கொரோனா கருப்பு பணப்பறிமாற்றத்தை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா இந்தியாவில் ஊரடங்கை கொண்டுவந்தாலும் பொருளாதார பின்னடைவினை கொண்டு வந்தாலும் ஓசைபடாமல் ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டிருக்கின்றது

இதை எல்லாம் ஆதாரத்தோடு விளக்கமுடியாது, அது நம் வேலையும் அல்ல எனினும் சொல்வதை சொல்லிவிடலாம்

கருப்புபண நடமாட்டம் , கடத்தல் பொருளால் வரும் முறையற்ற பணத்தை 0% எனும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது கொரோனா

ஆம் வர்த்தகம் மட்டுபடுத்தபட்டிருப்பதால் கருப்பு பணத்தை வைத்திருக்கும் கூட்டம் திகைக்கின்றது, இதே காலகட்டத்தின் முடிவில் பணமதிப்பினை இல்லாமல் செய்வதாக அரசு அறிவித்தால் என்னாகும் என கலங்கி நிற்கின்றது

கடல் தாண்டிய போக்குவரத்து நிறுத்தபட்டதால் கடத்தல் தங்க பணம், போதை பணம் எல்லாம் தடுக்கபட்டாயிற்று

முன்பெல்லாம் வங்கி வழி பரிமாற்றத்தை விட கடத்தல் தங்கமும் போதையுமே பணம் வரும் பெரும் வழிகள் இதனால் அரசு அடைந்த சிக்கல் கொஞ்சமல்ல‌

அரசுக்கு வரவேண்டிய அந்நிய செலாவணியெல்லாம் யாருக்கோ சென்றது

இப்பொழுது மிக சரியாக வரவேண்டிய வகையில் வருகின்றது, கடத்தல் கோஷ்டி எல்லாம் முக்காடு போட்டு அழுது கொண்டிருக்கின்றது

இன்னும் ஏகபட்ட உதவிகளை செய்கின்றது கொரோனா, பலவற்றை வெளிப்படையாக சொல்லமுடியாது சொல்ல முடியும் விஷயங்களை மட்டும் அவ்வப்பொழுது சொல்கின்றோம்

சுருக்கமாக சொன்னால் மோடியின் பல திட்டங்களுக்கு மவுனமாக உதவி , கண்ணுக்கு தெரியா சக்தியாக அவருக்கு பக்க பலமாக நின்றுகொண்டிருக்கின்றது

பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை

உலகின் மோசமான பொருளாதார நெருக்கடி நாடுகளில் இந்தியா உட்பட 15 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன‌

இந்தியா, அர்ஜென்டினா, வெனிசுலா என பட்டியல் நீள்கின்றது

பெரும் கடனை இந்தியா வாங்காவிட்டால் அது திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் உலக செய்திகள் சொல்கின்றன‌

டாலருக்கு நிகரான மதிப்பு கழுத்துவரை வந்தாயிற்று, இந்திய பொருளாதார மதிப்புபடி 75 ரூபாயினை தாண்டினால் மகா அபாயம்

பெரும் அளவிலான கடனை இந்தியா வாங்கி ஆகவேண்டும், ஆனால் வாங்கிவிட்டால் அதற்கான வட்டி முதல் பல விஷயங்கள் வருங்காலத்தில் பாதிப்பினை கொடுக்கும்

தேசம் மிகபெரும் நெருக்கடியில் சிக்கியாயிற்று

இன்னும் பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை எல்லாம் பரிதாபமகாகவே பார்க்க வேண்டுமே தவிர ஆத்திரபட்டு ஒன்றும் ஆகாது

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல

பெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார்

தமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார்

இப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள்

கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம்

அந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது

நிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு காரணமல்ல எனினும் விலை உயர்வுக்கு உண்மையான காரணத்தை தமிழிசை அக்கா சொல்ல்த்தான் செய்யலாம்

பாரத் பெட்ரோலியத்தின் பொறுப்பான பதவிக்கு நியமிக்கபட்டவர் என்ற முறையில் அக்காவிடம் அதனை நினைவுறுத்த யாருமில்லை, எந்த பத்திரிகையாளரும் அதை அவரிடம் கேட்கவுமில்லை

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல..


 

இந்திய ரூபாய் கடுமையாக வீழ்ச்சி அடைவது கவலை தரும் விஷயம்

டாலரில் கச்சா எண்ணெய் வரவு செலவு நடப்பதால் டாலருக்கு எதிரான மதிப்பு சரிய சரிய பெட்ரோல் விலை உயரத்தான் செய்யும்

மிக அவசரமான நடவடிக்கை எடுத்து நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரமிது

இல்லாவிடில் கிரீஸ், வெனிசுலா போல பெரும் பொருளாதார நெருக்கடியினை இத்தேசம் எதிர்கொள்ளும்

அந்த அபாயத்தை தடுக்க இந்த அரசு அதிரடியான காரியங்களை செய்யட்டும் இல்லாவிட்டால் நடையினை கட்டட்டும்

நாடு திவாலாகும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பது
மட்டும் மிக வேதனையான விஷயம்

இது கிட்டதட்ட சோவியத் யூனியனில் அந்த கோர்பசேவ் பெரோஸ்திகா திட்டத்தை அறிவித்து ஏதோ செய்யபோக சோவியத்தே சிதறியது அல்லவா? அந்த சாயல் தெரிகின்றது

மோடியும் அப்படித்தான் நாட்டை சீரமைக்கின்றேன் என கருப்புபண ஒழிப்பு என இறங்கி கிட்டதட்ட அதே நிலைக்கு இந்தியாவினை இழுத்துவிட்டார்

நாடு திவாலாவதை தடுக்க ஏதேனும் செய்யவேண்டிய இக்கட்டான நிலையில் இருகின்றது இந்தியா

ஒரு வளரும் நாடு விஷபரீட்சைகளில் இறங்க கூடாது, அது பல சிக்கலை கொண்டு வரும்

இதோ வந்திருக்கின்றது, மோடி கும்பல் நடையினை கட்டி வேறு ஒருவருக்கு வழிவிடுவதே அவர்கள் இந்நாட்டிற்கு செய்யும் மாபெரும் சேவை


 

குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர்களை தற்காத்து பேசியுள்ளார் பழனிச்சாமி, அதாவது வழக்கு பாய்ந்தால் மட்டும் அவர்கள் குற்றவாளி இல்லையாம்

சரி குற்றவாளி இல்லை என நிரூபிக்கும் வரையாவது அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமா? வேண்டாமா? என்றால் சத்தமே இல்லை

விஜயபாஸ்கரும், வேலுமணியும் பதவி விலக வேண்டும், ஆனால் தூக்கி போட்டு மிதித்தாலும் இருவரும் விலக மாட்டார்கள்

இந்நேரத்தில் முதல்வர் அமைச்சர் பதவியிலிருந்து அவர்கள் இருவரையும் விரட்ட வேண்டும் அவரும் செய்யமாட்டார், காரணம் அவர் மேலும் சில சர்ச்சைகள் உண்டு

இந்த ஆளுநர் என்பவர் ஏதாவது செய்யட்டும்

அந்த இருவரும் குற்றவாளி இல்லை என தீர்ப்புவருமட்டும் பெஞ்சில் இருப்பதுதான் சரி


 

இந்த 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து ஒரு சமிக்ஞையும் இல்லை, அந்த தீர்மானத்தை அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை

7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை தனியாக கொடுத்திருந்தால் கூட அது ஏதாவது அதிர்வு கொடுத்திருக்கும், ஆனால் கூடவே ஜெயாவிற்கு பாரத ரத்னா என சில காமெடிகளை செய்ததால் தீர்மானம் மொத்தமும் காமெடி என ஆளுநர் தள்ளிவிட்டார் போல..

எப்படியோ 7 பேர் விடுதலையில் ஆளுநரின் அமைதி வரவேற்கதக்கது

ஆட்டுக்கு தாடி தேவையோ இல்லையோ நாட்டுக்கு கவர்னர் தேவை என்பது தெளிவாக தெரியும் நேரமிது

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இன்று மிகபெரிய பந்த் இந்தியாவில் நடக்கின்றது

இந்த கடும் உயர்வுக்கும் அரசின் அந்த பிடிவாத கொள்கைக்கும் காரணம் என்னவென்றால் விஷயம் வித்தியாசமானது

ஸ்டான்டர்ட் ஆயில் என இந்திய ஆயில் கார்பரேஷன் இருந்தபொழுது இங்கு பெட்ரோல் பயன்பாடு பணக்காரரிடம் மட்டும் இருந்தது, டீசல், லாரி போன்றவற்றில் இயங்கும் பேருந்துகள் பணக்காரர்களிடமே இருந்தது

(பின்பு தொழில்முறையில் பயன்படுத்தும் மீனவர்கள் போன்றவர்களுக்கு மானியம் எல்லாம் வழங்கபட்டது)

பெட்ரோலை அதிகம் பயன்படுத்தியது அன்று வரிகட்டும் பணக்காரர்கள், வெளிநாட்டில் இருந்து கார் பைக் எல்லாம் வாங்கி வந்து வரிகட்டும் பெரும் பணக்காரர்கள் என்பதால் அவர்களிடம் வசூலிப்பதில் தவறில்லை என பெட்ரோலுக்கு பெரும் வரி விதிக்கபட்டது

அன்று கச்சா எண்ணெய் விலையும் சில டாலரில் இருந்தது, இந்திய பணமும் பெரும் சரிவில் இல்லை

சிக்கல் எப்பொழுது வந்ததென்றால் அரபு இஸ்ரேலிய போரின் தொடர்ச்சியில் எண்ணெய் விலை எகிறவும், இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி அதிகமானதும் காரும் பைக்கும் சாலைகளை நிரப்ப தொடங்கவும் வந்தது

பணக்காரர் விஷயமாக இருந்த காரும் பைக்கும் எல்லோருக்கும் கிடைத்தது, ஆனால் அரசோ பணக்காரருக்கு விதித்த அதே வரியினை சாதாரண மக்களுக்கும் விதிப்பதை தொடர்ந்தது

இதுதான் பிரச்சினையின் மூலம்

மாறிவிட்ட இந்தியாவில் பணக்காரர், சாமானியர் எல்லோருக்குமான பெட்ரோல் வரியில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இது

ஆனால் செய்யமுடியாத சிக்கல், செய்தால் அரசின் வரி குறையும் பணியாளர் சம்பளம் குறையும், மாநில அரசும் தன் பங்கிற்கு குறைக்க வேண்டி இருக்கும்

ஆக இது சிக்கலான பிரச்சினை, பொருளாதார நிபுணர்களும் கலந்து மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப விலையினை நிர்ணயிக்க வேண்டும்

இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும், காரணம் பெட்ரோல் என்பது நாட்டின் ரத்தம் தேசம் அதில் இயங்குகின்றது, அது விலை ஏறும் பட்சத்தில் எல்லா பொருளும் விலை எகிறும்

எப்படியோ புதிய பெட்ரோல் கொள்கை வகுக்க வேண்டிய நேரம் இது

இந்த போராட்டத்திற்கு இந்தியாவின் 21 கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன, சிவசேனாவும் மம்தா பார்ட்டியும் சத்தமில்லை

பாஜகவினை இந்தியாவினை விட்டு விரட்டுவோமெ என முழங்கும் ஸ்டாலினின் திமுக இதில் ஆதரவு மட்டும் தெரிவிகின்றது

முன்பெல்லாம் திமுக இப்படி இல்லை

பருப்பு விலை கூடினால் கூட “பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி” என கோஷமாக கிளம்புவார்கள்

அரியலூர் ரயில் விபத்தில் “அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, நாங்கள் மாண்டது போதாதா” என கிளம்புவார்கள்

திமுகவின் ஸ்பெஷாலிட்டியே இம்மாதிரி கோஷமும் போராட்டமுமே

ஆனால் அது இப்பொழுது சுத்தமாக மாறிவிட்டது, எல்லாம் கலைஞரோடு போய்விட்டது

“பெட்ரோல் விலை ஏற்றிய பெருமாளே” “கண்ணீரில் கார் ஓடுமா?” என்றெல்லாம் கிளம்பியிருக்க வேண்டிய திமுகவினர் இப்பொழுது சும்மா அறிக்கை மட்டும் விடுகின்றார்கள்

எதற்காக?

அன்று திமுக பாட்டாளி இயக்கமாக இருந்தது, பொங்கினார்கள். இன்று பணக்க்கார கட்சியாகிவிட்டது எல்லோருக்கும் ரெய்டு பயம் இன்னபிற‌

தமிழக அரசோ எப்படியாவது இந்த ஸ்டைரைக்கை முறியடித்து மோடி விசுவாசத்தை காக்க தலைகீழாக நிற்கின்றது