இலங்கை பிரதமரானார் ராஜபக்சே : செய்தி

இந்தியா மேல் பாகிஸ்தான் பலமுறை போர் தொடுக்க காரணமானவன் ஜியா உல் ஹக், அவனை தொடர்ந்து கார்கில் போரினை நடத்தினான் முஷாரப்

அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் அதிபர் ஆகும்பொழுது இங்கு சத்தமில்லை

இந்தியா மீது அறிவிக்கபடாத யுத்தம் நடத்தியவர் ஜின் பெங், அவர் நிரந்தர சீனா அதிபராகும் பொழுது சத்தமில்லை

இப்படி இந்நாட்டின் மேல் பெரும் வன்மம் கொண்டவர்கள் எல்லாம் அதிபராகும் பொழுது இந்நாட்டிற்கு ஒரு துரோகமும் செய்யாத ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராகும் பொழுது இங்கு கத்துவார்களாம்

இதுவா நாட்டுபற்று? அவமானம் வெட்கம்..

2009க்கு பின் அதிபராகவே இருந்தார் ராஜபக்சே அப்பொழுதெல்லாம் சத்தமில்லை

2009 யுத்ததித்தினை பாதுகாப்பு அமைச்சராக முன்னெடுத்தார் சீறிசேனா அவர் அதிபராகும் பொழுது சத்தமில்லை

ஆனால் ராஜபக்சே பிரதமர் ஆனால் குதிப்பார்களாம், இவர்கள் எல்லாம் மனநோயாளிகளோ எனும் சந்தேகம் வலுக்கின்றது

[ October 27, 2018 ]

============================================================================

இலங்கையில் இந்தியா ஏதோ வலுவாக செய்கின்றது, சந்தேகமில்லை

என்னை கொல்ல இந்தியா சதி என ஒப்பாரி வைத்தார் மைத்திரிபாலா, ஆனால் அதற்கு முன்பே அங்கு உள் அரசியல் குழப்பத்தில்தான் இருந்தது

டெல்லி வந்து மோடியினை பார்த்து பேசிவிட்ட் சென்றார் மகிந்த‌

அச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் அவர் பிரதமர் ஆகியிருப்பது என்ன நடந்திருக்கும் என்பதை காட்டுகின்றது

இலங்கையில் அதிபர்தான் உச்ச பதவி, பிரதமர் என்பது முக்கிய பதவி அல்ல எனினும், வருங்கால அதிபர் யார் என்பதை காட்டுவது பிரதமர் பதவியே

அதனால் ராஜபக்சே மறுபடியும் அதிபர் ஆக பிரகாசமாக வாய்ப்புள்ளது

2009க்கு பின் இரண்டாம் முறை அவர் அதிபராகும் பொழுது வாக்கு எங்கே அதிகம் வாங்கினார் என்றால் யாழ்பாணம் ஏரியாவில்

அதாவது அங்குள்ள தமிழரே ராஜபக்சேவினை ஆதரிக்கும் பொழுது இங்கு பலர் குதிப்பதுதான் காமெடி

[ October 27, 2018 ]

============================================================================

முக ஸ்டாலின் இலங்கை நிலவரம் குறித்து ஏதோ சொன்னதாக சில செய்திகள் சுற்றுகின்றன, அது உண்மை என்றால் மனிதர் “நாம் தமிழர் , எடப்பாடி கும்பல் உட்பட அனைவரையும் என் மேல் காரி துப்புங்கள்..” என அழைப்பதற்கு சமம்

அன்னார் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆவதை இந்தியா அனுமதிக்க கூடாது , அவர் மேல் விசாரணை வேண்டும் இன்னும் பல வேண்டும் 7 தமிழர் விடுதலை வேண்டும் என அறிக்கை விட்டதாக தகவல்கள் வருகின்றன‌

அது உண்மை என்றால் ஸ்டாலினுக்கு மனபதற்றம் முற்றிவிட்டது, அரசியல் சுத்தமாக புரியவில்லை, பெரும் சேற்றில் கால் வைக்கின்றார் என்பதே உண்மை

2009ல் முள்ளிவாய்க்கால் கொடுமையில் திமுக காங்கிரஸ் அரசில் இருந்தது, நெருக்கடி ஒன்றும் கொடுக்கவில்லை அந்த கரும்புள்ளி இன்றுவரை அதன் மேல் உண்டு

கலைஞர் மேல் படிந்த கறை அது, அதற்கும் மேல் கனிமொழி எல்லாம் ராஜப்க்சேவினை சந்தித்த காலமும் உண்டு

அப்படியாக ராஜபக்சே அட்டகாசம் செய்தபொழுது இங்கு மத்திய அரசில் இருந்த திமுக, இப்பொழுது அமைதி காப்பதே நல்லது

ஆனால் ஸ்டாலினோ பாஜகவினை எதிர்ப்பதாக சொல்லி கொண்டு மல்லாக்க துப்புகின்றார்

அன்னார் சொல்லி இருப்பதை பாருங்கள், இலங்கை கொலையாளி ராஜபக்சே தண்டிக்கபட வேண்டுமாம், ஆனால் இங்கு ராஜிவ் கொலையாளிகள் இலங்கை குடிமக்கள் விடுதலை செய்யபட வேண்டுமாம்

ஒரு பொறுப்பான தலைவர் பேச கூடிய பேச்சா இது?

நாம் தமிழர் தும்பிக்கும் முக ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இருப்பதாக கருத முடியுமா?

இதெல்லாம் திமுக அமைதியாக கடந்து செல்ல வேண்டிய நேரம், ஆம் இதை தொட்டால் பூமராங்காக திருப்பி அடிக்கும்

எப்பொழுதடா சீண்டலாம் என காத்து கொண்டிருக்கும் எடப்பாடி, பாஜக கும்பலுக்கு பெரும் வாய்ப்பாகும்

சந்தடி சாக்கில் என் இனமே… என சைமன் கோஷ்டி பொங்கி வரவும் வாய்ப்பு உண்டு

ஸ்டாலினின் இந்த மிக குழப்பான அணுகுமுறை என்னாகும் என்றால் கடந்த தேர்தலில் திமுக பெற்ற 80 தொகுதிகளும் அடுத்த தேர்தலில் இருக்குமா? இருக்காதா? எனும் பெரும் கேள்வி குறியினை எழுப்பும்

மிக பெரும் தவறான அடிகளை எடுத்து வைக்கின்றார் ஸ்டாலின்

ஒருவர், யாராவது ஒருவர் “ஏன்யா, நீங்கள் மத்தியில் இருந்தால் ராஜபக்சேக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கும் பொழுது அமைதியாக இருப்பீர்கள்

ஆனால் பாஜக ஆளும்பொழுது மகிந்தா குற்றவாளி என கிளம்புவீரா” என கேட்டுவிட்டால் நிச்சயம் அந்த கணத்தை ஸ்டாலினால் எதிர் கொள்ளவே முடியாது

இதற்கும் முக ஸ்டாலினுக்கு திமுகவில் எவனாவது முட்டு கொடுத்தால் அவனே 200 ரூபாய் பதிவாளன் என அறிக..

[ October 27, 2018 ]

============================================================================

கொஞ்சமும் தமிழகத்தில் நடக்கும் மிக கோமளித்தனமான ஊழல் ஆட்சியினை கண்டு கொள்ளாமல், இலங்கை பிரதமர் யார் என கவலைபடுகின்றான் அல்லவா?

இவனே தமிழன், இப்படிபட்ட மாநிலத்தில் எடப்பாடி என்ன? தமிழிசை கூட ஒரு காலத்தில் முதல்வராகலாம்..

அடேய் உணர்வாளர்களா? சொந்த‌ தமிழக அரசு பற்றி எல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா? [ October 27, 2018 ]

============================================================================

ராஜபக்சே பிரதமரானதில் சீனாவின் தூண்டுதல் உள்ளது, அவர்கள்தான் நியமித்திருக்கின்றார்கள் : திருமா

சார், இந்த பழனிச்சாமியினை முதல்வராக்கியது சசிகலா, அதை காத்து நிற்பது மோடி என சத்தமாக சொல்லுங்கள் பார்க்கலாம்..

[ October 28, 2018 ]

============================================================================

இலங்கையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நடக்கும் சண்டையில் மகிந்தா பிரதமராகிவிட்டார்

மகிந்தா இனி அதிபர் ஆனாலும் ஆகலாம்

இதில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதல்ல விஷயம், ராஜபக்சே அதிபரானால் யாருக்கு லாபம் என்றால் இந்தியாவிற்கும் அல்ல,சீனாவிற்கும் அல்ல‌

லாபம் அமெரிக்காவிற்கு

இலங்கையின் மேல் அமெரிக்காவிற்கும் தீரா காதல் உண்டு, தன் டீகோ கார்சியோ தீவினை காலி செய்யும் நிலையில் இருக்கும் அமெரிக்கா தன் முகாமை இலங்கைக்கு மாற்றும் பரீசிலனையிலும் உண்டு

ராஜபக்சே அதிபர் ஆனால் அமெரிக்கா என்ன செய்யும்?

2009 இறுதி போரின் ஒவ்வொரு நொடியின் ஆதாரமும் அமெரிக்காவிடம் உண்டு, பிரபாகரன் கொல்லபட்டது வரை உண்டு

சிங்கள ராணுவத்தினை செயற்கை கோள் மூலம் கண்காணித்த அமெரிக்கா ஒவ்வொரு சிங்கள குற்றத்தையும் பதிவு செய்திருக்கின்றது

எப்பொழுது தேவையோ அப்பொழுது வெளிவிடுவார்கள்

உதாரணம் ராஜபக்சே இருந்த வரை சாணல் 4 அதிரடி வீடியோக்களை வெளியிட்டது நினைவிருக்கலாம்

மைத்ரிபாலா வந்தபின் சாணல் 4 ஏதும் வெளியிட்டது இல்லை

ஆனால் ராஜபக்சே அதிபனால் வெளிவரும், அமெரிக்க கோரிக்கை வரும் வரை வரும்

நம்புகின்றீர்களோ இல்லையோ ராஜபக்சே அதிபராகி அமெரிக்காவிற்கு பணியவில்லை என்றால் போர்குற்ற சர்ச்சை சூடுபிடிக்கும்

அதற்கு ஆதரவாக தமிழகத்திலும் ஈழ அல்ட்ராசிட்டிகள் குட்டி கரணம் அடிக்கும்

ஆம், இங்குள்ள ஈழ அல்ட்ராசிட்டிகளுக்கும் அமெரிக்காவின் கண்ணசைவிற்கும் மறைமுக தொடர்புகள் அந்த காலத்தில் இருந்தே உண்டு

[ October 28, 2018 ]

============================================================================