அஸ்வின் அநாகரிகமாக நடந்தாரா?

இன்று அஸ்வின் அநாகரிகமாக நடந்தார் என கொந்தளிக்கின்றார்கள்

அன்றொருநாள் கபில்தேவ் என்பவரே தென்னாப்ரிக்காவுக்கு எதிராக இதையே செய்தார்

ரன்னர் கபில் கையிலிருந்த பந்து ரிலீசாகும் முன்பே ஓடிவிட சுதாரித்த கபில் ஸ்டெம்பை தட்டினார்

அன்று அது கொண்டாடபட்டது , கபில் சமயோசிதம் , சாதுர்யம் இன்னும் என்னவெல்லாமோ சொன்னார்கள்

ஆனால் அதையே அஸ்வின் செய்தால் திட்டுகின்றார்கள்

இதற்கெல்லாம் ஒரே காரணம் வரலாறோ முழு அறிவோ இல்லாதவர்கள் ஒரு விஷயத்தை ஆர்வ கோளாறில் எழுதவருவது ஒன்றேதான்

ஒரு அஞ்சலி செய்திருக்க வேண்டும்

“தோனி இந்திய அணியினை கரை சேர்த்த தோணி”

அந்த முரசொலி வரிகளைதான் மறக்க முடியுமா?

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதல் டோனிவரை ரசித்தவர் அவர். மிகசிறந்த கிரிக்கெட் ரசிகர் கலைஞர்

சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மட்டையாளர்கள் என்றும் எதிர்கட்சி பந்துவீசும் கட்சி என்றும் அவர் பேசிய பேச்சுக்கள் காலத்தின் சுவாரஸ்ய பக்கங்கள்

உறுதியாக சொல்லலாம், அந்த புல்வாமா அஞ்சலி நிகழ்ச்சி அந்த மைதானத்தில் கலைஞரின் நினைவேந்தலை தள்ளி போட்டுவிட்டது

இல்லை வேண்டுமென்றே மேலிடம் மறைத்திருக்கலாம்

ஆனால் அந்த மாபெரும் கிரிக்கெட் ரசிகனுக்கு ஒரு அஞ்சலி செய்திருக்க வேண்டும்

வாழ்த்தத்தான் வேண்டும்

டெஸ்ட் போட்டியில் தன் முதல் வெற்றியினை பெற்றிருகின்றது ஆப்கன்

அயர்லாந்துக்கு எதிரான வெற்றி என்றாலும் அவர்களுக்கு முதல் வெற்றி

ஆப்கன் மற்ற “தான்” நாடுகளை போல் அமைதியாகத்தான் இருந்தது, “கம்யூனிசத்திற்கு எதிரான உலக இஸ்லாமியரே ஒன்று கூடுங்கள்” என்ற சி.ஐ.ஏவின் கோஷ்த்தினால் 1980களில் எரிய ஆரம்பித்தது

கம்யூனிசத்தை விரட்ட மதவெறியே சரியான தேர்வு என அது ஊட்டபட்டது, அந்த வெறி ஏற ஏற அச்சூழல் இந்தியா பாகிஸ்தான் ஏன் அமெரிக்காவினையே தாக்கியது

அதன் பின் விஷயத்தின் விபரீதம் புரிய அங்கு அமைதி திரும்ப பலத்த போராட்டம் நடக்கின்றது

கிட்டதட்ட அழிந்துவிட்ட நாடு அது , அந்த இடிபாடுகளில் இருந்து ஒரு அணி உருவாகி வருவதை வாழ்த்தத்தான் வேண்டும்

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது

இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி

அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான்

அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன்

அதனால் மிகபிரபலமான அவர் அரசியலுக்கு வந்தார், ரணில் அமைச்சரவையில் சாலை மற்றும் கடற்போக்குவரத்து அமைச்சர் ஆனார்

இம்ரான்கான், சித்துவிற்கு எல்லாம் அன்னார் முன்னோடி

இப்பொழுது மகிந்தா ராஜபக்சே டிடிவி தினகரன் ஸ்டைலில் அங்கு கும்மாங்குத்து அதிரடி எல்லாம் காட்டுவதால் மனிதருக்கு நேரம் சரியில்லை

எங்கோ அலுவலகத்தில் நுழையபோய் துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து இருவர் பலி

விஷயம் உலக அரங்கில் பெரிதாகி அமெரிக்காவே தன் குடிமக்களை இலங்கையில் எச்சரிக்கையாய் இருங்கள் கலவரம் வரலாம் என சொல்லிவிட்டது

ராஜபக்சே இந்த ரணதுங்கவினை பிடித்து உள்ளே போட சொல்லிவிட்டார்

இலங்கை சிக்கல் மோசமாகிகொண்டுதான் செல்கின்றது

போகிற போக்கில் இன்னும் சிக்கலாகலாம், ராஜபக்சே உடனே நாடாளுமன்ற தேர்தல் நடத்தவேண்டும் என்கின்றார்

ஒருவேளை பெரும் கலவரம் வந்தால் என்னாகும்?

அதை அடக்க 1977, 1987களில் இந்தியா முன்பு களமிறங்கியது போல் இறங்கும்

காரணம் இன்னொரு நாட்டை இலங்கையில் களமிறக்க இந்தியா எளிதில் அனுமதிக்காது

ஒருவேளை கொழும்பில் கலவர சூழல் வந்து இந்தியா தலையிட்டால் என்னாகும்?

இங்கு உடனே முள்ளிவாய்க்காலில் இறங்காத இந்தியா கொழும்பு என்றால் மட்டும் எப்படி இறங்கலாம் என குதிப்பார்கள், இந்திய அரசுக்கு தலைவலி கொடுப்பார்கள்

அதை பார்த்த அமெரிக்கா, இலங்கைக்கு உதவ தயார் என சொல்லிவிட்டு டெல்லியினை பார்த்து சிரிக்கும்

இலங்கை விவகாரத்தில் இந்தியாவினை கட்டிபோட இங்கு சில சக்திகளை அமெரிக்கா ரகசியமாக ஆதரிக்கும் என்பது ஒன்றும் வியப்பல்ல, அரையணாவிற்கு தெருவோடு திரிபவன் எல்லாம் ஜெர்மன், பிரான்ஸ் என சென்று ஈழ முழக்கம் எழுப்புவதெல்லாம் இந்த ரகசியத்தில்தான்

ஆனால் இப்பொழுது ஆள்வது இரும்பு மனிதர் பழனிச்சாமி, எக்கு மனிதர் மோடி

யாராவது சீண்டினால் நொறுக்கிவிடுவார்கள், அதனால் கொழும்பில் இந்திய படை இறங்க ஒரு தடையும் இருக்காது

எனினும் இப்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு மட்டுமலல், முன்னாள் கேப்டனுக்கும் போதாத காலம்.. [ October 30, 2018 ]

 

Image may contain: 2 people
Image may contain: 1 person, closeup

மாரடோனா

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரிவர். கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின் என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மாரடோனா என்றொரு வரிசை நிச்சயம் உண்டு

1980களின் கால்பந்து உலகம் அவருக்கானது, அவருக்காகவே ஆட்டங்கள் நடத்தபட்டன, கிட்டதட்ட 12 ஆண்டுகாலம் கால்பந்து உலகம் அவரை சுற்றியே சுழன்றது.

அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையினை அவர்தான் பெற்றுகொடுத்தார்.

1986ல் அவர் ஆடிய ஆட்டம் அபாரமானது, நொடிபொழுதில் தட்டிய கோல் இன்றுவரை கடவுளின் கை என்றே சொல்லபடுகின்றது.

கால்பந்து விதிமுறைபடி அது சர்ச்சை எனினும், பின் 6 வீரர்களை தாண்டி 60மீட்டர் தொலைவில் இருந்து அவர் அடித்த கோல்தான் இந்த “நூற்றாண்டின் சிறந்த கோல்” என கொண்டாடபடுகின்றது

குட்டையான உருவம் தான், ஆளை பயமுறுத்தும் ஆஜானபாகு தோற்றமெல்லாம் இல்லை, ஆனால் பந்தோடு ஓட ஆரம்பித்தால் அவ்வளவு சீற்றம். பந்தோடு பந்தாக அவரும் உருளுவது போலத்தான் இருக்கும் அவ்வளவு வேகம். அத்தனை துல்லியம்

எத்தனை ரொனால்டோ, ரொமாரியோ, மெஸ்ஸி, மாப்பே வந்தாலும் மாரடோனாவிற்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே தனி

எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கினார், அதில் போதையும் உண்டு, அதில் சிக்கி மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பினார்

இன்றோடு 57 வயது ஆகின்றது, மாரடோனாவிற்கு இன்று பிறந்த நாள்

பீலே தன்னிகரற்ற கால்பந்து வீரர், பல சூட்சும மூவ்களை அறிமுகபடுத்தியவர்

ஆனால் மாரடோனா அதிரடி வீரர், வேகமும் விவேகமும் கலந்த அற்புத ஆட்டக்காரர் அவர்

பிலே கருப்பு முத்து என்றால், மாரடோனா ஒரு வெள்ளை வைரம்

கடந்த உலககோப்பையில் அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஆனார், மெஸ்ஸி தலமையில் அவ்வணி இறுதிபோட்டி வரை சென்றது, மெஸ்ஸி நல்ல ஆட்டக்காரர் சந்தேகமில்லை

ஆனால் 4 ஆட்டகாரர்கள் சுற்றிவிட்டால் மெஸ்ஸி கட்டுபடுவார், அந்த வித்தை ஜெர்மனிக்கு தெரிந்தது, அது கோப்பையினை தட்டி சென்றது

மராடோனா 6 பேர் சேர்ந்தாலும் கட்டுபடுத்தமுடியாத பிசாசு, தன் ஆக்ரோஷத்தை மெஸ்ஸியிடம் எதிர்பார்த்தார் அது நடக்கவில்லை

வரலாறு அர்ஜெண்டினாவில் ஒரே மாரடோனா என குறித்துகொண்டது.

அந்த ஜாம்பவானுக்கு இன்று பிறந்த நாள். அதிரடி கோல் அடிப்பது எப்படி என உலகிற்கு பலமுறை சொல்லிகொடுத்த அந்த அற்புத ஆட்டகாரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

[ October 30, 2018 ]

============================================================================

இந்திய விளையாட்டு

விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் – ராஜ்நாத் சிங்

இந்திய பொருளாதாரமே பாதாளத்தில் ஆடிகொண்டிருக்கின்றது, இதில் விளையாட்டும் அப்படி ஆகுமாம்

சும்மாவே இந்திய விளையாட்டு ஒரு மாதிரி, இதில் இந்திய பொருளாதாரம் போல் என சொன்னால் இனி வெண்கலம் கூட கிடைக்காது

ஆசிய விளையாட்டு போட்டி 2018: வங்கம் தந்த‌ தங்கமாகிவிட்டார் ஸ்வப்னா

No automatic alt text available.

ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையோடு முடிகின்றன, இந்தியா 8ம் இடத்தில் இருகின்றது

இந்த போட்டியில் அகில உலகம் கவனம் பெற்றிருப்பவர் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன், ஏழை குடும்பத்தில் இருந்து தன் திறமையால் முன்னேறி இன்று பெற்றிருக்கும் தங்க பதக்கம் அவரை கவனிக்க செய்கின்றது

வங்கம் தந்த‌ தங்கமாகிவிட்டார் ஸ்வப்னா

ஹெப்டத்லான் என்பது கடுமையான போட்டி, 7 போட்டிகளை கொண்டது

ஹெப்டா என்றால் கிரேக்க மொழியில் 7 என பொருள் , நூறு மீட்டர் தடை தாண்டும் பொட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதல்

ஆக 7 விளையாட்டுகளில் பயிற்சி இருக்க வேண்டும், 7 பேர் தனி தனியாக திறமை காட்டுவதை ஒரே ஆளாக காட்ட வேண்டும்

எவ்வளவு கடுமையான விளையாட்டு, நிச்சயம் இது விளையாட்டு வகையிலே சேர்க்க கூடாது, முயற்சி என்ற வகையில் வரலாம்

ஆனால் கிரேக்கர்கள் அன்றே ஆடி விளையாட்டு வரிசையில் சேர்த்துவிட்டார்கள்

அந்த கடுமையான போட்டியில் சீன, ஜப்பானிய வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்திவிட்டார் ஸ்வப்னா

சந்தேகமில்லை இது மகா சிறப்பான வரலாற்று வெற்றி, மிக கடுமையான போட்டியில் அவர் தங்கம் வென்றிருப்பது மாபெரும் சாதனை

இந்திய விளையாட்டு உலகம் அவரை வாழ்த்துகின்றது

உலக தடகள நிபுணர்கள் அவளுக்கு கைதட்டுகின்றனர், ஜப்பான் ஒலிம்பிற்கு தயாராகும் வலுவான அணிகள் அவளை குறித்து வைத்திருக்கின்றன‌

இந்தியாவின் அந்த களைப்படையாத எந்திர மகளுக்கு வாழ்த்துக்கள்

நிச்சயம் பெரும் பரிசுகளும், கடும் ஊக்கமும் அவளுக்கு தேவை, அப்படி செய்யும் பட்சத்தில் ஓலிம்பிக்கில் ஒரு தங்கத்தை உறுதி செய்யலாம்

அது இத்தேசத்தின் கடமையும் கூட‌

ஆசிய விளையாட்டில் இந்தியாவினை 8ம் இடத்தில் நிறுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்க மகள் ஸ்வப்னாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

தேசம் உன்னால் பெருமை அடைவதாலும், இந்திய பெண்கள் அகில உலகில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை, எந்த கடும் போட்டிக்கும் தயார் என உலகிற்கு சொன்ன ஸ்வப்னாவிற்கு பாராட்டுக்கள்

சாதித்த அந்த பெண்ணுக்கு அகில உலக சாதனையாளர் குஷ்புவின் சங்கமும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

சீன, ஜப்பானிய பெண்களை விரட்டியது போலவே ஜப்பான் ஒலிம்பிக்கிலும் ஸ்வப்னா தங்கத்தோடு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 85 தங்கங்களுடன் முதலிடம் வகிக்கின்றது சீனா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 85 தங்கங்களுடன் முதலிடம் வகிக்கின்றது சீனா, இப்படியே மூட்டை முடிச்சுகளுடன் பாதியில் கிளம்பினாலும் முதலிடம் இனி அவர்களுக்கே

அந்த அளவு அசைக்க முடியா இடம், ஜப்பான் 45 பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றது

தென்கொரியா மூன்றாம் இடம், ஆச்சரியமாக இரான் 5ம் இடத்தில் அசத்துகின்றது, வடகொரியா இந்தியாவிற்கு முந்தைய இடம்

பாரதம் 9ம் இடத்திற்கு வந்தாயிற்று, விளையாட்டை வளர்க்காமல் நயந்தாராக்களை வளர்த்தால் நைன் இடம்தான் கிடைக்கும்

பாகிஸ்தான் 33ம் இடத்தில் தங்கமோ வெள்ளியோ இல்லாமல் வெண்கலத்துடன் கிடக்கின்றது என்பதை தவிர இந்தியருக்கு ஆறுதல் செய்தி இல்லை

பொதுவாக விளையாட்டில் கவனமாக இருக்கும் நாடுகள் ராணுவத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பது தியரி

சீனா அதை அட்டகாசமாக நிரூபிக்கின்றது, எதற்கும் டோக்லாம் விவகாரங்களை பேசியே தீர்த்துகொள்வது நல்லது

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018

ஆசிய விளையாட்டு போட்டிகள் கடும் வேகத்தில் இந்தொனேஷியாவில் நடந்து கொண்டிருக்கின்றது

உலக சாம்பியனை உள்ளூரில் களமிறக்கினால் என்னாகும்? அப்படி சீனா அள்ளிகொண்டிருக்கின்றது. எல்லா போட்டியிலும் முதல் பதக்கத்தை அதற்காக ஒதுக்கி வைத்த்துவிடுகின்றார்கள்

சில இடங்களில் 3 பதக்கமும் அவர்களுக்காகிவிடுகின்றது

இரண்டாம் இடத்தில் ஜப்பான் இருக்கின்றது , கொரியா மூன்றாம் இடம் என நீளுகின்றது

இந்தியா 7ம் இடத்தில் நீடிக்கின்றது, ஆச்சரியமாக வடகொரியா 6ம் இடத்திலும் ஈரான் அதற்கு முந்தைய இடத்திலும் இருக்கின்றது

பொருளாதார தடையிலும் ஈரானும், வடகொரியாவும் அசத்துகின்றன‌

இரண்டாம் பெரும் ஆசிய நாடான இந்தியா 3 தங்கங்களுடன் நிற்கின்றது

நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்ன தெரியுமா?

பாகிஸ்தான் இன்னும் பதக்கபட்டியலில் வரவே இல்லை, இது போதாதா நமக்கு?

உலக கால்பந்து போட்டி : வெளியேறின மெக்ஸிகோவும் ஜப்பானும்

போராடி எதிரிக்கு மரண பயத்தை காட்டிவிட்டே வெளியேறி இருக்கின்றன மெக்ஸிகோவும் ஜப்பானும்

மெக்ஸிகோ அட்டகாசமாக ஆடியது, பிரேசிலின் அனுபவம் அவர்களுக்கு உதவியது. முதல் பாதியில் பம்மியவர்கள் பிற்பாதியில் சீறி கோலடித்துவிட்டு பின் தற்காத்து கொண்டார்கள்ப

காலப்ந்து உலகில் அதிகம் சம்பளம் பெறும் நெய்மர் தான் அதற்கு தகுதியானவர் என்பது போல அட்டகாசமாக கோல் அடித்தார்

உண்மையில் மெக்ஸிகோவும் வலுவான அணி, பிரேசில் தவிர் இன்னொரு அணி என்றால் நொறுக்கியிருப்பார்கள்

பெல்ஜியத்துடன் ஜப்பானின் ஆட்டம் அட்டகாசம். பெரும் போராட்டத்திற்கு பின்பே பெல்ஜியத்தால் வெல்ல முடிந்தது

ஆசியாவின் கடைசி நம்பிக்கையான ஜப்பான் போராடி வெளி வந்திருப்பது வாழ்த்திற்குரியது

ஆக வட அமெரிக்க , ஆசிய நாடுகள் விடைபெற்றுகொள்ள ஐரோப்பாவா? லத்தீன் அமெரிக்காவா என மல்லுகட்டுகின்றது உலக கோப்பை

இப்பக்கம் பிரேசிலும் உருகுவேயும் சீறி நிற்க அப்பக்கம் பிரான்ஸும் பெல்ஜியம் குரோஷியா என வரிசை வந்து நிற்கின்றது

இங்கிலாந்து இதில் இடம்பெறுமா இல்லை வெளியேறுமா என்பது இன்று தெரியும்