மாபெரும் ரபேல் ஊழல்

இந்த அரசு வந்ததில் இருந்தே அம்பானிக்கு ஆதரவான சார்பினை எடுப்பது உலகம் அறிந்தது, அம்பானியின் ஜியோ இன்று எதிரிகளை ஒழித்து தனிபெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது அதற்கு ஒரு சான்று
இன்னும் ஏராளமான சான்றுகள் உண்டு, ஆனால் மகா முக்கியமான பாதுகாப்பு விஷயத்திலும் அம்பானியினை நுழைத்திருக்கின்றார்கள் என்பதுதான் ஏற்றுகொள்ள முடியா விஷயம்
இந்த மோடி வந்த உடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார், நல்ல திட்டம்தான். ஆனால் அப்படி யார் வந்து இங்கு எதை உருவாக்கினார்கள் என்றால் ஒன்றுமில்லை
யார் வேண்டுமானாலும் வந்து தொழில் தொடங்கி இந்தியருக்கு வேலை கொடுங்கள் என்பது நிச்சயம் நல்ல விஷயம் , ஆனால் நாடு எப்படி இருக்க வேண்டும்
மிகபெரும் உதாரணம் சீனா மற்றும் சிங்கப்பூர், ஆம் சீனாவில் தேர்தல் கிடையாது, மத இம்சைகள் கிடையாது வாக்கு வங்கி அரசியல் கிடையாது
அந்நியர் தொழில்தொடங்க வந்தால் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு உறுதி, சிங்கபூரின் சட்டங்கள் கடுமையானவை 4 பேர் சேர்ந்து நிற்க முடியாது
இதனால் அவை எல்லாம் வெற்றிபெற்றன‌
இங்கு அப்படியா நிலை? ஆளும் கட்சியே மாட்டுகறி முதல் இன்னும் ஏகபட்ட இம்சைகளுக்காக ஊர்வலம் நடத்தும், ஒப்பாரி வைக்கும் கலக சூழலை ஏற்படுத்தும் பின் எப்படி வருவார்கள்
இவர்கள் மேக் இன் இந்தியா என குறிவைத்தது இந்திய தொழில்துறையினை அல்ல, மாறாக பெரும் பணம் புரளும் இரு விஷயங்கலில்
முதலாவது கச்சா எண்ணெய் விவகாரம், அது உலகின் இரண்டாம் லாபகரமான தொழில் அதை அம்பானிக்கு தாரை வார்த்தாயிற்று
உலகின் முதலிடத்தில் உள்ள தொழில் ஆயுத தயாரிப்பு அதில் அம்பானியினை நுழைக்கத்தான் இந்த மேக் இன் இந்தியாவினை கையில் எடுத்தார்கள்
ஆயுத உற்பத்தியில் தனியாரை நாடுவது ஒன்றும் உலகில் புதிதல்ல, அமெரிக்கா முதல் ரஷ்யா வரை பல நாடுகளில் தனியார் தொழிற்சாலைகள் உண்டு, உதிரி பாகங்களை செய்வார்கள்
ஆனால் அவை திறமையினை நிரூபிக்க வேண்டும், ஏகபட்ட கட்டுபாடுகள் உண்டு. இன்னும் மிக முக்கியமான தொழில்நுட்பம் எல்லாம் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்க கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என ஏக கெடுபிடிகள் உண்டு
இந்தியா இதுவரை இப்படி உள்நாட்டு தனியார் நிறுவணங்களை அனுமதித்ததில்லை, வெளிநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கிவிடுவார்கள்
உண்மையில் உள்நாட்டு தொழிற்சாலைகளை ஆயுத உதிரி பாக உற்பத்தியில் சில நாடுகள் சேர்க்கும் என்றால் ஒரே காரணம் விலை குறையும் சாத்தியமே அன்றி வேறல்ல‌
இப்பொழுது இந்த ரபேல் விமானத்தை வெளிநாட்டில் இருந்து வாங்கும் செலவினை விட, இங்கு சில பாகங்களை தயாரித்தால் செலவு குறையத்தான் செய்யும்
ஆனால் என்ன நடந்திருக்கின்றது
செலவு மிக மிக எகிறி இருகின்றது, காங்கிரஸ் அரசு 100க்கு மேற்பட்ட விமானங்களை வாங்க போட்ட பட்ஜெட்டில் பாஜக அரசு மிக சில விமானங்களையே வாங்க போகின்றது
அப்படியானால் மீதி பணம் எல்லாம் எங்கே?
இங்குதான் பிரான்ஸ் அலறுகின்றது, இது இந்திய அரசியல் முடிவு எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாங்கள் போக இன்னும் இந்திய கம்பெனிகள் எல்லாம் உண்டு
ஆக என்ன செய்திருக்கின்றது மோடி அரசு? 1 ரூபாயில் வாங்க வேண்டிய உதிரி பாகத்தை, இல்லை எச்.ஏ.எல் நிறுவணம் தயாரிக்க வேண்டிய உதிரி பாகத்தை 50 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கின்றது
யாரிடம் அம்பானியிடம்
இதுதான் மாபெரும் ரபேல் ஊழல், 1 ரூபாயில் 10 கோடி , 100 கோடி என வைத்து பாருங்கள் ஊழலின் வீரியம் புரியும்
ஆக மேக் இன் இந்தியா என சொல்லி, ராணுவ கருவிகளை தயாரிப்பதாக சொல்லி , சந்தையினை திறந்துவிட்ட் அம்பானியினை கொழுக்க வைத்தாயிற்று
விஷயம் பற்றி எரிகின்றது, அமைச்சர் பாரிக்கர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார், நிர்மலா சீத்தாராமன் சொன்னதை சொல்லிகொண்டிருக்கின்றார்
பிரான்ஸ் நிறுவணம் இந்தியாவினை சிக்கலில் இழுத்தாயிற்று
நிச்சயம் போபர்ஸ், ஸ்பெக்ட்ரம் அளவு தேசத்தில் அணல் வீச வேண்டிய விவகாரம் , ஆனால் கனத்த அமைதி ஏன்?
இவ்வளவிற்கும் போபர்ஸ் அன்று முதல்தர பீரங்கி, இந்த ரபேல் போல் இடைதரமானது அல்ல. அதில் இப்படி திட்டமிட்டு ராஜிவ் செயல்படவுமில்லை, பின் அதை நிரூபிக்க முயன்று அப்படியே செத்தும் போனார்
ஆனால் ரபேலில் கனத்த அமைதி ஏன்? அதுதான் இந்தியா
காங்கிரஸ் என்றால் பொங்குவார்கள், அதுவும் திமுக என்றால் பொங்கி பொங்கி எழுதுவார்கள். அது திருட வந்த கட்சி என்பார்கள்
முதன் முதலில் இந்திய தேசியத்தின் ஆதிக்க சக்திகளுக்கு சவால் விட்ட கட்சி என்ற வன்மம் எல்லோருக்கும் உண்டு
நிச்சயம் 1லட்சத்து 75 ஆயிரம் கோடி எனும் புகழ்மிக்க வாசகத்தை விட பன்மடங்கு உயர்ந்தது இந்த ரபேல் ஊழல்
இந்திய விமானபடை நிலமைதான் பரிதாபம்
இந்த ரபேல் விமானம் ஒன்றும் மிக சிறந்தது அல்ல, நல்ல விமானங்களின் விலை மிக அதிகம்
அந்த அளவு பட்ஜெட் ஒதுக்க முடியாது என்பதால்தான் அமெரிக்க எப் 117, ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை சுகொய், பிரிட்டனின் டைபூன் வகைகளை எல்லாம் வாங்க முடியாமல் ரபேல் பக்கம் வந்தோம்
இங்கு நடந்திருக்கும் ஊழலின் பெருந்தொகைக்கு இங்கிலாந்தின் டைபூனையும், மிக நவீனமன யூரோ பைட்டரரையும், இஸ்ரேலின் அதிநவீன விமானங்களையும் வாங்கி இருக்கலாம்
நாட்டின் பாதுகாப்பிற்கான பணத்தை அம்பானி பாக்கெட்டிற்கு செல்ல அனுமதித்த இந்த பெரும் ஊழல் நிச்சயம் சாதாரணம் அல்ல‌
(இதெல்லாம் அரசு பணத்தை பாலம் கட்டுகின்றோம், இன்னும் பல கட்டுகின்றோம் என அரசு பணத்தை வெளியில் விட்டு சுருட்டும் தமிழக தந்திரம்தான், சந்தேகமில்லை
நாளை ஏதேனும் அவசரத்தில் இந்திய ராணுவம் பயன்படுத்தும்பொழுதுதான் தமிழக பாலங்களின் நிலை தெரியும்
சாதாரண மழை வெள்ளத்திற்கே தமிழக பாலங்கள் அடித்து செல்லபடுகின்றன, அப்படி ஒரு அசாதாரண சூழல் வந்தால் தமிழக கட்சிகளின் பாலம் கட்டி விளையாடும் விளையாட்டின் அசிங்க முகம் தெரியும்
அப்பொழுது நாட்டின் பாதுகாப்பு மிக பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்)
Image may contain: airplane