ரோமாபுரி ராட்சசன் : 01

அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம் அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் பன்னீர்செல்வம் அல்லது மோடி அமித்ஷா போல இருவர் வந்தார்கள், சும்மா வரவில்லை படையோடு வந்தார்கள் வந்து டிரஸ்கானியரை விரட்டிவிட்டு இது எங்கள் நாடு என அமர்ந்தார்கள், ரொமுலஸ் எனும் பெயரால் அது ரோம் என்றானது கிமு 753ல் ரொமுலஸால் ரோம் நிர்மானிக்கபட்டது, அதன் முதல் அரசன் அவனே, 37 ஆண்டுகளில் அவன் இறந்தான், அவனை தொடர்ந்து பீலியஸ், ஹாண்டிலியஸ், மார்ஷியஸ், பிஸ்கஸ் , டல்லியஸ், என பலர் ரோமை ஆண்டனர் கடைசியாக டார்கீனியஸ் 541 வாக்கில் ஆண்டுகொண்டிருந்தான்.

ரோமருக்கென்று தனி நாகரீகமோ கடவுளோ இல்லை, கொள்கை இல்லா அதிமுக போல இருந்தனர் ஆனால் அவர்களை போல வலுவாக இருந்தனர் கிரேக்கம் அன்று தனித்திருந்தது, இதனால் கிரேக்க கடவுள்களை இரவல் வாங்கினர், லத்தீன் பேசிகொண்டும் கிரேக்கரை கவனித்து கொண்டிருந்த ரோமில் திடீர் சிக்கல் வந்தது அவர்கள் கிரேக்கத்திடம் இருந்து கடவுளை மட்டும் காப்பி அடிக்கவில்லை மாறாக தத்துவங்களையும் காப்பி அடித்தனர், ஒன்றுமே இல்லாதோர் என்ன செய்வார் பாவம் ஆம் சாக்ரடீசுக்கு முன்பே கிரேக்கம் சிந்தனையின் உச்சத்தில் இருந்தது, அந்த சிந்தனை ரோமை பாதித்தது ஒரு சுபநாளில் மிகவும் சிந்தித்த மக்கள் மன்னன் டார்கீனியனிடனிருந்து அதிகாரத்தை கைபற்றினர், மன்னர் ஆட்சியில் மேற்பார்வையில் மக்களாட்சி மலர்ந்தது ஆம் உலகின் முதல் மக்களாட்சி அங்குதான் தோன்றிற்று உண்மையில் அது ஒரு மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. செனட் சபை எனப்படும் ரோம நாடாளுமன்றத்தில், செனட்டர்கள் எனப்படும் பிரதிநிதிகள் ஆயுட்கால உறுப்பினர்களாக இருந்தனர்.

அவர்கள் ஒன்று கூடி கொன்சுல் (Consul) எனப்படும் இரண்டு ஆட்சித் தலைவர்களை தெரிவு செய்தனர். இவர்கள் அரசனுக்கு பதிலீடாக இருந்தமை மட்டுமல்லாது, யுத்தப் பிரகடனம் செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர். ஆம் செனட் சபை என அமெரிக்கா இன்று அழைக்கும் காட்சிகளை எல்லாம் அன்றே அரங்கேற்றினார்கள் ரோமானியர் மக்களாட்சி என்றால் என்னாகும்? மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் உருக்கமான சேவைகள் அதில் ஊழல்கள் என ஒரு காட்சி வருமல்லவா? அது அங்கும் வந்தது ஆம், சாதி இல்லையே தவிர ஆண்ட வர்க்கம் , ஒடுக்கபட்ட வர்க்கம் என இரு பிரிவுகள் உண்டாயிற்று, உலகெல்லாம் இன்றும் இருக்கும் பிரிவுகள் இவைதான், இந்தியாவில்தான் சாதி என சொல்லி உட்பிரித்து அதை அரசியல் செய்கின்றோம்

ஆளும் வர்க்கம் “பட்ரீசியர்கள்”(Patricier) என அழைக்கப் பட்டனர். ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் “பிலேபியர்கள்” (Plebis) என அழைக்கப் பட்டனர். இவர்கள் இடையே பஞ்சாயத்து செய்ய ஒரு குழு அமைக்கபட்டது அதன் பெயர் கிலியேன்தலா(Clientela) இந்த ஆளும் ஆசாமிகளுக்கு ஏதும் சிக்கல் என்றால் இந்த கிலியேன்தலா என்பவர்களை கேட்பார்கள், இன்று என சொல்லபடும் வார்த்தையின் மூலம் அதுவே ஒரு கட்டத்தில் ஆளும் சாதிக்கும் அடிமை வர்க்கத்திற்கும் இடையே மோதல் முற்றி, கிலியேன் தலா எனும் மயிராவது என எச்.ராசா பாணியில் சொல்லிவிட்டு அடித்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் இப்பொழுது நாம் திராவிடம், ஆரியம், அம்பேத்கரியம் என அடித்துகொள்கின்றோம் அல்லவா? அது போரானால் எப்படி இருக்கும்?

அப்படி அவர்கள் கிரேக்க சிந்தனையாளர் பெயரை சொல்லி போராடிகொண்டிருந்தார்கள் (இன்னும் சட்டம் ஒழுங்கு இருப்பதால் கலவரமில்லை, அப்படி ஒன்று இல்லை என்றால் நினைத்து பாருங்கள், விடுவார்களா?) நிலமை எல்லை மீறி போவதை கண்ட மன்னன் டார்கீசியஸ் இது சரிவராது என செனட்டை எல்லாம் கலைத்தான் , மக்களாட்சி எல்லாம் சரிவராது ஒழுங்காக இல்லாவிட்டால் தலை சீவபடும் என எச்சரித்தான் மக்களாட்சி ருசிபார்த்த கூட்டம் விடுமா? அதுவரை அடித்து கொண்ட ஆண்டவர்க்கமும் அடிமை வர்க்கமும் மன்னனை விரட்டி அடித்து ஆட்சியினை கைபற்றியது கான்சல் எனும் அமைப்பு முழு அதிகாரத்தையும் கைபற்றியது, இதெல்லாம் நடந்து முடிய கிமு 100 ஆகிவிட்டது அதாவது ரொமுலஸ் காலத்திற்கு பின் 600 ஆண்டுகள் கடந்திருந்தன, அப்பக்கம் அலெக்ஸாண்டர் ஆசியா முழுக்க மாபெரும் சாம்ராஜ்யம் எல்லாம் அமைத்த்திருந்தான் கிரேக்கர் எந்நேரமும் மேற்கு நோக்கி பாயும் ஆபத்து இருந்தது, ஆனால் அலெக்ஸாண்டருக்கு பின்னரான கிரேக்கம் அடங்கிவிட்டதால் ஆபத்தில்லை.

ரோமிற்கு முதல் ஆபத்து கார்தோஜினியர் வடிவில் வந்தது, பிரான்ஸையும் ஸ்பெயினையும் பிடித்த அவர்கள் இத்தாலியின் ரோமையும் பிடிக்க வந்தனர் ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்தால் கடும் யுத்த பயிற்சியும் மனன்னையும் அவன் வீரர்களையும் விரட்டியதால் கடும் கூடுதல் பயிற்சியும் பெற்றிருந்த ரோமும் யுத்ததிற்கு தயாரானது அவர்களின் இரு வீரர்கள் பிரசித்தி ஒருவன் பாம்பே இன்னொருவன் ஜூலியஸ் சீசர் இருவரும் பாகுபலி பல்வாள்தேவன் போல கடும் வில்லாதி வில்லன்கள் சீசர் என்பது ஜூலியஸின் குடும்ப பெயர், சீசர் என்றால் லத்தீனில் யானை என பொருள், ஜூலியஸின் தாத்தா யானையினை கொன்றதால் அப்பெயர் வந்ததாம், எல்லாம் நமது ஊர் கரிகால்சோழன் சாயல் அப்படிபட்ட வீரவம்சத்தின் ஜூலியஸ் சீசரும் , பாம்பேயும் கார்தோஜினியர்களை அடிக்க படையோடு சென்றனர் கடும் யுத்தம் இரு முறை கத்ஜோனியரை அடித்துவிரட்டிய து சீசர் மற்றும் பாம்பேயின் படைகள், மக்களுக்கு ஏக மகிழ்ச்சி ஆனால் கார்தோஜினியர் விடுவதாக இல்லை 15 ஆண்டு கழித்து மறுபடியும் வந்தனர், இனி விடுவதாக இல்லை இதுவரை தற்காத்தோம் இனி அவர்கள் பகுதிக்குள் புகுந்து அடிக்க முடிவு செய்தது கான்சல் தளதிகள் சீசருக்கும் பாம்பேவுக்கும் உத்தரவும் வந்தது உள்ளே புகுந்து கார்தோஜினியர் கோட்டையினை தகர்த்து அவர்களை அடியோடு வீழ்த்தி மாபெரும் செல்வத்தோடு திரும்பினச் சீசரும் பாம்பேயும் ஆம் முதன் முதலாக ரோமை படைகள் அந்நிய தேசத்தில் பெற்ற வெற்றி அதுதான், பெரும் செல்வம் கொடுத்த யுத்தமும் அதுதான் செல்வம் கொட்டபடும் நாட்டில் என்னாகும்? கஜானா நிறையும், மக்கள் மகிழ்வார்கள் அமைதி செழிக்கும் அப்படியே வீரர்கள் கொண்டாடபடுவார்கள்

உண்மையில் அன்று உயர்தர வீரர்கள் குழுவாக இயங்கினர் அதில் சீசர், பாம்பே, புரூட்டஸ், சீசரோ என பலர் இருந்தாலும் பாஷா பாயாக கொண்டாடபட்டான் சீசர் அன்றைய ரோம் கான்சால்கள் ஆட்சியில் இருந்தது, அவர்களின் படையில் ஒரு தளபதி சீசர் காலம் மாவீரன் உருவாக ஒரு வாய்ப்பினை உருவாக்கும் என்பது வரலாற்று நியதி, அக்காலம் ரோமிற்கும் வந்தது

(தொடரும்..)