அந்த ஜப்பான் துயரம்

அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 8 வருடம் ஆயிற்று

புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது

இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள்

அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது

பணம் கூட சிக்கலில்லை, ஆனால் தொழில்நுட்பம்? அதுதான் பெரும் சிக்கல், இன்னும் அந்த அணுவுலையினை நெருங்க முடியவில்லை, அது இன்னும் கதிர்வீச்சினை வெளியிட்டுகொண்டே இருக்கின்றது.

செர்னோபில் போல நிலம் என்றால் கூட சுற்றி வேலியிட்டு மக்கள் நுழையாமல் தடுத்துவிடலாம், இது அப்படி அல்ல கடல் அதன் கதிரியக்கம் கடலில் கலந்துகொண்டே இருக்கின்றது

இதனால் பெரும் அழிவும், சீர்கேடும் அங்கு நடந்துகொண்டே இருக்கின்றது. ஜப்பானிய கடல் உணவு சந்தை சரிந்துகிடக்கின்றது.

மக்களுக்கு ஏற்படும் ரகசிய நோய்கள் ஒருபுறம், மறுபடியும் மக்கள் அங்கு குடியேறமுடியா கொடுமை ஒருபுறம், கட்டுபடுத்தமுடியா கதிர்வீச்சு ஒருபுறம், விஷமான கணநீர் ஒருபுறம் என திகைக்கின்றது ஜப்பான்

பல ஆண்டு ஜப்பானின் முன்னேற்றத்தில் பெரும் தடையாக , பெரும் சவாலாக வந்து நிற்கின்றது புக்குஷிமா…

அதனை கடக்க ஜப்பான் பட்டுகொண்டிருக்கும் சிரமம் கொஞ்சமல்ல, பொருளாதார ரீதியாக அது பெரும் அடிவாங்கிகொண்டிருக்கின்றது..

எவ்வளவோ மறைத்தும் ஜப்பானால் இந்த கதிரியக்க சீர்கேடுகளை தடுக்கவே முடியவில்லை, 2020 ஒலிம்பிக் போட்டியினை நடத்தி தன் நாட்டில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சொல்லிகொள்ள துடிக்கின்றது.

புக்குஷிமா ஜப்பானின் பொருளாதாரத்தை சரித்து போட்டிருக்கின்றது என்பது உண்மை, இன்னும் பல சிக்கல்களை அது எதிர்கொள்கின்றது

எப்படிபட்ட பொருளாதார ஜாம்பவான் ஜப்பான், அதுவே அணுவுலையினை சரிகட்ட முடியாமல் , அந்த விபத்தை எதிர்கொள்ளமுடியாமல் மிக மிக திணறுகின்றது

அணுகுண்டின் அழிவை உலகிற்கு சொன்ன அதே ஜப்பானே, கடற்கரை அணுமின் நிலைய ஆபத்தினை உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

பெரும் வல்லரசுகளின் ஆதரவில், பெரும் பணத்தில் மிதக்கும் ஜப்பானுக்கே இந்நிலை என்றால்????

அனாதையாக உலகில் , பெரும் மக்கள் தொகையுடன், வளர்ந்துகொண்டிருக்கும் இந்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடக்குமானால்….

நினைக்கவே பெரும் அச்சமூட்டும் விஷயமிது, தமிழக கடற்கரை ஒன்றும் சுனாமி அச்சமில்லா ஏரியா அல்ல, 2004 சுனாமி ஒரு காலமும் மறக்கமுடியாதது, அது சொல்லிகொண்டு வரவில்லை

ஒவ்வொரு விபத்திலிருந்தும் இந்த உலகம் ஒவ்வொரு பாடம் கற்று அதனை தவிர்த்தே வந்திருக்கின்றது,, எல்லா விஷயங்களிலும் அப்படித்தான்

ஆனால் அணு விஷயத்தில் அப்படி அல்ல, அந்த தவற்றை திருத்தவே முடியாது, அவ்வளவு ஆபத்தானது. தப்ப ஒரே வழி அதனை பாதுகாப்பாக மூடிவிட வேண்டியதுதான்

அமெரிக்கா அதனைத்தான் செய்ய தொடங்கியிருக்கின்றது , கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கின்றது. பிரான்ஸ் சிந்திக்க தொடங்கியிருக்கின்றது

புக்குஷிமாவினை தொடர்ந்து, ஜெர்மனி அணுவுலைக்கு வாய்ப்பு இல்லாத நாடாக தன்னை அறிவித்துகொண்டது

உலகெமல்லாம் அணுவுலையினை குறைக்க, தமிழகத்தில் மட்டும் கல்பாக்கம் ஈணுலை, கூடங்குளத்தில் 5,6 என எண்ணிக்கை கூடிகொண்டே செல்கின்றது

அணுகுண்டின் அழிவு ஹிரோஷிமா, நாகசாகி என இரு இடங்களில் தெரிந்தது. அணுவுலையின் அழிவு செர்னோபில் , புக்குஷிமா என இரு இடங்களில் உலகிற்கு சொல்லபட்டிருக்கின்றது

இந்த துயரங்களோடு அணு கொடுமைக்கு முடிவு கட்டினால் மானிட குலம் வாழும்

எல்லா அணுவுலைகளும் தூங்கும் அணுவுலை என்பதனைத்தான் இந்த விஞ்ஞான உலகம் சொல்லிகொண்டிருக்கின்றது

அவை நிரந்தரமாக தூங்கவும் ஒரு காலம் வரட்டும்….