பெரும்போரின் களப்பலி : 03

ஹிரோஷிமா பெரும் போர்

Image may contain: outdoor

மனிதர்கள் வாழ தகுதியற்று, அணு ஆபத்து முத்திரையுடன் கைவிடபட்ட ரஷ்ய செர்னோபில் நகரம் 

கூடங்குளம் அணுவுலையின் கழிவினை எங்கு பாதுகாப்பீர்கள் என திரு.உதயகுமார் கேட்ட‌ கேள்விகளுக்கு குழப்பமான பதிலை சொல்லிவந்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் சொல்லியது,முதலில் அணுகழிவினை எடுத்துசெல்ல முடிவு செய்த ரஷ்யா,இப்பொழுது மறுக்கின்றது.

காரணம் இதுதான், கார்ப்பசேவின் கசப்பு மருந்து ஓவர்டோசாக வேலை செய்து, சோவியத் யூனியனை பக்கவாதத்தில் தள்ள, கருணை கொலையாக சோவியத்தை கலைத்தார். கோர்ப்பசேவ். 17 துண்டாக ரஷ்யா சிதற அவர்களின் அணு ஆயுத மையங்களும் சிதறின, யாருக்கு எதன் மீது அதிகாரம் என்பதே தெரியாத குழப்பான நிலை.

இந்த சிக்கலில் சிக்கிய ரஷ்யா, பின்னர் அமெரிக்கவுடன் அணுஆயுத குறைப்பு ஒப்பந்தமும் செயதது, இன்று இரு நாடுகளும் அணுஆயுதம் புதிதாக சோதிக்க மாட்டோம் என கையெழுத்திட்டன‌, காரணம் இரு நாடுகளும் கிட்டதட்ட 3000 மேற்பட்ட வெடிப்புகளை நடத்தியாயிற்று, இதற்குமேல் சோதிக்க ஒன்றுமில்லை.

ஆனால் உதயகுமார் அவர்களின் அந்த முக்கியமான கேள்விக்கு சொன்ன பதில் கழிவுகள் கூடன்குள வளாகத்திலே புதைக்கபடும் என்றார்கள். யாரேனும் கசாப்பிற்கு பெரியப்பா மகனோ அல்லது யகூப் மேமனுக்கு சித்தப்பா உறவோ அவ்வளவு ஏன் ஈழம் அமைந்துவிட்டால் சிங்களர்களில் ஒருவனோ வந்து அந்த கழிவினை தோண்டி எடுத்து பெட்டியை திறந்தால்?

அதாவது ஈழம் இன்னும் 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் கழித்து அமைந்தாலும் அணுகழிவு 200000 ஆண்டு வரை வீரியமாக இருக்கும் என்பதுதான் ஆபத்து.

இதை சொன்ன உதயகுமார் தேர்தலில் தோற்றதும், காவிகொடி பிடித்தவர் பார்லிமெண்டில் தூங்குவதும், ஆப்ரிக்க நாடுகளை தவிர தமிழகத்தில்தான் சாத்தியம். ஒரு ஆராய்ச்சியாளன் சொன்னான் சோமாலியா பழக்கவழக்கங்களுக்கும் தமிழருகும் நிறைய ஒற்றுமை உண்டென்று, இருந்தாலும் இருக்கலாம்.

அணுகுண்டு கலையில் கரை கண்டு ஒய்வெடுத்தவர்கள் மேற்கத்தியர். இக்காலம் வரை கூட பிரச்சினை இல்லை, இரு வல்லரசுகளும் உலகை ஆட்டிய நிலைமாறி, உலகின் சமநிலை குறைந்து ஒற்றை வல்லரசாக அமெரிக்கா ஆளும்பொழுது, ஏராளமான தீவிரவாத குழுக்கள் அட்டகாசம் செய்யும் காலமிது.

ஒரு கட்டத்தில் மெகா தீவிரவாத அமைப்புக்கள் எல்லாம் அணுகுண்டை தேடின, இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றன, அவர்களில் முதன் முதலாக தேடியவர் பின்லேடன்.

கையில்துப்பாக்கி, முகமூடி கொண்ட 10 பேர் என்றுதான் தீவிரவாதிகளை தெரியும், பெரும் அரசாங்கங்களே அணுஆயுதம் செய்ய தலைகீழாக நின்றாலும் முடியாத பட்சத்தில் ஒதுங்க ஒரடி நிலம் கூட கிடைக்காத தீவிரவாதிகளுக்கு எப்படி சாத்தியமாகும்?

சாத்தியம் இருந்தது, சோவியத் யூனியனின் அணுவுலைகள்,ஆயுத கிடங்குகள் அது சிதறும்பொழுது பல நாடுகளுக்கும் சிதறியது. இன்றும் தீவிரவாதிகளுக்கு கறுப்பு சந்தை ஆயுதங்களுக்கு அந்நாடுகளே சொர்க்கபுரி, உலகின் பணம் கொழிக்கும் இரண்ட்டாம் தொழிலில் ஆயுத தரகு.

பின்லேடன் போன்ற கோடீஸ்வர தீவிரவாதிக்கு அந்த ஆசை வந்தது தவறில்லை, ஆனால் வைத்து சோதிக்க ஒரு நாடு அல்லது ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா
அவர் ஆப்ரிக்காவில் இருந்த பொழுது கிட்டதட்ட சூடானை ஆண்டுகொண்டிருந்தார், நேரடியாக அல்ல விக்ரம் படத்தில் அம்ஜத்கானின் நாட்டினை சத்தியராஜ் ஆண்டுகொண்டிருப்பார் அல்லவா அப்படி.

எப்படியோ ஒரு புரோக்கரை பிடித்து பின்லேடனுக்கு அறிமுகபடுத்தினார்கள், அவரும் மயில்சாமி போலவே, “ஒன்றும் பிரச்சினை இல்லை, உங்களுக்காக செய்கிறேன், இல்லை என்றால் கூட கொஞ்சம் பணமிருந்தால் முடித்துவிடலாம்” என்றார், கடும் பாதுகாப்பிடையே ஒரு பெரிய பெட்டியை கொடுத்துவிட்டு முகவரியை மாற்றிவிட்டு பட்சி பறந்தது.

பெட்டியில் இருந்தது ஈயமும்,இன்னும் சில கன உலோகங்களும், அவற்றை வைத்து தீபாவளி அணுகுண்டு கூட செய்ய முடியாது, இது பின்லேடனின் இரண்டாம் அனுபவம், முதலனுபபம் ஒரு நைஜீரிய முன்னாள் ராணுவ அதிகாரி, நைஜீரியர்கள் பராக்கிரமம் பற்றி இணையம் பயன்படுத்தும் எல்லோரும் அறிந்திருக்கலாம்.

ஒருவேளை பின்லேடன் தனது முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால், அமெரிககா அல்லது ஐரோப்பாவின் நிலை “வரம் கொடுத்த சிவன் நிலைதான்”,

நல்லவேளையாக இன்னும் எந்த தீவிரவாதிகள் கையிலும் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு அணுஆயுத நாட்டினை தீவிரவாதிகள் கைப்பற்றினால் என்ன ஆகும்?
குரங்கின் கையில் ஏ.கே 56 கிடைத்தால்,அல்லது ஒரு ஏவுகனையின் ரிமோட் கிடைத்தால் என்ன ஆகுமோ அதுவே தான்.

அவ்வாறு நடக்க‌ வாய்புள்ள நாடாக பாகிஸ்தான் அடையாளம் காணப்பட்டு, எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையுள்ள நாட்டின் அணுகுண்டுகள் வேறுபகுதிக்கு மாற்றபட்டதாக அதிகாரமற்ற தகவலுண்டு.

(இடையில் புலிகள் அணுகுண்டு வாங்க முற்படுகின்றார்கள் என இலங்கை கூட சீரியசாக காமெடி செய்தது, 
அணுகுண்டு ஏன்? புலிகளிடம் விமான எதிர்ப்பு நுட்பமும், வசதியும் இருந்திருந்தால் புலிகளின் கால் நகத்தை கூட நெருங்கியிருக்க முடியாது என்பது வேறுவிஷயம்)

அணுகுண்டாவது பிரம்மாஸ்திரம், சில டிரிக்கர்களை கடைசி கட்டத்தில் சொருகி வீசினால்தான் வெடிக்கும், ஆனால் அணுவுலைகள் கிட்டதட்ட உறங்கும் எரிமலை போன்றவைதான், தீவிரவாதி புகுந்தாலோ அல்லது தொழில்நுட்பம் தோற்றாலோ தீர்ந்தது மனுக்குலம்.

கடந்த 65 ஆண்டுகளாகத்தான் அணுநுட்பத்தினை மனித குலம் பயன்படுத்துகிறது, ஹிரோசிமா, நாகசாகி எனும் இடங்களில் நேரடியாகவும், ஆர்டிக், அண்டார்டிக் பகுதியயில் ரஷ்யா அமெரிக்கா நடத்திய அணுசோதனைகளில் மறைமுகமாகவும் ஏராள அழிவுகள் உண்டு.

அணுவுலை வெடித்தால் என்ன நடக்கும் என்பதற்கு செர்னோபில்லும், அமெரிக்க 3 மைல் தீவும் பெரிய அழிவு அடையாளங்கள், அதுவும் செர்னோபில்லில் 40 அடி தடிமன் கொண்ட, (கவனியுங்கள் தடிமன்) கொண்ட காங்ரீட் போட்டு அணுவுலையினை மூடிவைத்திருக்கின்றார்கள்.

2011ல் புக்குஷிமாவில் நடந்த விபத்து எல்லோரும் அறிந்தது, ஜப்பானியர் இன்னும் ரோபாட்கள் உதவியோடு போராடி கொண்டுதான் இருக்கின்றார்கள், சமீப்த்தில் கூட ஜப்பானிய மக்களை அப்பகுதியை காலிசெய்ய சொல்லி சர்ச்சையில் சிக்கியது ஜப்பான்.

மிக சிறிய உலை வெடித்த செர்னோபில்லில் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கபட்டுள்ள பகுதி கிட்டதட்ட 100 சதுரமைல், அதாவது தென் தமிழ்நாடு மற்றும் தென்கேரளா பரப்பளவு கொண்டது. இந்த உண்மையை உரக்க சொன்ன உதயகுமார் பெற்ற வாக்குகள் 15,000 மட்டும்,

அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசினாலும் அவர் சொன்னது நிதர்சனமான உண்மை,அணுஅழிவுக்கு புல்லும்,மண்ணும் கூட தப்ப இயலாது, அந்த அழிக்கும் சக்திக்கு மதம்,இனம்,மொழி ஏதும் வேறுபாடு தெரியாத அகால நெருப்பு அது.

உலகத்தினை உற்று கவனியுங்கள், ஆகஸ்ட் 6ம் தேதியும் இன்னும் ஆகஸ்ட் 9ம தேதியும் அணுகுண்டை நினைவுபடுத்துவார்கள், ஜப்பானியர்கள் பாதிக்கபட்டார்கள் என‌ கண்ணீர் விடுவார்கள்,ஊர்வலம் எல்லாம் போவார்கள்.

இனி உலகில் அணுகுண்டே வேண்டாம் என்று அணுகுண்டு வைத்திருக்கும் நாட்டு தலைவர்களே போதிப்பார்கள், போதிக்கட்டும். அரசியல் அப்படித்தான்

Image may contain: outdoorஆனால் செர்னோபில் அணுவுலை விபத்தினை நினைவுபடுத்தும் ஏப்ரல் 26ம் தேதியன்று, எந்த நாட்டு தலைவரோ அல்லது அரசியல் தலைவரோ அஞ்சலி செலுத்தினார் என நாம் கேட்டதுண்டா?, கேட்கபோவதும் இல்லை. ஒரு அஞ்சலி ஊர்வலமாவது செர்னோபில்லுக்கு ஆதரவாக நடந்திருக்குமா?

நடந்திருந்தால் டிராம்பே, கல்பாக்கம்,கூடங்குளம் இங்கெல்லாம் அணுவுலை அமைந்திருக்குமா?
காரணம் அதையே நினைவுபடுத்தினால் அணுவுலையை எதிர்ப்பார்கள், பணம் கொழிக்கும் வியாபாரம் படுக்கும், புது குண்டுகள் செய்யமுடியாது, பக்கத்து நாட்டை அச்சுறுத்த முடியாது. நிச்சயமாக செர்னோபில்லில் இறந்த மக்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இன்றுள்ள சூழ்நிலையில் எந்த நாடும் இன்னொரு நாட்டின் மீது அணுகுண்டினை வீசிவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது, உலகபோருக்கு பின் பலபோர்களை நடத்திய அமெரிக்கா இன்றுவரை அணுஆயுதத்தை தொடவில்லை, அணுஆயுத‌ நாட்டோடு சண்டையிடவுமில்லை, இனியும் செய்யாது,

மிஞ்சி போனால் இருக்கிறது “பொருளாதார தடை” எல்லா நாடுகளும் எதிரிகளை பயமுறுத்தவே அணுகுண்டுகளை வைத்துள்ளன, எல்லா நாடுகளுக்கும் பொறுப்புண்டு.

ஆனால் உலகில் பாதுகாப்பான அணுவுலை என எதையும் நீங்கள் காட்டமுடியாது, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கண்காணிக்கலாம் அவ்வளவுதான், மீறி வெடித்தாலோ அல்லது ஒரு குரங்கு உட்புகுந்து வால்வை திருகினாலோ முடிந்தது விஷயம்,

அணுவுலையும் எமனின் அரண்மனைதான், எப்போது வெளிவருவார், பாசகயிறு அல்ல பாசவலைவீசி அள்ளுவார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் எருமையில் வரமாட்டார், ஓளியின் வேகத்தில்தான் வருவார்.
அணுகுண்டும் அணு உலையும் ஒரே அழிவைத்தான் கொடுக்கும்.

பழகிய விஷயத்தினை எளிதில் விடமாட்டான் மனிதன், டாஸ்மாக் வாசலே உதாரணம். எதிரியை நிரந்தரமாக மிரட்ட அல்லது அழிக்க ஒரு ஆயுதம் கிடைத்தால் எக்காலமும் விடமாட்டான்.

இரண்டாம் உலகபோராவது அணுகுண்டோடு முடிந்தது, மூன்றாம் உலகப்போர் நிச்சயம் அணுகுண்டோடுதான் தொடங்கும், முடிப்பதற்கு வேறு எந்த ஆயுதமும் வேண்டாம், எல்லாம் பஸ்பம்.

இந்நொடி வரை உலகில் 25க்கு மேற்பட்ட நாடுகளிடம் அணுகுண்டு இருக்கின்றது, இன்னும் அவ்வாயுதத்தினை பெற சில அரசுகளும், கூடவே சில தீவிரவாத இயக்கமும் படுபகீர்த்னம் செய்கின்றன.

அக்காலத்தில் பெரும் போருக்கு முன் ஒரு பலியினை செலுத்துவார்கள், அப்படித்தான் பெரும் அழிவுக்கு களப்பலிதான் நகசாகி. அது முடிவாக மட்டும் இருக்கவில்லை, ஆகஸ்ட் 9 முடிவாக இருக்கவில்லை

இன்று அணுகுண்டினை கட்டுபடுத்த பதில் ஆயுதம் இல்லை, உடனடி அழிவினை விட்டாலும், கதிர்வீச்சின் ஆபத்து பல ஆண்டுகளுக்கு வரும். இதை தடுக்கும் நுட்பம் இன்றைய தேதிவரை இல்லை. என்னதான் முடிவு???
கட்டுபடுத்தமுடியாத அந்த அரக்கனை ஒழிக்கும் வழியை கண்டுபிடித்தபின், அல்லது அவனை கட்டும் மந்திரத்தை கற்றபின் அவனை எழுப்பலாம், அது வரை அவன் தூங்கட்டும்.

அப்படி அல்லாமல் மனிதன் தன் பலத்தை காட்ட நினைத்தால், இந்த உலகை நிச்சயம் இறைவன் ஒருவனாலே தான் காக்க முடியும்.

உலகை படைத்த இறைவனே அதனை காக்கவும் பொறுப்புள்ளவன்.

 தொடரும்…

பெரும்போரின் களப்பலி : 02

Image may contain: one or more people, people walking, crowd and outdoorஏற்கனவே உலகம் அமெரிக்காவை காரி துப்பிகொண்டிருந்த நேரம், அதுமன்றி இவர் குறிப்பிடும் நாடுள் உலக‌ சண்டையிலே இல்லை, அமைதியாக சொன்னார்.

பேர்ல் ஹார்பர் தாக்குதல் மட்டுமல்ல, ஜப்பானின் மீதான அமெரிக்க கோபத்திற்கு பெரும் காரணம் கார், டிவி, வாட்ச் உட்பட எல்லா தயாரிப்புகளையும் மிக குறைந்த விலையில் கொடுத்துகொண்டிருந்தது ஜப்பான், அதுதான் அவர்களின் கோபத்தை மிக சீண்டிய விஷயம்

நிச்சயமாக அந்த குண்டு பொருளாதார அணுகுண்டேதான், மறுக்க முடியாது. அதன் பின்புதான் ஜப்பானிய பொருளாதாரமும் ராணுவமும் அமெரிக்க வசம் சென்றன, அதன் பின்புதான் ஜப்பானிய பொருளுக்கு அமெரிக்க சந்தை என்ற ஒப்பந்தமே எழுதபட்டது

இந்த யோசனையில் இருந்த அமெரிக்க அதிபர் அமைதியாக பதில் சொன்னார்

“தளபதியாரே, உங்கள் திட்டம் நிறைவேறினால் இன்னும் 25 ஆண்டல்ல, 2500 ஆண்டுகளுக்கு சண்டை இருக்காது தான், உலகின் மக்களில் முக்கால்வாசிப்பேர் இறந்துவிடுவார்கள், இனி நமக்கு உலகில் எல்லோரும் அஞ்சுவார்கள் இதோடு விட்டுவிடலாம்” என்றார்.
ஆனால் ரஷ்யா புகைந்தது, அவர்களும் கிட்டதட்ட பாதிகிணறு தாண்டியிருந்தார்கள், ஜெர்மானிய விஞ்ஞானிகளை கடத்திய வகையில் 70% முன்னேறி இருந்தார்கள் ஆனால் முழுவெற்றி இல்லை.

எப்படியோ இன்று ரஷ்யாவிற்கு பெரும் ஆறுதலான “எட்வர்ட் ஸ்னோடன்” போல அன்றும் யாரோ ஒரு உளவாளி அமெரிக்க அணுரகசியத்தை காப்பியெடுத்து கொடுத்தான், முதன் முதலாக அணுநுட்பம் அமெரிக்காவிற்கு வெளியே சென்றது

1949ல்ரஷ்யா முதல் அணகுண்டினை வெற்றிகரமாக செய்யவும், அமெரிக்கர்களின் சந்தோஷம் துக்கமாக மாறியது.

அணுகுண்டின் ஆபத்தினை உணர்ந்தவர்கள், அதன் அழிவு தெரியும், அமெரிக்க முகாமில் இருந்த நாடுகள் அஞ்சின, ஆபத்தென்றால் அமெரிக்கா வரும்தான், ஆனால் வருவதற்குள் ரஷ்யாவின் அணுகுண்டுகள் ஐரோப்பாவினை பொசுக்கும். ஏற்கனவே அடிமை நாடுகளை விடுவித்து உலகில் பலமிழந்திருந்த பிரிட்டனும் பிரான்சும் அணுகுண்டு பாதுகாப்பிற்கு மாற விரும்பின‌.

ஆனால் உலகறிய இதோ இவைதான் அணுகுண்டுகள்,வைத்துகொள்ளுங்கள் என கொடுக்கமுடியாது,பல குழப்பங்களை கொண்டுவரும் விவகாரம், பெரும் அழிவு சக்தி, பெரும் போரில் கூட முடியலாம்.

அணுகுண்டினை விரும்பிய உலக நாடுகள் தந்திரமாக சில காரியங்களில் இறங்கின அதாவது மின்சாரத்திற்கான அணுமின் உலை என கட்டுவது, அங்கு ஒரு பக்கம் மின்சாரம் எடுப்பது, இன்னொரு பக்கம் ரகசியமாக அணுகுண்டுகளை செய்வது.

அப்படியாக பிரிட்டனும்,பிரான்சும் மின்சாரம் செய்கிறோம் என சொல்லி கட்டிய அணு உலைகளிலே அணு ஆயுதம் செய்தன.

அமெரிக்க முகாமில் அதன் அடியாட்களுக்கு நுட்பத்தினை அமெரிக்கா வழங்கியதாக சந்தேகித்த ரஷ்யா, தனது சகாக்களுக்கு “மின்சார அணு உலைகளை” வழங்க ஆரம்பித்தது. சீன வல்லரசின் முதல் அதிபர் மாவோ மிக தந்திரமாக அணுகுண்டினை செய்து ஐந்தாம் அணுநாடாக்கினார்.

உலகம் முழுவதும் அணுநுட்பம் வேகமாக பரவியது, வல்லரசு நாடுகள் அணுகுண்டின் ஆற்றலை அதிகபடுத்தின, அமெரிக்காவும்,ரஷ்யாவும் இன்றுவரை 3000 மேற்பட்ட சோதனைகளை நடத்தி 10 மெட்ரிக் டன் வரை சக்திவாய்ந்த குண்டுகளை வைத்துள்ளன, பூமியின் வடதுருவம் ரஷ்யாவின் சோதனை களமாகவும், உலகின் சில ஆளில்லா பிரதேசங்கள் அமெரிக்க சோதனை களமாகவும் மாறின, கடலடியில் கூட சோதித்தார்கள்

ஹிரோசிமாவில் வீசப்பட்டகுண்டு வெறும் 50 டன், இபொழுதுள்ள குண்டுகளின் சக்தியை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஜஹாங்கீர் பாபா எனும் இந்திய விஞ்ஞானியின் தலமையில் மின்சாரத்திற்கான அணுசக்தி என பல்லவியை தொடங்கிய இந்தியா, இந்திரா காந்தியின் காலத்தில் அணுகுண்டினை சோதித்து வரலாற்றில் இடம்பிடித்தது.

இந்தியா தும்மினால் பாகிஸ்தானும் இரு முறை தும்மவேண்டும் அல்லது செத்துவிடுவார்கள், அவர்கள் குணம் அப்படி. இந்தியா அணுகுண்டினை வெடித்தால் சும்மா விடுவார்களா? பதிலுக்கு அணுகுண்டினை வெடிக்கவேண்டும். ஆனால் வசதிகள் குறைவு.

இஸ்ரேலிடம் மரண அடிவாங்கி இருந்த இஸ்லாமிய தேசங்களும் அவற்றின் எண்ணெய் பணமும் பூட்டோவின் மண்டையில் பல்ப் எரியவிட்டது, ஒரு அசுப நாளில் அறிவித்தார் இனி உலகிற்கு தேவை “இஸ்லாமிய அணுகுண்டு”.

ஐரோப்பவில் அணுசக்த்தி படித்து,அணுசக்க்தி நிலையத்தில் பணியாற்றிய கான் எனும் இளைஞனை பிடித்தார்கள். நாட்டுபற்றும் (பணபற்றும்) நிரம்பிய கான் பாகிஸ்தான் அணுதிட்டத்தில் முக்கிய பங்காற்றினார், முன்னாள் லிபிய அதிபர் கடாபி பணமாற்றினார், பாகிஸ்தான் அணுசக்தி வேகமாக வளர்ந்தது.

இந்தியாவினை கட்டுபடுத்த பாகிஸ்தானை கொஞ்சி,தடவி,கொம்புசீவி வளர்க்கும் அமெரிக்காவிற்கு தெரிந்தாலும், காணாமல் விட்டுவிட்டது, மொத்தத்தில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு 80களிலே வந்துவிட்டது.

ஆனால் லிபிய பணத்தில் அணுகுண்டினை செய்த பாகிஸ்தான், லிபியாவிற்கு பெரும் பணம் அடிப்படையில்தான் அணுஆயுதம் தருவதாக மிரட்டியது, வெளியில் சொல்லமுடியாத கோபத்தில் சவூதி அரசரிடம் முறையிட்டார் கடாபி.

ஆச்சர்யமாக சவூதி அரசரும் அதே கோபத்தில் இருந்தார், ஆமாம் அவருக்கும் பாகிஸ்தானின் அதே வாக்குறுதி,அதே பட்டை நாமம்.

அதற்குள் மேற்கு நாடுகள் சுதாரித்து பாகிஸ்தானை நோக்கி குருபார்வையை வீசியது,விளைவு ராணுவபுரட்சி, பூட்டோவிற்கு தூக்கு, இஸ்லாமிய அணுகுண்டு பாகிஸ்தானுக்கு மட்டும் சொந்தமானது.

ஆட்சி மாறியதும், பாகிஸ்தானின் “அணுதாத்தா” கானுக்கு முக்கியத்துவம் குறைக்கப்ட்டது, நாட்டுபற்றிற்கு உழைத்த அவர் பணப்பற்றிற்காகவும் சிறிது உழைக்க விரும்ப்பினார்.

லிபியா,வடகொரியா,ஈரான்,ஈராக் இன்னும் பல நாடுகள் அணுகுண்டு பெற தலைகீழாக நின்ற காலங்கள், ஆனால் அணுநுட்பம் மிகமிக கடுமையான ரகசியம், பெறவே இயலாதது, மிக மிக சிக்கலான விஷயம் அது.

ஆனால் கான் லிபியாவிற்கு ஆளனுப்பினார், “பாகிஸ்தான் அரசு தராததை நான் தருகிறேன், நுட்பங்களை தருவேன், மற்றதை நீங்கள்தான் முடித்துகொள்ளவேண்டும், ஆனால பணம் மிக மிக அதிகம் சம்மதமா?”
லிபிய அதிபர் கடாபி மிகமிக ஆர்வமானார், கானும் சில ரகசியங்களை சொன்னார், அணுகுண்டும் தயாரானது, சோதித்தார்கள், புத்தரின் சிலை போல இருந்த அணுகுண்டு பதிலுக்கு கடாபியின் பொறுமையை சோதித்தது.

கான் புன்னகைத்தார், இன்னும் கொஞ்சம் பணம்,கொஞ்சம் ரகசியம் ஆனால் அணுகுண்டு மட்டும் தயாரில்லை, இப்போது கடாபியும் இல்லை, கானின் சொத்துமதிப்பு மட்டும் மிக உச்சத்தில்.

பல நாடுகளில் கையேந்தி,கம்யூனிசத்தினை காப்பாற்றுவதாக சொல்லி அணுகுண்டினை செய்யமுனைந்த‌ வடகொரியாவின் அணு நிலை கொஞ்சம் முன்னேற்றம், சோதித்ததாக சொல்லிகொள்கின்றார்கள், சில குண்டுகள் இருக்கலாம் என்கின்றது உளவு தகவல்கள்.ஆனால் அவர்களையும் நம்ப முடியாது ஒரே ஏவுகனையை 10 முறை படமெடுத்துவிட்டு 10 ஏவுகனைகள் சோதித்தோம் என்பவர்கள், ஆனால் ஆபத்தான நாடு.

இடையில் சதாமும் அணு ஆய்தம் செய்ய முனைந்தார், பொறுக்குமா இஸ்ரேலுக்கு?, நுட்பத்தினை வழங்க முன்வந்த பிரான்சினை தடுக்கபார்த்தது, இது அணுவுலை ஒப்பந்தம் என பிரான்ஸ் கைவிரிக்க, ஒரு மாலை வேளையில் 25 விமானங்களை அனுப்பி ஈராக்கின் அணுவுலையை தகர்த்தது இஸ்ரேல்

பின்னாளில் ஈராக்கின் ஸ்கர்ட் கனைகள் இஸ்ரேலை தாக்க இதுதான் காரணம்.
உலகிற்கே அணுகொள்கை,ஆற்றல் கொள்கை, அணுகுண்டு என சொல்லி கொடுத்த யூதர்களின் இஸ்ரேல் சும்மா இருக்குமா?, அகதியாக சென்ற நாட்டிலியே கலக்கியவர்கள், நாடு கிடைத்தால் விடுவார்களா?, நிச்சயமாக அவர்களிடம் அணுஆயுதம் உண்டு. ஆனால் இருப்பதாக ஒரு சுவடினை கூட வெளிகாட்ட மாட்டார்கள், அது தான் அவர்களின் சாமார்த்தியம்.

ஆனால் ஈரானின் அணுகுண்டு தயாரிக்கவிடாமல் கடும் வில்லங்களை செய்கிறது இஸ்ரேல், வல்லரசு நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள துடியாய் துடிக்கின்றது இஸ்ரேல். காரணம் அணுவுலையின் அடுத்த கட்டம் நிச்சயம் அணுகுண்டு. எப்படியாவது ஈரானை நொறுக்க கடும் முயற்சிகளை செய்கிறது இஸ்ரேல்.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் அணுகுண்டு கனவில் மிதக்க, வல்லரசுகள் வேகமாக அணுவுலைகளை அமைக்க ஆரம்பித்தன, அமெரிக்காவில் மட்டும் 105 அணுவுலைகள் உண்டு, ரஷ்யா ஒருநாளும் உண்மை கணக்கினை சொல்லாது.

எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த பொழுது, சோவியத் யூனியனின் அதிபர் அம்மக்களுக்கு நமது மோடியை போல கசப்புமருந்து கொடுத்து கொண்டிருந்த பொழுது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை வெடித்து சிதறியது.
கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் இறந்தார்கள், 10 லட்சம் பேர் இடப்பெயர்வு.

முதன் முதலாக அணுவுலையினையின் ஆபத்தை உணர்ந்த வல்லரசுகள், மக்களின் எதிர்ப்பினை கண்டு ஒரு திட்டம் தீட்டின, அதாகபட்டது இனி நமது நாட்டில் அணுவுலை வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமாக மூடலாம், ஆனால் அணுகுண்டு வேண்டும், அணு உலை இல்லாமல் அணுகுண்டு இல்லை.
அவர்களின் மகா திட்டமிடலில் உதித்த திட்டங்கள் குதர்க்கமானவை.

வேறு நாடுகளில் நாடுகளில் திறக்கலாம், மின்சாரம் அவர்களுக்கு, வெடித்தால்,சாவும் நோயும் அவர்களுக்கு, ஒழுங்காக நடந்தால் இறுதியாக கிடைக்கும் அணுஆயுத பொருளில் நமக்கும் பங்கு உண்டு.

இதனால் கொட்டபோகும் லாபமோ அள்ள அள்ள குறையாதது.

பல ஏழை நாடுகளின் பின் தங்கிய அப்பாவி கிராமங்களுக்கு சனி பிடிக்க தொடங்கியது, இந்த காலத்தில்தான், அதில் ஒன்றுதான் கூடன்குளமும், இடிந்தகரையும்.

தொடரும்…

பெரும்போரின் களப்பலி : 01

No automatic alt text available.அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று.

அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், தமிழன் திருமூலர்தான் சொன்னார். இதில்லாம் பகுத்தறிவிவாதிகள் மறுப்பு சொல்ல முடியாது

அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி. அது அணுவின் இயக்க தத்துவம் என அடித்து சொல்கின்றனர் நிபுணர்கள்.

அப்படி உலகமே அணுவை என்ன செய்யலாம் என நோக்கியபொழுதுதான் ஜாண் டால்டன் அணுவினை பற்றி புதிய கருத்துக்களை சொன்னார், பின்னாளில் அது ஜெர்மானிய விஞ்ஞானிகளின் ஆராய்சி ஆயிற்று.

நீல்ஸ்போர், ஐன்ஸ்டீன் எல்லோரும் மண்டையை போட்டு உருட்ட, பெரும் சக்தியாய் உலகினை உருட்ட தொடங்கினான் ஹிட்லர். ஹிட்லரிடம் இருந்து தப்புவது யூதர்களுக்கு மகா சவாலானது. அதிமுகவிடம் இருந்து தப்ப தமிழகம் போராடுவதை போல எப்படியாவது உயிர்தப்பிவிட கடும் முயற்சிசெய்த காலம், நிரந்தரமாக தப்பிக்க ஒரே வழி ஹிட்லரை கொல்வது.

No automatic alt text available.அமெரிக்காவில் யூதரான ஐன்ஸ்டீனிடம் அணுஆராய்ச்சி செய்ய பணித்தனர், ஐன்ஸ்டீனும் அவருடன் இனொரு யூதரான‌ ஹைமரும் இணைந்தார், யூதர்களை காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக அவர்கள் அமெரிக்காவை கண்டனர், இஸ்ரேல் கூட அன்று இல்லை. ஏதாவது செய்து ஹிட்லரை அடக்காவிட்டால் யூத இனம் பிரபஞ்சத்திலே இருக்காது.

அதுவரை ஐன்ஸ்டீனின் ஆற்றல் கொள்கை தாளில் மட்டும் இருந்தது, அது உண்மை என்றால் அணுகுண்டு வெடிக்கவேண்டும், இல்லாவிட்டால் ஐன்ஸ்டீனுக்கு “ராமர் பிள்ளை” நிலைதான். அவரும் பல்லை கடித்துகொண்டுதான் இருந்தார், ஹிட்லரிடம் உயிர்தப்பிய ஹைமரோ அணுகுண்டினை உருவாக்கி தீரவேண்டும் வெறியில் இருந்தார்.

ஆனால் அணுகுண்டு ஆராய்ச்சியின் தொடக்கத்தில் இருந்த ஹிட்லர், ரஷ்யாவில் அகலக்கால் வைத்து அகாலமரணமடைந்தார்.

ஹிட்லர் தான் இல்லையே, இனி ஏன் அணுகுண்டு என யாரும் கேட்கவில்லை காரணம் ஜப்பான். கிழக்காசியாவில் சாமியாட்டம் ஆடிகொண்டிருந்தது, இன்னும் கொஞ்சநாளில் இந்தியா, நேதாஜி “இந்தியாவின் தேசிய தலைவர்” என அறிவிக்கபட இருந்த நிலை.

ஒரு வழியாக 3 ஆண்டுகள் உழைத்து அணுகுண்டினை செய்து 100 அடி உயரகூண்டில் வைத்து சோதித்தார்கள். ஆயிரம் சூரியன் வெடித்த வெளிச்சம், பெரும் சக்தி. தான் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்த தருணமது.

அப்பொழுது ஹைமரின் மேற்கோள் குறிப்பிடதக்கது, “ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்” என்ற பகவத் கீதையின் சுலோகமே தனக்கு நினைவு வந்த்தாக சொன்னார். (ஒரு யூதன், அதுவும் தலை சிறந்த விஞ்ஞானி அவரே பகவத்கீதையை படித்திருக்கிறார், அப்துல் கலாமும் அப்படி பட்டவரே. இன்றோ வேற்றுமத நூல்களை படிப்பது பாவம், படித்தால் நரகத்திற்கு போவாய் என் போதிக்கபடுகின்றது)

பின்னர் அந்த நுட்பம் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கபட்டது, அரசு ராணுவத்திற்கு அணுகுண்டு அனுமதி அளித்தது.
நினைத்தவுடன் செய்வதற்கு அணுகுண்டு ஒன்றும் உப்புமா அல்ல, மகா சிரமாமானது. 1 டன் யுரேனியத்தில் 1 கிலோதான் தேவைக்கு மிஞ்சும், அணுகுண்டின் மிக குறைந்த எடையே 50 டன், கணக்கிட்டுகொள்ளுங்கள்.

Image may contain: outdoorஆனால் குறுகிய காலத்தில் 10 குண்டுகள் செய்தார்கள், பெர்லினில் வேண்டாம் அது நமது கையில், இத்தாலியும் தோற்றாகிவிட்டது, அன்று அமெரிக்காவிற்கு வேறு பெரும் எதிரி ஜப்பான் மட்டுமே, ரஷ்யா மறைமுக எதிரி ஆனால் ஆபத்தில்லை.

தனது பலத்தினை உலகிற்கு காட்டவேண்டும், முதல் முறையாக பேர்ள் ஹார்பரில் தனது சொந்த மண்ணில் மரித்த ராணுவத்திற்கு பழிவாங்க வேண்டும், அதைவிட மகா முக்கியம் அமெரிக்க தரத்தில் பொருளும்,கார்களும் செய்து அடிமாட்டு விலைக்கு விற்ற ஜப்பானையும்,ஜப்பான் கம்பெனிகளையும் அலறவைக்க வேண்டும்.

செய்தார்கள்,பேர்ள் ஹார்பர் போல ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945
ஒரு விமானத்தில் அணுகுண்டினை ஏற்றி பைலட்டுக்கும் சொல்லாமல் அனுப்பினார்கள், அவரும் கடமையை செவ்வனே முடித்தார், எதற்கும் என்ன நடக்கிறது என பார்க்க சற்று விமானத்தினை திருப்பினார், அதிர்ச்சியில் உறைந்தார், அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.

10 கி.மி உயரத்திற்கு குடைகாளான் தோன்றியிருந்தது, வெப்பநிலை 2500 டிகிரிக்கு மேல் சென்றது. இரும்பு கட்டங்கள் உருகும் போது மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள், ஆறுகள் கொதித்தன. 1 லட்சம் பேர் உடனடி மரணம் எல்லாம் நடந்தது 5 நிமிடத்தில்.

அதுதான் இன்றுவரை உலகில் வீசபட்ட மிக சிறிய அணுகுண்டு, இன்று அதனை விட 5ஆயிரம் மடங்கு வீரியமிக்க அணுகுண்டுகள் இருக்கிறதென்றால் , உலகின் ஆபத்தை நீங்களே உணரலாம்.

என்ன நடந்தது என சொல்லகூட யாருமில்லை, சகலமும் அழிவு. அடக்கம் செய்யகூட ஒன்றுமில்லை, சர்வமும் சாம்பல்.
அதிர்ந்த ஜப்ப்பான் போரை நிறுத்தவில்லை, எப்படியும் இந்த குண்டுகளை எதிர்கொள்வோம் என நெஞ்சு நிமிர்த்தினார்கள். விளைவு ஆகஸ்ட் 9ல் அடுத்த குண்டு இம்முறை நாகசாகி, குண்டு கொஞ்சம் நகருக்கு தள்ளிவிழுந்ததில் 50,000 பேர் பலி ஆனால் கடும் சேதம்.

ஜப்பான் போரை நிறுத்தி ராணுவத்தையே கலைத்தது,(ஆனால் அமெரிக்காவை பழிதீர்போம் என சொல்லும்ஒரு கும்பல் இப்போதும் உண்டு) நேதாஜியின் தலைவிதி மாறிபோனது. உலகமே ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தது. பழிவாங்கிய அமெரிக்கா சந்தடி சாக்கில் ரஷ்யாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது “நான் யார் தெரியுமா? மவனே என்கிட்ட வச்சிகிட்ட அவ்வளவுதான்.”

பெர்லினில் ஹிட்லரின் ராணுவம் மீது விழவேண்டிய குண்டு, அரசியல்வாதிகளால் ஜப்பானின் மீது விழுந்து அப்பாவிகள் செத்ததில் கலங்கினார் ஐன்ஸ்டீன், அணுஆராய்ச்சியை கைகழுவிவிட்டு வான்கொள்கள் ஆராய்ச்சிக்கு தாவினார் (மேலே சென்ற ஜப்பானியார்களை தேடியிருக்கலாம்), பின்னாளில் இஸ்ரேல் அதிபர் பதவி தேடிவந்த போதும் மறுத்துவிட்டார். அரசியலும் விஞ்ஞானமும் கலப்பது பேரழிவு என்பது அவரின் இறுதிகால கொள்கை அது உண்மையும் கூட.

உலகெங்கும் அச்சமும்,பீதியும் ஆட்கொண்டன, வழக்கம்போல சில கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் இதுதான் கடைசிகாலம், மனம் திரும்புங்கள், அல்லேலூயா என போதனையை தீவிரபடுத்தின (அவர்களுக்கென்ன ஒரு குடிசை தீயில் எரிந்தாலும் கடைசிகாலம் என கத்துபவர்களுக்கு, நகரமே எரிந்தால் விடுவார்களா?)

ஆனால் ஒருவர் மனம் திரும்பினார் அவர் ஜப்பானை எதிர்த்து போரிட்டு ஜப்பானை விரட்டிய‌ அமெரிக்க தளபதி மெக் ஆர்தர்.

மனம் திரும்பிய அவர் பெண்டகனில் அமெரிக்க அதிபரை சந்திக்கும் பொழுது, வாயில் இருந்த சிகரெட் பைப்பினை எடுத்துவிட்டு ஒரு கோரிக்கையை சொன்னார், எளிதான கோரிக்கைதான்.

“மிஸ்டர் பிரசிடெண்ட், இது போன்று எனக்கு 15 குண்டுகள் தரமுடியுமா?, நான் சில நகரங்களை பட்டியலிட்டிருக்கின்றேன், ஒரு 50 வருடங்களுக்கு போர் இருக்காது”

(ஷாங்காய், சியோல், பிங்யாங் என பட்டியலிட்டார். உண்மையில் மெக் ஆர்தரின் கணிப்பு மகா சரியானது. அன்றே சூட்டோடு சூட்டாக கொரியாவினையும், சீனாவினையும் போட்டு சாத்தியிருந்தால் இன்று அமெரிக்காவிற்கு சிக்கல் வந்திருக்காது, யாரெல்லாம் அமெரிக்க எதிரி ஆவார்கள் என்பதை அழகாக கணித்திருக்கின்றான்)

மிக சீரியசாக அவர் சொன்னதை கேட்டு, வியர்த்து கொட்டியபடி எழுந்து அமர்ந்தார் அந்நாளைய அமெரிக்க அதிபர்.

அணுகுண்டின் முக்கியத்துவத்தை உலகநாடுகள் உணர்ந்து, அவற்றுக்காய் பகிரத தவமிருந்த மிக பரபரப்பான காலங்கள் அவை.

தொடரும்…

 
 
%d bloggers like this: