கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்.

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது

அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள்

முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது

மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், அதனாலே இன்றும் கிராமவாசிகள் அல்லது அச்சூழலில் வளர்ந்தவர்கள் எளிதில் நோயில் சிக்கமாட்டார்கள்

அந்த புழுதியும் சூழலும் அவர்கள் உடலில் அவ்வளவு நோய் எதிர்ப்பினை கொடுக்கின்றது, சில கிருமிகள் உடலில் செல்லும்பொழுது அதை எதிர்த்து போராடும் உடலின் எதிர்ப்பு அணுக்கள் வலுபெற்று சக்திபெறுகின்றன‌

ஆனால் பட்டணத்து குழந்தைகள் அப்படி அல்ல, சுத்தம் என காலுறை கூட அவை அகற்றுவதில்லை , நாகரீகம் என வீட்டுக்குள்ளும் அவை செருப்போடு அலைகின்றன‌

அதீத சுத்தம் ஆபத்தானது, ஐரோப்பாவும் அமெரிக்காவும் அலறிகொண்டிருக்க இங்த மகா அதீத சுத்தமும் காரணம் என்கின்றது ஒரு ஆய்வு

சுத்தம் நல்லதுதான் ஆனால் அவர்கள் எவ்வளவு சுத்த விரும்பிகள் என்பது அமெரிக்க போர்கப்பலை பார்த்தாலே தெரியும், கப்பலே அப்படி என்றால் வீடு எப்படி இருக்கும்?

இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது கொரோனா போன்றவை அடித்து பறித்து செல்கின்றன என்கின்றது ஆய்வு

இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் கொரோனா தடுமாறிகொண்டிருக்க இந்தியாவின் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றார்கள்

இது இன்னமும் ஆழ நோக்க கூடியது

சித்தர்கள் அல்லது சாமியார்கள் இதற்கு உதாரணம், அவர்கள் பக்திமான்கள் ஆனால் ஒரு மாதிரி ஜடா முடியோடு அழுக்கு உடையோடு அழுக்கு படிந்த திண்ணையில் சூழலில் இருப்பார்கள், எந்நோயும் அவர்களை தாக்கியதாக சரித்திரமே இல்லை

அவர்களாக விரும்பி உயிரை விட்டால்தான் உண்டு

மிகபெரும் உதாரணமாக கிராமங்களில் அம்மை நோயினை சொல்லலாம், இன்றிருக்கும் கொரோனா போன்ற கட்டுப்பாடுகள் அம்மை நோய்க்கும் உண்டு

அம்மை வந்தால் தனிமைபடுத்தபடுவார்கள், மஞ்சளும் வேப்பிலையும் ஆக்கிரமிக்கும் அவர்கள் வீட்டு வாசலுக்கு யாருமே செல்லமாட்டார்கள்

மகா முக்கியமாக வீடு கழுவுதல், பெருக்கி எடுத்தல் போன்ற பணிகள் நடைபெறாது, அதற்கு சுவாரஸ்யமான பதிலை சொல்வார்கள்

“வந்திருப்பது அம்மன் அய்யா, வீடு சுத்தபத்தமா இருந்தா இங்கேயே தங்கிரும், கொஞ்சம் அசுத்தமாக இருந்தால் அம்மன் சீக்கிரம் சென்றுவிடும்”

உண்மையில் கொஞ்சம் சுத்த குறைவான சூழல் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் அதனால் அம்மை சீக்கிரம் குணமாகும் என செய்யபட்ட ஏற்பாடு இது

ஆனால் கிருமி, நோய் எதிர்ப்பு என்றால் பாமரனுக்கு புரியுமா? இதனால் அம்மையினை குணமாக்க சுத்தமற்ற சூழல் அவசியம் என வலியுறுத்தி சொன்னார்கள்

இந்தியா குறிப்பாக தமிழகம் கொரோனாவால் அஞ்சி நடுங்கும் நேரமிது

உண்மையில் கொரோனா அம்மை போன்ற வகையே, அந்த கொப்புளங்கள் மட்டும் வராது மற்றபடி காய்ச்சல் வலி எல்லாம் அந்த சாயலே

அம்மைகளில் பல வகைகள் உண்டு, தொண்டையினை தாக்கும் அம்மை என்று கூட முன்பு உண்டு என்பார்கள், கொரொனா அதன் வகையின் மேம்பட்ட வடிவாக இருக்கலாம்

மாறிவிட்ட சீனா மேற்கத்திய சாயலுகு மாறிவிட்டதால் பாரம்பரியங்களை மறந்து விட்டதால் திகைத்திருக்கலாம் இழப்பு அதிகமாக இருக்கலாம்

எல்லாமே நவீனம் என கருதி , பண்டைய விஷயமெல்லாம் மூட நம்பிக்கை என கருதி ஆணவத்தின் உச்சியில் இருக்கும் மேற்கத்தியருக்கு கொரோனா பாதிப்பினை கொடுக்கலாம்

ஆனால் இன்றும் என்றும் பாரம்பரியத்தில் கலந்து வரும் இந்துமதம் ஆளும் இந்தியாவினை கொரோனா அவ்வளவுக்கு ஆட்டிவிட முடியாது,

அதுவே நிதர்சனமான உண்மை

இங்கு அஞ்ச ஏதுமில்லை, கொரொனா அம்மை போல் முடக்குமே தவிர உயிரெடுக்கும் வாய்ப்பு மிக மிக குறைவே , அம்மையும் கவனிக்காமல் விட்டால் உயிரை கொல்லத்தான் செய்யும்

இதனால் அஞ்ச ஒன்றுமில்லை

வீடுகளின் பூஜை அறையில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்

வீட்டில் அம்மை நோய் வந்தால் அல்லது வருவதை தடுக்க என்ன செய்வோமோ அதை செய்யலாம் கொரோனா நம் வீட்டு பக்கமே வராது

எல்லா நோய்க்கும் அன்றே கடவுளும் இயற்கையும் மருத்துவமும் கலந்து வெற்றிபெற்ற சமூகம் இது, காரணம் அறியா காலங்களிலே ஏராளமான நோய்களை வெல்ல வழிகொடுத்த இந்துமதம் கொரோனாவுக்கு மட்டும் வழிகாட்டாமல் இருக்குமா?

அம்மையில் அது ஒருவகை என நினைத்துகொள்ளுங்கள், உலகெங்கெங்கும் அந்த பதற்றம் இருப்பதாக நினையுங்கள்

அம்மை என்பது கிருமியால் வரும் நோய் சந்தேகமில்லை, ஆனால் அம்மை என வணங்கி நின்றோமே ஏன்? அது மனதளவில் தெய்வம் நம்மோடு எனும் நம்பிக்கையினை கொடுக்கின்றது

மாறாக அய்யோ அது பேய், அய்யோ நோய் அய்யோ நீ அவ்வளவுதான் என்றால் அவன் கிருமியால் அல்ல பயத்தாலே செத்துவிடுவான்

அதை தடுக்க அது தெய்வம் என சொல்லி ஆறுதல் கொடுத்தது இந்துமதம், ஏன் தெய்வம் என சொன்னார்கள்., அம்மை வந்த உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பின் நெடுங்காலம் நோய்கள் அண்டா

ஆம் இது எல்லோரும் அனுபவத்தில் பார்த்த விஷயமாக இருக்கலாம்

கொரோனாவும் அப்படியே, அதை கண்டு அஞ்சாதீர்கள், அந்த கொப்புளம் வரும் நோயினை அம்மை என நினைத்தது போல கொரோனாவினையும் நினையுங்கள் அஞ்சமாட்டீர்கள்

தானாக நம்பிக்கை வரும், மனம் உற்சாகம் கொள்ளும், உற்சாகமடையும் மனம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை தானே மேம்படுத்தும்

அம்மைக்கு அது தெய்வம் கொடுத்த அதே மரியாதையினை கொரோனாவுக்கும் கொடுங்கள், அம்மையினை எப்படி உங்கள் ஊர் கையாளுமோ அப்படி கையாளுங்கள்

அது போதும், சில நாட்களில் எல்லாமே சரியாகும்..