ராஜராஜன் ஆட்சி மாபெரும் பொற்காலமே

ராஜராஜ சோழன் ஆட்சி ஒன்றும் பொற்காலம் அல்ல என்பவர்கள், உலகின் பொற்கால ஆட்சி என ஒன்றை காட்டட்டும்.

இவன் ஆட்சி பொற்காலம் என எதை 100% சொல்லமுடியும்?

பொற்கால ஆட்சி என ஒன்று எங்காவது நடந்திருந்தால் அது ஏன் வீழ்ந்தது என்பதையும் சொல்லட்டும்

உண்மையில் உலகில் 100% சரியான ஆட்சி என எதுவுமில்லை,

இன்றும் சிக்கல்கள் குறைந்த நாடு உண்டே தவிர சிக்கலே இல்லா நாடு என எதை சொல்லமுடியும்?

விட்டுகொடுத்து சென்றால்தான் குடும்பம், நாடும் சமூகமும் அப்படியே

மனிதன் என்பவன் குறைவுள்ளவனே, அவனின் ஆட்சியிலும் சில குறைகள் இருக்கலாம்

அதனால் ஏகபட்ட நிறைகளை கண்டுவிட்டு 1% குறையினையே கண்டு குதிப்பது குதர்க்கவாதம், சீழ் பிடித்த சிந்தை

எல்லோருக்கும் பிடித்தாமனபடி ஆட்சிசெய்ய கடவுளாலும் முடியாது

ஒருவன் ஆட்சியில் நாட்டில் பாதுகாப்பு இருந்தது, செல்வம் கொழித்தது, மக்கள் அகதிகளாக ஓடாமல், பட்டினியில் சாகாமல் நல்வாழ்வு வாழ்ந்தனர் என்றால் அதுதான் பொற்காலம்

அவ்வகையில் ராஜராஜன் ஆட்சி மாபெரும் பொற்காலமே