கலிலியோ

இன்றைய உலகம் அறிவியல் மயமானது, எல்லாமே அறிவியல் வித்தைகள் அதுவன்றி எதுவுமில்லை

பல்லாண்டுகாலமாக மூடநம்பிக்கையிலும் இன்னும் பல மத நம்பிக்கையிலும் இருந்த மானிட குலத்தை சிந்தனையின் பால் திருப்பிவிட்டான் சாக்ரடீஸ்

அதை அறிவியல் பக்கம் திருப்பியது டாலமியும் அரிஸ்டாட்டில் போன்றவர்கள்

டாலமி பூமி மையமானது அதை சுற்றி எல்லா கோள்களும் இயங்குகின்றன என்றார், அரிஸ்டாட்டிலோ இல்லை சூரியன் மையமானது அதை எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்றார்

இந்த சர்ச்சை ஆங்காங்கே இருந்தாலும் கிறிஸ்தவம் வந்து அது பைபிளில் கிழக்கே சூரியன் உதிக்கின்றது என சொல்லியிருப்பதால் பூமியே மையம் என சொல்லிவிட்டது அதை யாரும் மறுத்தால் அது மததுரோகம், சாய்த்துவிடுவார்கள்

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் எனும் விஞ்ஞானி அரிஸ்டாட்டிலின் கொள்கை சரியானது என 1400களில் சொன்னார்

ஆனால் வலுவான கிறிஸ்தவம் அந்த சத்தம் வெளிவராமல் பார்த்துகொண்டது, ஒரு கட்டத்தில் பக்கவாதம் தாக்கிய கோப்பநிக்கஸ் இறந்தும் போனார், பைபிளுக்கு எதிராக பேசியதால் அவர் செத்தார் என்ற செய்தியும் பரவியதால் அவரின் கொள்கை அடக்கமானது

வழக்கம் போல் சூரியனே பூமியினை சுற்றிவருவதாக உலகம் நம்பிகொண்டிருந்தது, பைபிளை கண்களில் ஒற்றிகொண்டிருந்தது

இந்நிலையில்தான் 1500களின் இறுதியில் அவர் வந்தார்

அவர் இத்தாலிக்காரர், இந்த சாய்ந்த கோபுரம் உண்டல்லவா அந்த பைசா நகரில் பிறந்தவர் மனிதருக்கு நமது ஊர் சீனிவாச ராமானுஜம் போல கணிதமும் இயற்பியலும் அட்டகாசமாய் வந்தது

ஆனால் தந்தையோ மருத்துவம் படிக்க அனுப்பினார், அதில் வேண்டுமென்றே தோற்றுவிட்டு மறுபடியும் கணிதம் படித்தார்

கணிதத்தில் பட்டம்பெற்ற பின் போர்ச்சுகல்லின் பதுவா நகரம் (புனித அந்தோணியார் வாழ்ந்த நகரம்) சென்று அந்த பல்கலைகழகத்தில் 18 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றினார்

அங்குதான் அவருக்கு அறிவியல் ஆர்வம் துளிர்விட்டது, பெண்டுலம் ஆடுவதை கண்டு சில கணக்கீடுகளை செய்தார் கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து அவரை மாபெரும் மனிதனாக அது மாற்றிற்று

வரலாற்றில் முதல் டெலஸ்கோப் செய்து வானத்தை உற்று நோக்கிய முதல் நபர் அவரே

கப்பல்களில் பயன்பட்ட சிறிய டெலஸ்கோப்களை பயன்படுத்தி அந்த மாபெரும் கருவியினை உருவாக்கினார்

அதில்தான் நிலவினை கண்டார், வியாழனை கண்டார் அதன் நிலவுகளை கண்டார் இன்னும் என்னவெல்லாமோ கண்டார்

ஒரு கட்டத்தில் உண்மையினை உரக்க சொன்னார், சூரியனும் நட்சத்திரங்களும் பூமியினை சுற்றிவரவில்லை பூமிதான் சூரியனை சுற்றிவருகின்றது

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் ஆன்மா அவரில் இறங்கியது, கோப்பர்நிக்கஸ் சொன்னதெல்லாம் உண்மை என நிரூபித்தார்

விடுமா கத்தோலிக்க உலகம்?

அவர் வாழ்ந்த பகுதி பிரிட்டன், ஜெர்மன் என்றிருந்தால் சிக்கல் இல்லை ஆனால் இத்தாலி பிரான்ஸ் போர்ச்சுக்கல் எல்லாம் போப்பாண்டவரின் கட்டுபாட்டு பகுதிகள், பைபிளே பிரதானம், போப்பே சகலமும்

திமுகவில் ஒருவன் உண்மை திராவிடம் பேசமுடியுமா? காங்கிரஸில் நாட்டுபற்றாக ஒன்றை சொல்லமுடியுமா? இல்லை நல்ல இந்து கொள்கையினை பாஜகவில்தான் சொல்லமுடியுமா?

முடியாது எல்லாம் அரசியல்

இதே அரசியல் அன்று ரோமிலும் இருந்தது, “நீ கத்தோலிக்க கிறிஸ்தவனா? போப்பை தயக்கமின்றி ஏற்றுகொள்..” இல்லாவிட்டால் கிறிஸ்துவிரோதி வாழதகுதியறவன்

கலிலியோவினை ரோமை சபை விடவில்லை, அதுவும் போப் எட்டாம் அர்பன் என்பவர் சங்கிலி போட்டு இழுத்து வர சொன்னார்

எவ்வளவோ மேடைகளில் கூட்டங்களில் பூமி சூரியனை சுற்றுகின்றது எல்லா கோள்களும் அப்படியே சுற்றுகின்றது என உரக்க சொன்ன அந்த மேதை அங்கு விலங்கிடபட்டிருந்தார்

‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற இயற்பியலுக்கான பைபிளை எழுதிய அந்த விஞ்ஞானி பைபிள் கும்பல் முன் கைதியாக நின்றிருந்தார்

தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ், தெர்மா மீட்டர், டெலஸ்கோப் என மாபெரும் கண்டுபிடிப்புகளை கொடுத்த அவருக்கு விலங்கு எனும் அரசனின் கருவி மாட்டபட்டிருந்தது

அவரை கடுமையாக மிரட்டினார்கள், கொலை செய்வதாக கூட மிரட்டினார்கள்

75 வயது முதியவர் என பார்க்காமல் போப் அர்பனின் அட்டகாசம் அதிகமாக இருந்தது

பூமி மேல் கதிரவனும் நிலவும் எழுந்தருளுமாறு கடவுள் படைத்தார் என்பதை மறுத்து, பூமியும் நிலவும் சூரியனை சுற்றுகின்றது என சொல்வது மதவிரோதம் என அவர்மேல் குற்றம்சாட்டபட்டது

மரணதண்டனை என மிரட்டபட்டார் கலிலியோ

75 வயது முதியவருக்கு வேறு வழிதெரியவில்லை “நான் சொன்னது எல்லாம் பொய், பைபிள் சொன்னதுதான் உண்மை , பொய் சொன்னதற்கு மன்னிப்பு கோருகின்றேன்” என மனமொடிந்து சொன்னார் கலிலியோ

“அப்படியே பாவமன்னிப்பும் வாங்கிவிட்டு போ.” என சொல்லி அவருக்கு பாவமன்னிப்பும் கொடுத்தார் போப்

மாபெரும் கண்டுபிடிப்பினை சொன்ன அந்த கலிலியோ “பூமி உருண்டையாது அது தன்னை சுற்றி சூரியனையும் சுற்றுகின்றது” என புலம்பியபடியே ரோம் நகரின் தெருக்களில் தள்ளாடி நடந்தான்

அவர் விளம்பரத்திற்காக பொய் சொல்லியிருக்கின்றார், போப்பாண்டவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதோடு கலிலியோவின் பேச்சு ஐரோப்பாவில் அடங்கியது

அந்த மாபெரும் விஞ்ஞானி மோசடிக்காரன் என பழிக்கபட்டார், அப்படியே இறந்தும் போனார்

காலம் கடந்தது, நியூட்டன் போன்றோர் உலகை அதிரவைத்தனர் பல பல கண்டுபிடிப்புகள் வந்தன, கலிலியோவின் டெலஸ்கோப் பல மாதிரி மாற்றபட்டு பல உண்மைகளை சொன்னது

நெப்போலியன் அடித்த அடியில் போப்பாண்டவர் தமிழக காங்கிரஸ் போல் சுருங்கியே போனார், அதிகாரமில்லை

பல்வேறு கப்பல் பயணமும் விமான பயணமும் உலகம் உருண்டை என சொன்னது

ஒரு காலத்தில் அனுமானமாக சொல்லபட்ட விஷயங்கள் மனிதன் செயற்கைகோளில் ஏறி வான் சென்று பார்த்ததும் ஆதார பூர்வமாக நிரூபிக்கபட்டது

ஆம் கலிலியோ சொன்னதெல்லாம் உண்மை என்றானது, அவனின் புத்தகங்களும் தியரிகளும் விஞ்ஞான உலக பைபிளின் பக்களானது

நவீன இயற்பியல், நவீன அறிவியலின் தந்தை என கலிலியோ கொண்டாபட ஆரம்பித்தார்

ரோம் ஆலயத்தில் அவமானபடுத்தபட்ட அவருக்காக நினைவாலயங்கள் எல்லாம் எழும்பின, அவரின் பொருட்களும் புத்தகங்களும் அங்கு காக்கபட்டன, முக்கியமாக அந்த தொலைநோக்கி அங்கு நிறுவபட்டது

எந்த கத்தோலிக்க பைபிள் முன்னால் நான் சொன்னதெல்லாம் பொய் என சொல்லிவிட்டு கலிலியோ அழுதாரோ, அதே கத்தோலிக்க உலகம் தன் தவறுகளை உணர்ந்தது

1990களில் திருந்தந்தை ஜாண்பால், ஆம் தன்னை சுட்டவனை கூட மன்னித்தாரே அந்த பெருமகனார் கலிலியோ பற்றி வாய்திறந்தார்

350 ஆண்டுகாலமாக திருச்சபை காத்த அமைதியினை அவர் உடைத்தார்

“கலிலியோவிற்கு திருச்சபை அநீதி செய்தது, அவரின் அறிவாற்றல் முன்னால் தன் நம்பிக்கையின் கண்களை அது கொடூரமாக காட்டிற்று அதற்கு மன்னிப்பு கோருகின்றேன்” என பகிரங்கமாக சொன்னார்

ஆம் 350 வருடங்களுக்கு முன்பு ரோம் வீதிகளில் “நான் சொன்னதெல்லாம் உண்மை, ஒரு காலத்தில் என்னை புரிந்து கொள்வீர்கள்” என தனியே புலம்பியபடியே அழுது சென்ற கலிலியோவின் ஆன்மா அன்று சாந்தமானது

கூடவே கோப்பர்நிக்கஸின் ஆத்மாவும் அமைதியானது, கலிலியோவினையாவது அழைத்து கேட்டார்கள், கோப்பர்நிக்கஸை கண்டுகொள்மாலமே அவமானபடுத்தினார்கள்.

மகா அற்புத கண்டுபிடிப்பினை உலகிற்கு சொல்லி மதத்தாலும் அதன் சமூக கட்டுபாடுகளாலும் பைத்தியகாரன் என பட்டம் சூட்டபட்டு செத்த பரிதாபத்திற்குரியவன் அவன்

கிட்டதட்ட நமது ஊர் பாரதிக்கும், சீனிவாச ராமானுஜனுக்கும் அதே சாயல் உண்டு

மாபெரும் தகுதி பெற்றவர்கள் அறிவாளிகள் வாழும் பொழுது தூற்றபடுவதும் பின்பு உண்மை அறிந்து அவர்கள் இல்லா காலத்தில் அவரை வணங்குவதும் உலக நியதி

உலகின் மகா கொடுமையான நியதி இது, இன்று அந்த கலிலியோவின் பிறந்த நாள்

இந்த விஞ்ஞான உலகிற்கு மாபெரும் திருப்புமுனை கொடுத்த இயற்பியல், கணிதம், வானவியல் என பல துறைகளின் பிதாமகனான அந்த கலிலியோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்