வாமணன் : நெப்போலியன் வரலாறு : 15

Image may contain: one or more people

வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி.

தமிழக பாஜக போல தலைவர் ஆக எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது

நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை என்பதால் நம்பிக்கையோடு நின்றான்

கொடும் யுத்தம் தொடங்கியது, இருபக்கமும் அணல் பறந்தது, திடீரென யுத்த வியூகத்தை மாற்றினான் வெலிங்டன்

நெப்போலியனின் தளபதிகள் முடக்கபட்டனர், முன்னேறிகொண்டிருந்த நெப்போலியனின் தளபதி மைக்கேல் நொய் என்பவனும் முடக்கபட்டான்

எல்லா படைக்கும் பலவீனமான பக்கம் இருக்கும், அதை வெளிதெரியாமல் காத்துகொள்வது யுத்த தந்திரம், ஆனால் நெப்போலியன் படை பலவீனம் அவன் மனைவி வழியாக எதிரி கைகளுக்கு போயிருந்தது

அவசரத்தில் திரட்டிய படை என்பதால் அவனின் வீரர்களும் அவ்வளவு திறமையாக இல்லை

Image may contain: people sitting

அதனால் அந்த பலவீனமான‌ இடத்தில் குறிபார்த்து வெலிங்டன் அடிக்க , நெப்போலியன் பின்னடைந்தான். ஏற்கனவே லிஸ்பெக்கில் தோற்றிருந்தான் அல்லவா? இம்மாதிரி சூழலில் என்ன செய்யவேண்டுமென்று திட்டமிட்டிருந்தான்

தான் பின்னடையும் நேரத்தில் பெரும் படை வரவேண்டும் என ஒரு பிரிவினை ரிசர்வாக வைத்திருந்தான், அது வர உத்தரவும் கொடுத்தான்

ஆனால் படை வரவில்லை, ஏதோ உள்சதியால் அப்படைபிரிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை

படை வராமல் போனது, சில தளபதிகள் நடிப்பு, தன் பலவீனத்திலே அடிப்பது, அவனுக்கு அப்பொழுது தொடங்கியிருந்த வயிற்று வலி எல்லாம் சேர்ந்து அவனை தோற்கடித்தது

பல சக்திகள் தனக்கு எதிராய் இருப்பதை கண்டுகொண்ட நெப்போலியன் “எல்லாம் முயற்சித்துவிட்டேன் இனி செய்ய ஒன்றுமில்லை” என குதிரையினை விட்டு இறங்கினான்

கிட்டதட்ட பெண் மோகத்தில் தன் ரகசியத்தை சொல்லி மாட்டிகொண்ட பெரும் வீரன் சாம்சன் எனும் பைபிள் பாத்திரத்தில் நின்றான் நெப்போலியன்

பிரிட்டானியர் அவனை இங்கிலாந்து அருகில் இருந்த ஹெலனா தீவில் சிறை வைத்தார்கள். தனக்கு நிகழ்ந்த துரோகங்களை நினைத்தபடியே அங்கு சுற்றினான் அந்த சிங்கம்

பிரான்சில் நிலமை மாறியது, நெப்போலியனின் தளபதிகள் மைக்கேல் நொய் உட்பட எல்லோரும் கொல்லபட்டார்கள், ஆஸ்திரிய மனைவியும் அங்கு சென்றுவிட்டாள்

நெப்போலியன் வழக்கம் போல படிப்பதில் மனதை செலுத்தினான், ஜூலியஸ் சீசர் என்ற புத்தகத்தையும் எழுதினான்

அவன் அங்கிருந்து அமெரிக்கா தப்பியதாகவும், படை திரட்டியதாகவும் வதந்தி உண்டு ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை

வயிற்றுவலி அதிகரித்தது, உடல் வலுவிழந்தது, கிட்டதட்ட 25 வருடம் இடைவிடாத யுத்தம் நடத்தியவன் அவன், அந்த இளம் வயதில் அவன் சரியாக உண்ணவில்லை, உறங்கவில்லை அது 40 வயதிற்கு மேல் வயிற்று கோளாறு எனும் எமனாய் வந்ந்தது, மிக மோசமானது உடல்நிலை

ஜோசப்பின் பிரான்ஸ் ராணுவம் என அதனையே நேசித்த நெப்போலியன் அந்த மூன்று வார்த்தைகளையும் உச்சரித்துகொண்டே தன் 51ம் வயதில் இறந்தான்

அவன் அங்கு அடக்கம் செய்யபட்டாலும் 1840ல் அவன் எலும்புகள் பிரான்ஸ் கொண்டுவரபட்டு அவனுக்கு அங்கு நினைவாலயம் எழுப்பபட்டது

பெரும் படை நடத்தும் ராணுவ ஜெனரல் தனி தீவில் சாவார் என நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது அப்படி நிறைவேறிற்று

எல்பா தீவிலிருந்து தப்பி தான் நாஸ்டர்டோமஸை வென்றதாக சொன்னான் நெப்போலியன், ஆனால் நாஸ்டர்டோமஸ்தான் வென்றார்

நெப்போலியனின் வாழ்வும், போரும், வீரமும், ஆட்சியும் பெரும் ஆச்சரியங்கள்

டிவோலன், ஜிகா,டிவோலி, ஆட்ல்ட்ராலிஸ் என அவன் நடத்திய போர்கள் பெரும் நுட்பமானவை, இன்றும் ராணுவ பாடமாக வைக்கபடுபவை

அவன் முதலில் கடலில் தோற்றான், பின் ரஷ்யாவில் குளிரில் தோற்றான் அந்த குளிரினால் ஏற்பட்ட சேதத்தில் லீஸ்மெக்கில் தோற்றான்

கடைசியாக வஞ்சகமாக தோற்கடிக்கபட்டான்

தகுந்த ஒத்துழைப்பும், முறையான போரும் கிடைத்தபட்சத்தில் எல்லாம் அவனை வெல்ல யாருமே இல்லை. எத்தனையோ களங்களில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பியவன் அவன்

எதிரிகள் சுற்றி நின்று சுட்டபொழுது அருகிலிருந்த பிணக்களை கவசமாக கொண்டு தப்பி வந்த சாகசககரன்

திறமையான ராணுவ கமாண்டருக்கு அவனே பெரும் எடுத்துகாட்டு

நல்ல நிர்வாகிக்கும் அவனே உதாரணம், இன்றும் பிரான்ஸ் அவன் உருவாக்கிய சட்டதிட்டங்களிலே பயணிக்கின்றது, நெப்போலியன் கோட் என்பது இன்றும் உண்டு. அவன் ஏற்படுத்திய வரிவசூல் முறை இன்றும் பின்பற்றபடுகின்றது

ஷேக்ஸ்பியர் மட்டும் நெப்போலியன் காலத்திற்கு பின் பிறந்திருந்தால் ஆண்டனி கிளியோபாட்ரா, ரோமியோ ஜூலியட் வரிசையில் நெப்போலியன் ஜோசப்பின் காதலும் காவியமாகி இருக்கும், அப்படி காதல் ரசம் சொட்டும் வாழ்வு அவனது

அவனின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை சொல்வார்கள், ஜோசப்பின் ஜாதகம் ராஜயோகம் கொண்டவது, அவளை கொள்பவர்கள் பெரும் உச்சம் அடைவார்கள் என்பது அவளின் ஜாதக பலன், அதுதான் நெப்போலியனை வழிநடத்திற்று, அவளை பிரிந்தபின் அவன் வீழ்ந்தான் என்பார்கள் சிலர்

நெப்போலியனை பிரிந்தபின்பும் ஜோசப்பின் வாழ்ந்தாள், அவளின் வம்சமே இன்றிருக்கும் பல ஐரோப்பிய அரசகுடும்ப ராணிகள் (பிரிட்டன் தவிர), ஐரோப்பாவை அவர்கள் ஆள்கின்றார்கள்

ஆனால் நெப்போலியன் அவளை பிரிந்தபின் வீழ்ந்தான்

போப்பாண்டவரை பாடாய் படுத்திய சாபம் என்றோரு பக்கம் சொல்வார்கள். நெப்போலியனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது, தன் ஜோசியன் கணிப்பை மீறி ரஷ்யா மீது படை எடுத்ததே காரணம் என்பார்கள்

ஆனால் உண்மை காரணம் மிக எளிதானது

நெப்போலியன் பிரான்சின் மன்னனாக இருந்து அதை காத்த்திருந்தால் ஒரு சிக்கலும் வந்திருக்காது, அவன் மக்களாட்சியின் தலைவனாக இருந்தால் கூட சிக்கல் இல்லை

ஆனால் ஐரோபாவில் பிரான்ஸ் தலமையில் வல்லரசு, ஒரே அரசு என்ற குறிக்கோளில் இறங்கினான், அதுதான் தவறு

பிரான்சில் மதவாதிகளையும், பணக்காரர்களையும் பகைத்து அவன் அரசியல் செய்தது இன்னொரு தவறு

பல தேசிய இனமக்களை தன் ராணுவ பலத்தால் ஒரே குடையில் கொண்டுவர விரும்பினான், அது ஒருகாலமும் நடக்காது என காலம் காட்டிற்று

நெப்போலியன் வாழ்வு சொல்வது அதுதான்

தேசிய இனங்களை ஒரே நாடாக இணைத்து செல்ல பெரும் நுட்பம் வேண்டும். பல இனம் ஒரே நாடு என்பது எளிதில் சாத்தியமில்லை, மதவாதிகளையும் பணக்காரர்களையும் எதிர்த்து நிலைப்பதும் சாத்தியமில்லை

ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு அதுதான் நடந்தது

பின் ஹிட்லர் காலமும் அப்படியே நடந்தது, உலகெல்லாம் மிரட்டி பெரும் சாம்ராஜ்யம் அமைத்த பிரிட்டனின் சாம்ராஜ்யமும் அப்படியே உடைந்தது

இன்று பல நாடுகளில் இந்த சிக்கலை நீங்கள் காணலாம், இந்தியினை டெல்லி திணித்தபொழுது தமிழகம் வெகுண்டு எழுந்த காலமும் அப்படித்தான். பெரியார் போன்றவர்கள் திராவிட நாடு கேட்டதும் இப்படித்தான்

பல தேசிய இனங்களை அடக்கி ஆள்வது என்பது முடியவே முடியா காரியம், உரிமைகள் கொடுக்காமல் ஒருமித்து வாழவே முடியாது

அதுவும் மதவாதிகளை எதிர்த்தால் எப்படி எல்லாமோ அடிப்பார்கள், மதம் இருக்கும் வரை மன்னன் தனி ஒருவனாக வரமுடியாது

இந்த விஷ பரிட்சையினை அன்றே பரிசீலித்து , முயற்சித்து பார்த்து பின் உண்மையினை ஒப்புகொண்டு தனி தீவில் இறந்தவன் நெப்போலியன்

அவன் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

சாதாரண சிப்பாயாக இருந்து படிபடியாக முன்னேறி பெரும் வியத்தகு யுத்தங்களை புரிந்து, மன்னனாகி ஐரோப்பா மொத்தமும் அலற வைத்து, சர்வ சக்தி மிக போப்பாண்டவரையே நிற்க வைத்து கேள்வி கேட்டு , மிக எளிய மன்னனாய் வாழ்ந்து, வரலாற்றில் மிகபெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு சென்ற நெப்போலியனின் பாதிப்பு கொஞ்சம் அல்ல‌

இவ்வுலகில் ராணுவம் , அரச நிர்வாகம் , காதல் , நாட்டுபற்று, வீரம் என்ற விஷயங்கள் பேசபடும்பொழுதெல்லாம் நிச்சயம் நெப்போலியனும் பேசபடுவான், அதனால் கால காலத்திற்கும் நிலைத்திருப்பான்

எனினும் பல தேசிய இனங்களை அடக்கி பெரும் வல்லரசு, ஓரரசு என முயற்சித்தால் என்னாகும் என்பதற்கும், மதவாதிகளும் பணக்காரர்களும் சொந்த நாட்டு வீரனையே எப்படி கொல்வார்கள் என்பதற்கும் கல்லறையே சாட்சி,

அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்து பல தடங்களை பதித்துவிட்டு இன்று அதில்தான் அடங்கி கிடக்கின்றான்

முற்றும்

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 14

Image may contain: one or more people and outdoor

பிரான்ஸ் நாட்டின் மன்னனான நெப்போலியனை கிட்டதட்ட 12 நாடுகள் இணைந்துதான் வீழ்த்தின, அதுவும் அவன் படைபலம் குறைந்த நேரத்தில், அந்த அளவு பலமிக்கவனாக இருந்தான் நெப்போலியன், தோற்றானே தவிர திருப்பி அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது

லீப்ஸிக்கில் தோற்றபின் அல்லது விரட்டபட்ட பின் ஏப்ரல் 6, 1814ல் நெப்போலியன் பதவியிறக்கம் செய்யபட்டார். லூயி எனும் பழைய வாரிசை மன்னர் ஆக்கியது கூட்டுபடையும் பிரான்ஸும்

நெப்போலியனை எல்பா எனும் தீவிற்கு கடத்தும்படி ஒப்பந்தமும் எழுதபட்டது. எல்பா என்பது பிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் நடுவே இருந்த தீவு, பல இடங்கள் பரிசீலிக்கபட்டாலும் நெப்போலியனின் பாதுகாப்பு முக்கியம் என்பதும் முக்கியமானதாக இருந்தது

நாட்டுக்குள் வைக்க முடியாது மக்கள் தூக்கி வந்துவிடுவார்கள், அடுத்த நாட்டில் வைத்தாலும் ஆபத்து ஒரே வழி தீவுதான், அவனின் சொந்த தீவுமுதல் பல தீவுகள் இருந்தாலும் எல்பா சரியென அவர்களுக்கு பட்டது

தப்பினாலும் அவன் இத்தாலி அருகில் இருப்பதால் அங்குதான் செல்லமுடியும், ஏற்கனவே போப்பாண்டவரை அவன் படுத்தியபாட்டில் அங்கு அவனே செல்லமாட்டான் என்ற கோணமும் இருந்தது.

அதனால் அந்த தீவே பாதுகாப்பனது என அறிவிக்கபட்டது. காரணம் எளிதில் யாரும் செல்லமுடியாது, போதாகுறைக்க்கு பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி கப்பல்கள் என ரவுண்ட் வரும் ஏரியா

நெப்போலியனுக்கு மாதம் பெரும் தொகை, குடும்பத்தாரை அழைத்து செல்லும் சலுகை எல்லாம் கொடுத்து எல்பாவிற்கு அனுப்பினார்கள், ஆஸ்திரிய அரசி மூலம் அவனுக்கொரு மகனும் பிறந்திருந்தான், அவனையும் அழைத்து செல்ல சலுகை கிடைத்தது

அமைதியாய் அதனை ஏற்றுகொண்ட நெப்போலியன் தன் நம்பிக்கைகுரிய தளபதியாகிய மார்ஷல் நோய் என்பவன் மூலம் இன்னொரு கோரிக்கையும் வைத்தான்

அதாவது தன் மெய்க்காப்பாளர்கள் கொஞ்சம் பேர் தன்னுடன் இருக்கவேண்டும், அது பாதுகாப்பிற்காக என சொல்லி அவர்களுக்கு ஆயுதமும் பெற்றுகொண்டான்

எல்லாம் முடிந்து தன் பிரியத்திற்குரிய பிரான்ஸை விட்டு கப்பலேறினான் நெப்போலியன், அவன் மனம் கனத்திருந்தது. எவ்வளவு பெரும் ஆற்றல்வாய்ந்தவனாயினும் ஒருவன் பெற்றிபெற ஒரு காலமுண்டு என்றால் தோற்கவும், அமைதியாகவும் ஒரு காலம் கட்டாயம் உண்டு

இது அமைதியாகவேண்டிய காலம் என அறிந்த நெப்போலியன் அமைதியாகவே சென்றான்

எல்பா தீவு 200 கிமி நீளமும் 90 கிமீ அகலமும் கொண்டது, அங்கும் மக்கள் வசித்தார்கள், அங்கு போய் இறங்கினான் நெப்போலியன்

என்ன இருந்தாலும் ஆண்டவன், அதுவும் மிக சிறப்பாக ஆண்ட நெப்போலியனுக்கு எல்பாவில் சும்மா இருக்க முடியுமா? களத்தில் இறங்கிவிட்டான்

இது என்ன சாலை? இது என்ன கழிவு நீர் வழி? இது என்ன குப்பை , மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம் என பெரும் வசதிகளை செய்தான்

மக்கள் உழைப்பு, வருமானம் , வரி என பல விஷயங்களை செய்து அசத்தினான் நெப்போலியன்

அந்த தீவு மாறியது, மக்கள் அவனை கொண்டாடினர். தனக்கு பிரான்ஸ் அரசு மாதமாதம் கொடுத்த பணத்தை எல்லாம் அவன் அந்த தீவிற்கே செலவழித்தான். அது பெரும் வசதிபெற்ற தீவாயிற்று

நெப்போலியன் மிக எளிமையானவன் உணவு, கொஞ்சம் உடை, படிக்க புத்தகம், படுக்க கட்டில் இவைதான் அவனின் தேவைகள், அதனால் அள்ளி கொடுத்தான்

பிரிட்டனும் தன் உளவாளிகளை சில நேரம் பெரும் அதிகாரிகளையே அனுப்பி அவனை நோட்டமிட்டது. ஆம் தீவில் இருந்தாலும் சிங்கம் சிங்கமே எனும் அச்சம் இருந்துகொண்டே இருந்தது

இந்நிலையில்தான் திடீரென ஜோசப்பின் இறந்த செய்தி அவனை எட்டிற்று, அறையில் கதவினை பூட்டிகொண்டு அழுதான், “அரச உரிமைக்காக நான் உனக்கு துரோகம் செய்துவிட்டேன் ஜோசப்பின்..” என அவன் அழுத அழுகை அந்த தீவில் எதிரொலித்தது

அவள் மீது அவனுக்கு எவ்வளவு காதல் இருந்தது என அந்த தீவுமக்கள்தான் கண்டுகொண்டிருந்தார்கள், அந்த அளவு பாதிக்கபட்டிருந்தான்

அவன் தேறிவர சிலமாதங்கள் ஆனது, அப்பொழுது பிரான்ஸில் இருந்து செய்திவந்தது. இந்த லூயி சரியில்லை நாடு நாசமாகின்றது, காப்பாற்ற யாருமில்லை

அதுவரை தப்பும் திட்டமில்லாமல் சாதுவாக இருந்த நெப்போலியனுக்கு அதுமுதல் இருக்க பிடிக்கவில்லை. தனது பெரும் கனவும், கடமையுமான பிரான்ஸின் நலன் அவனுக்கு அவ்வளவு முக்கியம்

அவன் சாவின் விளிம்புவரை சென்று போர் நடத்தியதும், எத்தனையோ முறை சாக வேண்டிய அவன் தப்பியதும் பிரான்ஸின் நல்வாழ்வுக்கு என உறுதியாக நம்பியவன் அவன்

தன் உயிர் பிரான்சிற்காக போகவேண்டும் என்ற உறுதி அவனிடம் இருந்தது, தப்ப திட்டமிட்டான்

தன் ஆட்களை கொண்டு பெரும் கப்பல் போன்ற படகினை செய்ய சொன்னான், அது ஒரு பிரிட்டன் தளபதி குறிப்பிட நாட்களுக்கு ஒருமுறை வந்து சோதனையிடும் பகுதி, அங்குதான் கட்டினான் நெப்போலியன்

அவனுக்கு எல்லா கலையும் அத்துபடி என்பதால் கப்பல் கட்டபட்டது , உடனே அதனை பிரிட்டன் கப்பல் போல மாற்றி பிரிட்டன் கொடியினையும் பறக்கவிட்டான்

அதுமட்டுமன்றி உணவு ஆயுதம் எல்லாம் கப்பலில் பதுக்கிவிட்டு, எல்லோரையும் வெளியேற்றி வழக்கமான பணியில் இருக்க சொன்னான்

காரணம் இருந்தது, வழக்கமான சோதனை செய்யும் பிரிட்டன் கவர்ணர் வந்தார், இது பிரிட்டன் கப்பலா? ஒகே என நகர்ந்தார், கொஞ்சம் தள்ளி 50 பேர் புல் புடுங்குதல் மரம் வெட்டுதல் என செய்துகொண்டிருந்தனர், தோட்ட தொழிலாளிகள் என நினைத்து சென்றுவிட்டார்

அவர்கள்தான் கப்பலை கட்டி முடித்து, தப்பியோட இருப்பவர்கள் என அவருக்கு தெரியாது

அந்த தீவில் பிரான்ஸ் அதிகாரி இருந்தார், அவரிடம் தான் தினமும் நெப்போலியன் ஆஜராகிகொண்டிருந்தான், அன்றும் ஆஜராகிவிட்டு தூங்கபோவதாக சொல்லி வந்தவன் நைசாக கப்பல் ஏறினான்

அது பிப்ரவரி 26, 1815 நள்ளிரவு நைசாக ஓடம் கிளம்பியது, காற்று சரியில்லை என்றாலும் எப்படியோ நகர்த்தி வந்தான் நெப்போலியன்

அடிக்கடி சுற்றும் பிரிட்டன் காவல் படகுகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு பயணமானான், நடுகடலில் சுற்றி வளைத்திருந்தால் , அது பிரான்ஸ் படைகளோ இல்லை பிரிட்டன் படைகளோ அவனை விட்டுவைத்திருக்காது, ஆனால் சிக்கவில்லை, அவன் கப்பலை பிரிட்டன் பாணியில் பெயின்ட் அடித்து அந்த கொடியினை பறக்கவிட்டிருந்ததும் ஒரு காரணம்

4 நாட்களில் பிரான்சின் தெற்கு பகுதியினை அடைந்தான்

பிரான்ஸ் மக்கள் அவனை கண்டவுடன் மகா உற்சாகம் அடைந்தனர், நெப்போலியன் அவர்களுக்கு மிக பெரும் கனவு, மிக பெரும் கவுரவம்

ஐரோப்பாவில் பிரான்ஸ் வெற்றிமேல் வெற்றி குவிக்க அவனால் மட்டுமே முடியும் என நம்பினார்கள், பாஷா ரஜினியின் கையினை பிடித்து எல்லோரும் முத்தம் செய்வார்கள் அல்லவா? அப்படி கூடி வரவேற்றனர்

நெப்போலியன் தந்திரம் அதுதான், தனியாக பாரீசுக்கு சென்றால் சிக்கல், மக்களோடு மக்களாக சென்றால் அது புரட்சி

நெப்போலியன் வருகின்றான் என்ற தகவல் தெரிந்ததுமே ஆடிபோனான் லூயி, தளபதி மார்ஷல் லூயி என்பவனை அழைத்து நெப்போலியனை தடுக்க உத்தரவிட்டான்

மார்ஷல் லூயி கட்டப்பா போன்றவனா? துரோகியா, சந்தர்ப்பவாதியா என இன்றுவரை பதில் இல்லை, ஆனால் நெப்போலியன் வரவும் எதிர்கொண்டு சென்று அவனோடு சேர்ந்துவிட்டான்

படைகள் வந்ததும் நெப்போலியன் பழைய நெப்போலியனாக சென்று லூயி மன்னனை பார்த்த பார்வையில் அவன் சிம்மாசனத்தை துடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டான்

மறுபடி மன்னராக அமர்ந்தான் நெப்போலியன்

அய்யகோ சிங்கம் தப்பிவிட்டதா? என மறுபடி 12 நாடுகளும் அலறின, போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுதார்

அவனுக்கு அவகாசம் கொடுத்தால் வென்றுவிடுவான், லீஸ்மெக்கில் ரஷ்ய தோல்வி, நாம் செய்த வஞ்சகம் எல்லாம் வென்றது, இம்முறை அவன் சுதாரிப்பதற்குள் அடிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள்

அவர்கள் முடிவெடுப்பதற்குள் அவர்கள் அப்படித்தான் வருவார்கள் என முடிவெடுத்து படை திரட்டினான் நெப்போலியன்

பெரும் போருக்கு தயாரானது கூட்டுபடை, நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி வெறியோடு நின்றான்

இம்முறை நெப்போலியனுக்கு எதிரான படைக்கு தலமை தாங்க யாரும் முன்வரவில்லை. பிரிட்டன் கட்ற்படையில் கில்லி என்றாலும் தரை யுத்தத்தில் பல்லி என்ற நிலை இருந்தது, யாரையாவது தூண்டிவிட்டு காரியம் சாதித்துகொண்டிருந்தது அது

அப்படியாரும் வராத நிலையில் பிரிட்டன் வேல்ஸ் இளவரசன் வெலிங்டன் முன்வந்தார்

நெப்போலியனை இவரா எதிர்க்க போகின்றான் என எல்லோரும் முகத்தை தொங்கவிட்டு முணங்கிகொண்டிருந்தார்கள்

கிட்டதட்ட 12 நாடுகளின் பெரும்படை தயாரானது, அப்பக்கம் நெப்போலியன் கொஞ்சம் அச்சமின்றி தயாராக இருந்தான்

எத்தனை யுத்தங்களை நடத்தியவன் அவன்?, அதுவும் இதே கூட்டணிபடைகளை எத்தனை முறை ஓட விரட்டியவன் அவன், கொஞ்சமும் அச்சமின்றி வெற்றி ஒன்றே குறியாக இருந்தான்

எங்கே மோதலாம் என கேட்டார்கள், பின் இன்றைய பெல்ஜியம் நாட்டின் வாட்டர்லூ என முடிவாயிற்று

நெப்போலியன் மிக தயாராக இருந்தான், வெற்றி அவனுக்குத்தான் என நம்பினான், அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது

அதாவது அவன் தன் படைகளை முழுக்க நம்பியது போல அவன் படைகளும் அவனை நம்பியிருந்தால் அது நடந்திருக்கும்

ஆனால் படைகளுக்குள் பல களைகள் பலரால் அனுப்பபட்டிருக்கின்றது என அவனுக்கு அப்பொழுது தெரியாது

போரில் முதுகில் குத்துவது வேறு, முதுகில் ரகசியமாக குத்திவிட்டு போருக்கு போ என சொல்வது வேறு

நெப்போலியனுக்கு நடந்தது இரண்டாம் வகை

வாமணன் வருவான்..

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 13

Image may contain: one or more people, people standing, sky, ocean, cloud, outdoor, water and nature

நெப்போலியன் ரஷ்யாவில் இருந்து பின்வாங்க பல காரணங்கள் இருந்தன, கடும் குளிர் , ரஷ்யர்களின் பின்வாங்கி தாக்கும் தந்திரம் என ஏராளம், முக்கியமாக உணவு தட்டுப்பாடு

நெப்போலியன் ஐரோப்பா முழுக்க தனக்கு எதிரியார் என தேடி திரிந்தாலும் தன் காலடியில் இருந்த எதிரிகளை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டான்,

அவர்கள் பிரான்ஸ் நிலபிரபுக்கள் அந்நாளைய தொழிலதிபர்கள்

நெப்போலினின் சீர்திருத்த நடவடிக்கையில் அவர்கள் பெரிதாக பாதிக்கபட்டிருந்தனர் அவர்கள்தான் நெப்போலியன் இல்லாத நேரத்தில் புதிதாக ஒருவனை பதவியில் வைத்து புரட்சி செய்தனர்

இப்படி பல சிக்கல்களால் நெப்போலியன் ரஷ்யாவினை விட்டு பிரான்சுக்கு திரும்பவேண்டியதாயிற்று, அவன் திரும்பியபின் அவன் படைகளும் திரும்பின‌

7 லட்சம்பேரோடு சென்ற நெப்போலியன் 30 ஆயிரம்பேரோடுதான் திரும்பினான், ரஷ்யபோர் அவ்வளவு அழிவினை கொடுத்தது

ஆனால் ரஷ்யாவிலும் பெரும் அழிவு , குருச்சேவ் சொல்கேட்டு பின்வாங்கும் உத்திக்காக வீட்டை விட்டு சென்றவர்கள் வரவே இல்லை, அரசும் அவர்களை பற்றி கவலைபடவில்லை, நமது அரசு போல் இருந்திருக்கின்றது.

ரஷ்யாவிற்கும் ஏகபட்ட அழிவு

நாடு திரும்பிய நெப்போலியனை கண்டு பிரான்ஸ் அடங்கியது, டூப்ளிகேட் அரசனை தள்ளிவிட்டு தானே அரசன் என அமர்ந்துகொண்டான்

அவனுக்கொரு மகா அவசியம் வந்தது, அது நெருக்கடியும் கூட அவனது ஆதிக்கத்தில் இருந்த பல நாடுகள் அவன் தோல்விமுகம் காட்டியதும் எகிறின‌

ஒருவன் வெல்வது வரை அடங்கி இருக்கும் எதிரிகள், அவன் தோற்க ஆரம்பித்தபின் அடிக்க முயற்சிப்பர்கள். யுத்தத்தில் வெல்பவன் வென்றுகொண்டே இருக்கவேண்டும் , எதிரிகளை மிச்சம் வைத்துவிட்டு எங்கோ தோற்றால் அது எதிரிகளுக்கு பலம் கொடுத்துவிடும்

இதனை ஆழயோசித்தான் நெப்போலியன், நாம் தோற்றுவிட்டோம் படையினை இழந்துவிட்டோம் அப்படியே இருந்துவிட்டால் பிரிட்டன் வந்துவிடும், ஏதாவது செய்து தன் பலத்தை காட்டிவிட்டால்தான் சரி

மறுபடியும் படை திரட்டினான், பிரிந்த நாடுகளை மிரட்டி தன்னோடு சேர்த்துகொண்டான், ஸ்பெயின், பிரிட்டன், பிரஷ்யா, ஆஸ்திரியா நாட்டு கூட்டுபடைகளை 1813ல் அசால்ட்டாக வென்றான்

ரஷ்ய தோல்விக்கு பின்னும் எழுந்து நின்றான் அவன், அத்தோல்வி அவனை பாதிக்கவில்லை

ரஷ்ய படுதோல்விக்கு பின் அவனை எளிதாக அடித்துவிடலாம் என வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது, தான் புலி என்பதை நிரூபித்து பெரு வெற்றி பெற்றான் நெப்போலியன்

எதிரிகள் வியூகம் வகுத்தனர், அவர்களோடு பிரான்ஸின் உள்நாட்டு எதிரிகளும் கைகோர்த்தனர்

நெப்போலியனின் பலம் அவனின் படையும் அவனின் வியூகமும், அதில் வெற்றிகொள்ளமுடியாவிட்டால் அவன் பலவீனம் என்ன என யோசித்தனர்

நெப்போலியனின் அப்போதைய பலவீனமாக அவனின் ஆஸ்திரேய மனைவி இருந்தாள், அவளை அப்படி நம்பினான் அவன்

அவளோ நெப்போலியனின் படை முதல் ராணுவ ரகசியம் வரை எல்லாம் ஒற்றறிந்து ஆஸ்திரியாவிற்கு அனுப்பிவிட்டாள்

இது நெப்போலியன் எதிர்பாராதது, அவனுக்கு அது தெரியவே தெரியாது

கூடவே பிரான்ஸ் பிரபுக்களும் புதிதாக இணைந்த ராணுவத்தினருக்கும் அவன் தளபதிகளுக்கும் கையூட்டு கொடுத்து அவன் ராணுவத்தில் ஊடுருவியிருந்தனர்

ஒரு நல்ல அரசன் பணக்காரர்களை மீறி அரசு நடத்தமுடியாது என்பதற்கு நெப்போலியனே எடுத்துகாட்டு

இப்படியாக அவனுக்கே தெரியாமல் பெரும் சதிவலை பின்னபட்ட நிலையில் அவன் போருக்கு அழைக்கபட்டான்

அன்றைய பிரஷ்யாவின் லெப்சிக் என்ற இடத்தில் நெப்போலியன் படைகளும் எதிர் கூட்டணி படைகளும் மோதின, அதற்கு அலெக்ஸாண்டர் என்பவன் தளபதி

வழக்கம் போல யுத்தத்தில் தூள்கிளப்ப தொடங்கிய நெப்போலியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஆம் அவன்படை அவன் சொல்லியபடி இயங்கவில்லை

எதிரிகளோ எது நெப்போலியன் படையின் பலகீனமோ அதை துல்லியமாக தாக்கின‌

நெப்போலியன் உத்தரவிட்டாலும் அவன் படைகள் ஏறுக்குமாறாக செயல்பட்டன, நிலபிரபுக்களின் உத்தி அது

ஆயுதம் உற்ற நேரத்தில் கைவிட்டால் எப்படி இருக்கும்? அப்படி நின்றான் நெப்போலியன்

ஒரு கட்டத்தில் அவன் போர் செய்வதை மறந்து அதிர்ச்சியில் நின்றுவிட்டான், அப்பொழுதுதான் சுற்றி வளைத்தார்கள்

யாராலும் வெல்லமுடியா அவனை குளிர் வென்றது அதன் பின் சூது வஞ்சகமாக வென்றது

அவன் காத்து நின்ற பிரான்சில் அந்நிய படைகள் நுழைந்தன, நெப்போலியன் குற்றவாளி கூண்டில் நிறுத்தபட்டான்

ஐரோப்பாவினை அலறவைத்த மாவீரனை கண்டு உண்மையில் அவர்கள் அதிசயத்தார்கள், அவனை கொல்ல யாருக்கும் மனம் வரவில்லை மாறாக பதவி நீக்கம் செய்து பிரான்சில் இருக்க கூடாது என சொல்லி ஒரு தீவுக்கு அனுப்பினார்கள்

அது பிரான்ஸ்பக்கம் இருந்த எல்பா தீவு

தோற்றபின்பே தனக்கு எப்படி எல்லாம் வலை விரிக்கபட்டிருந்தது, யாரெல்லாம் தன்னை முதுகில் குத்தினார்கள் என உணர்ந்தான் நெப்போலியன் ஆனாலும் அப்பொழுதும் ஆஸ்திரிய மனைவி மீது சந்தேகம் வரவில்லை

பிரான்ஸை உயரிய இடத்திற்கு கொண்டு செல்ல போராடிய அந்த மாவீரன் எல்பா தீவுக்கு சென்றான்

அங்கு மக்கள் இருந்தனர், சிறிய நகரம்போல் அது இயங்கியது

ஐரோப்பாவினை ஆட்டிபடைத்த சூறாவளி அங்கு ஓய்வில் இருந்தது , ஆனால் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது

வாமணன் வருவான்…

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 12

Image may contain: one or more people

1812 ஜூன் 24ல் நெப்போலியனியனின் பெரும்படை ரஷ்யா நோக்கி கிளம்பியது

7 லட்சம் வீரர்கள், 70 ஆயிரம் குதிரைகள் 2 ஆயிரம் பீரங்கிகள் , உணவு பொருள் விநியோகத்திற்கு 2000 வேகன்கள் அதில் முழுக்க உணவுகள் என ஐரோப்பாவின் மிகபெரும் படையாக அது இருந்தது

அந்த படையோடும் கூட ஒட்டோமன் சுல்தான்களோடு நெப்போலியன் மோதவில்லை என்பதுதான் வரலாற்றின் மறைக்கபட்ட பக்கம். ஓட்டோமேன் துருக்கியரை அடித்திருந்தால் பட்டுசாலை உட்பட பல சாலைகள் நெப்போலியன் வசமாயிருக்கும், பிரிட்டனின் முதுகெலும்பு முறிந்திருக்கும்

இது நெப்போலியனுக்கும் தெரியாதது அல்ல, ஆனால் துருக்கியர் அவ்வளவு வலுவாக இருந்திருக்கின்றனர், அவர்களை நெருங்கவே நெப்போலியன் யோசித்திருக்கின்றான் என்பது புலனாகின்றது

Image may contain: 1 person

மாவீரன் நெப்போலியனை ரஷ்யாவில் மிக தந்திரமாக ஆடி, குளிரின் துணையோடு விரட்டிய குருச்சேவ் 

இப்படி பல இடங்களில் வரலாற்றில் துருக்கிய ஓட்டோமன் பேரரசு மறைக்கபட்டிருக்கின்றது, அது இருக்கட்டும் ரஷ்ய பக்கம் போகலாம்

நெப்போலியன் வருகின்றான் என்றதுமே ரஷ்யா அதிர்ந்தது. அவன் படைக்குமுன் ரஷ்ய படைகள் 5 நாள் தாக்குபிடித்தாலே மகா அதிசயம்

ஜார் மன்னர் கலங்கியிருந்தார், அவ்வாறே ரஷ்யாவும் கலங்கி இருந்தது. அவர்கள் தளபதியுடன் ஆலோசனை நடத்த்தினார்கள்

அந்த தளபதி கிழட்டு நரி, வயது 67 ஆகியிருந்தது ஒரு கண் கிடையாது, அட்ராசிஸ் போரில் நெப்போலியனிடம் தோற்று ஓடியவர் அந்த அவமானம் அவர் நெஞ்சில் இருந்தது, எரிந்து கொண்டிருந்தது.

அவர் பெயர் மிக்கைல் குட்சோவ்

நெப்போலியனை நேருக்கு நேர் சந்த்தித்தவர் என்பதால் அவனை போரில் வெல்ல முடியாது என்பது அவருக்கு புரிந்தது

ஒருவழியாக ஆலோசித்து அந்த குட்சோவ் சொல்படி கேட்பதாக ஜார் மன்னர் சொன்னார், அவரை தொடர்ந்து ரஷ்ய மக்களும் சொன்னார்கள்

குட்சோவ் சொன்னார், “இந்நிலையில் ஒரு பெரும் சக்தி துணையின்றி நெப்போலியனை வெல்ல முடியாது, போரிட்டால் நிச்சயம் தோல்வி

அதனால் நமக்கு உதவும் அந்த பெரும் சக்தி வரும்வரை பின்வாங்குவோம், அந்த உதவி கிடைத்தவுடன் திருப்பி அடிக்கலாம்

பின் வாங்குவது என்றால் சும்மா அல்ல, நெப்போலியனுக்கு யாரும் கொடுக்காத விநோதமான தண்டனையினை நாம் கொடுப்போம், ஆம் இந்த ஊரை விட்டு பரந்த ரஷ்யாவின் வடக்கு பக்கம் நோக்கி சென்றுகொண்டே இருப்போம்

பாலங்களை எல்லாம் தகர்த்துவிடுவோம், பின் தொடர்ந்து அவன் வரமுடியாது

ஒரு பருக்கை கோதுமை விடாமல், ஒரு கால்நடை இல்லாமல், ஒரு குண்டுமணி தங்கம் விடாமல் எடுத்துகொண்டு கிளம்புவோம், இந்த வெறும் கட்டங்களை வைத்துகொண்டு நெப்போலியன் என்ன கிழித்துவிடுவான்”

சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் கிளம்பினார்கள், சில இடங்களுக்கு தீவைத்துவிட்டும் சென்றார்கள்

ரஷ்ய எல்லைக்கு வந்த நெப்போலியன் 2 லட்சம் வீரர்களை அங்கே நிறுத்திவிட்டு 5 லட்சம் வீரர்களோடு ரஷ்யாவிற்குள் புகுந்தான்

அவன் கணக்குபடி 15 நாளில் யுத்தம் முடியும், அப்படியே ஜார் மன்னரை இழுத்துபோட்டு அடித்து தூக்கி எறிந்துவிட்டு ரஷ்யாவினை பிரான்சோடு இணைத்துவிடலாம்

ஆனால் அவனுக்கு அங்கு வினோத சோதனை இருந்தது, எதிரிகள் போருக்கு வந்தால் சண்டையிடலாம், எதிரிகள் பின்வாங்கி கொண்டே சென்றால் அதுவும் இருக்கும் வளங்களை எல்லாம் எரித்துவிட்டு பின்னோக்கி சென்றால்..

நெப்போலியனுக்கு மகா குழப்பம், என்ன இது சண்டைக்கு வருவார்கள் என நினைத்தால் எல்லாவற்றையும் கொழுத்திவிட்டு பின்னோக்கி நகர்ந்தால் எப்படி?

லித்வேனியாவிலிருந்து மாஸ்கோ செல்லும் வழியிலே சிக்கியது பிரெஞ்ச் படை, வழிகள் சரியில்லை குருட்சோவின் படைகள் அப்படி தடைகளை ஏற்படுத்திவிட்டு சென்றன, பாலம் கிடையாது எங்கும் இடிபாடுகள்

இந்த பாதையற்ற பயணத்திலே நெப்போலியனின் படைகளில் 20 ஆயிரம் பேர் காலி

ஒரு வழியாக மாஸ்கோ செல்லும் வழியில் இருந்த லெமொன்ஸ்க் கோட்டையில் சண்டையிட்டார் நெப்போலியன்

1 லட்சம் ரஷ்ய வீரர்கள் மோதினர், மிக பெரும் சண்டையாக உருவெடுக்கும் என நெப்போலியன் நம்பியபொழுது, திடீரென எல்லாவற்றையும் எரித்துவிட்டு ஓடியது ரஷ்யபடை

இப்பொழுது கோட்டை நெப்போலியன் வசம், ஆனால் இடிபாடுகளும் எரிந்த பாகமும் கொண்ட வெற்று கோட்டை, அதனை வைத்து என்ன செய்ய?

நெப்போலியன் தான் மிக பெரும் வலையில் சிக்கிவிட்டதை உணர்ந்தான், ரஷ்ய படைகளோ இருப்பதை எரித்துவிட்டு பின் வாங்கும் வகையில் சென்றுகொண்டே இருந்தது

எங்கு செல்கின்றார்கள் என தெரியாமலே சென்றான் நெப்போலியன்

மாஸ்கோவிற்கு முன்பு அவன் போராடினோ என்ற இடத்தினை நெருங்கியபொழுது பெரும் யுத்தம் வெடித்தது

குருட்சேவ் செய்த தந்திர காரியம் அது, நெப்போலியனுக்கு அழகாய் விளையாட்டு காட்டினான் குருட்சேவ் எப்படி?

இதற்கு அடுத்த இடம் மாஸ்கோ, ரஷ்ய தலைநகர். ஜார் மன்னன் அங்குதான் இருந்தார். இங்கு ஒரு யுத்தம் நடத்தினால் அங்கு ஜார் மன்னர் மாஸ்கோவினை காலி செய்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல வசதியாயிருக்கும்

அவர் அந்த திட்டத்தில் போங்கு போர் நடத்த நெப்போலியனோ வெறிகொண்ட யுத்தம் நடத்தினான்

அன்றைய போர் மிக கொடூரமானது ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் இறந்தனர். நெப்போலியனுக்கு வெற்றி ஆனால் சேதம் அதிகம்

வழக்கம் போல பின் வாங்கி சென்றது ரஷ்யபடை

எதிரிக்கு சேதம் விளைவித்துவிட்டு தன் பக்கம் சேதத்தை குறைத்து கொண்டு, இருப்பதை அழித்துவிட்டு பின்வாங்கி எதிரியினை தவிக்கவிடும் யுத்தியில் கைதேர்ந்திருந்தார் குருசேவ்

இதனை எதிர்பாரா நெப்போலியன் தடுமாறினான், 15 நாளில் முடியவேண்டிய யுத்தத்தை 3 மாதம் இழுத்தார் குருட்சேவ்

களைத்துவிட்ட நெப்போலிய படைகள் கொஞ்சம் தேறி மாஸ்கோ பக்கம் வந்தன‌

ரஷ்யாவின் தலைநகரை பிடித்துவிட்டால் ரஷ்யா நமது என்ற உற்சாகத்தில் தன் சக்தி எல்லாம் திரட்டி மீதி இருந்த படையுடன் மாஸ்கோவில் நுழைந்தான்

40 ஆயிரம் மக்கள் வசித்த மாஸ்கோ நகரம் துடைத்து காயவைத்தது போலிருந்தது, போதா குறைக்கு வீடுகளுக்கு தீவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்

ரஷ்ய வீடுகள் மரத்தால் ஆனவை என்பதால் அவை கொழுந்துவிட்டு எரிந்தன, நெப்போலியனை வரவேற்றது இவைகள்தான்

ஜார் மன்னரின் கிரெம்லின் மாளிகைக்கு விரைந்தான் நெப்போலியன் அங்கு அரசனின் செருப்பு கூட இல்லை

மாஸ்கோ நகர் எரிய, அங்கேயே வெறுத்துபோய் அமர்ந்தான் நெப்போலியன், அவனுக்கு நிச்சயமாக வெற்றி ரஷ்யாவினை பிடித்தாயிற்று ஆனால் மக்கள் இல்லாத மாஸ்கோவினை வைத்து என்ன செய்வது

வீரர்கள் சீதோஷ்ண நிலையில் சிக்கி இறந்தனர், உணவு குறைந்தது, இனி ஜார்மன்னரை தேடி சமாதானம் செய்துவிட்டு கிளம்பலாம் என திட்டமிட்டான் நெப்போலியன்

மன்னரோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்தார், ஆனால் தந்திர குருட்சேவ் சொன்னான், மன்னா சமாதானம் எல்லாம் வேண்டாம், சற்று பொருங்கள் . நமக்கு உதவி செய்ய பெரும் படை ஒன்றுவரும் , நெப்போலியனை ஓட அடிக்கலாம்”

ஜார் மன்னர் சமாதான ஒப்பந்தத்தை இழுத்தடித்தார், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு செல்ல்ல நெப்போலியன் தீர்மானிக்கும்பொழுதுதான் அவனுக்கு எதிராக காலநிலை மாறியது

ரஷ்ய குளிர்காலம் தொடங்கியது குளிரென்றால் பிரான்சிலும், ஜெர்மனிலும் உள்ள குளிர் அல்ல, இது பேய்குளிர்

அசால்டாக ‍மைனஸ் 20 டிகிரிக்கு குறைவாக செல்லும் குளிர், அந்த காலம் தொடங்கியதும் குருட்சேவ் சொன்னார், நமக்கு உதவியாக இயற்கை போராட வந்துவிட்டது இனி அடிக்கலாம்

அந்த பேய்குளிர் ரஷ்யர்களுக்கு நமது பங்குனி வெயில் போல பழக்கபட்ட விஷயம், ஆனால் நெப்போலியனுக்கு புதிது

அந்த குளிரில் அவனும் சிக்கி அவன் படைகளும் சிக்கி, உணவு தட்டுபாடும் இருந்தபொழுதுதான் குருட்சேவ் தாக்க ஆரம்பித்தார்

உண்மையான சண்டையினை குருட்சேவ் அப்பொழுதுதான் தொடங்கினார், நெப்போலியனோ சண்டையிட்டு களைத்து குளிரில் நடுங்கியபடி இருந்தான்

மாவீரன் நெப்போலியன் நிச்சயம் பெரும் வித்தகன், குருட்சேவினை அவன் சமாளித்தான், ஆனால் கடுங்குளிர் அவனை தோற்கடிக்க தொடங்கியது

வெல்லமுடியா ஒரு மாவீரன் இயற்கையிடம் தோற்க தொடங்கினான், இயற்கை உதவியுடன் குருட்சேவ் உற்சாகமாக முன்னேறினான்

நெப்போலியன் ரஷ்யாவில் சிக்க பிரிட்டன் தன் அரசியல் விளையாட்டை பிரான்சில் நடத்தியது, இனி நாடு என்னது என ஒருவன் புரட்சி செய்ய தொடங்கினான்

தகவல் நெப்போலியனுக்கு சென்றது

வாமணன் வருவான்..

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 11

Image may contain: one or more people, people riding horses and outdoor

பிரிட்டன் மீது பொருளாதார தடை என அறிவித்தாலும் ஐரோப்பிய நாடுகள் தயங்கித்தான் இருந்தன‌

காரணம் பிரிட்டன் அன்று மிகபெரும் வர்த்தக சாம்ராஜ்யம், வியாபாரத்திற்கு உண்டான அத்தனை சாதகங்களும் அவர்களுக்கே இருந்தது, குறிப்பாக கப்பல்கள்

வியாபாரம் இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகள் கதி அதோகதிதான், அதனால் பிரிட்டனுடன் ரகசிய உறவுகளை வளர்த்தன. சசிகலா கோஷ்டியோடு பன்னீர் கோஷ்டியில் சிலருக்கு உறவு இருக்கின்றதல்லவா? மோடியினையும் மீறி ரகசியமாக பழகுகின்றார்கள் அல்லவா? அப்படி

நெப்போலியன் நிர்வாகத்தில் கில்லாடி, பிரிட்டன் மீது பொருளாதார தடை விதிக்கபட்டிருக்கும் பொழுது பிரான்சின் வருமானம் கூடியிருக்க வேண்டும் , ஆனால் கூடவில்லை என்பதை உணர்ந்தான், ஆக அவன் நூல் பிடித்து பார்த்ததில் ஸ்பெயினும் போர்ச்சுகலும் பிரிட்டனுடன் ரகசிய உறவு இருந்தது புரிந்தது

அவ்வளவுதான் இனி ஸ்பெயின், போர்ச்சுகல் என இருநாடு கிடையாது, எல்லாமே பிரான்ஸ் என சொல்லி ஆக்கிரமித்துகொண்டான்

அவனை எதிர்க்க யாரால் முடியும்? அதனால் வஞ்சக திட்டத்தில் இறங்கியது பிரிட்டன்

காட்டில் சிங்கம் என்றுமே சிங்கம்தான். நேருக்கு நேர் எந்த மிருகத்தையும் சந்திக்கும் பலம் அதற்கு உண்டு

ஆனால் செந்நாய்கள் கூட்டமாக நின்று 50 நாய்களும் ஆளுக்கொரு பக்கமாக இழுக்கும்பொழுது சிங்கம் திணறத்தான் செய்யும்

இந்த யுத்தியில் இறங்கியது பிரிட்டன், நெப்போலியனுக்கு எதிரான கொரில்லா யுத்தம் ஆரம்பித்தது

ஆனால் அவன் அசரவில்லை. பிரான்சின் கலவரங்களை அடக்கியே வளர்ந்தவன் என்பதால் அசால்ட்டாக சமாளித்தான். ஓரளவு அமைதி வந்தபின் தன் தளபதிகளை நிறுத்திவிட்டு பாரிஸ் திரும்பினான்

ஆனால் நெப்போலியன் அளவுக்கு அவன் தளபதிகள் இல்லை என்பதால் ஸ்பெயின் பிரிட்டன் கூட்டுபடைகள் பிரான்சு படைகளை விரட்ட தொடங்கின‌

போர் வலுத்தது, பெரும் செலவு பிடித்தது. வருமானத்தை எல்லாம் போர் விழுங்க, நெப்போலியன் தவித்தான்

அமெரிக்கா அருகே கனடாவில் பிரான்சுக்கு காலணி இருந்தது, அவற்றை அமெரிக்காவிற்கு விற்று சமாளித்தான், விலை என்ன தெரியுமா?

1 ஏக்கர் நிலம் 70 சென் அதாவது 70 பைசா

எப்படி எல்லாமோ சமாளித்த நெப்போலியனுக்கு அந்த போர் கடும் சரிவினை கொடுத்தது

பின்வாங்கியது பிரான்ஸ்படை, ஆனாலும் ஸ்பெயினும் போர்சுகல்லும் பதற்றத்திலே இருந்தன, அடிபட்ட புலி நிச்சயம் பாயும் என்ற பதைபதைப்பு இருந்தது

பிரிட்டன் அட்டகாசமாக விளையாடியது. ஸ்பெயினும் போர்ச்சுகல்லும் கத்தோலிக்க நாடுகள் போப்பாண்டவரை தொழும் நாடுகள்

அவ்வகையில் போப்பிற்கு ஆதரவான நாடுகளை எல்லாம் கிளப்பிவிட்டது பிரிட்டன். போப் என்பவர் கிறிஸ்துவின் பிரதிநிதி, அவரை ஆதரிப்பது கிறிஸ்தவ கடமை என கிளம்பின அந்நாடுகள்

அவைகளை பிடித்து காலுக்குள் வைத்துகொண்டு நெப்போலியன் செய்த காரியம் ஐரோப்பாவினை அலற வைத்தது

ஆம், போப் என்பவரை காணவில்லை. நெப்போலியன் வீரர்கள் எங்கோ கடத்தி சென்றுவிட்டனர். கிறிஸ்தவ உலகம் பதறியது, நெப்போலியனிடம் கேட்டார்கள், அவன் சொன்னான்

“அவர் இல்லாவிட்டால் உலகம் ஒன்றும் இயங்காமல் போகாது, பாருங்கள் சூரியன் உதிக்கின்றது பனி பெய்கின்றது”

யாரும் பதில்பேசவில்லை. கொஞ்சநாள் கழித்து வீரப்பன் கும்பலிடம் இருந்து தப்பிய ராஜ்குமார் போல வந்தார் போப்

அவர் உயிரோடு வந்ததே பெரியவிஷயம் என எண்ணிய நாடுகள், அதன் பின் அவருக்காக நெப்போலியனிடம் பகைக்கவில்லை

போப்பினை விட கூடுதல் அதிகாரம் நெப்போலியனுக்கு வந்தது , கிட்டதட்ட 1500 ஆண்டுகால ஐரோப்பாவில் போப்பினை ஆட்டிவைத்த அரசன் நெப்போலியன் ஒருவனே

இரு விஷயக்கள் அவனை உறுத்தின, ஒன்று வெல்லமுடியாத பிரிட்டன் இன்னொன்று பிள்ளை பெறாத ஜோசப்பின்

பிரான்ஸ் வழக்கபடி பிள்ளைபேறு இல்லாத அரசி பதவி நீக்கம் செய்யபட்டு அரசர் இன்னொரு திருமணம் செய்யவேண்டும்

இல்லாவிட்டால் அரச கட்டிலை விட்டு இறங்க வேண்டும்

நெப்போலியனுக்கோ பிரான்சும், ஜோசப்பினும் இரு கண்கள், இரண்டையும் மனமார நேசித்தான். ஆனால் ஒருவரை விட்டு தீரவேண்டிய நிலை

ஜோசப்பினை பிரிய முடிவு செய்தான் நெப்போலியன், அவன் வாழ்வின் மிக கடினமான முடிவு அது.

அரசிபட்டத்தில் இருந்து விலக்கினானே ஒழிய அவளை அடிக்கடி சந்தித்துகொண்டான். நெப்போலியன் கிட்டதட்ட நெற்றிக்கண் ரஜினி போல தீராவிளையாட்டு பிள்ளை ஆயினும் ஜோசப்பின் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது

நெப்போலியன் இப்படி குழம்பிகொண்டிருக்க, பிரிட்டன் மறைமுக அம்புகளை எய்துகொண்டே இருந்தது. இம்முறை ஆஸ்த்ரியாவின் மனதை கரைத்தது

பலமுறை அடிபட்ட ஆஸ்திரியா இம்முறையும் அடிவாங்க தயாரானது, யுத்தத்திற்கு கிளம்பியது

ஆஸ்திரியாவினை அடித்து அடித்து கைவலித்த நெப்போலியன் இம்முறையும் அடித்தான், ஆஸ்திரிய அரண்மனைக்குள் நுழையும்பொழுதுதான் அந்த இளவரசியினை கண்டான்

அவனுக்கு பல கணக்குகள் ஓடின, தன் அரியாசனத்திற்கு ஒரு அரசி வேண்டும், ஆஸ்திரியாவுடன் சமாதானம் வேண்டும் என பல திட்டங்கள் இட்டு இறுதியாக அந்த இளவரசியினை மணமுடிக்க திட்டமிட்டான்

ஒரு விஷயம் உண்மை, சாதிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடித்துவிடும், அதுவும் போர் களத்தில் சாதிக்கும் ஆண்களுக்கு கிடைக்கும் ரசிகைகளே தனி

நெப்போலியனுக்கு அப்படி ரசிகை பட்டாளம் ஐரோப்பா முழுக்க இருந்தது, அதில் சில கூட்டத்தோடு அவன் கொண்ட்டாட்டம் நடத்திய காட்சிகளும் இருந்தன‌

அவன் குதிரை சில நேரங்களில் நெப்போலியனோடு அழகிய பெண்களையும் சுமந்தது, அவன் அழைக்காமலே வந்து அமர்ந்துகொண்ட பெண்கள் அவர்கள்

அப்படிபட்ட நெப்போலியனுக்கு ஆஸ்திரிய இளவரசி மேரி லூயிஸ் தலையாட்டியது ஒன்றும் அதிசயமல்ல‌

அவளை மணக்க நெப்போலியன் விரும்பியதும், ஆஸ்திரிய அரச குடும்பம் மனதில் ஒளிந்திருந்த நெப்போலியன் வெறுப்பு துள்ளி குதித்து மூளைக்கு வந்தது

அவனை வீழ்த்த ஒரே ஆயுதமாக அவளை பயன்படுத்தினார்கள்

அதை அறியா நெப்போலியன் அவளை திருமணமும் செய்தான், வழக்கம் போல அடம்பிடித்த போப் அள்ளி கொண்டுவரபட்டார்

அவள் பிரான்சின் அரசியாக முடிசூட்டிகொண்டாள். நெப்போலியனை வீழ்த்தும் திட்டத்தில் ஆஸ்திரிய அரச குடும்பம் இறங்கியது

தான் பார்த்த எத்தனையோ ரோஜாக்களில் ஒன்று என மேரி லூயிசை நினைத்தான் நெப்போலியன், அதில் ஒளிந்திருந்த பூ நாகத்தை அவன் கவனிக்கவில்லை

இன்னொரு விஷயமும் நோக்கவேண்டியது

சில ஜாதக விஷயங்கள் பல இடங்களில் பலித்திருக்கின்றது, அது எப்படி? எதனால் என தெரியாது. ஆனால் நடந்திருக்கின்றது

ஜோசப்பின் ஏழை சிறுமியாக இருந்தபொழுதே அவள் மகாராணி ஆவாள் என அவள் ஜாதகம் சொல்லிற்று, நெப்போலியனால் அவள் ராணியும் ஆனாள்

நெப்போலியன் அவளை திருமணம் செய்தபின்புதான் மாபெரும் உயரத்தை தொட்டான்

அவளை விவாகரத்து செய்தபின் அவன் பெரும் சரிவினைத்தான் கண்டான். ஏன் எப்படி என்பதற்கு எல்லாம் விடை இல்லை

அந்த ஜோசப்பின் ராணி அந்தஸ்திலிருந்து இறங்கினாலும் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாள் பின் அவளின் பேத்தி ஸ்வீடன் ராஜ குடும்பத்தில்தான் திருமணம் செய்தாள், நெப்போலியன் ஏற்றி வைத்திருந்த உயரம் அது

இன்றும் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாட்டு அரசகுடும்பங்கள் அந்த ஜோசப்பினின் வாரிசுகளே. இன்றும் அவள் வாரிசுகள் ஐரோப்பாவினை ஆள்கின்றன‌

ஜோசப்பினை விட்டுவிட்டு நெப்போலியன் பக்கம் வருவோம்

ஆஸ்திரியாவினை தூண்டிவிட்டு அந்தபோர் மணகோலத்தில் முடிந்ததும் சோகமான பிரிட்டன் இம்முறை ரஷ்யாவினை தூண்டிற்று

ரஷ்யா நெப்போலியனின் பொருளாதார தடையினை ஏற்க மறுத்து மீறியது

புதுமாப்பிள்ளை ஆனாலும் சீறினான் நெப்போலியன் , பெரும் படை திரட்ட உத்தரவிட்டான்

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்து கிடக்கும் நாடு ரஷ்யா, மிகபெரும் யானை அது. அதனை பிடித்துவிட்டால் பெரும் பகுதி தனக்கு என திட்டமிட்டான்

ரஷ்ய தாக்குதலுக்கு தயாரானான். ஆஸ்திரிய அரச குடும்பமும் மேரி மூலம் அவனை வீழ்த்த சமயம் பார்த்தது

சுற்றி திரியும் பிரிட்டன் ஒரு எதிரி, தன் கட்டளையினை மீறிவிட்ட ரஷ்யா ஒரு எதிரி என கருவிய நெப்போலியன் தன் காலடியில் இருந்த எதிரியினை கணிக்க தவறினான்

படை திரட்டினான் நெப்போலியன், மிக பெரும் படை அது

ஜூன் 24, 1812, கிட்டதட்ட 7 லட்சம் வீரர்களோடும், அதற்கு உதவ 3 லட்சம் பேரோடும் பெரும் படையோடு நின்றான் நெப்போலியன்

ஐரோப்பாவின் மிக பெரிய ராணுவம் வரலாற்றில் அதுதான்

நெப்போலியனின் உறுமலை கேட்ட ரஷ்ய மன்னன் ஜார் பதறினான். ரஷ்ய கரடியினை விழுங்க பிரான்ஸ் புலி பாய்ந்தது

வாமணன் வருவான்…

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 10

நெப்போலியன் கதை என்ன ஆனது? என ஒரு பயலும் கேட்கவில்லை, ஆனாலும் சொல்வது நம் கடமை

Image may contain: one or more people, people riding horses, horse and outdoor

நெப்போலியனின் வெற்றியில் ஐரோப்பா அதிர்ந்து கொண்டிருந்தது, மிக அசால்ட்டாக ஸ்பெயின், போர்சுக்கல் தவிர எல்லா நாடுகளையும் அமுக்கியிருந்தான். ஜெர்மன் அப்பொழுது இப்பொழுது போல் அல்ல, பிரஷ்யா என வேறு பெயரில் வேறு வடிவத்தில் இருந்தது

ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் நாம் நண்பர்களாக இருக்கலாம் “இந்த கோட்டை தாண்டி..” என சொல்லிவிட்டு அவனுக்கு அடங்கியே இருந்தன‌

அதாவது மோடிக்கு தமிழக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் அடங்குவது போல் அடங்கி இருந்தன‌

பிரிட்டனின் போர் அறிவிப்பில் இருந்தாலும் அதனால் நெப்போலியனை அசைத்துபார்க்க முடியவில்லை, வெற்றி மேல் வெற்றி பெற்று பெரும் பூதமாக மாறியிருந்தான்

அவன் மனதில் பிரிட்டனை போட்டு சாத்தவேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருந்தது, அதுவரை அவன் பெற்ற தோல்வி அந்த நெல்சனுடையது

எப்படியாவது பிரிட்டனை வென்று, அந்த நெல்சனின் இன்னொரு கண்ணை பிடுங்கி அவனை பிரான்சுக்கு இழுத்துவர உள்ளம் துடித்தது

கடுமையாக திட்டமிட்டான் நெப்போலியன் அவனின் மிரட்டலுக்கு ஸ்பெயின் வழிக்கு வந்தது ஸ்பெயின் பிரான்ஸ் கூட்டு கடற்படை உருவானது

இதுதான் ஆங்கில கால்வாயினை கடந்து பிரிட்டனை அடிக்க போகும் படை என்பதால் கவனமாக திட்டமிட்டான் நெப்போலியன்

இன்றுவரை பிரிட்டன் அசைக்கமுடியா சக்தியாக, வீழ்த்தமுடியா தேசமாக இருக்க அதன் நிலபரப்பும் காரணம், அது தீவுநாடு அதன் பலம் அது

சுற்றிலும் கடல் என்பதால் தன் கடற்படையினை அவ்வளவு பலமாக வைத்திருந்தது பிரிட்டன், பிரிட்டனின் சாம்ராஜ்யத்தின் அடித்தளம் அந்த கடற்படை

அதில்தான் பாய்ந்தான் நெப்போலியன், ஆங்கில கால்வாயில் கடும் சண்டை மூழ்ந்தது

ஆங்கில கால்வாய் என்பதுதான் ஐரோப்பிய கடலுக்கு வந்து பின் சூயஸை கடந்து ஆசியாவிற்கு வரும் வழி. ஆங்கில கால்வாயினை மட்டும் பிரிட்டனிடனிடமிருந்து பறித்துவிட்ட்டால் பிரிட்டனின் கதை முடிந்தது

அது வாஸ்கோடகாமா போல ஆப்ரிக்காவினை சுற்றி வருவதெல்லாம் முடியாத விஷயம்

அதன் முக்கியத்துவம் தெரிந்ததால் பிரிட்டனும் கடும் எதிர்ப்பில் இறங்கியது

நெப்போலியனின் முழு கவனமும் ஆங்கில கால்வாய் பக்கம் இருக்க, பிரிட்டன் தந்திரமாய் ஒரு காரியத்தில் இறங்கியது

அதனிடம் பணமும் இன்னபிற வசதிகளும் இருந்ததால் நெப்போலியனுக்கு அஞ்சி ஆதரவு தெரிவித்த ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவினை மனம் மாற உதவின‌

அப்படித்தான், இப்பொழுது தங்களை காப்பாற்ற ஒரு சக்தி இருந்தால் பழனிச்சாமியும் பன்னீரும் யார் அழைத்தாலும் செல்லமாட்டார்களா?

அப்படி சரி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்

பிரிட்டன் வகுத்துகொடுத்த திட்டபடி ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரான்சின் மேல் படையெடுக்க வேண்டும்

அப்படி செய்தால் நெப்போலியன் ஆங்கில கால்வாயினை விட்டுவிட்டு அலறி அடித்து பிரான்ஸ்கு திரும்புவான் எனும் நரிதந்திரம் அதில் இருந்தது, அப்படி நெப்போலியன் திரும்பும்பொழுது கடல் ரீதியாக அவனை வளைப்பதால் ஆஸ்திரிய ரஷ்யா வெற்றிபெறுவது எளிது சொல்லபட்டது

இந்த தகவல் நெப்போலியனுக்கு கிடைத்ததும் அவன் ராணுவ மூளை உஷாரானது

இரு எதிரிகளை இணையவிடுவது என்றுமே யுத்த பூமியில் ஆபத்து என்பது ராணுவ பாடம்

அவசரமாக பிரான்ஸுக்கு திரும்பிய நெப்போலியன் ரஷ்ய ஆஸ்திரிய படைகள் சேரவிடாமல் தடுக்க முயன்றான்

ஆஸ்திரியா நோக்கி சென்றான் “ஆஸ்ரலிட்ஸ்” எனும் இடத்தில் ஆஸ்திரிய‌ படைகளுக்கும் அவனுக்கும் சண்டை மூண்டது, அடித்த அடியில் ஆஸ்திரியா அவன் வசமானது

ஆஸ்திரியாவோடு கரம் கோர்க்க வந்த ரஷ்யா ஓடி திரும்பியது

நெப்போலியனுக்கு இது வெற்றி என்றாலும் ஆங்கில கால்வாய் யுத்தம் வெற்றி கொடுக்கவில்லை, அவன் படைகள் திரும்பின‌

அதாவது ஆங்கில கால்வாயினை தக்க வைக்க தந்திரமாக ரஷ்யாவினையும் ஆஸ்திரியாவினையும் இழுத்துவிட்டதில் அது வென்றது

ஆங்கில கால்வாய் போர் சொன்ன முடிவு நெப்போலியனுக்கு ஒன்றுதான், பிரிட்டனின் பணவரவு மிக அதிகம் அவர்களால் தொடர்ந்து போரிடமுடிகின்றது, அதனால் பிரிட்டனை போட்டு அடிக்க அதன் பணவரவினை குறைக்க வேண்டும், இன்னும் மிகபெரும் ராணுவம் வேண்டும்

ஆஸ்திரியா தன்னோடு வாலாட்டியதில் கடும் கோபமடைந்த நெப்போலியன் ஐரோப்பாவினை மொத்தமாக விழுங்கி நின்றான்

ரஷ்யா ஒரு ஒப்பந்தம் போட்டு என்னை விட்டுவிடு சாமி என ஓடிஓளிந்தது, ஆனால் வன்மம் குறையவில்லை இன்று இந்தியா சீன இடையே இருக்கும் ஒருமாதிரியான புரிதல் ரஷ்யாவிற்கும் நெப்போலியனுக்கும் இருந்தது

அன்று ரஷ்யாவினை ஆண்டது ஜார் மன்னர்கள்.

இப்பொழுது ஐரோபாவில் இரண்டே நாடுதான். ஒன்று நெப்போலியன் நாடு இன்னொன்று நெப்போலியனின் ஆளுமையினினை ஏற்றுகொண்டு அடிமையான நாடுகள்

ரஷ்யா தனி, பிரிட்டன் தனியாக ஒதுங்கி இருந்தன.

தான் வென்ற நாடுகளில் யாரை பதவிக்கு அமர்த்தலாம் என யோசித்தார், ஏற்கனவே பிரெஞ்ச் அதிகாரிகளாக யாரையெல்லாமோ அமர்த்தி கசப்பான அனுபவங்களை பெற்றவருக்கு அடுத்தவர்களை நம்ப முடியவில்லை

விளைவு தன் பரந்த குடும்பத்தின் உடன்பிறந்தோர் எல்லாம் அரசன் ஆனார்கள்

நெதர்லாந்து, போலந்து, பெல்ஜியம், ஹங்கேரி என வரிசையாக நெப்போலியனின் உடன்பிறந்தோரும் உறவினர்களும் மன்னரானார்கள்

அரசியல் அப்படித்தான், எப்பொழுது யார் முதுகில் குத்துவார்கள் என தெரியாததால் குடும்பத்தாரை நம்புதலே நலம்

வாரிசு அரசியலை விடநம்பிக்கைக்கு உகந்த அரசியல் ஏதுமில்லை, இல்லாவிட்டால் நெப்போலியனுக்கு டைரக்டர்ஸ் காட்டிய நன்றியினை விடுங்கள், கலைஞருக்கு ராமசந்திரனும் இன்னபிற தலைவர்களும் காட்டிய நன்றிகள் பெரும் உதாரணம்

வாரிசுகள் பதவியில் அமர்த்தினால் நாளை சிக்கல் என்றால் கண்கள் பனித்தன, இதயம் கனிந்தது என சொல்லிவிட்டு சமாதானம் ஆகலாம், அடுத்தவன் என்றால் விடுவானா?

அப்படி நெப்போலியன் குடும்பம் முழுக்க ஐரோப்பிய‌ மன்னார்குடி இல்லை மன்னர்குடி ஆயிற்று

ஐரோப்பாவின் மிகபெரும் சக்தியாக உயர்ந்து நின்றான் நெப்போலியன், அவன் கண்ணசைவில் ஆடியது ஐரோப்பா.

ஐரோப்பாவின் அமைதியினை தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபமெடுத்து நின்றான் அவன்.

ஒரு சாதரண சிப்பாய் பிரான்சின் மன்னராகி, ஐரோப்பிய சக்கரவர்த்தியான அதிசயத்தை கண்டு வியந்து நின்றது உலகம்.

தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கி உயர்ந்து நின்றான் நெப்போலியன்

ஐரோப்பிய சக்ரவர்த்தி ஆனபின் அவனுக்கும் போப்பாண்டவருக்கும் சர்ச்சை வலுத்தது, போப்பின் அதிகாரங்களை குறைத்தான் நெப்போலியன்

அவமானமடைந்த போப் இயேசுபாடுபட்ட சொரூபத்தின் முன் கதறிகொண்டிருந்தாரே தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை

சக்கரவர்த்தியானாலும் நெப்போலின் அதே எளிய வாழ்க்கையில் இருந்தான். ஒரு கட்டில் ஒரு மேஜை அறை நிறைய புத்தகம் என அவனது வாழ்வு மிக எளிமையாயிருந்தது

ஆனால் ஜோசபைன் ராணியாக திகழ்ந்தாள் அதனை அவன் கண்டுகொள்ளாவில்லை, அவளின் சிரிப்பு அவனுக்கு அவ்வளவு முக்கியம்

ஜோசப்பின் தங்கதட்டில் உண்டாலும் நெப்போலியன் அலுமினிய தட்டில்தான் உண்டான். அது எளிமையென்று அல்ல, அது அப்பொழுதுதான் கண்டுபிடிக்கபட்டிருந்தது

ஐரோப்பா முழுக்க ஆண்டாலும் பிரிட்டன் அவனுக்கு அடிபணியாதது அவனுக்கு பெரும் மனக்குறையாயிருந்தது, அவனுக்கு இருந்த இன்னொரு மனக்குறை ஜோசபைனுக்கும் அவனுக்கும் பிள்ளைகள் இல்லை

ஐரோப்பிய அரச வழக்கபடி ராணிக்கு குழந்தை இல்லாவிட்டால் அரசன் மறுமணம் செய்யவேண்டும்

எப்படியும் ஜோசபின் தனக்கொரு வாரிசு கொடுப்பாள் என நாட்களை நகர்த்தினான் நெப்போலியன், நாட்கள் மட்டும் நகர்ந்தன‌

பிரிட்டனை என்ன செய்யலாம் என கடுமையாக யோசித்தான் நெப்போலியன், முதலில் அதன் பொருளாதாரத்தை தகர்க்க திட்டமிட்டான்

ஒரு சுபதினத்தில் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஐரோப்பாவிலும் தனக்கு அடங்கி இருந்த நாடுகளிடமும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டுகொண்ட ரஷ்யாவிடமும் மிரட்டி சொன்னான்

பிரிட்டன் மீது பொருளாதார தடை விதிக்கபட்டிருக்கின்றது, அவர்களோடு யாரும் வியாபாரம் செய்ய கூடாது

கிராமங்களில் நாட்டாமை ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பார் அல்லவா? அப்படி

அதுவரை நெப்போலியன் படையெடுப்பான் நிச்சயம் ஒருநாள் லண்டனை நோக்கி வருவான் என எதிர்பாத்திருந்த, அவன் யுத்தம் மட்டுமே நடத்துவான் என எதிர்பார்த்த பிரிட்டன் மிரண்டது

தன் அடிமடியிலே கைவைத்த நெப்போலியனை இனி சும்மாவிட கூடாது என கிளம்பியது

நெப்போலியனின் தந்திர கணக்கிற்கு தந்திரத்தால் பதிலளிக்க திட்டமிட்டது பிரிட்டன்

அது செய்யும் நகர்வை பொறுத்து அடுத்த கட்ட காரியத்திற்கு இறங்க தயாராக இருந்தான் நெப்போலியன், எப்படியாவது பிரிட்டனை வென்று காட்டவேண்டும் என்ற வெறியில் வேங்கையாக சுற்றிகொண்டிருந்தான்

வாமணன் வருவான்…
 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 9

Image may contain: 1 person, night

இந்த பதவி நாற்காலி இருக்கின்றதே, உலகில் மிக மிக ஆபத்தானது. எந்த நல்லவனையும் முழு கெட்டவனாக, சுயநலமிக்கவனாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது

யாரை நம்பி வைத்தாலும் அதில் அமர்ந்தவுடன் மாறிவிடுகின்றார்கள் (பன்னீர் செல்வமும் , பழனிச்சாமியும் அப்படித்தான் என்ற எண்ணம் வர கூடாது), அதன் தன்மை அப்படி

இனி யாரையும் நம்ப இந்த நெப்போலியன் தயாராக இல்லை, நானே அமரபோகின்றேன் என தன்னை முதன்மை கவுன்சில் என 1801ல் அறிவித்தான் நெப்போலியன், இன்றளவும் நீடித்து நிற்கும் சீர்திருத்தங்களை செய்தான்

சட்டங்களை தொகுத்தான் இன்றளவும் பிரான்ஸ் சட்டம் நெப்போலியன் கோட் என்றே அழைக்கபடுகின்றது, அவன் தகப்பனார் சட்டமேதையாக இருந்ததால் சட்ட அறிவு அவனுக்கு இயல்பாக இருந்தது

இன்றளவும் குற்றவாளிகளை தண்டிக்கும் பிரான்ஸின் அடிப்படை சட்டம் நெப்போலியன் கொடுத்தது.

பிரான்ஸ் மத்திய வங்கி , புதிய நாணயம் , பொருளாதார கொள்கை என பல மாற்றங்களை செய்தான். நாட்டிற்கு புதுவடிவம் கொடுத்தான்.

செவாலியே போன்ற சிறந்த விருதுகள் அவனால்தான் ஏற்படுத்தபட்டன, நமது ஊர் சிவாஜி கணேசன், கமலஹாசன் எல்லோரும் பெற்றார்கள் அல்லவா? அந்த விருது.

பாரீஸை மாற்றிகாட்டினான் நெப்போலியன் , சாக்கடை திட்டம் முதல் பல பிரமாண்ட திட்டங்களால் அசத்தினான்

பிரான்சுக்கு புதுவடிவத்தை எல்லா வகையிலும் கொடுத்தான் நெப்போலியன், இன்றைய நவீன பிரான்ஸ் அவன் அடித்தளமிட்டதுதான்

அவன் மாபெரும் வீரன் என்பதை விட, அவன் மாபெரும் நிர்வாகி என்பதுதான் உண்மை. ஆனால் அவன் அந்த நிர்வாகி என்று பெயரெடுத்துவிட கூடாது என்பதில் பிரிட்டனுக்கு எச்சரிக்கை அதிகம்

இத்தாலியினை பிடித்துவிட்டான், ஆஸ்திரியாவினை காலடியில் வைத்திருக்கின்றான், விட்டால் ஐரோப்பாவினை விழுங்கிவிடுவான் என அஞ்சியது

நெப்போலியன் நாட்டை சீர்படுத்திகொண்டிருக்கின்றான், அப்படி விட முடியாது. நாடு அமைதியாகிவிட்டால் நிச்சயம் பாய்வான், நாம் முந்தவேண்டும் என முந்தியது பிரிட்டன்

பிரான்ஸ் மீது போர் அறிவித்தது

நேரடியாக வந்து தாக்கவில்லை, ஆங்காங்கு தன் கடற்படை மூலம் கண்ணாமூச்சி காட்டியது, சில நாடுகளை துணைக்கு அழைத்தது, சில சென்றன சில செல்லவில்லை

கவுன்சில் தலைவனான நெப்போலியனுக்கு உள்ளம் கொதித்தது, பிரிட்டனை உருதெரியாமல் அழிக்க அவன் கருவினான், பெரும் படை திரட்ட உத்தரவிட்டான்

ஆனால் அந்த கவுன்சில் ஒத்துழைக்கவில்லை. நெப்போலியன் தலைவன் என்றாலும் சபை முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை

அதற்கு மேலும் நெப்போலியனால் பொறுக்க முடியவில்லை. இது சரிவராது. தன்னை எப்படியாவது முடக்கிவிடுகின்றார்கள். பிரான்சின் நலனுக்காக ஒரு படையினை விருப்பபடி திரட்டாவிட்டால் இந்த பதவி எதற்கு?

இது வேண்டாம், இதனை விட பெரும் பதவி வேண்டும், ஆம் நானே இனி பிரான்ஸ் மன்னன்.

ஐரோப்பா அதிர்ந்தது, காரணம் மக்களாட்சி அப்பொழுதுதான் வந்திருந்தது, ஒரு ராணுவ தளபதியாக அதற்கு நெப்போலியன் காவல் இருப்பான் என்றுதான் உலகம் நம்பியது

ஆனால் அவன் சந்தித்த பல சிக்கல் காரணமாக அவனே அமர்ந்துவிட்டான். பிரான்ஸ் மக்களிடையே ஒரு முணுமுணுப்பு தோன்றியது. சில சிந்தனையாளர்கள் எதிர்த்தனர் அவர்களில் இசைமேதை பீத்தோவன் முக்கியமானவர்

நெப்போலியனின் எழுச்சியினை சிம்பொனியாக வடித்திருந்த அவர், அவன் கலவரகாரர்களை அடக்கி பிரான்ஸின் காவலனாக நின்றதை கொண்டாடிய அவர், அவனை பற்றி எழுதிய அந்த சிம்பொனியினை கிழித்தெறிந்தார்

நெப்போலியன் எதற்கும் கலங்கவில்லை. அவனை எதிர்த்து கலகம் செய்ய யாருக்கும் சிந்தனையுமில்லை

தன் கைகளை கட்டியிருந்த விலங்கு அவிழ்ந்து போன்றும், பெரும் தடை விலகியது போலும் மகா உற்சாகம் ஆனான்.

1804ல் பிரான்சின் மன்னராக தன்னை அறிவித்தார் நெப்போலியன், மக்களாட்சியில் இருந்து பிரான்ஸ் மன்னராட்சிக்கு திரும்பிற்று

ஐரோப்பிய மரபுபடி மன்னனை போப்தான் முடிசூட்ட வேண்டும், ஆனால் இத்தாலி விவகாரத்தில் நெப்போலியனுக்கும் அவருக்கும் மோதிற்று

ஆனாலும் போப் வந்து முடிசூட்ட அழைத்தான் நெப்போலியன், அவர் வரமறுத்தார். இது சரியல்ல அரசனின் மகனே அரசன், ராணுவ அதிகாரி அரசன் என அங்கீகரித்தால் இயேசு என்னை மன்னிக்கமாட்டார் என சொல்லிபார்த்தார்

கடவுள் மன்னிக்காதது விஷயம் அல்ல, முடிசூட்டி வைக்காவிட்டால் நெப்போலியன் உங்களை மன்னிக்கமாட்டான் என பதில் அனுப்பினான் நெப்போலியன்

வேறுவழியின்றி வந்து நின்றார் போப்

ஏன் போப்பினை அப்படி பாடாய் படுத்தினான் என்றால், போர் பல நாடுகளுக்கு கவுரவ அரசர் நிலையில் இருந்தார். அவரே அரசர். அவர் சொல்லுக்கு அவ்வளவு மரியாதை இருந்தது

அவர் பிரான்ஸினை 10தோடு 11வதாகத்தான் கருதுவார், அது மாபெரும் சக்தியாக வளர அவர் அனுமதிக்கமாட்டார் என்பது நெப்போலியன் கணக்காக இருந்தது

எப்படியோ 1804 டிசம்பர் 2ல் நெப்போலியனுக்கு முடிசூட்டும் விழா நடந்தது. கிரீடத்தை போப் கையில் எடுத்தார், என்ன சந்தேகம் கொண்டானோ நெப்போலியன், எழுந்து சென்று தானே வாங்கி தலையில் சூடினான்

விட்டால் போப் வேறுயார் தலையிலும் வைத்துவிடுவார் என அஞ்சியிருக்கலாம்

அதோடு போப்பும் தமிழக வளர்ப்புமகன் திருமணத்தில் சிவாஜி சோகமாய் சென்றதை போல சென்றுவிட்டார்

மறுநிமிடம் தன் ஆருயிர்காதலி ஜோசபினை பிரான்சின் பேரரசியாக அறிவித்தான் நெப்போலியன்

என்றோ ஆப்ரிக்க ஜோசியர் ஒருவர், மிக சாதாரண பெண்ணான அந்த ஜோசப்பினிடம் உன் ஜாதகபடி நீ ஒருநாள் ராணி ஆவாய் என சொன்னது நிறைவேறிற்று.

ஆனாலும் பரிதாபத்திற்குரியன் நெப்போலியன், அவன் வாழ்ந்த காலத்தில் குஷ்பூ இல்லை. அதனால் ஜோசபினுக்கு வாய்ப்பு இருந்திருக்கின்றது

ஒருவேளை திப்புசுல்தானும் நெப்போலியனும் இணைந்து வெள்ளையரை விரட்டியிருந்தால் இந்தியா பிரான்ஸ் கையில் சென்றிருக்கும், அந்த தாஜ்மகாலை ஜோசப்பின் மகாலாக அறிவித்திருப்பான் நெப்போலியன்

இன்று அது ஜோசப்பின் மகால் என மாறியிருக்கும், என்னவோ அப்படி நடக்கவில்லை.

ஆனால் பெரும் உச்சிக்கு சென்றாள் ஜோசப்பின்.

ஜோசப்பினுக்கு கிட்டதட்ட சசிகலா ஜாதகம் போல, அவள் வாழ்வு அப்படித்தான் சொல்கின்றது

அரசன் ஆனாலும் நெப்போலியன் ஆடம்பரவாழ்க்கை வாழவில்லை, ஒரு அறைதான் அவனுக்கு இருந்தது

ஒரு கட்டில் ஒரு மேஜை சில உடைகள், நிறைய புத்தகங்கள் என்றுதான் இருந்தான். அதுதான் நெப்போலியன்.

அவன் செய்த போர்களும், அவன் வாழ்ந்த வாழ்வு எல்லாமே பிரான்சுக்காக, அந்த நெப்போலியனின் குணம் நிச்சயம் போற்றதக்கது.

இப்பொழுது அவன் அரசன், பிரான்ஸின் எல்லா அதிகாரமும் அவனிடமே குவிந்திருந்தது. நாட்டை நல்ல முறையில் நிர்வகித்து கஜானாவினை நிரப்பினான்

அவன் நடந்து சபைக்கு வந்தபொழுது அவன் வாள் தரை கம்பளத்தை கிழித்தது அதனால் அதனை அகற்றினார்கள்

அவன் இப்பொழுது வந்தபொழுது தரையில் வாள் உரசி தீப்பொறி கிளம்பியது

அதை பற்றியெல்லாம் அவன் கவலைபடவில்லை. நாட்டை மிக சிறப்பாக்கினான்.

ஆனால் பிரிட்டனின் அட்டகாசம் அதிகரித்தது, கொதித்தான் நெப்போலியன்

முன்பு நான் தளபதி, என் முடிவினை அங்கீகரிக்க மேலிடம் இருந்தது, இனி நானே சகலமும். நான் எடுத்ததே முடிவு என இருக்கும் நிலையில் இந்த பிரிட்டனை விடுவேனா?

விடவே மாட்டேன், முதலில் அதற்கு துதிபாடும் அல்லக்கை நாடுகளை தூக்குவேன் என படை திரட்டினான்

பெரும் படை தயாரானது

மொத்த ஐரோப்பாவினையும் வெல்லபோகின்றேன் என சொல்லி அந்த உயரமான குதிரையில் அசால்ட்டாக தாவி ஏறினான்

ஐரோப்பா முழுக்க அவன் கொடி பறக்க காலம் வந்தது

அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்தான், ஒவ்வொரு பிரிட்டனின் ஆதரவு நாடும் அவன் காலில் விழுந்து கொண்டிருந்தது.

அவனை வெல்வார் யாருமில்லை

பிரிட்டன் நடுங்க தொடங்கியது.

வாமணன் வருவான்..

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 08

Image may contain: sky, cloud and outdoorகடல் யுத்தத்தை தொடக்கினார் நெல்சன்

சிங்கத்தின் பலம் தரையில் என்றால், முதலையின் பலம் நீரில் என்பது போல பிரிட்டனின் பலம் முழுக்க அந்த கடற்படைதான்.

உலகம் முழுக்க அவர்கள் கட்டியாண்டதற்கு அந்த கடற்படை மிக அவசியமானதாக இருந்ததால், மிக வலுவாக வைத்திருந்தார்கள்

அதன் பலம் நீண்ட வரலாறுடையது. ஹிட்லரால் கூட அதனை வெல்ல முடியவில்லை. அப்படிபட்ட பிரிட்டன் கடற்படையுடன் தான் எகிப்து கரையில் நெப்போலியன் மோதினான்.

Image may contain: 1 person

 நெப்போலியனை மிரளவைத்த நெல்சன்

பிரிட்டிஷாரின் கப்பல்களும் அவர்களின் வியூகமும் மிக கடுமையாய் இருந்தன, அதிலும் நெல்சன் போக்கு காட்டி ஆடிய ஆட்டத்தில் நெப்போலியன் தடுமாறினான்

அதுவும் அது அவனுக்கு முதல் கடற்போர்.

நெப்போலியனும் நெல்சனை அசால்ட்டாக சமாளித்துகொண்டுதான் இருந்தான். ஆனால் கொம்பன் சுறா போன்ற பிரிட்டன் கடற்படையினை எதிர்கொள்ள அவனுக்கு மேலதிக படையும் பணமும் தேவைபட்டது

ஆனால் பிரான்ஸில் ஆண்டுகொண்டிருந்த டைரக்டர்ஸ் குழு அதனை புறந்தள்ளியது, இவ்வளவுதான் நிதி முடிந்தால் வெற்றியோடு வா , இல்லாவிட்டால் பிழைத்து வா, கஜானா காலி என பதில் அனுப்பிவிட்டார்கள்

வேறு வழியின்றி பின் வாங்கினான் நெப்போலியன், அவன் தொடர்ந்து எழுதிய கடிதங்களுக்கும் பலனில்லை

நெல்சன் நெப்போலியனின் கப்பல்படையினை நாசம் செய்தார், தந்திரத்தில் மிகுந்த நெப்போலியன் கப்பல்களை விட்டுவிட்டு அவரை கொல்ல முயற்சிக்க நெல்சனுக்கு ஒரு கண் போயிற்று

ஆனாலும் நெல்சனின் கட்டளைபடி போரிட்ட பிரிட்டன் படைகள் முன்னால் நெப்போலியனால் நிற்க முடியவில்லை

பிரிட்டனின் நீர்வழிதடத்தை தடுக்கும் அவனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எகிப்து பக்கம் கரை ஒதுங்கினான் நெப்போலியன்

பின்னாளில் அவன் பிரிட்டன் மீது வெறியோடு அலைந்ததற்கும், இறுதிவரை பிரிட்டனின் கடற்படையினை எதிர்கொள்ள தயங்கியதற்கும் இதுதான் தொடக்கம்.

நெல்சனால் நெப்போலியனுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவால்தான் அவரால் திப்பு சுல்தானுக்கு உதவமுடியாமல் போனது

இருவரும் இணைந்தால் பேராபத்து என எண்ணிய பிரிட்டன், நெப்போலியனை முடக்கி, அதற்குள் திப்புவினையும் தீர்த்துகட்டியது

இதெற்கெல்லாம் காரணம் அந்த நெல்சன்.

எகிப்து பக்கம் திரும்பிய நெப்போலியன் சும்மா இருக்கவில்லை, அங்கிருந்து இன்றைய இஸ்ரேல், சிரியா வழியாக துருக்கி செல்ல முயற்சித்தான்

துருக்கிய சுல்தானோடு மோதினான் நெப்போலியன், மிக உக்கிரமான சண்டையில் அன்றைய பாலஸ்தீனத்தை வென்றான், அதிலிருந்த மிக பிரசித்திபெற்ற வியாபார கோட்டையான ஏகர் கோட்டை அவன் வசமாயிற்று

தொடர்ந்து முன்னேறினான், அவன் தாக்குதலில் சுல்தானிய படை பின் வாங்கியே இருந்தது. நெல்சனிடம் பெற்ற கடல் தோல்வியினை துருக்கி சுல்தானிடம் கோபமாக காட்டிகொண்டிருந்தான்

அப்பொழுது இரு விஷயங்கள் அவனுக்கு குறுக்கீடாக வந்தன‌

ஒன்று அவர் நிதி கேட்கும் பொழுதெல்லாம் அந்த பிரான்ஸ் டைரக்டர்ஸ் குழு மறுத்தே வந்தது, ஒரு கட்டத்தில் தோட்டாவினை சேமிக்க துப்பாக்கி முன்னிருந்த கத்தியால் எதிரிகளை கொடூரமாக கொன்றது நெப்போலியன் படை

இன்னொன்று யுத்த களத்தில் பரவிய பிளேக் நோய். நிதிதட்டுபாட்டை கூட சமாளித்த நெப்போலியனுக்கு பிளேக் நோய் பெரும் அச்சுறுத்தலானது

யுத்தத்தை நிறுத்தி தீரும் அவசியம் இருவருக்குமே இருந்தது.

இப்பொழுதும் எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் பிரான்ஸ் இருப்பை பலபடுத்த நிதி கேட்டான் நெப்போலியன், வழக்கம் போல கஜானா காலி, வீணான யுத்ததிற்கு பணம் தரமுடியாது என சொல்லிவிட்டார்கள்

அப்படி சொன்னாலும் கூட நெப்போலியனுக்கு கோபம் வந்திருக்காது ஆனால் இந்த வரியும் இருந்தது

“நெல்சனுடன் தோல்வி, இப்பொழுது ஆட்டோமான் துருக்கியருடனும் தோல்வி, உன்னை நம்பி பணம் கொட்டமாட்டோம்”

என்ன கொடுமை இது? நான் என்ன ஜோசப்பினுக்காகவா இந்த எகிப்தை எல்லாம் பிடித்தேன்? எல்லாம் பிரான்சுக்காக பின் ஏன் என்னை தோற்ற‌ ராணுவ அதிகாரி என்றே சொல்கின்றார்கள் என்ற கோபம் அவனுக்கு வந்தது

இத்தனைக்கும் பன்னீர் செல்வம் போல அவன் வைத்த அடிமைகள் அந்த டைரக்டர்கள், அதுவரை அடிமையாய் இருந்தவர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிட்டார்கள்

எகிப்தினை தன் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டு பிரான்ஸ் திரும்பினான் நெப்போலியன்

அங்கு நிலமை படுமோசமாக இருந்தது, எங்கும் சிக்கல், அரசு திணறியது

ஆண்டாண்டு காலமாக அரசனின் அதிகாரத்தில் இயங்கிய நாட்டில் திடீரென மக்களாட்சி சம உரிமை ஜனநாயகம் என மாற்றியபொழுது அதனை எப்படி நிர்வகிப்பதில் குழப்பம் என்பது நெப்போலியனுக்கு புரிந்தது

இனி பன்னீருக்கு பதில் பழனிச்சாமி என சசிகலா முடிவெடுத்தது போல முடிவெடுத்து கலகம் தொடங்கினான்

அந்த பழைய டைரக்டர்ஸை விரட்டி புதிய டைரகடர்களை அமர்த்தினான், அதிலொரு திருத்தம் இந்த புதிய டைரக்டர்கள் கான்சல் எனும் குழுவில் இருப்பார்கள் அக்குழுவின் தலைவர் தான் என்பதுதான் அத்திருத்தம்

அதாவது நாட்டின் அரசன் அல்ல, மாறாக தலைவன் நெப்போலியன்

அதிகாரம் கிடைத்தபின் நெப்போலியனின் மனம் பிரிட்டனை போட்டு சாத்தவே சிந்தித்தது, ஆனால் அதற்கு முன்பு நாட்டில் பல சட்டங்கள் எழுதவேண்டியிருந்தது

குழப்பமான நாட்டில் பொருளாதாரம் படுத்துவிடும், மோடியின் இந்தியாவே சாட்சி. அப்படி பிரான்சும் படு வீக்கானது

இது அக்கம் பக்கம் தெரியவர, இத்தாலிக்கு குளிரிவிட்டது

நாங்கள் பாப்பரசர் வாழும் புனித இத்தாலி, நெல்சனால் தோற்கடிகபட்ட நெப்போலியனுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம், இனி நாங்கள் பிரான்ஸின் அடிமை இல்லை என அறிவித்தது

எச்சரித்தான் நெப்போலியன், பலன் இல்லை

தலைவன் ஆகிவிட்டால் நெப்போலியன் களம் காணமாட்டான் என முடிவா? என பெரும் படையுடன் ஆல்ப்ஸ் மலையினை கடந்தான்

அடித்த அடியில் அலறியது இத்தாலி, போப்பாண்டவருக்கு ஆளனுப்பினான்

“நான் மறுபடியும் வந்துவிட்டேன், இத்தாலி துள்ள்ளுவதற்கு போப் எனும் பெரும் சக்தி அங்கு இருப்பதுதான் காரணம். இத்தோடு இத்தாலி நிறுத்திகொள்ள வேண்டும்

இல்லாவிட்டால் போப் என்றும் பார்க்கமாட்டேன், புனித மண் எனவும் பார்க்கமாட்டேன், கர்த்தரை விட எனக்கு பிரான்சே முக்கியம்”

போப்பாண்டவரை ஆட்டிவைத்தவர்களில் முக்கியமானவன் நெப்போலியன்

அதன் பின் இத்தாலி வம்பு செய்யவில்லை

இனி எந்த நாட்டை பிடிக்கலாம், பிரான்சுக்கு எப்படி வருமானம் பெருக்கலாம் என அவன் சிந்தித்துகொண்டிருந்தபொழுது அவனுக்கு இன்னொரு பிரச்சினை முளைத்தது

ஆம் இம்முறை பழனிச்சாமிகள் போர்கொடி தூக்கினர்

என்னடா இது, காலில் விழுந்து கிடக்கின்றார்கள். பதவி கிடைத்தவுடன் உரசுகின்றார்கள். இந்த யழ்வு நாற்காலியில் எவனை வைத்தாலும் மாறிவிடுவான் போல‌

இனி வேலைக்காகது, இதில் ஒவ்வொருவனையும் வைத்து அழகு பார்க்க முடியாது

நாமே அமர்ந்தால் என்ன? எவன் எதிர்ப்பான்? மக்கள் நம்மை கொண்டாடும்பொழுது அஞ்ச என்ன இருக்கின்றது?

பிரான்சினை வளர்க்க அவனுக்கு சக்திவாய்ந்த பதவி தேவைபட்டது, அது அல்லாமல் பிரான்சினை உருவாக்க முடியாது என்பதும் புரிந்தது

பெரும் அறிவிப்பினை வெளியிடான் அது மொத்த ஐரோப்பாவினையும் அலற செய்தது, அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்த நேரமது

வருவான் வாமணன்…

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 7

Image may contain: one or more people and people riding horses

ஜூன் 9, 1798ல் எகிப்தை குறிவைத்து தன் படைகளை நகர்த்தினான் நெப்போலியன் 29 வயதுதான் அவனுக்கு அப்போது.

ஜோசப்பினுடன் ஒரு பக்கம் தீரா காதல் என்றாலும் இன்னொருபக்கம் மிக நேர்த்தியான யுத்த நகர்வு இருந்தது. எகிப்திற்கு நிலம் வழியாக செல்ல அவனுக்கு ஐரோப்பாவில் தடையேதும் இல்லை, ஆனால் ஆசிய நுழைவாசலில் இருந்தது சிக்கல்

ஆம், ஆட்டோமன் துருக்கியர் அங்கு வலுவாக இருந்தனர். துருக்கி சிரியா இஸ்ரேல் அரேபியா ஆர்மீனியா என பரவி இருந்தது அவர்கள் சாம்ராஜய்ம், கிட்டதட்ட 500 வருடமாக அசைக்க முடியாத சக்தி அவர்கள், இரண்டாம் உலகபோரில்தான் அவர்கள் அரசு முடிவுக்கு வந்தது.

அவர்களை வெற்றிகொள்வது நடக்காத காரியம் என்பது அவனுக்கு புரிந்தது. நெப்போலியன் மாவீரன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மாவீரனுக்கும் விவேகம் வேண்டுமல்லவா? அது அவனுக்கு இருந்தது

அங்கு சிலநாட்கள் பணியாற்றிய அனுபவத்தில் அவன் அதனை உணர்ந்திருந்தான்

தரைபடை நடத்துவதில் தன்னிநகரில்லாதவன் நெப்போலியன் ஆட்டோமான் துருக்கியரை எதிர்க்க தயங்கினான், சிலுவை போர்களில் துருக்கியரிடம் ஐரோப்பியர் தோற்றதில் இருந்து அந்த பக்கமே எட்டிபார்ப்பதில்லை

இதனால் கடல்வழியே எகிப்துக்கு செல்ல ஆயத்தமானான், இத்தாலி அவன் கையில் இருந்ததால் அதன் அருகில் இருந்த மால்ட்டா வழியாக செல்ல முயன்றான்

மால்டா மீது யுத்தம் தொடுத்தான், வெறும் 3 வீரர்களை மட்டுமே இழந்து அத்தீவினை பிடித்தான், அது இலங்கை போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது

கடற்போரில் அவன் பெற்ற முதல்வெற்றி அதுதான்.

அந்த உற்சாகத்தோடு எகிப்தின அலெக்ஸாண்டிரியா நகரை நோக்கி சென்றான், அது அலெக்ஸாண்டர் உருவாக்கிய அற்புத நகரம்

அந்த மாவீரன் உருவாக்கிய நகரத்தில்தான் நெப்போலியனும் கால்பதித்தான், யுத்தம் தொடங்கிற்று மம்லுக் எனப்படும் எகிப்து ஆட்சியாளர்களுடன் மிக கொடூரமான யுத்தம் நடந்தது.

அவர்களை நெப்போலியனின் படை வீழ்த்தியது, கிட்டதட்ட 5 ஆயிரம் மம்லுக் வீரர்கள் இறந்தனர். எகிப்து நெப்போலியன் வசமாயிற்று, அவன் இழந்தது வெறும் 300 வீரர்களே

அதாவது நெப்போலியன் எனும் தளபதி பிரென்ஞ் குடியரசு சார்பாக எகிப்தை வீழ்த்திகாட்டினான்.

ஜூலை 21 1798ல் எகிப்தில் வெற்றிகொடி நாட்டிய நெப்போலியன், அலெக்ஸாண்டிரியா நகரத்தை சுற்றிபார்த்தான் நெப்போலியன், அலெக்ஸாண்டரின் கலை மனமும் அவனின் பிரமாண்டமும் அவன் கண்முன் வந்துபோயின, அலெக்ஸாண்டர் மிக பெரும் திறமைசாலி, அற்புதமான ரசிகன், நிர்வாகி என வாய்விட்டு சொன்னான்.

அலெக்ஸாண்டிரியா அப்படி அவன் மனம் கவர்ந்தது.

கெய்ரோவில் நுழைந்தான் நெப்போலியன், எகிப்து என்றால் நைல் நதியும் பிரமீடுமே அடையாளம்.

இதில் பிரமீடு என்பது என்னதான் உலக அதிசயம் என்றாலும் அது கிட்டதட்ட தஞ்சாவூர் கோவில் சென்டிமெண்ட் கொண்டது. அதாவதுள், அதனை வெற்றிகொண்ட அரசர்கள், நான் அரசன் எனும் மமதையில் அங்கு நுழைந்தால் கொஞ்ச நாளில் இறந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை

தஞ்சாவூர் கோவில் சென்டிமெண்டும் அப்படியானது, அரசு பதவியில் இருப்பவர்கள் நானே எல்லாம் எனும் அகங்காரத்தில் நுழைந்தால் அவர்களுக்கு சிக்கல் என்றும், பக்தர்களில் ஒருவராக வந்தால் சிக்கல் இல்லை என்பதும் அங்குள்ள நம்பிக்கை

சிலர் அரசு பதவியிலிருந்து அங்கு சென்றுவிட்டு பின் பதவிபறிபோன சம்பவங்கள் இன்றும் தமிழகத்தில் பிரபலம்

ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்றால், ராஜராஜ சோழனின் கனவு அவ்வாலயம். அன்று அது சோழ நாடு.

அக்கால பழக்கபடி ஒரு நாடு யுத்ததில் தோற்குமாயின் முதலில் இடிக்கபடுவது ஆலயங்கள், காரணம் கோவில் என்பது தங்க சுரங்கம், அக்கால மன்னர்கள் கொட்டியது அப்படி.

இதனால்தான் அக்கோவிலில் கால் வைக்கும் எதிரி மன்னர்கள் அழியட்டும் என்றொரு வேண்டுதலை அவன் வைத்ததாகவும் அது இன்றுவரை பலிப்பதாகவும் நம்பிக்கை.

எகிப்தியர்கள் மன்னனின் உடலை பாதுகாக்க பிரமீடுகளை கட்டினர், அவன் மீண்டும் உயிர்பெற்றுவருவான் என நம்பினர். அவன் சமாதியில் பொன் பொருள் எல்லாம் குவித்து வைத்தனர்.

மந்திர தந்திரங்களில் மிக பெரும் பெயர் பெற்றவர்கள் எகிப்தியர்கள், பைபிளின் யாத்திராமகம் தெளிவாக சொல்கின்றது, கடவுளுக்கே சவால் விட்ட மந்திரவாதிகள் அவர்கள்

அப்படிபட்ட எகிப்தியர்கள் ஏதோ சக்தியினை பிரமீடில் நிறுத்தியிருப்பதாகவும் அதனை கொள்ளையிடுபவர்கள் அழிவதாகவும் நம்பிக்கை

நெப்போலியன் அசாத்திய பிறவி, அவன் பிரமீடுகளை தோண்டி கொள்ளையிட உத்தரவிட்டாலும் வீரர்கள் அஞ்சினர்

அசால்ட்டாக சொன்னான் நெப்போலியன் “என்ன பிரச்சினை? ஓரிரவு முழுக்க நான் அங்கு தனியாக தங்குகின்றேன், நான் மறுநாள் வந்து உத்தரவிட்டால் நம்புவீர்களா”

ஆச்சரியத்தில் வியந்தனர் வீரர்கள், சவாலை துணிந்து எடுத்த நெப்போலியன் அவர்களுக்கு அதிசயமாக தெரிந்தான்

ஒரு மாலையில் தனியாக சென்று பிரமீடு ஒன்றில் படுத்துகொண்டான், உள்ளூர் எகிப்தியர்கள் நெப்போலியனின் வீரர்களிடம் கேட்டார்கள், “

பெட்டி தயார் செய்யலாமா? எளிதுதான் 3 அடி உயரத்தில் செய்துவிடலாம்”

ஆனால் மறுநாள் காலையில் அசால்ட்டாக வந்தான் நெப்போலியன், அனைவருக்கும் ஆச்சரியம். எகிப்தியர்களுக்கோ மகா நடுக்கம், “இவன் கடவுளாக இருப்பானோ? பாரோ ஆக்கிவிடலாமா?”

அங்கு என்ன நடந்தது என கேட்டார்கள், அமைதியாக சொன்னான் நெப்போலியன், “நான் கண்ட அனுபவம் மகா வசித்திரமானது, சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் விசித்திரமான சக்திகள் நிலவுவது உண்மை”

அதன் பின் அவன் அதிகம் பிரமிடு புதையலை தேடவில்லை, அவன் வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துவந்தார்கள்.

அதில் அவன் ஜோசபைனுக்கு எதுவும் எடுத்து வைக்கவில்லை, ஆனால் அங்கிருந்து காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதம் மட்டும் எழுதிகொண்டிருந்தான்.

அதே நேரம் எகிப்து நமது, இனி இங்கிருந்து செங்கடல் வழியாக சென்று பிரிட்டிசாரை நடுங்க வைக்கலாம், திப்பு சுல்தானுக்கு உதவலாம் என திட்டம் தீட்டிகொண்டிருந்தான் நெப்போலியன்

நெப்போலியன் எகிப்தை பிடித்துவிட்டான், வலுவான கப்பல்படையோடு நகர்கின்றான் என்றதுமே பிரிட்டன் தவித்தது, அவனை தடுக்காவிட்டால் அது பிரிட்டனின் வியாபாரம் முதல் இந்திய ஆக்கிரமிப்பு வரை எல்லாவற்றையும் பாதிக்கும் என கருதியது

நெப்போலியனும் திப்பு சுல்தானும் இணைவதை தடுக்க அது மிக அவசர திட்டம் தீட்டியது

காரணம் இருவரும் இணைந்துவிட்டால் அவ்வளவுதான், மொத்த இந்தியாவும் திப்புவின் தலமையில் பிரான்சுடன் வியாபாரம் செய்யும் நிலைக்கு வந்திருக்கும். இருவரின் திறமைக்கு முன்னால் பிரிட்டன் படை நின்றிருக்க முடியாது

திப்பு இரு போர்களில் வெள்ளையனை கதறவிட்டு வெற்றிகொடி நாட்டியிருந்தார், அந்த நம்பிக்கைதான் நெப்போலியன் திப்புவினை உற்று நோக்க வைத்தது

இருவரும் கடிதம் எல்லாம் எழுதியிருந்தார்கள், நேரில் பார்க்காமலே இருவருக்கும் நட்பு இருந்தது

பிரிட்டன் அவசர கதியில் இயங்கியது, திப்பு அமைதியாக இருக்க கூடாது அவரை யுத்தத்தில் இழுத்து சாகடிக்கவேண்டும் அதே நேரம் நெப்போலியனும் யுத்த களத்தில் இருந்தாக வேண்டும், யாரை முந்தி கொல்லமுடியுமோ கொன்றுவிடலாம்

நெப்போலியனை எதிர்க்க அனுபவசாலியான ஒரு தளபதியினை அனுப்பினார்கள்

அவனால்தான் திப்பு சுல்தான் தலைவிதி, இந்திய தலைவிதி எல்லாம் மாறிற்று.

அவன் பெயர் ஹொராஷியா நெல்சன், பழுத்த அனுபவசாலி

40 வயது நெருங்கியிருந்தாலும் கடற்போரில் பெரும் அனுபவம் வாய்ந்தவன்

அந்த சிங்கத்தை நெப்போலியனை நோக்கி ஆகஸ்ட் 10 1798ல் ஏவியது பிரிட்டன்

இரு சிங்கங்களும் சந்தித்துகொள்ள நேரம் நெருங்கிற்று, ஏற்கனவே பிரிட்டனின் பலமிக்க கப்பல்படை மீது வெறுப்பில் இருந்த நெப்போலியனுக்கு இம்முறை வாய்ப்பு கிட்டிற்று

 

வாமணன் வருவான்…

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 6

Image may contain: one or more people and people standingஎதாவது வரி விதிப்பது, அந்நிய நாட்டில் படையெடுப்பது அல்லது விவசாயமோ ஆடுமாடோ வளர்த்து உற்பத்தியினை பெருக்குவது உலகில் ஆங்காங்கே கால்பதித்திருக்கும் காலணி நாடுகளிலிருந்து ஏதாவது தேற்றி வருவது என்ற ரீதியில் பிரென்ஞ் டைரக்கர்கள் கூட்டம் நடைபெற்றது

நெப்போலியன் தன் திட்டத்தை சொன்னான், திகைத்து நின்றார்கள், காரணம் அவன் சொன்னது அப்படி

பிரிட்டனின் பெரும் பலம் அதன் கடற்படை, அதனை தகர்க்கும் படை பிரான்ஸ் கப்பற்படையினை தயார் செய்வேன்.

முதலில் பிரிட்டன் கடற்படையினை தாக்குவேன், இங்கெல்லாம் பிரிட்டனின் ஆதிக்கம் இருக்கின்றது, அங்கெல்லாம் நமது கடற்படையினை நிறுவுவேன்

அதோடு பிரிட்டனின் பலம் ஒழிக்கபடும், உலகெல்லாம் நாம் வியாபாரம் செய்ய எளிதாகும். எங்கெல்லாம் பிரிட்டன் படைகளுக்கு எதிராக நாம் உதவுவோம், பிரிட்டனின் ஆட்சியினை முறித்துபோட்டுவிட்டு நம் வியாபாரத்தை செய்யலாம், நாம் மட்டுமே வியாபாரி எதிரிகளே இல்லாத வியாபாரி.

செல்வம் குவியும், கோடான கோடி குவியும்

டைரக்டர்கள் வியப்பாக கேட்டார்கள், இதன் செயல்திட்டம் என்ன?

“பெரும் படையினை திரட்ட வேண்டும் முதலில் எகிப்தை பிடிக்க வேண்டும்?

ஏன் எகிப்தை பிடிக்க வேண்டும்?

அதிலிருந்து ஆசியா நோக்கி முன்னேற வேண்டும், ஆசியாவில் நம் பலத்தை வலுவாக்க வேண்டும்

வலுவாக்கிவிட்டு?

அங்கிருந்து இந்தியாவினை வளைக்க வேண்டும்?

இந்தியாவினையா?

ஆம், அந்த வளமான இந்தியாவினை

அங்குதான் கிழகிந்திய கம்பெனி ஆட்சி நடக்கின்றதே?

ஆங்காங்கு சண்டையும் நடக்கின்றது

அதில் நாம் என்ன செய்ய முடியும்?

நாமும் சண்டையிட வேண்டும்

அது நமது மாவீரன் டூப்ளேயாலே முடியாமல் போனது, டூயுப்ளே யார் தெரியுமா? உன்னை விட பெரும் திறமைசாலி. பாண்டிச்சேரி இன்றும் நம் கைவசம் இருக்க அவர் காட்டி சென்ற வழிதான் காரணம், அவர் சிலை கூட அங்கே உண்டு

நான் ஒன்றும் அவரை போல சாந்தா சாஹிப் பின்னால் எல்லாம் அலைவதில்லை

பின்னே

பெரும் புலி ஒன்றை பார்த்திருக்கின்றேன், வீரத்தில் மிக சிறந்தவன் அவன். ஆனால் தக்க துணையின்றி தவிக்கின்றான், அவனுக்கு மட்டும் பலமான துணை கிடைத்துவிட்டால் பிரிட்டனை அவனே பார்த்துகொள்வான்

யாரது?

மைசூர் மன்னன் திப்பு சுல்தான்

கேள்விபட்டிருக்கின்றோம், இது சாத்தியமா? அவனை நம்பலாமா?

வீரம் வீரத்தை அறியும், சந்தேகமேயில்லை என்னை விட மிக சிறந்த வீரன் அவன். இந்தியா பிரிட்டன் கையில் விழ அவன் மட்டுமே தடையாயிருக்கின்றான். அவனும் வீழ்ந்தால் மொத்த இந்தியாவும் பிரிட்டானியருக்கே, அதை தடுக்க வேண்டும்”

நெப்போலியன் கோரிக்கைக்கு அந்த சபை அனுமதி கொடுத்தது, இந்தியாவின் திப்பு சுல்தான் நெப்போலியன் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்திருந்தான்

உத்தரவு கிடைத்தவுடன் நாட்டின் மாலுமிகள், கடலோடிகள், சாஸ்திரிகள் என எல்லோரையும் அழைத்து பலமிக்க கப்பல்கல்படையினை தயாரிக்க தொடங்கினான் நெப்போலியன்

அன்று சூயஸ் கால்வாய் இல்லை எனினும் அக்காலத்தில் தொடங்கி இடையில் விடபட்ட வரலாறு உண்டு

நெப்போலியனுக்கு இருந்த பெரும் கனவுகளில் அந்த சூயஸ் கால்வாயும் ஒன்று,

அதுவே ஐரோப்பாவுக்கும் இந்தியாவிற்கு எளிதான வழி.

அது அமையாதவரை மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு கேரளா சுற்றி பெங்களூர் சுற்றி வந்த கதைதான், நெப்போலியன் காலம் அப்படித்தான் இருந்தது.

இவை எல்லாம் உடனே நடக்காத விஷயங்கள் என்பதால் முதலில் எகிப்தை பிடித்து அங்கு பிரான்ஸ் அஸ்திவாரத்தை பலபடுத்தி இந்தியாவின் தொடர்பை ஏற்படுத்திவிட்டு பார்க்கலாம் என எண்ணியிருந்தான்.

எகிப்து செல்லும் வழியினையும், அதன் நில அமைப்பினையும் அதன் சாதக் பாதகங்களையும் அலசி ஆராய தொடங்கினான்.

வாமணன் வருவான்…