பதிலுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?

உலகினை ஒரு வழிசெய்யாமல் விடமாட்டேன் என வம்பு செய்யும் டிரம்பானவர் இன்றொரு அறிவிப்பினை செய்து உலகை அலறவிட்டிருக்கின்றார்

அதாவது ஆப்பிள் போன்ற நிறுவணங்கள் சீனாவில் இருந்து வெளியேற வேண்டுமென கேட்டுகொண்டிருக்கின்றார்

இதன் பாதிப்பு சாதாரணமாய் இராது, காரணம் அப்படியானது

அமெரிக்கா ஒரு காலத்தில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் நம்ப்ர் 1 நாடாக இருந்தது, இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அது நீடித்தது

பின் அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளுக்கு அந்த தொழிலை கொடுத்தார்கள் ஆனால் தொழில்நுட்பம் அமெரிக்காவுடையது

தாம்ஸன் டிவி, ஜேவிசி போன்ற அமெரிக்க‌ கம்பெனிகள் காணாமல் போல சோனி, பானசோனிக், சாம்சுங் போன்ற கம்பெனிகள் பரகாசுரமானது இப்படித்தான்

தென்கொரிய ஜப்பானிய கார்கள் குவிந்ததும் இப்படித்தான்

இது போக சீனாவிலும் ஏகபட்ட முதலீடுகள் உண்டு. முதல் காரணம் அங்கு நிலையான அரசு, என்ன சிரமம் என்றாலும் போட்ட முதலுக்கு ஆபத்தில்லை

இரண்டாவது விஷயம் தொழிலாளர்கள், ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு கொடுக்கபடும் சம்பளத்தில் 15 சீனர்களை வேலைக்கு வைக்கலாம், இதில் போனஸ், ஓய்வூதிய சிக்கலும் இல்லை

சாகும்வரை முடிந்தால் செத்தபின்னும் வேலைவாங்கிவிட்டு தூக்கி எறியலாம்

மூன்றாவது சுற்று சூழல், எல்லா எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சிலிக்கான் சில்களால் ஆனவை. அந்த மண்ணை எடுத்து வேதிபொருள் சேர்த்து சலவை செய்து சிலிக்கான் சிப்ஸ்களாக மாற்றுமுன் பெரும் சுற்றுபுற சூழல் ஏற்படும்

இதை எல்லாம் கணக்கிட்டுத்தான் மேட் இன் சைனா அமெச்ம்பிள் இன் அமெரிக்கா என ஐபோன் முதல் ஐபிஎம் கம்பியூட்டர் வரை வருகின்றன‌

அழிவது ஒரு நாடு வாழ்வது அமெரிக்கா எனும் தத்துவம் இது

இதில்தான் டிரம்ப் கைவைக்கின்றார், சீனா நமக்கு நண்பன் அல்ல அங்கு தொழில் செய்வதால் அமெரிக்கருக்கான வேலை வாய்ப்பு வெளிநாடுகளுக்கு செல்கின்றது என சீறுகின்றார்

ஆனால் ஆப்பிள் போன்ற நிறுவண முதலாளிகளோ சென்னை உணவக, கட்டட முதலாளிகளை போல பேசுகின்றனர் எப்படி?

இங்கே ஆள்கிடைத்தால் நாங்கள் ஏன் வடமாநில தொழிலாளரை வேலைக்கு வைக்கின்றோம் என கேட்கின்றார்கள் அல்லவா அப்படி

“அமெரிக்காவில் இந்த சம்பளத்திற்கு யார் வருவார்? வரவே மாட்டார்கள். ஒருவேளை வந்தாலும் ஆப்பிள் போனை பல கோடிகளில் விற்றால்தான் கட்டுபிடி ஆகும், இந்த டிரம்பிற்கு இதெல்லாம் தெரியவில்லை” என பெரும் புலம்பலில் இருக்கின்றார்கள்

உண்மையும் அதுதான், அக்கம்பெனிகள் கிளம்பும் பட்சத்தில் ஆப்பிள் முதலான கம்பெனிகளின் பொருட்களின் விலை கடும் உயர்வடையும்

இது பலத்த சலசலப்பினை ஏற்படுத்திய நிலையில் டிரம்ப் இந்தியாவிற்கான மானியமும் நிறுத்தபடும் என்கின்றார்

இந்தியாவிற்கு எதற்கு மானியம்?

இதுதான் அமெரிக்கா, நல்வாழ்வு நிதி என ஒரு தொகை கொடுப்பார்கள், ஏழை இந்தியருக்கான வீடு, கல்வி இன்னபிற என சொல்லி கொடுப்பார்கள்

இப்படி ஒரு நிதி இருப்பதே பலருக்கும் தெரியாது, ஆனால் உண்டு

ஏன் அமெரிக்கா கொடுக்கும்? அவ்வளவு நல்லவர்களா?

இல்லை, அமெரிக்கா என்பது வியாபாரிகள் நாடு. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் வியாபாரம் இருக்கும்

இப்படி கொடுத்துவிட்டு பின்வாசல் வழியாக கோக் முதல் கே.எப்.சி வரை கொண்டு கொட்டி விற்பார்கள்

மிகபெரும் சந்தையான இந்தியாவினை அவர்கள் கையில் வைத்திருக்க இந்நிதி கொடுப்பார்கள், டிரம்ப் அதை நிறுத்துகின்றார்

பதிலுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?

துருக்கி போல அமெரிக்க பொருட்களான கோக் முதல் ஆப்பிள் போன் வரை எல்லாவற்றிற்கும் கடும் வரி விதிக்க வேண்டும் இல்லை தடை விதிக்க வேண்டும்

அமெரிக்கா வல்லரசு, உற்பத்தி மிக்க தேசம் சந்தேகமில்லை ஆனால் கொள்வார் இல்லாத வியாபாரம் என்னாகும்?

இந்தியாவின் சந்தை அதன் மிகபெரும் பலம்

நிச்சயம் இந்தியாவோடு உரசும்பொழுது இந்தியா இப்படி பதிலடி கொடுக்கலாம், பெப்சியினையும் கோக்கையும் விரட்டினாலே ஏகபட்ட அந்நிய செலாவணி மிஞ்சும்

டாலருக்கு எதிரான மதிப்பு குறையும்

செய்யலாமா என்றால் செய்யலாம் இந்திராவும் ராஜிவும் அதை அட்டகாசமாக செய்தார்கள்

மோடியும் செய்யலாம் ஆனால் அதற்கு 56 இன்ஞ் மார்பு வேண்டும்

அமெரிக்கா இந்திய பொருளுக்கு வரி விதிக்கும் பொழுதும் மானியத்தை நிறுத்தும் பொழுதும் இந்தியா ம்ம் கிளம்பு கிளம்பு என அமெரிக்க பொருட்களுக்கு விடை கொடுப்பதே சரியான பதிலடி

மிஸ்டர் மோடி உங்களுக்கு 56 இன்ஞ் மார்பு இருக்கின்றதா? அளந்து பார்க்கலாமா?