மி டூ தொடர்ச்சி …

வைரமுத்து சின்மயி ஒரு பக்கம் முட்டிகொண்டிருக்க இன்னொரு பக்கம் லீனா மணிமேகலை எனும் பெண்ணியவாதிக்கும் சுசி கணேசனுக்கும் முட்டி கொண்டிருக்கின்றது

கணேசன் என்னை கற்பழிக்கமுயன்றார் என லீனா அதிரடி காட்ட, கற்பு என்பது இருபாலருக்குமானது அவர்தான் என்னை கற்பழிக்க முயன்றார் என பதிலுக்கு வித்தியாசமாக கத்துகின்றார் கணேசன்

விஷயம் சுவாரஸ்யமாக செல்கின்றது, இப்பொழுது முதல் சுற்று முடிந்திதிருக்கின்றது, லீனா பக்கம் சேதம் அதிகம்

அடுத்த சுற்று எப்படி இருக்கின்றது என பொருத்திருந்து பார்க்கலாம், விரைவில் இரண்டாம் சுற்று தொடங்கும்

ஓலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் பல அரங்கங்களில் பல ஆட்டம் நடப்பது போல இங்கு இந்த ஆட்டம் ஆரம்பித்திருக்கின்றது

இன்னும் சில ஆட்டங்கள் விரைவில் தொடங்கலாம்

இப்போதைக்கு வைரமுத்து சினமயி ஒரு பக்கமும், சுசிகணேசன் லீனா இன்னொரு பக்கமும் விளையாடி கொண்டிருக்கின்றார்கள்

வரலட்சுமி என்பவர் தனியாக கத்திகொண்டிருக்கின்றார் அம்மணியுடன் மோத யாரும் களத்தில் இல்லை

இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்தடுத்த சுற்று போட்டி முடிவுகளை பொறுத்து பதிவு செய்யபடும்

மொத்தத்தில் “என்ன கையபிடிச்சி இழுத்தியா?” போட்டி தமிழகத்தில் அமோகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது

செத்துபோன நடிகை நடிகர்கள் தவிர எல்லோரும் களத்தில் இறங்குவார்கள் போல் தெரிகின்றது [ October 16, 2018 ]

Image may contain: 2 people
===========================================================================

இது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் என்றும், தலைவியின் புகைபடத்தால் பிரபலமாகிவிடலாம் அந்த கேடுகெட்ட சிம்பு செய்த போட்டோஷாப் என்பதை சங்கம் தெரிவித்து கொள்கின்றது

எப்படி நயனால் பிரபலமாகலாம் என அந்த சிம்பு சில காரியங்களை செய்தாரோ, அப்படி இப்பொழுது தலைவியால் பிரபலமாகிவிடலாம் எனும் தன் இயல்பான‌ சிந்தனைக்கு வந்திருக்கின்றார்.

(ஆனால் குஷ்பு என் சகோதரி என்றும் இப்படத்தினை காட்டி சொல்லி திரிவதாக சில தகவல்கள் சொல்கின்றன, சங்கத்தின் கொலைமுயற்சியில் இருந்து தப்ப அவர் அபப்டி சொல்லி கொள்ளலாம்..)

சிம்பு வீடு நோக்கி ஏகே 47 துப்பாக்கியுடன் பாய்ந்த Periya Samy அவர்களையும் , மனித வெடிகுண்டாக கிளம்பிய அந்த Venkedesh Mothilal என்பவரையும் சங்கம் கட்டுபடுத்தி வைத்திருக்கின்றது,

இன்னும் பலர் கிளம்பினாலும் தலைவியின் முடிவுக்காக காத்திருப்பதால் இப்போதைக்கு சிக்கல் இல்லை

இந்திய சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில்தான் இருக்கின்றது

பார்க்க சகிக்காத‌ போட்டோஷாப் படத்தை சங்கம் வன்மையாக கண்டித்து சிம்புவிற்கு எதிராக ஏதும் வழக்கு தொடரலாமா என ஆழ்ந்த ஆலோசனையில் உள்ளது

தலைவியின் முடிவுபடி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்

சிம்பு ஒழிக, சிம்பு டவுண் டவுண்…

(சிம்பு ஒழிக என கோஷமிடுவதில் நயந்தாரா பக்தர்களும் கண்டிப்பாக இணைவார்கள், இணைய வேண்டும் என சங்கம் எதிர்பார்க்கின்றது

சிம்பு இப்பொழுது நமக்கு பொது எதிரியாகிவிட்டார், வாருங்கள்)

[ October 16, 2018 ]

Image may contain: 2 people, people smiling, beard, closeup and indoor
============================================================================

போகிற போக்கில் வைரமுத்து இன்னொரு ஆட்டோ சங்கராக ஆகிவிடுவார் போல..

[ October 16, 2018 ]
Image may contain: 1 person, smiling
=======================================================================

வைரமுத்துவின் நிலமையினை நினைத்தால் பொன்மணி வைரமுத்து எனும் வைரமுத்துவின் மனைவி நினைவுக்கு வருகின்றார்

அந்த அம்மணி வைரமுத்துவின் விசிறி, வைரமுத்துவின் தமிழுக்கு பெரும் விசிறியான அம்மணி அப்படியே மனைவி ஆனது

வரும் செய்திகளை கண்டால், ஏன்யா “அந்த காலத்திலிருந்து இன்னும் நீர் திருந்தவில்லையா அன்பரே” என உலக்கையினை எடுக்குமா? இல்லை ஹிலாரி கிளிண்டன் ஸ்டைலில் “அவர் யாரையும் ஏமாற்றவில்லை, பலவந்தபடுத்தவுமில்லை” என சொல்லுமா இல்லையா என தெரியவில்லை

[ October 16, 2018 ]

==========================================================================

மி டூ பெரியாரின் சீடன்
மி டூ அண்ணாவின் தம்பி
மி டூ திராவிட தன்மான போராளி
மி டூ தமிழுக்கும் தமிழருக்கும் தலை கொடுத்தவன்

எனக்கு தெரிந்த மி டூ இவ்வளவுதான் உடன்பிறப்பே

[ October 16, 2018 ]
Image may contain: one or more people, sunglasses and closeup
=========================================================================

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது ‍- நடிகை ஷில்பா ஷிண்டே

உண்மைக்கான காந்தி விருது, சத்தியத்திற்கான அரிச்சந்திரன் விருதை உடனே இவருக்கு வழங்க வேண்டும்

[ October 17, 2018 ]

============================================================================

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்து நிற்குமாம் கொக்கு என்பதற்கு இப்பொழுது நடிகை கஸ்தூரியே சாட்சி

இந்த சில ஓடுமீன்களின் மி டூவின் பொழுது அவர் அமைதி காப்பது அச்சமூட்டுகின்றது

உறுமீனாக அவர் கடைசியில் மீ டூ என கத்தும்பொழுது எத்தனை நாரைகள், கொக்குகள் எல்லாம் அலறுமோ தெரியாது

அம்மணிபற்றி தெரிந்ததால் உறுதியாக சொல்லலாம் எல்லோரும் மி டூ சொல்லிமுடித்தபின்பு அணல் பறக்க வைக்க அவர் காத்துகொண்டிருக்கலாம்

[ October17, 2018 ]
Image may contain: 1 person, smiling, sitting

மி டூ இயக்கம்

மி டூ இயக்கத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு

ஆக தன் மேல் யாரும் மீ டூ சொல்லமுடியாது என தில்லாக வந்து நிற்கின்றார் ராகுல் காந்தி

ஆச்சரியமாக யாரும் சொல்லவுமில்லை சொல்லவும் முடியாது

இதனால் காங்கிரசார் தங்களுக்கு பீஷ்மர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்

[ October 13, 2018 ]
Image may contain: 1 person, smiling, beard
============================================================================

இந்த மி டூ இம்சை அமெரிக்காவில்தான் தொடங்கியது, உலகெல்லாம் சுற்றி எல்லாமே தாமதமாக வரும் இந்தியாவில் அது இப்பொழுதுதான் வந்திருக்கின்றது

ஆனால் அமெரிக்காவில் அது மிக பிரபலம், ஆளாளுக்கு மி டூ மீ டூ என ஓரே ராகம்

இப்பொழுது சில பெண்கள் டிரம்பானவர் மேல் மி டூ சொல்லியாயிற்று, சாதாரண பெண்கள் என்றாலே சிக்கல் ஆனால் சொல்லியிருப்பது சன்னிலியோன் வகையறாகள் என்பதால் மகா சிக்கல்

டிரம்ப் மிக பெரும் பக்திமான், கிட்டதட்ட இந்திய பாஜக கும்பல் போல அவர் பெரும் பைபிள் வெறியர், அனுதினமும் வெள்ளை மாளிகையில் ஊழியரை கூட்டி பிரார்திக்கும் பைபிள்மான்

ஆனால் தனிபட்ட முறையில் தீராவிளையாட்டு பிள்ளை, நெற்றிக்கண் ரஜினி வகையறா. மனைவி மட்டுமே சில கணக்கு மற்றயவை தனி கணக்கு

இப்போதைய மனைவி மெலினாவிடம் இந்த மி டூ பற்றி கேட்டிருக்கின்றார்கள், இதெல்லாம் ஒரு பிரச்சினையா? அதுபற்றி ஆராய எனக்கு நேரமில்லை வேறு வேலை இருக்கின்றது என சொல்லிவிட்டு அம்மணி சென்றுவிட்டது

கிடைத்தால் கிளிண்டன், டிரம்ப்புக்கு கிடைத்தது போல மனைவியர் கிடைக்க வேண்டும்

மனைவி அமைவெதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பது இதுதான்.

இதுவேதான் [ October 13, 2018 ]

Image may contain: 4 people, people smiling, people standing and suit
============================================================================

‘திறந்த புத்தகத்திற்கு விளக்கவுரை தேவை இல்லை, பகலில் விளக்கு தேவை இல்லை இரவில் இருட்டு தேவை இல்லை

“மி டூ ” என்றால் ஆளாளுக்கு அலறும் வையகத்தில் இந்த மய்யத்திற்கு எந்த கவலையுமில்லை. யாரும் என் மீது “மி டு” சொல்லட்டும் சிலரை போல நான் பாதிக்கபட போவதுமில்லை

“மி டு” என யாரும் சொன்னால் “யூ டூ” என சொல்லி நகர்வார்களே தவிர நிச்சயம் என்மேல் சர்ச்சை பாயாது

கடல் போல, நதிபோல வான்போல திறந்தவாழ்வு வாழ்ந்ததின் மிகபெரும் பலன் இது”

பாம்பு விசத்தினால் சாவதுமில்லை, தீ இன்னொரு தீயால் எரிவதுமில்லை

[ October 13, 2018 ]

Image may contain: 1 person, closeup
============================================================================

இந்த மி டூ பற்றி ஆளாளுக்கு கிளம்ப, நமது தங்க தலைவியும் தமிழகத்தின் அசைக்கமுடியாத பெண் ஆளுமையுமான குஷ்புவிடமும் அதுபற்றி கேட்டிருக்கின்றார்கள்

தலைவி மிக தெளிவாக சொல்லிவிட்டார், “எனக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை, நான் மி டூவில் இணையமுடியாததால் மன்னித்து கொள்ளுங்கள்”

ஆம், பார்த்தவுடன் வணங்க தக்க தெய்வீக தோற்றமுடையவர் நம் தலைவி. அவரிடம் எப்படி வேறு மாதிரி அணுக முடியும்?

யாராயினும் அவரை பார்த்தவுடன் அந்த தெய்வீக தன்மை முன்னால் அப்படியே தாழ்பணிந்து வணங்கித்தான் நிற்பார்கள்

பகையும் வணங்கும் முகம் அது

புனிதமான ஆலய கோபுரத்திற்கும், நட்சத்திர விடுதிக்கும் வித்தியாசம் உண்டு, தலைவி கோபுரம்

ஆக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தலைவி தன் மி டூ நிலைபாட்டினை சொல்லிவிட்டார்

தெய்வம் இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என சங்கமும் தெரிவித்துகொள்கின்றது. [ October 14, 2018 ]

Image may contain: text
============================================================================

ராசாவே வருத்தமா…
ஆகாயம் சுருங்குமா..
ஏங்காதே.. அத உலகம் தாங்காதே
அடுக்குமா… சூரியன் கருக்குமா

பசுவினை பாமென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

[ October 14, 2018 ]
Image may contain: 1 person, outdoor and closeup
===========================================================================

இந்த பாலியல் புகார்கள் பலருக்கு தலைவலியாக போய்விட்டது, மத்திய அமைச்சர் அக்பர் மேலே வந்தாயிற்று

பிசிசிஐ அதிகாரி மேலும் புகார்கள் குவிகின்றன‌

இப்படி பெரும் அதிர்ச்சிகளை பெற்ற பிரபலங்கள் என்ன செய்யலாம் என யோசித்தபொழுது வைரமுத்து வழிகாட்டிவிட்டார்

அதாவது என் மீது குற்றம் சொல்லும் சின்மயி கோர்ட்டுக்கு போனால் என்ன? நிரூபித்துபார்க்கட்டும் என சொல்லிவிட்டார்

போதாதா அகில இந்திய பிரபலங்கள் துள்ளி எழும்பிவிட்டனர்

ஒரு படி மேலே சென்று, பொய்புகார் சொல்வோர் மேல் வழக்கு தொடுக்கபடும் என கிளம்பிவிட்டனர். அமைச்சர் அக்பரே அதை சொல்லிவிட்டார்

இனி இந்த மிடூ இம்சைகள் அடங்கலாம்

இந்நிலையில் விஷால் என்பவர் வைரமுத்து குற்றம் நிரூபிக்கபட்டால் அவர் மேல் நடவடிக்கை இருக்கும் என்கின்றார்

சும்மாவே விஷாலுக்கு எதிரிகள் அதிகம் இனி விடுவார்களா?

நுனிகிளையில் இருந்து அடிகிளையினை வெட்டுவது என்பது இதுதான்

[ October 14, 2018 ]

============================================================================

இந்த அக்பர் என்பவர் மீது பாலியல் குற்றசாட்டு வந்த நிலையில் மோடி வாய்திறக்கவில்லையாம்

சொல்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்

அந்த சுனந்த புஷ்கர் கொலையில் மன்மோகன் சிங் அன்றைய அமைச்சர் சசி தரூருக்காக வாய் திறந்தாரா? என பாஜகவினர் கேட்டால் காங்கிரசார் முகம் எங்கு திரும்புமோ தெரியாது

சுனந்தாவினை விடுங்கள், எதற்குத்தான் வாய் திறந்தார் மன்மோகன் சிங்?

[ October 14, 2018 ]

============================================================================

“நிச்சயம் இதுதான் நமக்கான நேரம்

அடுத்த இன்னிங்ஸை தொடங்கலாமா?, தெறிக்க விடலாமா..”

Image may contain: one or more people and closeup
============================================================================

குட்கா ஊழலில் சிக்கிய தமிழக அமைச்சர்கள், சிபிஐல் சிக்கிய முதலமைச்சர், இன்னும் பல விவகாரங்களில் சிக்கிய ஆளுநரை எல்லாம் விட்டுவிட்டு…

மத்திய அமைச்சர் அக்பரை பதவி விலக சொல்லி கத்திகொண்டிருக்கின்றான் போராளி தமிழன்

அவன் அப்படித்தான், திருத்தவே முடியாது. [ October 15, 2018 ]

============================================================================

“அடேய் கூத்தாடி வாழ்க்கையினை நோண்டாத, பூரா அசிங்கம் ஆபாசம்…

அவனுக உலகம் வேற, ஒரு வரைமுறைக்கும் வராத கூட்டம் அது. அவனவனுக்கு அவளவளுக்கு எது தேவையோ அதுக்காக எதையும் செய்யும் கூட்டம்

அட ஏன் சொல்றேன்னா, நானே அப்படித்தான் என்னை விட பகிரங்கமாக கூத்தாடி கும்பல பற்றி சொல்லும் தகுதி எவனுக்குமில்லே.

இதனாலே என்னை குற்றம் சாட்ட அங்கேயும் ஒருத்தனுமில்லே ஒருத்தியுமில்லே

அதனாலே சொல்றேன் கூத்தாடிபயலுக ஆபாச கதை எல்லாம் விடு, நாடும் சமூகமும் நல்லா வாழ பெரியார் காமராஜர் மாதிரி தலைவர்கள் சொல்றத எல்லாம் கேளு

நீயும் நல்லா இருப்ப, நாடும் நல்லா இருக்கும்

இந்த கூத்தாடி பயலுக கதைய கிளறாத, பூரா ஆபாசம், அசிங்கம், தம்பிடிக்கும் யாருக்கும் பிரயோசனமில்ல்லே”

தலைவன் எம்.ஆர் ராதா அன்றே சொன்னது, இன்று அப்படியே பொருந்துகின்றது

#தலைவா யூ ஆர் கிரேட்.. [ October 14, 2018 ]

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup
===========================================================================

ஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா?

அங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து கையபிடிச்சி இழுத்தாலும் ஆதரிப்பேன் என வக்கலாத்து வாங்குவதில் சந்தேகம் அதிகரிக்கின்றது [ October 15, 2018 ]