ராஜராஜன் என்ன சாதி

ராஜராஜன் கால கல்வெட்டு முழுக்க படித்தால் அவன் என்ன சாதி என்பதும் தெரியவில்லை

அவன் காலத்தில் என்னென்ன சாதி இருந்தது என்பது பற்றி ஒரு குறிப்புமே இல்லை

சோழன் என்ன? பண்டைய தமிழ் இலக்கியம் எதுவுமே சாதி பெருமை பேசவில்லை

எந்த புலவனும் எந்த சாதியும் சேர்த்தவன் என்ற வரலாறு இல்லை

அரசர்கள் சாதிக்காக சண்டையிட்டதாகவோ இல்லை நாட்டில் சாதிகலவரம் வந்ததாக தெரியவில்லை

தொழில் செய்த அடிப்படையில் தொழில் சார்ந்த அடைமொழி இருந்திருக்கின்றது, மாறாக சாதி என்பது இல்லை

அன்று சாதி இருந்திருந்தால் ராஜராஜனின் சாதி தெளிவாக தெரிந்திருக்கும், அன்றிருந்த சாதிபெயர்களும் அடையாளபடுத்த பட்டிருக்கும்

ஆக அவன் காலத்தில் சாதியோ இல்லை சாதி ரீதியான பாகுபாடுகளோ இருந்ததில்லை என்பது தெரிகின்றது

தொழில் செய்த பிரிவுகள் இருந்தன அது சாதியில் வராது

அதனால் உறுதியாக சொல்கின்றோம், சோழ பேரரசில் சாதி அடக்குமுறை இருந்ததற்கு வாய்ப்பே இல்லை

இவர்கள் இட்டுகட்டுவதெல்லாம் அவன் இந்துமன்னன் என்ற‌ ஒரே காரணத்துக்காக அன்றி வேறல்ல

எல்லோரும் கொண்டாடிய மன்னனாக அவன் இருந்திருக்கின்றான்,

அவன் சதய விழா ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்துவருவதும் இன்றும் 
எல்லா சாதியும் அவனை உரிமைகொண்டாடுவதும் அவனின் பெருமைக்கு என்றும் சான்று..

ஜார்ஜ் கோட்டைக்கு அப்பால் உருண்டவனுக்கும், குடியாத்தம் பக்கம் துண்டு பீடிக்கு அலைந்தவனுக்கும் தஞ்சாவூர் பாரம்பரியம் எப்படி புரியும்?