எஸ் 400 பாதுகாப்பு முறை

உள்நாட்டு நிர்வாகத்தில் மோடி சொதப்பிய இடங்கள் உண்டு, பெட்ரோல் விலையே சாட்சி
ஆனால் உலக அரங்கில் நேரம் பார்த்து அடித்துவிட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி
ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது
இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவபயிற்சியிலும் இறங்கிவிட்டது
அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. ஆனால் உடனே பொருளாதார தடை விதிக்க முடியுமா? சிக்கல் ஏராளம், இதில்தான் மோடி வென்றிருக்கின்றார்
ஆம், எஸ்.400 அமைப்பினை ஏற்கனவே சீனா வாங்கி இருக்கின்றது, இனி அது இந்தியாவிடம் இல்லா பட்சத்தில் இங்கு ராணுவ சமநிலை குறையும், சீனாவின் கை ஓங்கா பட்சத்தில் இந்தியாவும் நிற்க அனுமதிக்கும் தேவை அமெரிக்காவிற்கு உண்டு
இன்னொன்று சீனாவுடன் வர்த்தக போர் தொடங்கி இருக்கும் நேரத்தில் இந்தியாவினை பகைத்துகொள்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல‌
இரு பெரும் நாடுகளை ஒரே நேரத்தில் பகைத்தால் அமெரிக்க வியாபாரமும் படுத்துவிடும்
இதனால் பல்லை கடித்து கொண்டு நிற்கின்றது அமெரிக்கா
பழைய அமெரிக்கா என்றால் ஹாய் பாகிஸ்தான் ஹவ் ஆர் யூ” என கட்டிபிடிக்க ஓடும், ஆனால் பாகிஸ்தானை கட்டியழ அவர்களுக்கும் விருப்பமில்லை
கூட்டி கழித்து பார்த்தால் அமெரிக்காவின் நிலையினை கணக்கிட்டு அட்டகாசமாக தன் நலன்களை காத்து கொண்டது இந்தியா
சரியான காலத்தில் மிக சரியான கணக்கு என்பதால் மோடிக்கு வாழ்த்துக்கள்
பெட்ரோலுக்கு அதிகவரி கொடுக்கின்றோம் என ஒரு பக்கம் நாம் குறைபட்டு கொண்டாலும், அந்த பணம் இம்மாதிரி நாட்டு பாதுகாப்புக்கும் பயன்படுகின்றது என்பதில் ஆறுதல்
எஸ் 400 சிஸ்டத்தின் விலை பல ஆயிரம் கோடி, எத்தனை நாடுகளால் வாங்கமுடியும்? நம்மால் முடிந்திருக்கின்றது
எப்படியோ முன்பு காங்கிரஸ் அரசால் ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் எஞ்சினை வாங்கமுடியாமல் போனது
இந்த எஸ 400 என்பதும் அப்படி ஆகிவிடுமோ என தேசம் அஞ்சியது ஆனால் நிர்மலா சீத்தாராமன், அஜித் தோவால், மோடி கூட்டணி மிக தைரியமாக சாதித்திருக்கின்றது
நிர்மலா ஒரு தமிழர் என்பதால் கூடுதல் வாழ்த்துக்கள், வரலாற்றில் நின்றுவிட்டார் நிர்மலா சந்தேகமில்லை. இது வரலாற்று சாதனை
அமெரிக்கா எதிர்ப்பினை மீறி ரஷ்யா சென்று ஒப்பந்தமிட்ட வீரதமிழச்சி அவர்தான். அதன் தொடர்ச்சிதான் புட்டீன் இங்கு வந்திருப்பது
நிச்சயம் உலக அரங்கில் இது இந்தியாவின் மாபெரும் வெற்றி, இந்திய ஊடகமும் பத்திரிகையும் கொண்டாட வேண்டிய வெற்றி
ஆனால் தமிழக ஊடகம் வழக்கம் போல தூக்கம், சம்பந்தம் இல்லாமல் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பது போல் எழுதிகொண்டிருக்கின்றன‌
அவைகள் அப்படித்தான்.
வலுவான பாரதம் அமையட்டும், பாரினில் நிமிர்ந்து நிற்கட்டும்
[ October 5, 2018 ]
Image may contain: 1 person, standing and suit
Image may contain: 1 person
Image may contain: sky and outdoor
==========================================================================

எஸ் 400 பாதுகாப்பு

இந்த எஸ் 400 பாதுகாப்பு முறை அப்படி என்ன சர்வ சக்தி வாய்ந்தது, உலகம் வியக்கும் வண்ணம் அதில் என்னதான் இருக்கின்றது விளக்கமுடியுமா? என பலர் கேட்கின்றார்கள்
விளக்கத்தானே இருக்கின்றோம், பின் எதற்கு இருக்கின்றோம்?
அதாவது எஸ் 400 என்பது ஏவுகனை விமானம் என வானில் வரும் எல்லா வகை ஆபத்துக்களையும் முறியடிக்கும் முறை, இதுவரை நிலமை என்ன?
ஒரு ஏவுகனை இந்தியாவினை நோக்கி வந்தால் அதை முறியடிக்க பேட்ரியாட் ஸ்டைலில் எதிர்ப்பு ஏவுகனைகளை ஏவ வேண்டும், விமானம் என்றால் அதற்கான ஸ்பெஷல் ஏவுகனை
இது போக தரையில் இருந்து ஏவபடும் ஏவுகனைக்கு தனி வகையறாவினை பதிலுக்கு ஏவ வேண்டும், காரணம் இது உயரம் குறைந்த வகை, ரேடாருக்கு எளிதில் சிக்காது
கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் ஏவபடும் ஏவுகனைகளுக்கும் இதே சிக்கல்
இந்த பலவிதமான எதிர்ப்பு ஏவுகனைகளை ஒரே விதத்தில் சமாளித்தால் என்ன என்ற சிந்தனை 1980களிலே வந்தது
ஆனால் பின்புதான் வடிவம் பெற்றது
இன்றைய நாளில் அமெரிக்காவின் தாட் சிஸ்டம் இந்த வகை என்கின்றனர், ஆனால் உறுதியில்லை எனினும் அமெரிக்க ஏவுகனை தடுப்பான தாட் எல்லா வகை ஏவுகனைகளையும் சமாளிக்கும் என நம்பபடுகின்றது
சமீபத்தில் வடகொரிய மிரட்டலின்பொழுது தாட் வகையினைத்தான் ஜப்பான், தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியது. ரஷ்யாவிற்கு செக் வைக்க கிழக்கு ஐரொப்பாவில் உக்ரைன் பக்கம் நிறுவபோவதாக சொன்னது பின் புட்டீன் முறைத்தவுடன் வாபஸ் வாங்கிவிட்டது
இஸ்ரேலின் அயன்டோம் இந்த வகை, ஆனால் ஹமாஸின் தரை வழி தாக்குதலை தவிர எதையும் அது சோதித்ததில்லை எனினும், ஹமாஸின் ஆயிரம் ராக்கெட்டுகளை தடுத்த மாபெரும் சாதனை இஸ்ரேலுக்கு உண்டு
ஹமாஸ் என்றால் ஈரானிய ஏவுகனை என பொருள்
இந்த வரிசையில் வருவதுதான் ரஷ்யாவின் எஸ் 400.
கிட்டதட்ட 400 கிமீ தொலைவு வட்டத்திற்குள் வரும் விமானம், ஏவுகனை, கப்பல் ஏவுகனை, தரை ஏவுகனை, நீர் மூழ்கி ஏவுகனை என 6 வகை ஆபத்துகளை தனி சிஸ்டமாக இது தடுக்கும்?
அப்படி தடுக்கும்?
360 டிகிரி 400 கிமீ சுற்றளவினை கண்காணிக்கும் அதன் ரேடார்கள் ஏவுகனைகளை கண்டவுடன் மிக துல்லியமாக கணக்கிட்டு பதில் கனைகளை ஏவி அவற்றை தொலைத்துவிடும்
ஏவுகனைகளை மட்டுமல்ல, அது ஏவபடும் நிலையம், கப்பல் என எல்லாவற்றையும் தொலைக்கும் சக்தியும் உண்டு
இதனால்தான் இது மிக சிறந்த தடுப்பு மற்றும் எதிர்ப்பு சாதனமாக கருதபடுகின்றது
இதில் சாதகம் உள்ள அளவு பாதகமும் உண்டு
முதலாவது இந்த சிஸ்டம் இயங்கும் பேட்டரி மிக விலையானது, ரஷ்யாவிடம் இருந்தே வாங்க வேண்டும் அதன் பராமரிப்பும் இன்னபிற செலவுகளும் அதிகம்
ஒருவேளை எதிரி ஏவுகனை இந்த பேட்டரியினை சாய்த்துவிட்டால் சர்வமும் நாசம், எனினும் அது மிகுந்த காவலிலேதான் இருக்கும்
இரண்டாவது விஷயம் இன்னும் எந்த களத்திலும் எஸ் 400 சோதித்துபார்க்கபடவில்லை, ஆனால் அது எந்த களத்திலும் சாதிக்கும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது
சமீபத்திய பயிற்சியிலும் அதை சோதித்தது , எஸ் 400 சிஸ்டம் நன்றாகத்தான் வேலை செய்தது
ஏற்ககனவே சீனாவிற்கு இதை ரஷ்யா வழங்கி உள்ளது, ஈரானுக்கு வழங்க தயார் என்கின்றது
இப்பொழுது இந்தியாவிற்கும் வழங்க ஒப்புகொண்டாயிற்று
இந்தியா போன்ற மிகபெரிய நாட்டிற்கு இம்மாதிரி பாதுகாப்பு முறைகள் நிறைய தேவை என்பதால் கண்டிப்பாக வாங்கி ஆக வேண்டும், வாங்கி ஆயிற்று
இந்த பாதுகாப்பு நிறுத்தபட்டால் பாகிஸ்தானின் ஆட்டம் செல்லாது என்பதால் இந்திய ராணுவ வலு மேலோங்கும் என்பதால் அமெரிக்கா தடுக்கபார்த்து இப்பொழுது முணுமுணுத்துகொண்டிருக்கின்றது
சிரிய போரில் இஸ்ரேலுக்கு ரஷ்யா போட்டிருக்கும் சிவ மாலை இந்த சிஸ்டம் , இதை தாண்ட இஸ்ரேலாலும் முடியவில்லை எனில் அதன் தரத்தை புரிந்துகொள்ளலாம்
இந்த எஸ் 400 என்பது 6 வழியில் வரும் ஏவுகனை மற்றும் விமானங்களை தடுத்து அழிக்கும் என்பதால் அதன் முக்கியத்துவம் மிக அதிகம்
மிக வேக ஏவுகனைகள் முதல், நீர்மூழ்கியின் டார்பிடோ, விமானத்தில் இருந்து விசப்படும் ஹாக் வகைகள், ஸ்மெர்ச் எனப்படும் பல்குழல் ஏவுகனைகளை எல்லாம் அட்டகாசமாக எஸ் 400 சமாளிக்கும்
இன்றைய ராணுவ உலகின் முக்கியமான சாதனம் அது, அது இந்தியாவில் நிறுத்தபடுமானால் அது மாபெரும் வெற்றியே சந்தேகமில்லை
ஆனால் அந்த பேட்டரி செலவிற்காக பெட்ரோல் விலை 200 ஆனாலும் ஆச்சரியமில்லை என்பது வேறுவிஷயம் [ October 5, 2018 ]
Image may contain: sky and outdoor