எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு நிறுவணமான தேஜஸ் விமானங்களை வெளிநாட்டு ராணுவ விமான கண்காட்சிக்கு அனுப்பியிருக்கின்றது

ஆம் மலேசியாவில் நடைபெறும் விமான கண்காட்சிக்கு அது அனுப்பபட்டிருக்கின்றது

ஒரு நாடு போர் விமான கண்காட்சி நடத்துகின்றது என்றால் அதற்கு ராஜதந்திர அர்த்தம் என்னவென்றால், நாங்கள் போர் விமானம் வாங்க தயாராக இருக்கின்றோம்

அதற்காக பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கபட்டது, பாகிஸ்தானின் ஜே7க்கும் அழைப்பு விடுத்தது அது சீன தயாரிப்பு

ஆனால் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை

இதனால் இந்திய மற்றும் தென்கொரிய விமானங்களை மலேசியா வாங்க வாய்ப்பு அதிகம்

மலேசியா இதில் அட்டகாச அரசியல் செய்கின்றது

அதாவது மலேசியாவின் பிரதான ஏற்றுமதியான பாமாயிலை வாங்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டவில்லை, ஏதோ சொல்லி தடையிடுகின்றன‌

அப்படி எங்கள் பாமாயிலை வாங்காவிட்டால் ஐரோப்பிய விமானங்களை வாங்கமாட்டோம் என சொல்லிவிட்டது மலேசியா

இந்நிலையில்தான் விமான கண்காட்சி நடக்கின்றது

அவர்களுக்கு 36 விமானங்கள் தேவையாம், எச்.ஏ.எல்லின் தேஜசும் களத்தில் இருக்கின்றது

ஒரு கேள்வி எழலாம்?

இந்திய படைகளுக்கு இல்லாமல் ஏன் தேஜஸ் வெளிநாட்டுக்கு விற்படும் என்பதுதான் அது.

இந்த ஆண்டிற்குள் 78 தேஜஸ் விமானங்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைக்கபடும் என சொல்லியிருக்கின்றது எச்.ஏ.எல்

எப்படியோ வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு போர்விமானம் ஏற்றுமதிக்கு வந்திருக்கின்றது

காங்கிரஸ் அரசுதான் இதை தொடங்கியது, மோடி அரசு கைவிடாமல் காத்தது

நாட்டின் பெருமையினை உயர்த்திய எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

மிக பெரும் அறிவாளி ஹாக்கின்ஸ்

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி , மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார்

அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும்

ஆனால் அவரின் அறிவினை பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யோக மெஷினை தயார் செய்தது, ஆம் விழி அசைவில் இயங்கும் கணிணி மூலம் உலகோடு பேச தொடங்கினார்

கவனியுங்கள், பேனா இல்லை பேப்பர் இல்லை, புத்தக குறிப்புகளுமில்லை ஆனால் அவர் தன் ஆராய்ச்சி முடிவினை கண்களால் சொன்னபொழுது உலகம் அதிர்ந்தது

குவாண்டம், காஸ்மோலாஜி, தெர்மல் என இவர் பல ஆராய்ச்சி முடிவுகளை சொல்ல சொல்ல பெரும் ஆச்சரியமாக பார்க்கபட்டார்

கருந்துளை ஆராய்ச்சி என்பது கருந்துளை எதையும் வெளியேற்றாது எல்லாவற்றையும் ஈர்க்கும் எனும் கருத்தோடு ஐன்ஸ்டீனே விடைபெற்ற பின், இல்லை கருந்துளையிலிருந்தும் சில கதிர்கள் வருகின்றன என ஆய்வுகளை சொன்னார், அது நிரூபணமும் ஆனது

அந்த கதிர்களுக்கு ஹாக்கின்ஸ் கதிர்கள் என்றே பெயரிட்டது விஞ்ஞான உலகம்

இவரின் இயற்பியல் கணிதத்தை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் சூத்திரமான “காலம் ஒரு வரலாற்று சுருக்கம்” எனும் திட்டத்தை உலகம் ஏற்றுகொண்டது, அதற்காக அவருக்கு 6 மில்லியன் டாலர் பரிசும் கிடைத்தது

இது தமிழிலும் புத்தகமாக வந்தது

அவர் எழுதிய இரு புத்தகங்கள் A Brief History of Time, The Universe in a Nutshell விஞ்ஞான உலகின் புதிய ஏற்பாடாக கொண்டாபடுகின்றன‌

பாமரரும் படித்து புரிந்துகொள்ளும் அளவு எளிமையான மொழியும் அவருக்கு வந்தது, படியுங்கள் மிக எளிதாக விண்வெளி புரியும்

இவரின் முதல்மனைவி இவரை பற்றி எழுதிய “theory of everything” என்ற புத்தகம் சக்கை போடு போட்டு திரைபடமாக வந்தது

மாணவர்கள் முதல், ஹாலிவுட் டைரக்டர்கள், விஞ்ஞானிகள் என பலர் அவருக்காக எப்பொழுதும் காத்துகொண்டே இருந்தனர்

விண்வெளி ஆராய்சியினை தாண்டி வேற்றுகிரக மனிதர்கள் ஆய்விலும் இருந்தார். எல்லோரும் ஏலியன்ஸ் அப்படி இருப்பார்கள் இப்படி இருப்பார்கள் என சொன்னபொழுது ஹாக்கின்ஸின் ஆருடம் வேறுமாதிரி இருந்தது

அவர்கள் புழுவாக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், கண்ணுக்கு தெரிந்த தெரியா வடிவில் நம்மோடு இருக்கலாம், நம்மை போலவே இருக்க என்ன அவசியம் உண்டு என அவர் சொன்னது வேற்றுகிரகவாசி ஆராய்ச்சியில் புதிய கோணத்தை திறந்தது

வேற்றுகிரக வாசிகள் உண்டு என்பதையும் அவர்கள் எதனையோ தேடி அலைகின்றார்கள் என்பதையும், பின்னொரு நாளில் பூமி அவர்களால் ஆட்கொள்ளபடும் என்பதையும் சொல்லியிருக்கின்றார்

செயற்கை அறிவு எந்திரங்கள் பெருகுவது நல்லதல்ல ஒரு கட்டத்தில் அவை மனிதனையே கட்டுபடுத்தும் நிலைக்கு செல்லும் என சொன்னதும் அவரே.

இவரின் ஆராய்சி முடிவுகள் எல்லாம் சிலிர்ப்பூட்டுபவை, பெரும் ஆச்சரியமானவை

கண்களை தவிர ஏதும் அசைக்கமுடியா மனிதனா இவ்வளவு விஷயங்களை கொடுத்தான் என நம்பவே முடியாத அதிசயம் அவர்

எல்லோரும் போல அவர் நலமாக இருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார் என பலர் யோசிக்க, இதுகாலம் காத்து இவ்வளவாவது பெற்றோமே என கண்களை துடைகின்றது விஞ்ஞான உலகம்

விஞஞானிகள் ஒவ்வொரு முடிச்சையும் விட்டு செல்வார்கள், அதனை இன்னொரு விஞ்ஞானி வந்து அவிழ்ப்பார், இந்த சங்கிலி தொடரால்தான் இவ்வுலகம் இவ்வளவு மாற்றங்களை பெற்றது

அப்படி கலிலியோ, கோபர் நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் வந்தவர் ஹாக்கின்ஸ். விண்வெளி இயற்பியல், குவாண்டம், காஸ்மோலாஜி என பல துறைகளை எங்கோ இழுத்து நிறுத்திவிட்டு மறைந்திருக்கின்றார்

இனி வரும் விஞ்ஞானிகள் அதிலிருந்து இன்னும் உயர்த்துவார்கள்

உடலால் சுத்தமாக முடியாதபோதும், வானத்தை ஏறெடுத்து கூட பார்க்கமுடியா நிலையிலும் விண்வெளி ஆய்வுகளை மகத்தான முறையில் வெற்றியாக்கிய அந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எனும் அசாத்திய மனிதருக்கு இன்று முதலாம் நினைவு நாள்

ஹிக்கின்ஸின் கோட்பாடு இன்றி இனி அமையாது பல ஆராய்ச்சிகள்.

விஞ்ஞானி மட்டுமல்ல , உடற்பேறு குறந்தோருக்கெல்லாம் மாபெரும் தன்னம்பிக்கை எடுத்துகாட்டு

உடலால் பழுதின்றி வாழும் காலத்திலே சுயநலமாக வாழ்ந்துவிட்டு, பலர் வாழ்வினை அழித்த்துவிட்டு செல்லும் உலகில், தலையினை கூட அசைக்கமுடியா நிலையிலும் பல்வேறு விண்வெளி ரகசியங்களை சொல்லிவிட்டு சென்ற அந்த ஹாக்கின்ஸ் விஞ்ஞான உலகின் தலைசிறந்த, தனித்து நிற்கும் ஒரே விஞ்ஞானி

அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், 21 வயதிலே முடிந்திருக்கவேண்டிய அவரின் ஆராய்சியினை 78 வயதுவரை நீட்டித்த அந்த மேற்குலக விஞ்ஞானிகளுக்கும் நன்றிகள்.

விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்

மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல‌

மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது ஒரு விஞ்ஞானி ஆய்வகத்தில் அதனடிப்படையில் சோதனை செய்தால் அது மிக சரியாக வரும்

அவரின் ஆராய்ச்சி இப்படித்தான் எளிமையாக இருந்தது

ஜெர்மனியில் பிறந்தார், ஐரோப்பா எங்கும் அவர் குடும்பல் அலைந்தது, பின் சுவிட்சர்லாந்தில் வசித்தார்.

ஒரு அலுவலகத்தில் கிளர்க் வேலையில்தான் இருந்தார், ஆனால் இயற்பியல் கட்டுரைகளை அவர் சமர்பிக்க, சமர்பிக்க உலகம் அவரை அறிந்துகொண்டது

ஒளிமின் விளைவு என்பதை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசினை வாங்கினார், அதன் பின் இயற்பியல் ஆராய்ச்சியில் இறங்கினார்

சார்பியல் கொள்கை என ஒன்றை சொன்னார், நமது கமலஹாசனின் பேட்டி போல அது சாதாரண மக்களுக்கு புரியாது, காலம், பொருள், இடைவெளி என என்னவெல்லாமோ வரும், அதில்தான் ஓளியே உலகின் வேகமான விஷயம் என்பதை சொன்னார்

அதாகபட்டது இப்படி சொல்லலாம், ஒருவனை ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் வைத்து விண்வெளியினை சுற்றிவர செய்யலாம், அதற்குள் பூமி சூரியனை எத்தனை சுற்றும் சுற்றிவரட்டும்

அவன் ஆகாயத்தினை சுற்றிவந்து பூமிக்கு வரும்பொழுது அவன் அப்படியே இருப்பான், ஆனால் பூமி சூரியனை 1000 சுற்று சுற்றியிருகும், அதாவது இங்குள்ள மனிதருக்கு 1000 வருடம் கடந்திருக்கும், சென்றவன் அப்படியே இருப்பான்

அதாவது பூமி சூரியனை சுற்றுவது நேரம், மனிதன் விண்வெளிக்கு சென்றது காலம், இப்படியாக செல்லும் தத்துவம் அது

ஒன்றும் பிரமாதமில்லை, இந்து புராணங்களில் ஏற்கனவே வரும் சம்பவம் இது, இந்துமதம் நிச்சயமாக அறிவியல் சார்ந்தது, அந்த விண்வெளி உண்மையினை தகுந்த சமன்பாடுகளோடு ஐன்ஸ்டீன் சொன்னார்

அடுத்ததாக அவரின் கண்டுபிடிப்புதான் புகழ்பெற்ற e=mc2 என்ற சமன்பாடு, அதாவது நியூட்டனின் கொள்கைகளில் சில திருத்தம் செய்தார், புதிய சமன்பாடு கிடைத்தது. சொன்னாரே தவிர சோதித்து பார்க்க இயலா தத்துவம் அது

இவை எல்லாம் சாதிக்கும்பொழுது அவருக்கு வயது 30க்குள்தான் ஆகியிருந்தது, பிறவிமேதைக்கு எல்லாம் சாத்தியம்

இந்நிலையில்தான் ஹிட்லரின் எழுச்சி தொடங்கி அப்பகுதியில் யூதர்கள் வாழமுடியா நிலை தோன்றியது , அமெரிக்காவிற்கு அகதியாய் தப்பினார் ஐன்ஸ்டீன்

சும்மாவே விஞ்ஞானி, அதுவும் யூத மக்களை ஹிட்லர் கொடூரமாக அழித்துகொண்டிருந்த பொழுது அவருக்கு உள்ளே இருந்த யூத ரத்தம் கொதித்தது, அணுகுண்டு செய்யும் திட்டத்தின் ஆலோசகர் ஆனார்

அப்பொழுது ஆளாளுக்கு அணுகுண்டு ஆசையில் இருந்தனர், ஹிட்லர் கிட்டதட்ட அணுகுண்டின் பாதியினை நெருங்கியிருந்தார், காரணம் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய ஜெர்மன் விஞ்ஞானிகள் அவன் வசம் இருந்தனர்

இந்நிலையில்தான் இன்னொரு யூதரான ஒபர் ஹைமருடன் இணைந்து ஐன்ஸ்டீன் தன் e=mc2 தத்துவத்தை செயல்படுத்தினார், அது அணுகுண்டாய் வெடித்தது

யுரேனியம் எனும் சாதாரண மணல்கட்டியினை, ஒரு மந்திரம் சொல்லி அணுகுண்டாய் மாற்றிய வித்தகர் ஐன்ஸ்டீன்

ஏதோ ஒரு பேப்பரில் பென்சிலால் ஐன்ஸ்டீன் கிறுக்கிய சமன்பாடு அங்கே பேரழிவாய் வெடித்தது, அணுகுண்டு அமெரிக்க அரசின் கைகளுக்கு சென்றது

ஹிட்லரை ரஷ்யா வீழ்த்த, அணுகுண்டு ஜப்பானுக்கு வீசபட்டது, அந்த அழிவினை கண்ட ஐன்ஸ்டீன் கண்ணீர்விட்டார், அரசுகள் கையில் விஞ்ஞானம் சிக்குவது தவறு என வாய்விட்டு சொன்னார்

அதன் பின் அவர் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் மனம் செலுத்தவில்லை, இனி அமைதியே அணுகுண்டை வெல்லும் ஆயுதம் என சொல்லி அமைதியானார்

பின் அவரின் ஆராய்ச்சி வானுலகிற்கு சென்றது, நியூட்டனின் கொள்கைளை திருத்திகொண்டிருந்த அவர், பின் கோபர்நிக்கஸ், கெப்ளர் என திசைமாறினார்

எல்லோரும் ஒரு விஷயத்தை பார்ப்பதற்கும் ஐன்ஸ்டீன் பார்ப்பதர்கும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு, அவர் பிரபஞ்சத்தை வேறுமாதிரி பார்த்தார்

இதனை போல பல பிரபஞ்சங்கள் இருக்கலாம், ஒரு பிரபஞ்சத்திற்கும் இன்னொரு பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பு இருக்கலாம், அதன் வழியே அடுத்த பிரபஞ்சத்திற்கு எளிதில் சென்று வரலாம்

இன்றும் ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் அவ்வழியே வரலாம் என நம்பபடுகின்றன‌

அணுவுல் எலெக்ட்ரான்கள் உட்கருவினை சுற்றுவதற்கும், சூரியனை பூமி சுற்றிவருவதற்கும் பொதுவான விதி உண்டு, அதனை நான் கண்டுபிடிப்பேன் என அது சம்பந்தமாக ஆராய்ந்த ஐன்ஸ்டீன் அதனை உலகிற்கு சொல்லாமலே மறைந்தார்

அவர் இறந்தபின் அவர் மூளையினை ஆராய்ந்தார்கள், பிரமாதமாக ஒன்றுமில்லை, ஆக ஆன்மா அவரை இயக்கியிருக்கின்றது என சொல்லிகொண்டார்கள்.

அந்த மூளையில் அல்ல விஷயம், அந்த ஆத்மாவில் இருந்திருக்கின்றது விஞ்ஞானம்.

இறுதிவரை விஞஞானியாகவே வாழ்ந்தார், இஸ்ரேல் அமைக்கபட்டபொழுது இஸ்ரேலின் பிரதமராக அமர அவரை யூதர்கள் அழைத்தனர், யூத அறிவின் சிகரம் நீங்கள். இந்த நாற்காலி உங்களுக்கானது என்றபொழுது அவர் மறுத்தார்

விஞ்ஞான உலகம் வேறு, அரசியல் உலகம் வேறு என மறுத்தார்

இதுதான் யூதர்கள், இதே தமிழ்நாடு என்றால், விஞ்ஞானி கிடக்கின்றான் வெங்காயம், எவன் நல்ல நடிகனோ அவனை அமரவை என கிளம்பமாட்டார்களா? பின் எப்படி தமிழகம் உருப்படும்.

கடந்த‌ நூற்றாண்டின் நம்பர் 1 விஞ்ஞானி என உலகம் அவரை ஒப்புகொண்டிருக்கின்றது, அப்படி ஒரு அசாத்திய அறிவாளி இனி பிறப்பது சிரமம்

மாமன்னன் சாலமோனுக்கு பின் எதனையும் புரிந்துகொள்ளும் பெரும் அறிவாளி என வரலாறு ஐன்ஸ்டீனைத்தான் சொல்கின்றது, எதுவும் அவருக்கு சிரமம் இல்லை,

திருமண வாழ்க்கைகள் தோற்கும் போதும், தன் குழந்தைகள் தன்னை போல் வராத பொழுதும் அவருக்கு கவலையே இல்லை, அப்படி அவர் தன் வாழ்க்கை பற்றி கவலைபட்டிருந்தால் இந்த உலகம் ஒரு ஐன்ஸ்டீனை கண்டிருக்காது

மனிதநேயம் மிக்க விஞ்ஞானி அவர், அணுகுண்டு இப்படியான விளைவுகளை உருவாக்கும் என்றிருந்தால், அந்த சமன்பாட்டை கொடுத்திருக்கவே மாட்டேன், உலகின் பெரும் பாவி நான் என அவர் கதறிய தருணமும் உண்டு

எப்படி இவ்வளவு அறிவு சாத்தியம் என கேட்டதற்கு அவர் சொன்னார்

“நான் நியூட்டன் விட்ட சில தவறுகளை திருத்தினேன், அதனால் புதுகொள்கைகளை சொன்னேன்

வருங்காலத்தில் என் தவறுகளை திருத்தி வேறு கொள்கைகளை வெளியிட இன்னொருவன் வருவான்,

இவ்வுலகில் அப்படித்தான் புதுபுது விஞ்ஞான தத்துவம் உருவாகும், இன்று என்னை கொண்டாடலாம், நாளை நான் பின்னுக்கு தள்ளபடுவேன் இது உலக நியதி”

எவ்வளவு தன்னடக்கமான பதில், நிறைகுடம் நீர்தளும்பல் இல் என்பது இதுதான்

அந்த மாபெரும் விஞ்ஞானியின் நினைவுநாள் இன்று, மானிடகுலத்தின் பெரும் விஷயங்களை சாத்தியபடுத்திய, புதிய விஞ்ஞான வாசலை திறந்துவிட்ட அந்த அறிவுபிரபஞ்சத்திற்கு இன்று பிறந்த நாள்

அணுவில் தொடங்கி அண்டம் வரை அலசி சொன்ன பெரும்வித்தகனின் பிறந்த நாள், மானிடசாதிக்கு புது பாய்ச்சலை கொடுத்த ஒரு விஞ்ஞான பிறந்த நாள்

அவரால் அறிவுபெற்ற மானிடர்களில் ஒருவராக அவரை நினைவுகூறலாம், வாழ்த்தலாம்

என்னை வருங்காலத்தில் ஒருவன் பின்னுக்கு தள்ளுவான் எனும் ஐன்ஸ்டீனின் வார்த்தை, ஒரு இந்திய விஞ்ஞானி மூலம் பலிக்கட்டும்

யூதர்தான்,ஆனால் கடவுளை வேறுவிதமாக பார்த்தார்

“இந்த பிரபஞ்சம் மிக பெரிது, இவ்வளவு பெரிய கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள், சூரியன்கள் என உருவாவதும், அவை துளி ஓசையின்றி இயங்குவதும், மிக மிக சரியாக இயங்குவதும் கடவுள் இருப்பதை குறிக்கின்றன‌

நிச்சயம் அப்படி ஒரு சக்தி உண்டு, அதுவே விண்வெளியினை இயக்குகின்றது

ஆனால் அப்படிபட்ட பெரும் சக்தி கேவலம் மனித வாழ்க்கையில் ஏன் குறுக்கிட வேண்டும்?”

ஐன்ஸ்டீனின் இந்த கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை, இன்றுவரை இல்லை..

கலிலியோ

இன்றைய உலகம் அறிவியல் மயமானது, எல்லாமே அறிவியல் வித்தைகள் அதுவன்றி எதுவுமில்லை

பல்லாண்டுகாலமாக மூடநம்பிக்கையிலும் இன்னும் பல மத நம்பிக்கையிலும் இருந்த மானிட குலத்தை சிந்தனையின் பால் திருப்பிவிட்டான் சாக்ரடீஸ்

அதை அறிவியல் பக்கம் திருப்பியது டாலமியும் அரிஸ்டாட்டில் போன்றவர்கள்

டாலமி பூமி மையமானது அதை சுற்றி எல்லா கோள்களும் இயங்குகின்றன என்றார், அரிஸ்டாட்டிலோ இல்லை சூரியன் மையமானது அதை எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்றார்

இந்த சர்ச்சை ஆங்காங்கே இருந்தாலும் கிறிஸ்தவம் வந்து அது பைபிளில் கிழக்கே சூரியன் உதிக்கின்றது என சொல்லியிருப்பதால் பூமியே மையம் என சொல்லிவிட்டது அதை யாரும் மறுத்தால் அது மததுரோகம், சாய்த்துவிடுவார்கள்

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் எனும் விஞ்ஞானி அரிஸ்டாட்டிலின் கொள்கை சரியானது என 1400களில் சொன்னார்

ஆனால் வலுவான கிறிஸ்தவம் அந்த சத்தம் வெளிவராமல் பார்த்துகொண்டது, ஒரு கட்டத்தில் பக்கவாதம் தாக்கிய கோப்பநிக்கஸ் இறந்தும் போனார், பைபிளுக்கு எதிராக பேசியதால் அவர் செத்தார் என்ற செய்தியும் பரவியதால் அவரின் கொள்கை அடக்கமானது

வழக்கம் போல் சூரியனே பூமியினை சுற்றிவருவதாக உலகம் நம்பிகொண்டிருந்தது, பைபிளை கண்களில் ஒற்றிகொண்டிருந்தது

இந்நிலையில்தான் 1500களின் இறுதியில் அவர் வந்தார்

அவர் இத்தாலிக்காரர், இந்த சாய்ந்த கோபுரம் உண்டல்லவா அந்த பைசா நகரில் பிறந்தவர் மனிதருக்கு நமது ஊர் சீனிவாச ராமானுஜம் போல கணிதமும் இயற்பியலும் அட்டகாசமாய் வந்தது

ஆனால் தந்தையோ மருத்துவம் படிக்க அனுப்பினார், அதில் வேண்டுமென்றே தோற்றுவிட்டு மறுபடியும் கணிதம் படித்தார்

கணிதத்தில் பட்டம்பெற்ற பின் போர்ச்சுகல்லின் பதுவா நகரம் (புனித அந்தோணியார் வாழ்ந்த நகரம்) சென்று அந்த பல்கலைகழகத்தில் 18 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றினார்

அங்குதான் அவருக்கு அறிவியல் ஆர்வம் துளிர்விட்டது, பெண்டுலம் ஆடுவதை கண்டு சில கணக்கீடுகளை செய்தார் கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து அவரை மாபெரும் மனிதனாக அது மாற்றிற்று

வரலாற்றில் முதல் டெலஸ்கோப் செய்து வானத்தை உற்று நோக்கிய முதல் நபர் அவரே

கப்பல்களில் பயன்பட்ட சிறிய டெலஸ்கோப்களை பயன்படுத்தி அந்த மாபெரும் கருவியினை உருவாக்கினார்

அதில்தான் நிலவினை கண்டார், வியாழனை கண்டார் அதன் நிலவுகளை கண்டார் இன்னும் என்னவெல்லாமோ கண்டார்

ஒரு கட்டத்தில் உண்மையினை உரக்க சொன்னார், சூரியனும் நட்சத்திரங்களும் பூமியினை சுற்றிவரவில்லை பூமிதான் சூரியனை சுற்றிவருகின்றது

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் ஆன்மா அவரில் இறங்கியது, கோப்பர்நிக்கஸ் சொன்னதெல்லாம் உண்மை என நிரூபித்தார்

விடுமா கத்தோலிக்க உலகம்?

அவர் வாழ்ந்த பகுதி பிரிட்டன், ஜெர்மன் என்றிருந்தால் சிக்கல் இல்லை ஆனால் இத்தாலி பிரான்ஸ் போர்ச்சுக்கல் எல்லாம் போப்பாண்டவரின் கட்டுபாட்டு பகுதிகள், பைபிளே பிரதானம், போப்பே சகலமும்

திமுகவில் ஒருவன் உண்மை திராவிடம் பேசமுடியுமா? காங்கிரஸில் நாட்டுபற்றாக ஒன்றை சொல்லமுடியுமா? இல்லை நல்ல இந்து கொள்கையினை பாஜகவில்தான் சொல்லமுடியுமா?

முடியாது எல்லாம் அரசியல்

இதே அரசியல் அன்று ரோமிலும் இருந்தது, “நீ கத்தோலிக்க கிறிஸ்தவனா? போப்பை தயக்கமின்றி ஏற்றுகொள்..” இல்லாவிட்டால் கிறிஸ்துவிரோதி வாழதகுதியறவன்

கலிலியோவினை ரோமை சபை விடவில்லை, அதுவும் போப் எட்டாம் அர்பன் என்பவர் சங்கிலி போட்டு இழுத்து வர சொன்னார்

எவ்வளவோ மேடைகளில் கூட்டங்களில் பூமி சூரியனை சுற்றுகின்றது எல்லா கோள்களும் அப்படியே சுற்றுகின்றது என உரக்க சொன்ன அந்த மேதை அங்கு விலங்கிடபட்டிருந்தார்

‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற இயற்பியலுக்கான பைபிளை எழுதிய அந்த விஞ்ஞானி பைபிள் கும்பல் முன் கைதியாக நின்றிருந்தார்

தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ், தெர்மா மீட்டர், டெலஸ்கோப் என மாபெரும் கண்டுபிடிப்புகளை கொடுத்த அவருக்கு விலங்கு எனும் அரசனின் கருவி மாட்டபட்டிருந்தது

அவரை கடுமையாக மிரட்டினார்கள், கொலை செய்வதாக கூட மிரட்டினார்கள்

75 வயது முதியவர் என பார்க்காமல் போப் அர்பனின் அட்டகாசம் அதிகமாக இருந்தது

பூமி மேல் கதிரவனும் நிலவும் எழுந்தருளுமாறு கடவுள் படைத்தார் என்பதை மறுத்து, பூமியும் நிலவும் சூரியனை சுற்றுகின்றது என சொல்வது மதவிரோதம் என அவர்மேல் குற்றம்சாட்டபட்டது

மரணதண்டனை என மிரட்டபட்டார் கலிலியோ

75 வயது முதியவருக்கு வேறு வழிதெரியவில்லை “நான் சொன்னது எல்லாம் பொய், பைபிள் சொன்னதுதான் உண்மை , பொய் சொன்னதற்கு மன்னிப்பு கோருகின்றேன்” என மனமொடிந்து சொன்னார் கலிலியோ

“அப்படியே பாவமன்னிப்பும் வாங்கிவிட்டு போ.” என சொல்லி அவருக்கு பாவமன்னிப்பும் கொடுத்தார் போப்

மாபெரும் கண்டுபிடிப்பினை சொன்ன அந்த கலிலியோ “பூமி உருண்டையாது அது தன்னை சுற்றி சூரியனையும் சுற்றுகின்றது” என புலம்பியபடியே ரோம் நகரின் தெருக்களில் தள்ளாடி நடந்தான்

அவர் விளம்பரத்திற்காக பொய் சொல்லியிருக்கின்றார், போப்பாண்டவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதோடு கலிலியோவின் பேச்சு ஐரோப்பாவில் அடங்கியது

அந்த மாபெரும் விஞ்ஞானி மோசடிக்காரன் என பழிக்கபட்டார், அப்படியே இறந்தும் போனார்

காலம் கடந்தது, நியூட்டன் போன்றோர் உலகை அதிரவைத்தனர் பல பல கண்டுபிடிப்புகள் வந்தன, கலிலியோவின் டெலஸ்கோப் பல மாதிரி மாற்றபட்டு பல உண்மைகளை சொன்னது

நெப்போலியன் அடித்த அடியில் போப்பாண்டவர் தமிழக காங்கிரஸ் போல் சுருங்கியே போனார், அதிகாரமில்லை

பல்வேறு கப்பல் பயணமும் விமான பயணமும் உலகம் உருண்டை என சொன்னது

ஒரு காலத்தில் அனுமானமாக சொல்லபட்ட விஷயங்கள் மனிதன் செயற்கைகோளில் ஏறி வான் சென்று பார்த்ததும் ஆதார பூர்வமாக நிரூபிக்கபட்டது

ஆம் கலிலியோ சொன்னதெல்லாம் உண்மை என்றானது, அவனின் புத்தகங்களும் தியரிகளும் விஞ்ஞான உலக பைபிளின் பக்களானது

நவீன இயற்பியல், நவீன அறிவியலின் தந்தை என கலிலியோ கொண்டாபட ஆரம்பித்தார்

ரோம் ஆலயத்தில் அவமானபடுத்தபட்ட அவருக்காக நினைவாலயங்கள் எல்லாம் எழும்பின, அவரின் பொருட்களும் புத்தகங்களும் அங்கு காக்கபட்டன, முக்கியமாக அந்த தொலைநோக்கி அங்கு நிறுவபட்டது

எந்த கத்தோலிக்க பைபிள் முன்னால் நான் சொன்னதெல்லாம் பொய் என சொல்லிவிட்டு கலிலியோ அழுதாரோ, அதே கத்தோலிக்க உலகம் தன் தவறுகளை உணர்ந்தது

1990களில் திருந்தந்தை ஜாண்பால், ஆம் தன்னை சுட்டவனை கூட மன்னித்தாரே அந்த பெருமகனார் கலிலியோ பற்றி வாய்திறந்தார்

350 ஆண்டுகாலமாக திருச்சபை காத்த அமைதியினை அவர் உடைத்தார்

“கலிலியோவிற்கு திருச்சபை அநீதி செய்தது, அவரின் அறிவாற்றல் முன்னால் தன் நம்பிக்கையின் கண்களை அது கொடூரமாக காட்டிற்று அதற்கு மன்னிப்பு கோருகின்றேன்” என பகிரங்கமாக சொன்னார்

ஆம் 350 வருடங்களுக்கு முன்பு ரோம் வீதிகளில் “நான் சொன்னதெல்லாம் உண்மை, ஒரு காலத்தில் என்னை புரிந்து கொள்வீர்கள்” என தனியே புலம்பியபடியே அழுது சென்ற கலிலியோவின் ஆன்மா அன்று சாந்தமானது

கூடவே கோப்பர்நிக்கஸின் ஆத்மாவும் அமைதியானது, கலிலியோவினையாவது அழைத்து கேட்டார்கள், கோப்பர்நிக்கஸை கண்டுகொள்மாலமே அவமானபடுத்தினார்கள்.

மகா அற்புத கண்டுபிடிப்பினை உலகிற்கு சொல்லி மதத்தாலும் அதன் சமூக கட்டுபாடுகளாலும் பைத்தியகாரன் என பட்டம் சூட்டபட்டு செத்த பரிதாபத்திற்குரியவன் அவன்

கிட்டதட்ட நமது ஊர் பாரதிக்கும், சீனிவாச ராமானுஜனுக்கும் அதே சாயல் உண்டு

மாபெரும் தகுதி பெற்றவர்கள் அறிவாளிகள் வாழும் பொழுது தூற்றபடுவதும் பின்பு உண்மை அறிந்து அவர்கள் இல்லா காலத்தில் அவரை வணங்குவதும் உலக நியதி

உலகின் மகா கொடுமையான நியதி இது, இன்று அந்த கலிலியோவின் பிறந்த நாள்

இந்த விஞ்ஞான உலகிற்கு மாபெரும் திருப்புமுனை கொடுத்த இயற்பியல், கணிதம், வானவியல் என பல துறைகளின் பிதாமகனான அந்த கலிலியோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்