பெர்லின் சுவர்

இரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது.
மேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌
பிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது
மேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌
ஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர்
கிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது
வரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த அதிசயம் இதே அக்டோபர் 3ல்தான் நடந்தது
இன்று ஐரோப்பாவின் நம்பர் 1 நாடு ஜெர்மனி. ஐரோப்பாவினை ஆள்வது அவர்களே.
வரலாற்றினை கண்டால் சில நாடுகள் இப்படி இணைந்திருக்கின்றன‌
வட தென் வியட்நாமினை ஒரே வியட்நாம் ஆக்கினார் ஹோ சி மின்.
நாளையே அந்த வெள்ளை தக்காளி மாரடைப்பில் செத்தால் அல்லது டெங்கி காய்ச்சலில் செத்தால் வடகொரியா தென்கொரியாவும் இப்படி இணையாலாம்
ஜெர்மனிக்கு குறுக்கே சுவர் இருந்தது இணைந்துவிட்டார்கள், ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே என்ன சுவர் இருக்கின்றது?
ஆனால் மதம் எனும் வெறிபிடித்த மிருகம் காவல் இருக்கின்றது, மக்கள் இணைய விரும்பினாலும் அந்த மிருகம் விடாது, மக்கள் துணிந்தால் அவர்கள் ரத்தத்தை ஓடவிட அந்த மிருகம் கிளம்பும்.
ஜெர்மானியர்கள் தடையாக இருந்த சுவரை இடித்தார்கள் இணைந்தார்கள்
இந்தியாவிலோ மசூதியினை இடிக்கின்றார்கள், இப்பொழுது தாஜ்மகாலையே பார்த்து முறைகின்றார்கள் அந்த மிருகம் சாகாமல் பார்த்துகொண்டே இருக்கின்றார்கள்.
ஆனால் இளைய தலைமுறை மீது மீது நம்பிக்கை இருக்கின்றது, இரு தேசமும் மதவெறியால் நாசமானதை அவர்கள் கவனித்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் புதுபாதை காண கிளம்புகின்றார்கள்.
ஒருநாள் அம்மிருகம் சாகும், வருங்கால சந்ததி அதனை செய்யும், ஜெர்மனி போல இத்தேசமும் இணையும்
[ October 3, 2018 ]