல் அவருடையது, செயல் அவருடையது, தேவதாசி கொடுமைக்காக சட்டமன்றத்தில் அதனை ஆதரித்த காங்கிரஸ் பெரியவரை எதிர்த்து “உங்கள் வீட்டுபெண் அப்படி இருக்கட்டும், எமது பெண்ணக் வாழவிடுங்கள்” என சொன்ன முத்துலட்சுமி ரெட்டி குரலின் அடிநாதம் பெரியார்.

சொன்னால் சொல்லிகொண்டே போகலாம், ஆனால் ஆட்சியை மாற்ற(கைபற்ற) விரும்பியர்களிடம் அவர் சொன்னது, ஆட்சி நமது குறிக்கோள் அல்ல, நாம் விரும்புவது சமூக மாற்றம், அதில் இறுதிவரை நின்றார். (சமூகமாவது மண்ணாவது என ஒரு கும்பல் ஆட்சி பிடித்து பெரியார் பெயரினை கெடுத்தது, இன்னும் கெடுத்துகொண்டிருப்பது வேறுவிஷயம்)

ஆனால் அவர் தள்ளாத வயதிலும் மூத்திர சட்டியை சுமந்து, தமிழக மூலை முடுக்கெல்லாம் போதித்துகொண்டுதான் இருந்தார்.

மேல்நாட்டில் ஒரு சபை உண்டு, அவர்கள் கொள்கை விசித்திரமானது

பைபிளின் ஆதிஆகமத்தில் கடவுள் அறிவுகொடுக்கும் பழத்தை தடை செய்வார், அதாவது மனிதன் அறிவுபெறுவது அவருக்கு பிடிக்கவில்லை,
ஆனால் கொடியவன் என்றாலும் மனிதன் அறிவுபெறட்டும் என கனி கொடுத்தவன் அதாவது மனிதன் அறிவுபெற்வேண்டுமென்று அவன் தான் ஆசைபட்டானாம்.

அப்படியே மனிதன் அறிவுபெற்றான், உலகம் மாறிற்று என அவனை கொண்டாடும் மதமே உண்டு.

அதுவேறு விஷயம்.

பொல்லாத சாத்தானையே கொண்டாடும் உலகில், மிக‌கொடிய கட்டுபாடுகளால் மதத்தின் பெயரால் மனிதனை மிருகமாக்கிய மத்தினை கண்டித்து மனிதனுக்கு கல்வியும் சிந்தனையும் தேவை என முழங்கிய பாமர மனிதனை கொண்டாடுவதில் என்ன தவறு காணமுடியும்?

சாக்ரடீசும்,லிங்கனும்,லெனினும்,புத்தனும்,மகாவீரரும், பெரியாரும், வேறு அல்ல. எல்லாமே மனிதனை மனிதனை மனிதனாக நடத்துங்கள் என சொல்லிய மகான்கள்.

இன்று நடக்கும் கூத்துகளோ அல்லது சில கீழ்தரமான பெரியார் எதிர்ப்புக்களோ கண்டு உண்மையான பெரியார் விரும்பிகள் சினமடையமாட்டார்கள்.

காரணம் அவர் கடந்த அவமானமும்,நெருப்பாறும் அப்படியானவை.

ஒருமுறை பெண்ணுரிமை பற்றியும் கற்பு இன்னபிற பெண்கள் நிலைபற்றி அச்சிலேற்றமுடியாத வார்த்தையை அவரிடம் கேட்டார்கள்.

அமைதியாக சொன்னார் “என் வீட்டுபெண் எனக்கு அடிமை அல்ல, அவள் வாழ்க்கையை சுதந்திரமாய் வாழ அனுமதிப்பேன், அது அவள்விருப்பம்”,
அக்காலத்தில் இந்தவார்த்தை பெரியாரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

உற்சாகமாக சிலர் இன்று அவரை அவமானபடுத்தலாம், இன்று மதத்தின் பெயரால் அவர் படத்தினை இழிவுபடுத்துபவர் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும்.

அதாவது இந்தியாவில் இவர்கள் நம்பிகொண்டிருப்பது போல ஒரு மதபுரட்சி நடக்கலாம், அப்பொழுது சாதி இல்லா இந்துமதம் அமைப்பீர்களாயின் அது நிச்சயம் பெரியாரின் வெற்றி.

அப்படி அல்லாமல் சாதியோடு இந்துமதம் அமைப்பீராயின் நிச்சயம் இன்னொருவன் பின்னாளில் போராட வருவான், அவன் படிக்கும் மேஜையின் மீது பெரியார் சிரித்துகொண்டிருப்பார்.

பெரியார் என்பது ஒரு தென்னிந்திய மானிடபுரட்சியின் அடையாளம், அவர் சிந்தனையின் இமயம், பல காட்டாறுகள் அதில் உருவாகுமே தவிர அது அசையாது.
இந்துமதம் சாதியை ஒழித்தாலும் அல்லது எழுச்சிபெற்று ஓளிவீசி சாதியால் சரிந்தாலும் அதில் அந்த தாடிக்கார கிழவன் முகம் நிச்சயம் தெரியும்.

அதனால்தான் உறுதியாக சொல்லமுடியும் அவருக்கு ஒருகாலமும் தோல்வியில்லை, இல்லவே இல்லை.
காரணம் அவர் நேசித்தது ம‌தமோ,பதவியோ,இன துவேஷமோ அல்ல‌ மானுடனத்தினை.

மானுடத்தை நேசிப்பவர்கள் வரலாற்றில் அழியா இடம்பிடித்தவர்கள்,பல மகான்களை சுமந்த இந்த உலகவரலாறு இதனை அழுத்தமாக பதிந்துவைத்திருக்கின்றது.

பெரியாரை பழிப்பவர்கள் ஒன்று அவரை புரிந்து கொள்ளோதார இருக்க முடியும் அல்லது அந்த கோஷ்டியாக மடுமே இருக்க முடியும்.

அந்த கலகக்காரன் காலதினால் வந்தவன், காலத்தை வென்றவன், எக்காலமும் இங்கு தேவைபடுபவன்.

காலத்தால் வந்த கலககாரனுக்கு இன்று பிறந்த நாள், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: one or more people, sunglasses and beard