வெல்ல பிறந்தவன் : முடிவுரை

அலெக்ஸாண்டரை பற்றி சொல்லும்பொழுது பல விஷயம் முரண்படுகின்றது என்கின்றார்கள சிலர், அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லவேண்டும்.

இந்திய வரலாற்றை நமக்கு கொடுத்தது யார் என நினைக்கின்றீர்கள்? வெள்ளையர்கள்

அவர்கள் தொகுத்ததுதான் வரலாறு, பல இடங்களில் தங்களுக்கு சாதகாகமாக வளைத்தார்கள்.

இன்று நாம்படிக்கும் வரலாறு பல மர்ம பக்கங்களை உள்ளடக்கியது, நிறைய விஷயங்களை மறைத்திருப்பார்கள் ஐரோப்பியர்கள்.

அவர்களின் பெருமை அப்படி. ஐரோப்பியர்தான் பெரியவர்கள் என்பது அவர்கள் நினைப்பு, வரலாற்றில் அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என்றுதான் வகைபடுத்துவார்கள்

இவர்களை விட பெரும் வீரனான செங்கிஸ்கான் பற்றி எல்லாம் பேசமாட்டார்கள், ஆட்டோமன் துருக்கியரை பற்றி மூச்சே இருக்காது

அப்படிபட்டவர்கள் தொகுத்த இந்திய வரலாறு எப்படி இருக்கும்? புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் வென்று மறுபடி நாட்டை அவனிடம் கொடுத்தான் என்றுதான் இருக்கும்

அலெக்ஸாண்டர் அப்படிபட்டவன் எல்லாம் அல்ல, அடிபணிய மறுத்தால் தலையினை எடுப்பதே அவன் முடிவு

அலெக்ஸாண்டர் காலத்திலே சந்திரகுப்தனுக்கும் அலெக்ஸாண்டருக்கும் உரசல் இருந்திருக்கின்றது, திரும்பி சென்ற அலெக்ஸாண்டர் இரு வருடங்களில் மரணமடைகின்றான், அதன்பின் அலெக்ஸாண்டரின் நண்பனான செலுகஸ் ஆப்கன் பகுதிக்கு மன்னராகின்றான்

அவன் அலெஸாண்டர் விட்ட போரை தொடங்குகின்றான், சந்திர‌ குப்தர் அவனை விரட்டுகின்றார், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி செலுகஸின் தூதர் மெகஸ்தனிஸ் இந்தியா வருகின்றார்.

அவர் எழுதியதுதான் இண்டிகா, அதில் சந்ரோகோட்டஸ் என குப்தனை குறிப்பிடுகின்றார்

அந்த நூல் முழுமையாக வெளிவந்தது என்றா நினைக்கின்றீர்கள்? சில பகுதிகளை மட்டும் வெளியிட்டார்கள்

காரணம் முழு புத்தகமும் வெளிவந்தால் அலெக்ஸாண்டரின் சில விஷயங்கள் வெளிவரும், அப்புத்தகம் மறைக்கபட்டவிதம் அப்படித்தான்.

ஒரு ஐரோப்பிய வீரன் ஆசியாவில் தோற்றான் என்று இருக்கவே கூடாது என்பது அவர்களின் குணம், வரலாற்றை மாற்றிவிட்டார்கள்

மற்றபடி வெள்ளையன் சொன்ன வரலாறை நீங்கள் நம்புகின்றீர்கள் என்றால் நம்பிக்கொள்ளுங்கள்

ஆனால் செங்கிஸ்கான், தைமூர், ஆட்டோமன் துருக்கியர் எல்லாம் ஏன் வரலாற்றில் வரவேயில்லை என்பதையும் போட்டு குழப்பினால் உங்களுக்கு பல விஷயம் கிடைக்கும்.

அட அவ்வளவு ஏன்? சிந்துவெளியினை தோண்டிய வெள்ளையனுக்கு ஆதிச்சநல்லூரை தோண்ட மனமில்லாமல் போனது ஏன்?

இன்றுவரை ஐரோப்பாவினை வென்ற ஒரே ஆசியன் செங்கிஸ்கான் தான், அவனை தவிர எந்த ஆசியனும் ஐரோப்பியரை வென்றதில்லை

மங்கோலியாவில் அவன் கல்லறை இருந்தது, பின் ரஷ்யா பலம் பெற்ற காலத்தில் அந்த இடத்தையே அழித்து, அதை சுற்றி 20 ஏக்கரை அழித்து இன்று தடம் இல்லாமல் செய்துவிட்டார்கள்

காரணம் அக்கல்லறை இருந்தால் ஐரோப்பாவில் செங்கிஸ்கான் அடித்த அடி நினைவுக்கு வரும் எனும் கோபம்.

அவர்களா வரலாற்றை உள்ளபடி எழுதுவார்கள்?

இறுதியாக ஒன்று, நமக்கு தஞ்சை கோவில் வரலாறே தெரியாது, ஒரு ஜெர்மானியன் வந்து கல்வெட்டு படித்துதான் இது ராஜராஜன் கட்டியது என்றே சொல்லிகொடுத்தான், நமது வரலாறு இப்படித்தான்

இதில் வட இந்திய வரலாறு பற்றி என்ன பெரிய அறிவு இருந்துவிட போகின்றது?

ஆனால் அலெக்ஸாண்டரின் வாழ்வினை பாருங்கள், இவ்வளவு தூரம் வந்தவன், போரசிடம் நாட்டை கொடுக்கவும், கங்கை பக்கம் வராமலும் போயிருக்க என்ன காரணம்? நிச்சயம் அச்சமன்றி வேறல்ல.

 

வெல்ல பிறந்தவன் : 11

Image may contain: one or more people and outdoor

பாபிலோன் திரும்பிய அலெக்ஸாண்டருக்கு எல்லாமே முரணாக நடந்தன‌

அவனின் மிக‌ பரந்த பேரரசில் ஆங்காங்கு எழும்பிய கலவரங்கள் இப்பொழுது தீவிரமாயின, காரணம் அந்த கடைசி யுத்தம்.

ஒருவன் வெற்றிமேல் வெற்றி பெரும்வரைதான் அடங்கியிருப்பார்கள், அவன் சறுக்க ஆரம்பித்தால் அவன் நிழல் கூட அவனுக்கு அடங்காது. அலெக்ஸாண்டருக்கும் இதே சிக்கல் வந்தது.

போராஸுக்கு மட்டும் நாட்டை திரும்ப கொடுப்பாராம், எங்களுக்கு கொடுக்கமாட்டாராம் என்பன போன்ற குரல்கள் எதிரொலித்தன, பார்மீனியோவினை கொன்றபின் அலெக்ஸாண்டரின் தளபதிகள் அலெக்ஸாண்டரை நம்பவில்லை, அலெக்ஸாண்டருக்கு அவர்களுக்கும் ஏதாவதுசெய்யவேண்டும் போலிருந்தது

உடலால் பலவீனமாக இருந்தாலும் , பிழைத்து எழுவோம் என நம்பிகொண்டிருந்தான் அலெக்ஸாண்டர், தன் நம்பிக்கைகுரிய 4 தளபதிகளை அழைத்தான்

தன் தேசத்தை 4 பங்காக பிரித்தான், 4 பேரையும் 4 பகுதியினை ஆண்டுகொள்ள அனுமதித்தான். ஆள்வது என்றால் கலவரங்களை அடக்குவது என பொருள். கிட்டதட்ட மன்னர்கள் போல அவர்களுக்கு முடி சூட்டினான்.

ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் தந்திரக்காரன் அலெக்ஸாண்டர், தளபதிகளை மன்னராக்கி அவர்கள் அதிருப்தியினை போக்கியாயிற்று, கலவரங்களை அடக்கியாயிற்று மொத்த பேரரசும் நிலைத்தும் ஆயிற்று.

இம்மாதிரி தந்திரம் தான் அலெக்ஸாண்டர்.

No automatic alt text available.அவன் மனம் முழுக்க இந்தியாவில் அடைந்த தோல்வியே இருந்தது, ஆப்கன் மண்டல அதிபதியாக தான் முடிசூட்டிய செலுகஸிடம் சொன்னான், “என்றாவது ஒரு நாள் கிரேக்கர்கள் இந்தியாவினை கைபற்றியே தீரவேண்டும், ஒரு முனையில் இருந்து அடித்தால் கைபற்றகூடிய தேசம் அல்ல அது, மாறாக பல முனையில் இருந்து அடிக்க வேண்டும்

நம்மிடம் தரையில் பலமான ராணுவம் உண்டே தவிர, கப்பல் படை இல்லை, நான் அதில் கவனம் செலுத்த போகின்றேன்

அப்படி செய்து கடல்மார்க்கமாக ஊடுருவி அவர்களை நாங்கள் அடிக்கும் பொழுது நீ தரைமார்க்கமாக நொறுக்கினால் இந்தியா நம் வசம்”

ஆம், கிரீசுக்கு திரும்பி பெரும் படை திரட்டி மறுபடியும் இந்தியாவினை பிடிக்கும் திட்டம் அவனுக்கு இருந்தது.

மாசிடோனியா நோக்கி பயணமாக ஆரம்பித்தான், வழியில் அலெக்ஸாண்டிரியா செல்லும் திட்டமும் இருந்தது.

எகிப்தில் அவன் உருவாக்கிய அற்புத நகரம் அது, அலெக்ஸாண்டர் உருவாக்கியதில் மகா அற்புதம் என நெப்போலியனே வாய்விட்டு பின்னாளில் சொன்னான். அதனை உருவாக்கிய அலெக்ஸாண்டர் அதன் பின் அங்கு திரும்பவில்லை, இப்பொழுது செல்கின்றான்

செல்லும் வழியில் அலெக்ஸாண்டருக்கு காய்ச்சல் அதிகமானது, எத்தனையோ இடர்களை நோய்களை சந்தித்து மீண்டவன் அவன், ஆனாலும் இம்முறை அவனுக்கு காய்ச்சல் நீங்கவில்லை

தன் முடிவு நெருங்குவதை அறிந்தான், இனி தப்ப முடியாது என அவனுக்கு தெரிந்தது. சாவு நெருங்கும் மனிதன் தன் கடைசி கட்ட விருப்பங்களை, கடமைகளை விரைவாக செய்வான் அல்லவா? அவனும் செய்தான்

மனைவி ரக்சனாவிடம் 4 வயது மகனை தன் தாய் ஒலிம்பியஸிடம் ஒப்படைக்க சொன்னான், ஒலிம்பியஸ் அவனை தன்னைபோல‌ பெரும் வீரனாக்குவாள் என மனதார நம்பினான்

தன் விசுவாசமிக்க நண்பர்கள் தன் மகன் உரிய காலம் வரும்பொழுது ஆட்சியினை அவனிடம் ஒப்படைப்பார்கள் என அவன் ரக்சனாவிடம் சொல்லிகொண்டான்

எந்த மாவீரன் ஆனாலும் , பெரும் மன்னன் ஆனாலும் விடைபெறும் காலம் உண்டு, காலம் யாருக்கும் அது அனுமதித்ததை தாண்டி ஒரு நொடி கூட கொடுக்காது, இரக்கமற்றது அது. கடவுளின் அவதாரங்களே காலத்திற்கு தப்பமுடியாதபொழுது அலெக்ஸாண்டர் எப்படி?

தன் நாடு, குடும்பம் அரசு என சிந்தித்து தன் கல்லறை பற்றியும் சிந்தித்தான். அக்காலத்தில் மன்னர்கள் புதைக்கபடும் பொழுது பெரும் வைரம், தங்கம், வைடூரியம் எல்லாம் சேர்த்து போட்டு புதைப்பார்கள்

கொஞ்ச நாள் காவல் இருக்கும், பின்பு காலம் மாறும்பொழுது யாராவது கொள்ளையிடுவார்கள், மன்னனின் எலும்பு எங்கோ எறியபடும்.

இது எகிப்து பிரமீடுகளில் நடந்தது, இன்னும் பல மன்னர் கல்லறையில் நடந்தது, இதனை சிந்தித்தான் அலெக்ஸாண்டர்

தன் உடலும் அப்படி தூக்கி எறியபட கூடாது என சிந்தித்தான், தான் செத்தால் இரு கை வெளியே நீண்டபடி பெட்டியில் இருக்கவேண்டும், அலெக்ஸாண்டர் எதுவும் கொண்டு செல்லவில்லை என உலகம் அறியவேண்டும் என சொல்லிகொண்டான்

அப்படிபட்ட துறவி எல்லாம் இல்லை அவன், மாறாக கல்லறை பற்றிய பயமே அது.

அந்த மாபெரும் அசாத்திய வீரன் பாபிலோனில் இருந்து மாசிடோனியா செல்லும் வழியில் இறந்தான்

போரசோடு யுத்தம் நடத்திய காயம், ஒரு கொசு கடித்த்தால் காய்ச்சல், மருந்தே விஷமானது, என பலவாறான செய்திகள் உண்டு.

உண்மையில் பார்மினியோ, புக்கிலேஸ் இல்லாத அலெக்ஸாண்டர் பாதி செத்தான், புருஷோத்தமன் கொடுத்த அடி அவனை கவலையில் ஆழ்த்தியது. அந்த கவலை நோயானது.

தானியேல் தீர்க்கதிரிசி கண்டபடி அந்த கிடாவின் விந்தையான கொம்பு நொறுங்கிற்று.

இம்மாதத்தில் கிரேக்கத்தை விட்டு மன்னன் வெளியேறினால் அவன் உயிரோடு திரும்பமாட்டான் எனும் கிரேக்க பூசாரிகளின் ஜோதிடம் பலித்தது.

பிரமீடையும், பாபிலோனையும் தொடுவது சாபம் . அதனை கொள்ளையிட்டவர் வாழ்வதில்லை எனும் நம்பிக்கையும் உண்மையாயிற்று.

No automatic alt text available.பெரும் அஞ்சலிக்கு பின் அலெக்ஸாண்டர் புதைக்கபட்டான், ஆனால் அவன் எங்கு புதைக்கபட்டான் என்பது இன்றுவரை தெரியாது.

அவன் கல்லறையினை இன்றுவரை உலகம் தேடுகின்றது, இன்னும் கிடைத்தபாடில்லை, ஆனால் அவன் சவபெட்டி இப்படி இருந்திருக்கலாம் எனும் வடிவம் துருக்கி மியூசியத்தில் உண்டு

அலெக்ஸாண்டர் வரலாற்றில் நிகழ்த்திய மாற்றம் பெரிது, அவன் நிர்வாகம் அசத்தலாய் இருந்திருக்கின்றது, அது இன்றைய மேலாண்மை படிப்பிற்கே அஸ்திவாரம்

ராணுவமும் அதன் வியூகமும் எப்படி இருக்கவேண்டும் என உலகிற்கு முதலில் சொன்னது அவனே

ஆசியாவில் கிரேக்க சாம்ராஜ்யத்தை அவனே பரப்பிவிட்டான், ஆப்கன் வரை அவன் சாம்ராஜ்யம் இருந்தது, இன்று தனி இனம் என அவர்களை, அரேபியர்களை சொல்லமுடியாது, கலிபாக்கள், செங்கிஸ்கான் ஆட்சி வரும் வரை அரேபிய பகுதியில் கிரேக்கர் ஆட்சியே இருந்தது.

அரேபியரில் கிரேக்க கலப்பு இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

கிரேக்க மொழி அவனால் உச்சம் பெற்றது, பைபிள் வரை அதனாலே கிரேக்கத்தில் எழுதபெற்றது. புதிய கட்டட கலைகள் எல்லாம் உலகில் உருவாயின.

கிரேக்கரை பின்பற்றியே ரோம சாம்ராஜ்யம் எழும்பியது. இன்று நாம் காணும் பல நடைமுறைகள் அதனாலே வந்தது.

தமிழக இலக்கியங்கள் யவணர் எனும் கிரேக்கன் பாண்டிய , சோழன் அரசவையில் இருந்ததாக சொல்லவும் அலெக்ஸாண்டரே காரணம்.

எகிப்து அரேபியாவில் கிரேக்கர் ஆட்சி வந்தபின் அவர்கள் தமிழகத்திற்கும் வந்தார்கள்.

இப்படி அவனால் பல மாறுதல்கள் உலகில் நடந்தன, அசாத்திய பிறவி அவன்.

மகா அசாத்திய திறமையும், மிக சிறந்த நிர்வாகியும், உலகின் ராணுவ திட்டங்களுக்கு பிதாமகனாகவும் , தந்திரத்தில் மிக சிறந்தவனாகவும் வாழ்ந்த மாமன்னரில் அவனுக்கு என்றுமே இடம் உண்டு

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அலெக்ஸாண்டரின் வாரிசு என்ன ஆனது?

துரோகங்களில் வீழ்வதே ராஜகுடும்பம். ஜெயா செத்தபின் அதிமுக என்னபாடு படுகின்றது என சொல்லி தெரியவேண்டியதில்லை, சிறிய தமிழகத்தின் முதல்வர் பதவிக்கே, அதுவும் தற்காலிக பதவிக்கே இவ்வளவு குத்து என்றால் அந்த பெரும் சாம்ராஜ்யத்திற்கு எவ்வளவு ரத்தபலி ஏற்பட்டிருக்கும்

அலெக்ஸாண்டருக்கு பின் அவன் மகன் பாலகன் என்பதால், அந்த 4 தளபதிகளும் நாட்டை பிரித்து மன்னர் ஆனார்கள். அலெக்ஸாண்டரின் மனைவியும் மகனும் ஒலிம்பியஸிடம் அடைக்கலம் ஆனார்கள்.

இனி அவன் வளர்ந்தால் ஆபத்து என்று கணித்த கூட்டம் மொத்தமாக ஒலிம்பியஸ், ரக்சனா, அலெக்ஸாண்டரின் மகன் என எல்லொரையும் ஒழித்து கட்டியது.

சிங்கம் இல்லா அரசு நரிகளின் வேட்டைகாடாகும் என்பது அங்கேயே நடந்தது. அலெக்ஸாண்டரின் வாரிசு இல்லாமல் போனது.

செலுகஸ் அலெக்ஸாண்டர் சொன்னபடி இந்தியாவில் நுழைந்து பார்த்தான் மவுரிய படை பந்தாடியது, ஆயினும் அசோகர் துறவியான பின் இந்தியா வலுவிழந்த நேரத்தில் இன்றைய பாகிஸ்தானில் கொஞ்சநாள் கிரேக்கர் ஆட்சி இருந்தது.

பின் ஓட விரட்டபட்டார்கள். ஆனாலும் ஆப்கானிலிருந்து வந்து அவர்கள் கொடுத்த தொல்லையின் வழியில்தான் பின்னர் கோரி, கஜினி, தைமூர், பாபர் என எல்லோரும் வந்தார்கள், தொடங்கி வைத்தது சாட்சாத் அலெக்ஸாண்டர்தான்

உலகை வெல்ல கிளம்பிய அலெக்ஸாண்டருக்கு இன்று 6 அடி நிலம் கூட இல்லை. அவன் என்றல்ல செங்கிஸ்கான் கல்லறை இன்றும் தெரியாது, ஹிட்லருக்கு கல்லறையே கிடையாது

உலகை மிரட்டியவர்கள் எல்லாம் இந்நிலையினைத்தான் எட்டியிருக்கின்றார்கள், இதில் யாரின் வாரிசுகளும் வாழ்வாங்கு வாழ்ந்ததுமில்லை, நின்று ஆண்டதுமில்லை

வரலாறு சொல்லும் பாடம் இதுதான். யாரும் எதுவும் நிரந்தரமாக இங்கு செய்யமுடியாது

ஆடும் வரை ஆடிவிட்டு கிளம்ப வேண்டியதுதான். அலெக்ஸாண்டரும் அப்படி ஆடினான், கிளம்பினான்.

காலம் அந்த மாவீரனை தன்னோடு அணைத்துகொண்டது.

முற்றும்

 
 

வெல்ல பிறந்தவன் : 10

Image may contain: one or more peopleஇந்தியாவிற்கு கிளம்ப திட்டமிட்டு அலெக்ஸாண்டர் தன் தெய்வத்தை வணங்கிய நேரங்களில் அவனுக்கு சகுனம் சரியில்லாமல் பட்டது. அதுவரை அவனுக்கு ஒத்துழைத்த விதி இம்முறை அவனுக்கு மாறிற்று.

பெரும் பேரரசை அமைத்துவிட்டான், கிட்டதட்ட 50 நாடுகள் பெரும் கோட்டைகள் அமைந்த, கிரீஸிலிருந்து இந்திய எல்லைவரை பூதமாக பரவிவிட்டது அவன் பேரரசு, 30 வயதிற்குள் அவன் அந்த சாகசத்தை செய்திருந்தான்.

இத்தனை அரசுகளையும் அடக்கி வைப்பதுதான் அடுத்த சாகசம் என்பது அவனுக்கு புரிந்தது, பல இடங்களில் கலவரம் வெடித்தன அவற்றை எல்லாம் அடக்கி நிலைகொள்ள தன் ராணுவத்தின் பல பிரிவுகளை அனுப்பவேண்டிய நிலை.

அப்படி ஒரு ராணுவபிரிவு ஒரு கலககாரனை அடக்க சென்றது, கலககாரன் யாருமல்ல, கட்டப்பா பார்மினியோவின் மகன். என் தந்தையும் போரிட்டார், இக்கோட்டையில் நான் அதிகாரம் செலுத்தகூடாதா? என்பது போன்ற உரிமை குரலை அவன் எழுப்பிகொண்டிருந்தான்.

கலவரத்தை அடக்க சென்ற படை அவனை கொன்றுவிட்டது, விஷயம் அலெக்ஸாண்டர் காதிற்கு சென்றபொழுது அவன் பெரும் அதிர்ச்ச்சி காட்டவில்லை. இங்கு நடப்பது கிரேக்கத்திற்கான பெரும் போர், யாருக்கும் சாவு எப்போதும் வரலாம் என்ற அலட்சியம் அவனிடம் வெளிபட்டது.

ஆனால் பார்மீனியோ? பிலிப்பிற்கு தோழனாய் இருந்து அலெக்ஸாண்டருக்கு தாய்மாமன் போல இருந்த பார்மீனியோவின் உள்ளத்தை அது பாதித்தது, என்ன இருந்தாலும் ஒருவார்த்தை தன்னிடம் சொல்ல கூடாதா? என்ற ஏக்கம் அவனுக்கு வெறியாய் மாறிற்று.

பிரச்சினை வெடித்தது பார்மீனியோ அலெக்ஸாண்டரை விட்டு விலகி சென்று தூரமாய் சென்றான், அவனோடும் பலர் சென்றனர், இனி அலெக்ஸாண்டருக்காக போரிடுவதில்லை என முடிவெடுத்தனர்.

இதுதான் வரலாற்றில் சொல்லபட்ட அலெக்ஸாண்டரின் வீரர்கள் நாடு திரும்ப கலகம் என வரலாற்றில் சொல்லபட்ட வரிகள்.

பிலிப் போல அலெக்ஸாண்டருக்கும் முன்கோபம் இருந்தது, பார்மீனியோ விலகிபோன நேரத்தில் பலர் அவனுக்கு தூபமிட்டனர். மாமன்னா பார்மீனியோ பெரும் வீரன், அவனை விட்டுவைத்திருப்பது ஆபத்து.

செருக்கின் உச்சத்தில், இனி தன்னை எதிர்ப்பவன் யாருமில்லை என்ற மமதையில் அலெக்ஸாண்டர் பார்மீனியோவினை கொல்ல உத்தரவிட்டான்.வ‌ஞ்சகமாக பார்மீனியோவினை சாய்த்தார்கள் அலெக்ஸாண்டர் வீரர்கள்.

பாகுபலியில் கட்டப்பாவினை பாகுபலி கொன்றால் எப்படி இருந்திருக்கும்? அதே கொடூரம் உண்மையில் அன்று நடந்தது.

உத்தரவிட்டானே அன்றி, பார்மீனியோ கொல்லபட்டபின் நடைபிணமானான் அலெக்ஸாண்டர். அவரின்றி அவர் எந்த யுத்தமும் அதுவரை செய்ததில்லை. ஆத்திரமும் செருக்கும் தன்னிலை மறக்க செய்ததில் அவனுக்கே அவன் மேல் வெறுப்பு.

ஆயினும் மனதை தேற்றிகொண்டு இந்தியா மீது படையெடுத்த்தான், முதலில் தட்ச சீலம் வந்தான். அங்கு அம்பி என்றொரு அரசன் ஆண்டுகொண்டிருந்தான். அலெக்ஸாண்டர்ர் வருகின்றான் என்றவுடன் வெள்ளைகொடி காட்டி சரண்டைந்தான்.

அங்கு அன்றே ஒரு பல்கலைகழகம் இருந்தது, அலெக்ஸாண்டர் கல்வி கூடங்களை மதிப்பவன் என்பதால் அங்கிருந்த பெரும் ஆசிரியர்களோடு உரையாடினான்.

அவர்கள் இந்திய தத்துவம், ஞான மரபினை விளக்க விளக்க அலெக்ஸாண்டருக்கு விளக்க விளக்க தலைசுற்றியது அவனுக்கு.

ஆம் அலெக்ஸாண்டர் என்பது நீயா? உன் ஆன்மாவா? எது உண்மையான அலெக்ஸாண்டர் என அந்த ஞானிகேட்ட கேள்வி அவனை புரட்டிபோட்டது, அதுவரை அப்படி ஒரு கேள்வியினை அவன் எங்கும் கேள்விபடவில்லை

அவன் பல சிறுதெய்வ வழிபாடு நிரம்பிய கிரேக்கமே பெரும் நாகரீகம் என நினைத்து வளர்ந்தவன், பாரசீகத்தில் அது நொறுங்கினாலும், இந்த தட்சசீல ஞானி அவனை அடித்து வீழ்த்தியிருந்தார்.

அவருடன் பேச பேச இவர் பெரும் ஞானி என அவனுக்கு விளங்கிற்று,மெதுவாக கேட்டான் உங்கள் குரு யார்?

ஞானி சொன்னான் ” அது சாணக்கியன், கங்கைகரையில் ராஜகுருவாக வீற்றிருக்கின்றார் அவர், நாங்கள் அவரின் சீடர்கள்”

இவரே இப்படி என்றால், சாணக்கியன் ஆயிரம் அரிஸ்டாட்டிலுக்கு சமம் அல்லவா? அவன் அஞ்சினான்.

ஆனாலும் பயத்தை வெளிகாட்டாமல் அடுத்த நாட்டு மன்னனுக்கு ஓலை அனுப்பினான், “மாமன்னன் அலெக்ஸாண்டருக்கு கப்பம் கட்டி, அவன் ஆளுமையினை ஏற்று வரவேற்க தயாராகுங்கள்”

Image may contain: one or more people and crowdஅந்த மன்னன் போரஸ் எனும் புருஷோத்தமன். இன்றைய பெஷாவர் எனப்படும் அன்றைய புருஷபுரத்தை ஆண்டுகொண்டிருந்தார், பதில் ஓலை அனுப்பினார் “இந்நாட்டின் மரம் கூட அவனுக்கு பணியாது, ஆனதை பார்த்துகொள்ளுங்கள்”

இவ்வளவு பெரும் வெற்றிபெற்ற , சர்வ சக்திவாய்ந்த அலெக்ஸாண்டரை ஒருவன் எதிரிக்கின்றானா? என சீறிவிட்டு கிளம்பினான்

ஜீலம் நதிக்கரை அருகே போரஸ் தயாராக நின்றான்

முதலில் பலமான யானைபடை, அடுத்து காலாட்படை, பக்கவாட்டில் குதிரைபடை, அடுத்து தேர்படை, அடுத்து மெய்காவல் படை சூழ யானையில் கம்பீரமாக போரஸ்.

அதுவரை அலெக்ஸாண்டர் யானைபடையுடன் மோதியதில்லை, அதன் யுத்தம் எப்படி இருக்கும் என்பதே அவனுக்கு தெரியாது, சிந்தித்தான்.

யுத்தம் தொடங்கபட்டது, பாய்ந்து வந்த யானைபடை அலெக்ஸாண்டர் படையினை காலில் போட்டு மிதித்தது, சட்டென உத்தரவிட்டான் அலெக்ஸாண்டர், தீபந்துகளை செய்து யானை படைக்குள் எறியுங்கள்.

அது பலனளித்தது, யானை படை மிரள அலெக்ஸாண்டர் கை ஓங்கும்பொழுது பெரும் மழை கொட்ட தொடங்கியபின் அது பலனளிக்கவில்லை ,மறுபடி யுத்தம் போரஸ் பக்கம் வந்தது.

யுத்தம் நீண்டது, போரஸ் மிக அசால்ட்டாக அலெக்ஸாண்டரை எதிர்கொண்டான். கலவரத்தை அடக்க அனுப்பபட்ட ராணுவம், பார்மீனியோ போன்ற அனுபவஸ்தன் இல்லாமல் சிரமபட்டான் அலெக்ஸாண்டர்.

மனதால் அவன் பெரிதும் குழம்பியிருந்தான், அவன் விதி மாறிகொண்டிருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. பலகீனமான மனதுடன் அவன் இட்ட போர் அவனுக்கு அனுகூலமகா இல்லை.

போரஸின் யானைபடையும், அம்புபடையும் அலெக்ஸாண்டருக்கு பெரும் சவால் கொடுத்தன, அலெக்ஸாண்டரின் ஈட்டிபடைகளை எல்லாம் முறித்துபோட்டது போரசின் படைகள்.

பல்வேறு துயர செய்திகள் அவனுக்கு வர தொடங்கின, பல அரசுகள் தாங்கள் விடுதலை பெற்றதாக சொல்ல தொடங்கின, இனி அலெக்ஸாண்டர் வராமல் அவர்களை அடக்க முடியாது எனும் நிலை.

பார்மீனியோ இல்லாமல் அலெக்ஸாண்டர் நடத்திய யுத்தம் அவனுக்கு வெற்றி கொடுக்கும் நிலையில் இல்லை, இந்நிலையில் அவன் குதிரையும் மரித்தது.

வரலாற்றில் இரண்டாம் முறையாக ஓங்கி அழுதான் அலெக்ஸாண்டர். புக்கிபிலேஸ் நீயுமா என்னை விட்டு போய்விட்டாய் என அவன் அலறிய அலறலில் போரஸ் மன்னனுக்கே ஒரு மாதிரியாய் ஆயிற்று.

புக்கிலேஸ் என்றால் எருது முகம் என பொருள். அலெக்ஸாண்டருக்கு 12 வயதான பொழுது அது அவனிடம் சேர்ந்தது, கிட்டதட்ட 20 ஆண்டுகள் அவனை சுமந்து துருக்கி, எகிப்து, பாபிலோன், ஆப்கன் என சென்றது. அவனுக்கும் அக்குதிரைக்கும் ஆத்மார்த்தமான நட்பு இருந்தது.

அக்குதிரையினை புதைத்து அதன் நினைவாக புக்கிலேஸ் எனும் நகரத்தை எழுப்பினான் அலெக்ஸாண்டர், அது இன்றளவும் பாகிஸ்தானில் உண்டு.

பார்மினியோவும், புக்கிலேசும் இல்லாத யுத்தத்தை அவன் தொடர விரும்பவில்லை. அப்படியே திரும்பினால் போரஸ் தன்னை தொடர்ந்துவந்து கொல்வான் என்பதும், அப்படி நடப்பது தன் அரசுக்கு அவமானம் என்றும் உணர்ந்தான்

போரஸை அவனால் வெல்லமுடியவில்லை, அதுவரை பார்க்காத மிக பிரமாண்டமான யுத்தத்தை அவர் நடத்தினார், இவரே இப்படி என்றால் மவுரிய சாம்ராஜ்யம் எப்படி இருக்கும் என நினைக்கும்பொழுதே கிரேக்கர்களுக்கு வயிறு கலங்கியது.

வெல்லமுடியா இடத்தில் சமாதானம் என்பது ராஜதந்திரம், அதனைத்தான் செய்தான் அலெக்ஸாண்டர், அதனால் போரஸ் நாடு போரசுக்கே கிடைத்தது

அது அவனின் மாவீரத்தை மெச்சி அலெக்ஸாண்டர் திரும்ப வழங்கியதாக வரலாறு எழுதபட்டது.

யார் அலெக்ஸாண்டரா மெச்சுவான்? அப்படி மெச்சியிருந்தால் டயர் மன்னனை விட்டிருப்பான், டார்சியஸை விட்டிருப்பான் இன்னும் எராளமான மன்னர்களை உயிரோடு விட்டிருப்பான்

ஆனால் அவர்களை எல்லாம் கொன்றுவிட்டு போரஸை மட்டும் விட்டுவைத்தான் என சொல்வதில்தான் வரலாறு படித்தவருக்கு சிரிப்பு வருகின்றது

யாராலும் வெல்லமுடியா கிரேக்க மாவீரனை ஒரு இந்திய அரசன் வென்றான் என்பதை அழகாக மறைத்தார்கள்.

போரஸ் அவனை விரட்டியடித்தார் என்பதுதான் உண்மை, பாரசீகத்தை வென்ற அளவு அலெக்ஸாண்டரால் இந்தியாவினை வெல்ல முடியவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

மனம் வெறுத்து கிட்டதட்ட துறவி நிலைக்கு வந்திருந்தான் அலெக்ஸாண்டர், அதன் பின் அவன் குதிரையேறவில்லை, பல்லக்கில் தான் சுமந்தார்கள்

கலவரத்தை அடக்க தன் நண்பர்களுக்கு அதிகாரம் அளித்துவிட்டு பாபிலோன் நோக்கி செல்ல தொடங்கினான்

வாழ்க்கை எப்பொழுதும் ஒரே போல் செல்லாது, கோபுரத்தில் அமர ஒரு காலம் உண்டென்றால், அதிலிருந்து இறங்கவும் ஒரு காலமுண்டு என்பது அவனுக்கு புரிந்தது.

பாபிலோனை அடைந்தான் அலெக்ஸாண்டர், அவனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமானது, எப்படியும் மாசிடோனியா செல்ல துடியாய் துடித்தது அந்த மாவீரனின் மனது.

தொடரும் …

 
 

வெல்ல பிறந்தவன் : 09

Image may contain: one or more peopleபாபிலோனை நோக்கி வந்தான் அலெக்ஸாண்டர், பாபிலோன் எனும் பெருமைமிகு நகரத்தை கைபற்றும் வேகம் அவனிடம் இருந்தது.

டார்சியசோ மிகபெரும் படையினை திரட்டிவைத்திருந்தான், கடந்த முறைபோல் அல்ல, இம்முறை அவனின் தயாரிப்பு கடுமையாக இருந்தது

முதலில் திறந்த களத்தினை தேர்ந்தெடுத்தான், அதில் தன் தேர்படை நகர புல் எல்லாம் வெட்டி, கற்களை எல்லாம் அகற்றி ஒரு மைதானம் போல ஆக்கியிருந்தான், அந்த களமிருந்த‌ டைக்கிரீஸ் ஆற்று கரையில் அவன் படை ஆர்பரித்து நின்றது

முண்ணணியில் தேர்படை அதனை அடுத்து குதிரைபடை, காலாட்படை , அடுத்து மெய்காவல் படை என மிக பிரமாண்ட படையோடு களத்தில் நின்றான் டேரியஸ், கிட்டதட்ட 2 லட்சம் பேர் கொண்ட கடல் அது.

அலெக்ஸாண்டர் பக்கம் 60 ஆயிரம் பேர் இருந்தார்கள், அவனோடு சேர்த்த்து 60 ஆயிரத்து 1.

நேரம் நெருங்கிற்று, களத்தை கண்டான் அலெக்ஸாண்டர். அவனுக்கும் மற்ற மன்னர்களுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். படை அமைப்பினை கண்டவுடன் எதிரியின் வியூகத்தினை மனதில் ஓடவிடுவான் அலெக்ஸாண்டர். அதன் பின் தன் வியூகங்களை நொடிபொழுதில் அறிவிப்பான் அவன் படை தயாராக வேண்டும் அது தளபதி பொறுப்பு

மற்ற மன்னர்கள் அப்படி அல்ல, அரசவையில் இருந்து ஆலோசிப்பார்கள் அப்படியே மோதவருவார்கள், கடைசி வரை அதே வியூகம்தான், இடையில் பெரிதாக மாற்றமாட்டார்கள்

தார்சியஸின் படையினை கண்ட அலெக்ஸாண்டருக்கு புரிந்தது, தன்னை சுற்றிவளைத்து அடிக்கும் முடிவுக்கு தார்சியஸ் வந்துவிட்டான் அவன் தேர்படையினை இருபக்கமும் நிறுத்தியிருக்கும் விஷயம் அதுதான், ம்ம் சரி வியூகத்தை மாற்றவேண்டும், அந்த பெரும் படையினை கலைக்க வேண்டும் கலைத்தால் சிதறுவார்கள் டார்சியஸை நெருங்கலாம், அதுதான் வியூகம். முடிவு செய்துவிட்டான்

இம்முறை யுத்ததை டார்சியஸ் தொடங்கினான்

பாரசீக படை நகர ஆரம்பித்தது, சட்டென கட்டளை பிறப்பித்தான் அலெக்ஸாண்டர், இரு பிரிவாக பிரிகின்றோம் ஒரு பக்கம் நான் தலைவன் இன்னொரு பக்கம் பார்மீனியோ

இரண்டாக பிரிந்து உள்ளே தள்ளி கொஞ்சம் வீரர்களை நிறுத்தி வடிவில் நின்றது கிரேக்கபடை.

கொஞ்சம் கவனியுங்கள் எங்கோ ஒரு யுத்தம் நினைவுக்கு வருகின்றதா? எங்கும் இல்லை பாகுபலி 1ல் காளகேயரை வீழ்த்த பிரபாசும் ராணாவும் ஆளுக்கொரு பக்கம் நிற்பார்கள் அல்லவா? அதே காட்சி

அந்த சுவாரஸ்யமான யுத்தகாட்சிதான் அலெக்ஸாண்டர் டார்சியஸை எதிர்கொண்ட யுத்தத்தின் அப்பட்டமான காப்பி

பாய்ந்து வந்தது பாரசீக படை, தேர்படை வெகு வேகமாக வந்தது, அலெக்ஸாண்டரின் வடிவ வியூகத்தில் அது உட்புகுந்தது, கொஞ்ச தூரம் அவர்கள் வரவிட்டான் அலெக்ஸாண்டர் காரணம் அவர்கள் கிரேக்க ஈட்டிபடையின் ஈட்டி பாயும் தூரம் வரை வரவேண்டும்

வந்தவுடன் உத்தரவிட்டான், அந்த தேர்படையின் தேரோட்டிகளை மட்டும் தாக்குங்கள் போதும். கிரேக்க படையின் துல்லியமான ஈட்டி வீச்சில் பாரசீக தேரோட்டிகள் கொல்லபட அப்படியே நின்றது தேர்படை.

Image may contain: one or more people and outdoorதேர்படைக்கு தேரோட்டித்தான் முக்கியம். அர்ஜூனனை காத்ததும் தேரோட்டி கண்ணன், கர்ணனை வீழ்த்த முதல் காரணமே கர்ணனின் தேரைவிட்டு ஓடிய சல்லியன்.

இந்த தந்திரத்தைத்தான் அலெக்ஸாண்டரும் செய்தான். பலமிக்க தேர்படை நகராமல் நின்றுகொள்ள அந்த தேர்வீரர்களை இழுத்து போட்டு அடித்தது அலெக்ஸாண்டரின் படை

கடும் அதிர்ச்சி அடைந்த டாரியஸ் திகைப்பதற்குள் இப்பக்கம் பார்மீனியோவும், அப்பக்கம் அலெக்ஸாண்டரும் முன்னேறி வந்தனர், பாரசீக படை இரு பக்கம் பிரிந்தது

கடும் யுத்தம் ஆரம்பித்தது, 2 லட்சம் பேரை திரட்டினாலும் டாரியஸ் அனுபவமில்லா வீரர்களையும் அவசரத்தில் சேர்த்திருந்தான்,இதனை எளிதாக கண்டுகொண்டான் அலெக்ஸாண்டர்

அதன் பின் மூர்க்கமான யுத்தத்தை அவன் தொடுக்க , பாரசீக படைகள் கலைந்தன, கடும் தயாரிப்பில் இருந்த அலெக்ஸாண்டரின் படைகள் அந்த ஆச்சரியத்தை செய்தன‌

2 லட்சம் பேரினை அலெக்ஸாண்டரின் 60 ஆயிரம் பேர் தோற்கடித்தனர். டாரியஸை தேடினான், கூட்டத்தின் நடுவில் செத்து கிடந்தார் டாரியஸ்

அவர் அருகில் சென்ற அலெக்ஸாண்டர், தன் மேல் அங்கியினை கழற்றி அவரை மூடி பணிந்தான். கிரேக்க உச்சமரியாதை அதுதான்

இப்பொழுது பாரசீகம் அலெக்ஸாண்டர் வசம், 200 ஆண்டுகாலம் ஆண்ட அந்த பெருமை மிக்க பாரசீக அரசின் பாபிலோன் மாளிகைக்குள் கம்பீரமாக நுழைந்தான் அலெக்ஸாண்டர்

அங்கு டாரியசின் மனைவியும் மகளும் இருந்தனர்.

பொதுவாக ஒரு மன்னன் எதிரி நாட்டை கைபற்றும் பொழுது அந்நகரை விட்டுவைப்பதில்லை, கொள்ளை எரிப்பு கொடுமை என பல நடக்கும், அரச குடும்பத்தையே அழித்துவிடுவான்

ஆனால் அலெக்ஸாண்டர் மாறுபட்டவன். வென்ற நாட்டையும் தன் நாடாகவே நடத்தினான். டாரியஸின் மனைவி மகளை அதே ராஜ வாழ்க்கைக்கு அனுமதித்தான்

அடுத்து அவன் செய்த விஷயம்,பாரசீகத்தின் அறிஞர்களை, ஞானிகளை அழைத்து உரையாடினான். அதிலே அவன் முகம் வாடியது

ஆம், அதுவரை கிரேக்கர்கள் மட்டுமே உயர்ந்த நாகரீகம் கொண்டோர் என்றும், மற்ற நாட்டுக்காரர் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்பதே அவனின் கருத்தாக இருந்தது. ஆனால் எகிப்து, இப்பொழுது பாபிலோன் என எல்லாம் சுற்றிபார்க்க பார்க்க அவனுக்கு அந்த எண்ணம் மாறியது.

அந்த தொங்கும் தோட்டம் அப்பொழுது இருந்தது, மகா அழகிய கட்டங்கள் இருந்தன, பாரசீகத்தில் உணவு முதல் உடை வரை ரசனையாக இருந்தது.

கிரேக்கர்களை விட உயர்ந்த கலையும், அழகும் உலகில் உண்டு என அன்றுதான் அவனுக்கு விளங்கிற்று, மனதளவில் நொறுங்கினான், ஆனால் அவற்றை எல்லாம் அழிக்க அவன் எண்ணவில்லை மாறாக மதித்தான்.

அதுவும் பாபிலோனியரின் நாகரீகமும், உயர்ந்த சிந்தனையும், அவர்களின் தத்துவமும் மிக உயர்ந்தாகவே அவனுக்கு பட்டது.

அவற்றை எல்லாம் பாதுகாக்க ஒரு நூலகம் அமைக்க உத்தரவிட்டான், சிலவற்றை தன் நாட்டிற்கு அனுப்பவும் உத்தரவிட்டான்.

வானிலை ஆராய்ச்சி முதல் மருத்துவம் வரை பல நல்ல நூல்கள் இக்காலத்தில்தான் ஐரோப்பாவிற்கு சென்றன, உபயம் அலெக்ஸாண்டர்.

ஒரு நாட்டை கைபற்றுவது கடினம், அதனை விட மிக கடினமானது அங்கே தன் அதிகாரத்தை தக்க வைப்பது. வெற்றிதான் இல்லையென்றில்லை ஆனால் மன்னனை கொன்றவெற்றி என்ன இருந்தாலும் பாரசீகர்கள் திருப்பி அடிப்பார்கள்

என்ன செய்யலாம்?

அற்புதமாக திட்டமிட்டான் அலெக்ஸாண்டர், டேரியசின் மகளை திருமணம் செய்துவிட்டான். இப்பொழுது அவன் பாரசீக மருமகன், இனி யார் கொல்வார்கள்?

அதோடு இன்னொரு கதையினையும் கிரேக்கர் பரப்பினர். அதாவது அலெக்ஸாண்டர் டயர் மன்னனிடம் யுத்தம் செய்யும்பொழுதே டார்சியஸ் சமாதானத்திற்கு வந்ததாகவும், அரசனின் உறவினர் தடுத்துவிட்டதாகவும் எல்லாம் கதைபரப்பினர்

அது இன்றுவரை வரலாற்றில் உண்டு. அரசு நடத்த இம்மாதிரி சில விஷயங்களை அரசே பரப்பவேண்டும் என்பது ஒரு ராஜதந்திரம், இன்றும் இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசும் இம்மாதிரி சில விஷயங்களை அவர்களே கசியவிடுவார்கள், கலைஞர் அதில் கில்லாடி

இந்த தந்திரத்தில் அன்றே ஊறியிருந்தான் அலெக்ஸாண்டர்.

பாரசீக மன்னனாக அவன் முடிசூட்டும்பொழுதே டேரியசின் மகளை மனைவியாக அவன் அருகே அமர்த்தியிருந்ததுதான் அவனின் தந்திரமான வெற்றி, ஒரு எதிர்ப்புமில்லை மாமன்னன் அலெக்ஸாண்டர் வாழ்க எனும் குரல் மட்டும்தான் கேட்டது.

முதல் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தானியேல் தீர்க்கதரிசியின் கனவு, மேற்கிலிருந்து ஒரு ஆட்டு கடா வந்து கிழக்கில் இருந்த கடாவினை முட்டிற்றே, வானதூதர் கூட வந்து விளக்கம் கொடுத்தாரே, அந்த கனவு இப்பொழுதுதான் நிறைவேறிற்று

அலெக்ஸாண்டர் யூதர்களை பெரிதும் கண்டுகொள்ளவில்லை என்பதால் அவர்கள் பாலஸ்தீனுக்கு திரும்ப தடையேதுமில்லை

தானியேலின் கனவு அப்படியே பலித்தது, ஆனால் அலெக்ஸாண்டரின் கனவு பலிக்கும் நேரம் இன்னும் வரவில்லை

ஆம் அவனின் கனவு இந்தியாவினை கைபற்றுவது, பாரசீகம் வந்தாயிற்று இனி அப்படியே சென்றால் இந்தியாதான், சென்றுவிடலாமா?

சாதரண மன்னன் என்றால் உடனே கிளம்புவான், ஆனால் இது வீரமும் தந்திரமும் கலந்து பிறந்த அலெக்ஸாண்டர் அல்லவா?

தன் உளவுபடையினை இந்தியாவிற்குள் அனுப்பியிருந்தான். அது வந்து சேருமட்டும் அவன் இந்தியாவுக்குள் புக தயங்கினான்.

ஆனால் அதனை வெளிகாட்ட முடியாது, மன்னனின் மனதில் என்ன இருக்கின்றது என்பது யாருக்கும் தெரிய கூடாது என்பது ராஜநீதி.

அந்த உளவு தகவல் வருமட்டும் அவன் உலாவ ஒரு இடம் வேண்டியிருந்தது, சும்மா விட்டால் படை சுகம் கண்டுவிடும், விட கூடாது.

கிடைத்த தகவல்படி ஆப்கானிஸ்தானுக்கு படையினை கிளப்பினான், வழக்கம் போல வெற்றி. காபூலை அடைந்தான்

அது என்ன ராசியோ தெரியவில்லை காபூலை பிடிக்கும் அரசுகள் எல்லாம் அங்கு தளம் அமைத்துகொள்ளும், இன்றுவரை அமெரிக்க தளம் அங்கு உண்டு

முதலில் அங்கு தளம் அமைத்தவன் அலெக்ஸாண்டர்தான். பெரும் முகாமினை அமைத்தான். அங்கிருந்து வடக்கு செல்வது அவன் திட்டமாக இருக்கலாம், ஆனால் இப்பொழுது இந்தியா அல்லவா முக்கியம்.

ஆப்கனில் சில கிரேக்க அமைப்புகளை உருவாக்கினான், அந்த அடையாளங்கள் காந்தகாரில் கூட இன்றும் உண்டு.

ஆப்கனில் அவன் சந்தித்த பெரும் சவால் இன்று அமெரிக்க செயற்கை கோளே தோற்ற பகுதியான ஸ்வாட் பள்ளதாக்கு, இன்று தாலிபான்களின் சொர்க்கம், பின்லேடன் கூட அங்குதான் இருந்தார். இன்றைய பாகிஸ்தான் ஆப்கன் எல்லையது

அந்த மலைஜாதி அன்றே முரட்டு கூட்டம், இன்றும் அப்படித்த்தான், அவர்களுடன் மோதும்பொழுதுதான் சாவின் விளிம்பிற்கு சென்றான் அலெக்ஸாண்டர்

இரு அம்புகள் அவனை தாக்கின, ஆனாலும் அதன் பின் அடிபட்ட புலியாக மாறி அந்த முரட்டு கூட்டத்தை ஒழித்துகட்டினான். அலெக்ஸாண்டரின் கொடூரமுகம் அந்த பகுதியில்தான் தெரிந்தது.

அதில் அவன் ஒரு தந்திரத்தை மறைமுகமாக செய்தான், அன்று அது இந்திய எல்ல்லைக்கு அருகான பகுதி, பாகிஸ்தான் எல்லாம் இல்லவே இல்லை, அதிலிருந்து இந்தியா என வெளிநாட்டவர் நம்பினர்.

இதில் வெறியாட்டம் ஆடினால் இந்தியருக்கு பயம் வரும் என்ற மிரட்டல் தந்திரமும் அதில் இருந்தது.

காயம்பட்ட அலெக்ஸாண்டருக்கு ஓய்வு தேவைபட்டது, அங்கு பணிசெய்ய வந்தவள் ரக்சனா எனும் ஆப்கன் அழகி, அதுவரை பெண்ணாசை என்றால் அறவே இல்லாமல் , ஒப்புக்கு டேரியஸ் மகளை திருமணம் செய்திருந்த அலெக்ஸாண்டரின் மீது ரக்சனா வடிவில் பானம் செலுத்தினான் மன்மதன்

காதலில் விழுந்தான் அலெக்ஸாண்டர், காதல் ஒரு மகனையும் கொடுத்தது.

எத்தனையோ அழகிகளை அசால்ட்டாக கடந்த அலெக்ஸாண்டர் எப்படி ரக்சனாவிடம் மாட்டினான் என்பதுதான் வரலாற்று அதிசயம், அவள் அப்படி அழகில் மிளிர்ந்திருக்கின்றாள்.

ஆப்கன் , காயம், ஓய்வு, ரக்சனா என்றிருந்த அலெக்ஸாண்டரின் முன்பு இந்தியாவில் தகவல் திரட்டிய உளவாளிகள் வந்து நின்றனர்

சொல்லுங்கள் என்றான் அலெக்ஸாண்டர்

தயங்கினர் உளவாளிகள்

குறிப்பறிந்து கண்களை உருட்டினான் அலெக்ஸாண்டர்

குனிந்தபடி சொன்னார்கள் உளவாளிகள்

“மன்னா, இந்தியாவிலும் பல மன்னர்கள் ஆள்கின்றார்கள் சிந்து நதிபக்கம் சில அரசுகள் உண்டு, அதில் புருஷோத்தமன் மகா பலமானவர், அவர் தான் உங்கள் முதல் எதிரி

என்னால் அவனை வெல்லமுடியாது என நினைக்கின்றீர்களா?

மன்னா அவரிடம் படைபலம் பெரிது, அதுவும் யானைபடை பலம் வாய்ந்தது, நமக்கோ யானைபடை என்றால் என்னவென்று கூட தெரியாது.

யானையும் ஒரு மிருகம், மிருகங்களுக்குள்ள பலகீனம் அதற்கும் உண்டு, வழி கண்டுபிடிக்கலாம், அது மட்டும்தான் சவாலா?

சிந்துவினை நீர் கடந்தாலும், கங்கை நதிகரையில் மவுரிய சாம்ராஜ்யம் இருக்கின்றது

அதற்கென்ன?

அதன் வரவாறு வேறுமாதிரியானது, நீர் வெற்றிபெறும் இடமெல்லாம் நான் அரிஸ்டாட்டிலின் மாணவன் என முழங்குகின்றீர் அல்லவா?

ஆம் அதிலென்ன சந்தேகம், அரிஸ்டாட்டிலை விட சிறந்த ஆசிரியன் எவன் உண்டு?

ஒருவன் அங்கு உண்டு, அவன் பெயர் சாணக்கியன்

அப்படி என்ன கிழித்தான் சாணக்கியன்?

நீங்கள் மன்னரின் மகன், உங்களை அரிஸ்டாட்டில் பெரும் மன்னராக்கியதில் ஆச்சரியமில்லை, ஆனால் காட்டில் வேட்டையாடிய ஒரு சிறுவனை கண்டெடுத்து அவனை வீரனாக்கி பின் மன்னனாக்கி இன்று பெரும் சாம்ராஜ்யம் அங்கு அமைத்த்திருக்கின்றான் அவன்

அலெக்ஸாண்டரின் மனம் அப்பொழுது படபடத்தது, அவன் முகம் கறுத்தது

அவர்களொ சொல்லிகொண்டே இருந்தார்கள், அப்படி பெரும் அறிவாளி, அந்நாட்டின் ஆசான் அவன் தான், அங்கு அவன் ஆட்சியில் பொற்கால ஆட்சி நடக்கின்றது, நல்லாட்சி நடக்கும் நாட்டு மக்கள் அரசுக்கு ஆபத்து என்றால் என்ன விலை கொடுத்தாலும் அரசை காக்க கிளம்புவார்கள் என்பது அரசியல் பாடம்

சாணக்கியன் வாழும் நாட்டில் நீங்கள் படையெடுத்து செல்லும்பொழுது அவர்கள் தயாரிப்பு எப்படி இருக்கும் என சொல்ல தெரியவில்லை மன்னா

அதிர்ந்து உட்கார்ந்தான் அலெக்ஸாண்டர், ஆனாலும் அச்சத்தை வெளிகாட்டவில்லை, அவர்களை கிளம்ப சொல்லி உத்தரவிட்டான்.

இன்னும் சில உளவாளிகளை கங்கைகரைக்கு அனுப்பிவிட்டு தன் படைகளுக்கு உத்தரவிட்டான்

நாம் இந்தியா மீது படையெடுக்கின்றோம், கிளம்புங்கள்

தொடரும்…

 
 

வெல்ல பிறந்தவன் : 08

Image may contain: one or more peopleஅலெக்ஸாண்டர் படையினை மூன்றாக பிரித்திருந்தான், இடதுபக்கம் காலாட்படை வலதுபக்கம் குதிரைபடை என நிருத்தியிருந்தான் முன்றாம் அணியினை தனக்கு பின்னால் நிறுத்தியிருந்தான்.

அப்பக்கம் நடுவில் டேரியஸ் இருந்தார், அவரை சுற்றி மெய்பாதுகாவல் படை இருந்தது இடது பக்கம் குதிரைபடை, தேர் படைகள் இருந்தன, வலது பக்கம் காலாட்படை இருந்தது.

யார் சங்கு ஊதினார்களோ தெரியாது, சிக்னல் கொடுத்தான் அலெக்ஸாண்டர். போரை அவன்தான் முதலில் தொடங்கினான், தன் பலமிக்க குதிரைபடையினை டேரியசின் காலாட் படையினை நோக்கி ஏவினான்

டேரியரின் அம்புபடை தேனி கூட்டமாக அம்பு எய்தது. அலெக்ஸாண்டரின் குதிரைபடை தடுமாறியது. அலெக்ஸாண்டரின் பெரும் பலமான குதிரைபடை முன்னேற முடியாமல் தவிக்க, பெருமித சிரிப்பு சிரித்தான் டேரியஸ்.

தோல்வியின் திணறல் முகம் தெரிய, சட்டென வியூகத்தை மாற்றினான் அலெக்ஸாண்டர், தன் காலாட்படையினை டேரியஸின் குதிரை+ தேர் படை நோக்கி ஏவினான்.

டேரியஸின் பலமிக்க தேர்படையினை அலெக்ஸாண்டரின் காலட்படை ஈட்டி எறிந்து கட்டுபடுத்தி ஒரு வழியினை கொடுத்தது, அந்த இடைவெளியில் அலெக்ஸாண்டரின் பின்னால் இருந்த மூன்றாம் அணி ஊடுருவிற்று

அதவாது பின்னால் இருந்தும் டேரியஸை தாக்க ஆரம்பித்தது அலெக்ஸாண்டர் படை, இதனை டேரியஸ் எதிர்பார்க்கவில்லை, முன்னும் எதிரி பின்னாலும் எதிரி என்றால் எந்த மன்னன் குழம்பமாட்டான்?

அதிர்ந்தான் டேரியஸ்.. அவனின் 11 தளபதிகளும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்தனர். அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது இதனைத்தான்.

Image may contain: outdoorஒரு மாதிரியான முற்றுகையில் சிக்கியது டேரியஸ் படை, வியூகம் குழம்பியது மலையிடுக்கில் தொடங்கிய சண்டையினை அப்படியே நகர்த்தி சென்றான் அலெக்ஸாண்டர். டேரியசின் தேர்படை பலமான சேதத்தை சந்தித்தது

டேரியஸின் படையினை விட அலெக்ஸாண்டர் படை மிக சிறியது ஆனால் பலமான வியூகத்தில் அது டேரியஸ் படைக்கு கடும் சேதம் கொடுத்தது. எங்கும் ரத்தம், ஓலம், மனித உறுப்பு என குவிந்து கிடந்தது களம்

யுத்தம் நடந்துகொண்டே இருக்க அலெக்ஸாண்டரின் படைகள் ஒருவித நகர்த்தல் யுத்தம் செய்தது அதாவது டேரியரின் படைகளை குறிப்பிட்ட இடத்திற்கு நகர்த்தியபடியே சென்றது. அந்த வியூகபடி சண்டையிட்டுகொண்டிருந்தான் அலெக்ஸாண்டர்

டேரியசோ அதனை கவனிக்கதவறி வெற்றியினை விட்டுவிட கூடாது எனும் பதற்றத்திலே போரிட்டான்.

ஒரு கட்டத்தில் ஒரு பக்கம் நதி ஒரு பக்கம் கடல், ஒரு பக்கம் அலெக்ஸாண்டர் என மூன்று பக்கமும் சூழ்பட்டான் டேரியஸ். ஒரு கட்டத்தில் டேரியசுக்கு புரிந்தது.

“இவன் சாதரண ஆளில்லை, யுத்தம் நடத்துவதாக நம் கவனத்தை திருப்பி மிக இக்கட்டான இடத்திற்கு கொண்டுவந்துவிட்டான், ஆற்றுக்குள் கடலுக்குள் சென்று எப்படி போரிடுவது. சந்தேகமில்லை இவன் பூகோளத்தையும் சண்டைக்கு அழைக்கும் வித்தைக்காரன், இனி சண்டை தொடர்ந்தால் அழிவு நிச்சயம், இப்போதைக்கு தப்பலமாம்”

ஆம், அந்த மாமன்னன், ராஜாதி ராஜ…. டேரியஸ் தப்பி ஓடிவிட்டான். அவனுக்கும் காரணம் இருந்தது. “சிரிய எல்லையில்தானே அடித்துவிட்டான் அலெக்ஸாண்டர். நான் என் பாபிலோனுக்கு செல்கின்றேன், பெரும் படை திரட்டி மறுபடியும் யுத்தம் தொடங்கவேண்டும்

இவனை விட்டால் பாரசீகத்திற்கு ஆபத்து, விடமாட்டேன்” என சொல்லிவிட்டு பாபிலோனுக்கு பறந்தான். அலெக்ஸாண்டரும் அவனை விரட்டவில்லை, பயந்து ஓடிவிட்டான் ஓடட்டும். நாம் எகிப்தினை பார்த்துவிட்டு பின் பாபிலோன் செல்லலாம் எகிப்து நோக்கி சென்றான்

போகும் வழியில் இன்றைய லெபனான் ஜோர்டான் எல்லையில் தீர் என்றொரு நாடு இருந்தது. அங்கொரு ஜகஜால கில்லாடி இருந்தான் அவன் பெயர் டயர், கொஞ்சம் புத்திசாலி.

அலெக்ஸாண்டர் துருக்கிபக்கம் அடிக்கும்பொழுதே இவனுக்கு விளங்கிற்று, நிச்சயம் அலெக்ஸாண்டர் இப்பக்கம் வரலாம். கோட்டையில் எல்லாவற்றையும் சேகரித்து வைத்து பெரும் படையோடு கோட்டையில் மிக தயாராக இருந்தான், கிட்டதட்ட 5 ஆண்டு தாக்குபிடிக்கும் அளவு தயாராக இருந்தான் டயர்.

லெபனான் பக்கம் வந்த தன் வழக்கமான மடலை அனுப்பினான். அதில் இரண்டே வாய்ப்புதான் உண்டு. அடிபணிகின்றீரா? அல்லது யுத்தத்திற்கு தயாரா?

டயர் அடிபணியவில்லை. போர் தொடங்கிற்று. அலெக்ஸாண்டர் பெரும் சோதனையினை அங்குதான் சந்தித்தான்.

டயரின் தாக்குதலும் கோட்டையும் வலுவாக இருந்தது. டேரியஸை விரட்டிய அலெக்ஸாண்டர் அவனிடம் திணறினான். அந்த யுத்தம் கிட்டதட்ட ஒருவருடம் நீடித்தது.

அலெக்ஸாண்டரை மிக தீரமாக எதிர்த்து தண்ணிகாட்டிய மன்னன் அந்த டயர்தான். வரலாற்றில் முதலில் அலெக்ஸாண்டர் கொஞ்சம் அஞ்சியது அவனிடம்தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான் அலெக்ஸாண்டர்.

பின் கோட்டையின் பலவீனங்களை படித்து, மிகுந்த சிரமபட்டு ஒரே நேரத்தில் இருபுறமும் உடைத்து ஒருவழியாக டயரை காலி செய்தான். அந்த டேரியஸ் இந்நேரம் திரும்பி வந்திருந்தால் நிச்சயம் அலெக்ஸாண்டர் அன்றே காலி, அப்படிபட்ட சிக்கல் அது.

ஆனால் அடிபட்ட பாம்பாக, காயம்பட்ட சிங்கமாக பாபிலோனில் உறுமிகொண்டிருந்த டேரியஸுக்கு அந்த சிந்தனை எல்லாம் இல்லை, இப்படி எதிரிகள் சேராமல் போனதில் அலெக்ஸாண்டருக்கு பெரும் சாதகம் உண்டு.

தீர் கோட்டையினை பிடித்துவிட்டு பின் இன்றைய இஸ்ரேலில் கால் வைத்தான் அலெக்ஸாண்டர்.

அப்பகுதியின் ஏக்ர் கோட்டை என்றொரு இடம் உண்டு, ஹைப்பா துறைமுகத்தையொட்டி வரும். அதனை கைபற்றினான், துறைமுக நகரம் என்பதால் அவனுக்கு பல லாபங்கள் இருந்தன. ஐரோப்பிய கப்பல்கள் தரித்து நிற்கும் இடம் என்பதால் அங்கிருந்து கிரீசுக்கும் கப்பலில் செல்லலாம் என்பதால் அவனுக்கு பலத்த அனுகூலம்

ஆம், அவன் அரசு இப்பொழுது கிரேக்கம் முதல் இஸ்ரேல் வரை வந்தாயிற்று, நிர்வாகம் முதல் பல விஷயங்களுக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பலம்.

அன்று இன்றைய காசாவில் பாலஸ்தீனிய கோட்டையொன்று இருந்தது, அதனை பிடித்தான், பின் ஜெரிக்கோ, எருசலேம் என அவன் கையில் எல்லா நகரங்களும் விழுந்தன‌

அன்றைய ஜெருசலேமினை பார்வையிட்டான், சாலமோன் ஆலயம் இடிந்து கிடந்தது, இதுதான் யூதரின் ஒரே ஆலயமோ என கேட்டுகொண்டான். அவனை பொறுத்தவரை கிரேக்க கடவுள்களே பிராதானம், கிரேக்க கலாச்சாரமே பெரிது. ஜெருசலேமை அவன் பெரிதாக கருதவில்லை என்பதில் ஆச்சரியமில்லை ஆனால் சாலமோன் எனும் ஞானி வாழ்ந்த இடம் என்பதை அவன் தெரிந்திருந்ததால் அம்மண்ணை வணங்கினான்.

அதனை தொடர்ந்து எகிப்து சென்றான். எகிப்தின் தொன்மையும் அவர்களின் தனிதன்மையும் அலெக்ஸாண்டருகக்கு தெரியும். எகிப்தினை அப்பொழுது பாரோக்கள் ஆண்டனர்.

பைபிள், குரானில் வரும் பாரோக்களின் தொடர்ச்சி அவர்கள். தேர்படை முதல் பல படைகள் வைத்திருந்தவர்கள்தான் ஆனால் அலெக்ஸாண்டர் முன் முடியவில்லை, பாரோக்களை வீழ்த்தி ஆட்சியினை கைபற்றினான் அலெக்ஸாண்டர்.

பலநூறுவருட பாரம்பரியம் கொண்ட, பைபிள் காலமெல்லாம் பெரும் பலத்தோடு இருந்த பாரோக்கள் அலெக்ஸாண்டர் காலத்தோடு சரி. அதன் பின் அவர்கள் எழும்பவில்லை அதனால் பிரமிடுகளும் இல்லை, எகிப்தின் தலையெழுத்தை திருத்தி எழுதினான் அலெக்ஸாண்டர்.

எகிப்திய மக்களுக்கு அரசனே கடவுள், அவ்வகையில் அலெக்ஸாண்டரும் கடவுள் ஆனான். கடவுள் அலெக்ஸாண்டர் வாழ்க எனும் கோஷம் எகிப்து எங்கும் ஒலித்தது.

எகிப்தியர்கள் தங்கம் சேர்ப்பதில் வெறியர்கள். அவர்கள் தேர் முதல் பிரமீடு வரை தங்கமும் வைரமும் குவிந்திருக்கும். அப்படி பல கொள்ளையர்கள் பிரமீடை தோண்டும்பொழுது அலெக்ஸாண்டர் விடுவானா? சில பிரமீடுகளை தோண்டிபார்த்தான், பல பொக்கிஷம் கிடைத்தது.

அவனுக்கு தங்கத்தில் எல்லாம் விருப்பம் இல்லாததால் அவற்றை கொண்டு தன் புகழ் அழியாமல் எகிப்தில் நீடித்திருக்க அங்கு ஒரு நகரை நிர்மாணம் செய்தான் அலெக்ஸாண்டர். கிரேக்க பாணியில் அமைத்து அதற்கு தன் பெயரினை இட்டான். இன்றுவரை அந்த அலெக்ஸாண்டிரியா நகரம் அவன் அடையாளத்தை தாங்கி எகிப்தில் நிற்கின்றது.

வந்தாயிற்று வென்றாயிற்று. எகிப்து கடவுளாகவும் ஆயிற்று ஆனால் கனவு என்ன? இந்தியாவினை காணவேண்டும் இந்தியாவினை வெல்லவேண்டும், ம்ம் கிளம்பலாம் என இந்தியா நோக்கி கிளம்பினான்

இதே எகிப்தில் பின்னாளில் கிரேக்க வம்சத்தில் ஒரு கிளியோபாட்ரா வருவாள் என்றும், தன் தந்தை ஒரு கிளியோபாட்ராவால் கொல்லபட்டது போல பின்னொரு மாவீரன் அந்த கிளியோபாட்ராவால் கொல்லபடுவான் என்றோ அலெக்ஸாண்டருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை

இந்தியா நோக்கி கிளம்பினான் அலெக்ஸாண்டர், ஆனால் போகும் முன் மாபெரும் பாபிலோனை கடந்தாக வேண்டும்.

அடிபட்ட டேரியஸ் அங்குதான் இருக்கின்றான், அவனை களத்தில் முடித்திருந்தால் இப்பொழுது சிக்கல் இல்லை. என்ன செய்ய? தப்பி ஓடிவிட்டான், ஆனால் என்ன சென்று அடித்தாக வேண்டும், இல்லாவிட்டால் இந்தியாவிற்கு எப்படி செல்ல?

அலெக்ஸாண்டர் எகிப்து கடவுளாகிவிட்டு பாபிலோன் நோக்கி வரும் செய்தி பரவியது. வழியில் இருந்த மன்னர்கள் எல்லாம் இம்சை அரசன் வடிவேலு போல வெள்ளைகொடியோடு நடனமாடி சரண்டர் ஆனார்கள்.

செய்தி டேரியசுக்கும் சென்றது

“என்னது சிங்கத்தை அதன் குகைக்கே வந்து சந்திப்பானா? அலெக்ஸாண்டார்?

வா.. வா மாபெரும் படையினை திரட்டி வைத்திருக்கின்றேன், உன்னை கொன்று அந்த தலையினை மாவீரன் நெபுகாத் நேச்சர் சிலை முன் குத்தி வைக்கின்றேன், உன் ரத்தம் பாக்தாத் மண்ணில் பாயவேண்டும் என விதி இருந்தால் யார் தடுக்க முடியும்?”

பெரும் வீரர்களும், கள வித்தகர்களும் ஆலோசனை வழங்க மொத்த பாபிலோனுமே அலெக்ஸாண்டரை விரட்ட பொங்கி எழுந்தது

அன்றைய உலகின் மிகபெரும் வல்லரசுடன், புதிதாக எழும்பிய 24 வயது அலெக்ஸாண்டர் மோத வந்துகொண்டிருந்தான்

தொடரும்…

 
 

வெல்ல பிறந்தவன் : 07

Image may contain: 2 people, outdoorஅன்றைய பாரசீகம் பல நாடுகளாக இருந்தது, இன்றைய துருக்கி உட்பட்ட நாடுகளை மாமன்னன் சைரஸ் என்பவரின் வாரிசாக‌ அச்செமின்ட்ட் என்பவர்கள் ஆண்டனர். சிரியா பக்கம் அசீரியர்கள், லெபனான் பக்கம் டயர், எகிப்தில் பாரோக்கள் என சிற்றரசுகளாய் ஆண்டனர்.

(சைரஸ் குறிப்பிடதக்க பாரசீக மன்னன், அவன் மேற்கு பாரசீகத்தில் பெரும் அரசை அமைத்திருந்தான், அவனின் வரலாறும் மிக பெரிது.)

இவர்கள் மேதிய பெர்சிய அரசனான டார்சியுஸ் என்பவருக்கு கட்டுபட்டவர்கள். டார்சியுஸ் பாபிலோனில் இருந்தான், இன்றைய பாக்தாத் அது

அன்றைய உலகில் பலமிக்க அரசன் அந்த டார்சியஸ்தான், அவனை எதிர்க்க யாருக்கும் துணிவும் பலமுமில்லை. இரும்பு மனிதனாக ஆண்டுகொண்டிருந்தான், அவனின் படைபலமும் அப்படி இருந்தது.

சீனா முதல் பல நாடுகளிலிருந்து அவனுக்கு வியாபாரம், வற்றாத டைக்கிரிஸ் நதியின் விளைச்சல் போதா குறைக்க்கு கப்பல் மூலம் வரும் வருமானம் என பெரும் செல்வத்தில் இருந்தான் டேரியஸ்

பாரசீகமும் பெருமையின் உச்சத்தில் இருந்தது. கலை வீரம் செல்வம் அறிவு நாகரீகம் கட்டகலை என எல்லாவற்றிலும் உச்சத்தில் இருந்தார்கள்

அந்த நெபுகாத் நேச்சர் எனும் பெரும் மன்னனின் பாக்தாத் அது, இந்த உலக அதிசயமான பாபிலோன் தொங்கும் தோட்டம், பளிங்கு அரண்மனை என அசத்திகொண்டு இருந்த அக்கால பாபிலோன்

அழகும் கலைமிகு கட்டடமும் கொட்டி கிடந்த பூமி. பெரும் பாதுகாப்பான கோட்டைகளுக்குள் அற்புத இலக்கியங்கள் எழுந்த காலம் அது

அக்காலம் பாரசீகத்தின் பொற்காலம், அன்று இஸ்லாம் கிறிஸ்தவம் என எதுவுமில்லை, ஷியா சன்னி தகறாறில்லை, ஐஎஸ் இயக்கமில்லை, குண்டுவெடிப்பில்லை, எண்ணெய் இருந்தது ஆனால் நிலத்தடியில் பத்திரமாக இருந்தது. அதனை வைத்து என்ன செய்ய என விட்டுவிட்டார்கள்.

No automatic alt text available.இந்த பாரசீக ஏரியாவிற்குள்தான் படையெடுத்து வருகின்றான் அலெக்ஸாண்டர், இன்றைய துருக்கிதான் ஆசியாவிற்கு ஐரோப்பாவிருந்து வரும் நுழைவாயில், அங்கேதான் அலெக்ஸாண்டரும் நுழைந்தான்

பாரசீக அரசாக இருந்த‌ அச்சமின்ட் சாம்ராஜ்யம் அவனை எதிர்பார்த்தே போருக்கு தயாராக இருந்தது, அக்காலத்தில் அரசின் பெரு நகரம், தலைநகரம் எல்லாம் ஆற்றின் கரையிலே அமைந்திருக்கும் என்பது உலக நியதி

இன்று பிகா நகரம் என அழைக்கபடும் அந்த நதியின் ஊர் அன்று கிரானிசஸ் ஆறு என அழைக்கபட்டது, நதியின் அக்கரையில் அச்சிமெண்ட்களும் இக்கரையில் அலெக்ஸாண்டரும் இருந்தனர்

நதியினை கடக்க உத்தரவிட்டான் அலெக்ஸாண்டர், ஆனால் கரையிரங்க முடியாத அளவிற்கு அந்த அச்சமின்ட் பாரசீகர்களின் தாக்குதல் இருந்தது, பின் வாங்கியது கிரேக்கபடை

அலெக்ஸாண்டரின் தனி திறமை பூகோளம். ஆறு மலைகளில் யுத்தம் செய்வது எப்படி என அவனுக்கு அரிஸ்டாட்டில் போதித்திருந்தார்.

திட்டமிட்டான் அலெக்ஸாண்டர், பகலில் ஆற்றை கடந்தால்தானே அடிப்பார்கள், இரவில் கடந்துவிட்டால் என்ன? முதலில் ஆறு வேகம் குறையும் இடம் எது? அதனை காண வேண்டும். வளைவுகளில் ஆற்றின் வேகம் குறைவு

ஒரு வளைவினை கண்டு இரவில் படைகளை கடக்க உத்தரவிட்டான், முதலில் கடந்தது காலாட்படை, அவர்களுக்கு பின் ஈட்டிபடை பின் குதிரைபடை

பொழுது விடியும் பொழுது ஆற்றை கடந்து நின்ற அலெக்ஸாண்டைரை திகிலாக பார்த்த பாரசீகர்கள் யுத்தம் தொடங்கினர்

கிரேக்க படைகளுக்கு அலெக்ஸாண்டரும், பார்மினியோவும் தளபதி. பாரசீக படைக்கு 11 தளபதிகள் இருந்தனர்

யுத்தம் தொடங்கியது, அலெக்ஸாண்டர் படையில் மொத்தமே 30 ஆயிரத்தையொட்டிய வீரர்கள் இருந்தார்கள், பாதிபடையினை அவன் மாசிடோனியாவில் நிறுத்திவிட்டு வந்திருந்தான், பாரசீக படையோ எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டு நின்றது

யுத்தம் மூண்டது, முதலில் பம்மியது கிரேக்கபடை அதன் அர்த்தம் எதிரியின் வியூகத்தை படிப்பது. அது தெரியாமல் பாரசீகர் சிக்க, திருப்பி அடித்தது அலெக்ஸாண்டர் படை

மற்ற அரசர்கள் எல்லாம் உத்தரவினை பிறப்பித்து கொண்டு யானை மீதோ, தேரிலோ இருப்பார்கள். ஆனால் அலெக்ஸாண்டர் அப்படி அல்ல களத்தில் இறங்கி வீரனோடு வீரனாக விளாசிகொண்டிருப்பான்

அதுவரை அலெக்ஸாண்டர் யாரென பாரசீகர்களுக்கு தெரியாது, எப்படி இருப்பான் என்றும் தெரியாது. இதில் கவசமும் மாட்டிவிட்டால் சுத்தமாக தெரியாது

ஆனால் கருப்பு குதிரையில் மிக துடிப்பாக உத்தரவுகளை பிறப்பித்த ஒரு வீரன் மீது பாரசீக வீரனுக்கு சந்தேகம் வலுத்தது, இவனாகத்தான் இருக்கவேண்டும் என கோடாரியினை வீசினான், அலெக்ஸாண்டரின் குதிரை துள்ள கோடாரி அலெக்ஸாண்டரின் மூக்கு முன் கடந்தது

பின் சுதாரித்த அலெக்ஸாண்டரின் வாள் அந்த பாரசீகனை கொன்றது, அதுதான் அலெக்ஸாண்டர் என அவன் அறிவிக்க வாய்ப்பின்றியே போனது

தளபதிகளை குறிவைத்து அடிப்பது அலெக்ஸாண்டர் ஸ்டைல், அப்படி தளபதிகள் வீழ வீழ யுத்தம் அலெக்ஸாண்டர் பக்கம் வந்தது

அலெக்ஸாண்டரின் சிறிய படை, ஆனால் துடிப்பான படை அந்த அச்சிமென்ட் பாரசீக படைகளை புரட்டி எடுத்து வெற்றிபெற்றது

200 ஆண்டு அளவில் பாரசீகத்தில் கிரேக்கர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி அது, துருக்கியினை தாண்டி அவன் நிச்சயம் பாபிலோன் அரசனிடம்தான் வரவேண்டும், அந்த டேரியசிடம்

ஆனால் அலெக்ஸாண்டர் செல்லவில்லை, காரணம் டாரியஸின் பலம் அதிகம், அதனால் ஆங்காங்கு இருக்கும் சிற்றரசுகளை காலி செய்துவிட்டு பாபிலோனை நொறுக்குவது அவன் திட்டம், டாரியஸ் சும்மா அல்ல நிச்சயம் அவன் சிங்கம், பெரும் வியூகமும் படையுமின்றி அவனை நெருங்கவே முடியாது

ஆசியா மைனரை கைபற்றிய பின் பல அனுகூலங்கள் அலெக்ஸாண்டருக்கு இருந்தன, குறிப்பாக ஐரோப்பிய வியாபாரம் அதன் வழியே நடந்தது, டோல்கேட் போட்டால் அள்ளிவிடலாம் அல்லவா? அதனைத்தான் செய்தான்

ஆனால் கப்பல் மூலம் சிரியா, எகிப்து நாடுகளுடன் அன்றே ஐரோப்பா தொடர்பு கொண்டிருந்தது. தமிழக கப்பல்கள் இப்பக்கமும், ஐரோப்பிய கப்பல்கள் அப்பக்கமுமாக இன்றைய எகிப்து, சிரியா, இஸ்ரேபிய, அரேபிய பகுதிகள் விளங்கின‌

இந்த இடத்தை குறிவைத்து படை நகர்த்தினான் அலெக்ஸாண்டர், இடையில் சில கோட்டைகளை பிடிக்க வேண்டி இருந்தது, அசால்ட்டாக பிடித்தான், ஆனால் களத்தில் இறங்கி போரிடுபவன் என்பதால் காயங்களுக்கும் அவன் இலக்காணான்

அவன் அழைத்து சென்ற மருத்துவபடை அவனுக்கு கைகொடுத்தது, அவனும் அரிஸ்டாட்டிலிடம் மருத்துவம் படித்ததும் பயன்பட்டது

போரில் அவன் காயத்தை குணமாக்கும் வரை அமைதிகாத்தான், பின் மறுபடியும் யுத்தத்திற்கு கிளம்பினான்.

செய்தி பேரரசரான டாரியசுக்கு சென்றது, அவனும் அலெக்ஸாண்டரின் நகர்வுகளை கவனித்துகொண்டே இருந்தான்

பாரசீக பேரரசு என்பது இந்தியா முதல் கிரேக்கம் வரை பரவியிருந்த பெரும் அரசு, பெரும் நிலபரப்பு அதனால் இம்மாதிரி எல்லை தகறாறுகள் அதிகம். கிரேக்கர்கள் வாலாட்டுவதும் இவர்கள் விரட்டுவதும் வழக்கம்

ஆனால் அலெக்ஸாண்டர் திரும்பி செல்லாமல் முன்னேறுகின்றானா? யோசித்தான் டேரியஸ்

விடமுடியாது, இது வளம் கொழிக்கும் வியாபார பகுதிகள் விட்டுவிட்டால் பாரசீக அரசின் பெரும் செல்வம் பெருகாது.

அன்று இன்றிருக்கும் எல்லைகள் இல்லை இன்றைய துருக்கியின் சில பகுதிகள் சிரியாவிற்குள்ளும் இருந்தது

இந்த பகுதிகள், அதாவது சிரிய துருக்கி பகுதிகள் அன்று அசீரியா என அழைக்கபட்டது, பைபிளில் கூட சான்றுகளை காணலாம்

இங்கு முக்கியமான நகரம் இசிஸ் என்பது இருந்தது, மலையும் கடலும் சார்ந்த பகுதி இன்று துருக்கி எல்லையில் உள்ள நகரம்

அங்கு தான் படையெடுத்தான் அலெக்ஸாண்டர், அசீரிய மன்னன் அலறினான், இவனை சமாளிக்க தன்னால் முடியாது என அறிந்து பேரரசரான டாரியஸிடம் செய்தி அனுப்பினான்

டாரியசுக்கும் மிகுந்த கோபம், என்ன இந்த கிரேக்கன்? 22 வயதில் இவ்வளவு ஆசையா? ஏதோ எல்லையில் வென்றுவிட்டால் மொத்த பாரசீகமுமே கிடைத்துவிடும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசையா?

ஒரு காட்டு காட்டினால்தான் அடங்குவான் என சொல்லிவிட்டு தானே படை நகர்த்தி வந்தான்.

அலெக்ஸாண்டர் இதனை எதிர்பார்க்கவில்லை, பாபிலோனில்தான் டேரியஸை எதிர்கொள்ளமுடியும் என எண்ணியிருந்தான், ஆனால் டேரியஸ் முந்திகொண்டான் என்ன செய்யலாம்?

முடிந்தளவு படை திரட்டினான், படையினை விட களத்தினை தேர்வு கவனமாக தேர்வு செய்தான், ஆம் ஒரு இடுக்கான பகுதி அது.

திறந்த பரந்தவெளி என்றால் டாரியசிடம் செல்லுபடியாகாது, காரணம் டாரியஸிடம் சிறந்த தேர்படை இருந்தது, அதில் ஹாயாக அமர்ந்துகொண்டு அம்பெரியலாம், வாழ் சுழற்றலாம், ஈட்டி எறியலாம் பல வசதிகள்

அப்படியான வாய்ப்பு டாரியசுக்கு வழங்கபட கூடாது, நமது ஈட்டிபடையும், வேகமான குதிரைபடையுமே நமக்கு பலம். அதற்கு களம் மகா முக்கியம்.

இதனை கணக்கிட்டுத்தான் ஒரு குறுகலான மலை சந்தில் மோத கணக்கிட்டான் அலெக்ஸாண்டர், தந்திரமகா அந்த இடுக்கின் அப்பக்கம் நின்றுகொண்டு சவால் விட்டான்

இந்த வியூகம் டேரியஸுக்கு புரியவில்லை, இன்னொன்று அதுவரை அவன் தோல்வி அறியாதவன், கிட்டதட்ட 1.5 லட்சம் சேனையாளர்களுடன் அவன் யுத்த களத்திற்கு வந்தான்

அதாவது அலெக்ஸாண்டரின் வியூகத்தில் அவனை அறியாமல் களத்திலே சிக்கிவிட்டான் டாரியஸ்.

அலெக்ஸாண்டரிடம் இருந்தது 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள்தான், டேரியஸின் படை அவனை விட மும்மடங்கு பெரிது

இரு பராக்கிரம சாலிகள், எதிர் எதிர் பக்கம் நின்றுகொண்டிருந்தனர், அலெக்ஸாண்டரா? டேரியஸா பார்த்துவிடலாம் என உறுமிகொண்டிருந்தார்கள்

டாஸ் யார் போட்டார்கள் என்பது வரலாற்றில் இல்லை, ஆனால் மிக உக்கிரமான மோதல் தொடங்க தயாராக நின்றார்கள்

டாரியஸ் கம்பீரமாக தன் தேரில் வீற்றிருந்தான், இப்பக்கம் அலெக்ஸாண்டர் தன் புக்கிலேஸில் அமர்ந்திருந்தான், அவன் அருகே பார்மினியோ நின்றான்

அலெக்ஸாண்டரின் கையசைப்பிற்காக களம் காத்திருந்தது.

தொடரும்…

 
 

வெல்ல பிறந்தவன் : 06


Image may contain: 1 personஅலெக்ஸாண்டரின் முதல் அடி சிர்மஸ் மன்னனுக்கு விழுந்தது, டான்யூப் நதிக்கரையில் நடந்த யுத்தம் அது. அதுவரை அப்படிபட்ட வினோத யுத்தத்தை கிரேக்கம் அறியவில்லை, மோதினான், கொஞ்சம் அடிவாங்கியது போல் நடித்தான், பின் ஒரேபாய்ச்சல் மொத்த எதிரி சேனையும் அடங்கியது

ராணுவம் என்பதற்கும், கும்பல் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான். போர் என்பதற்கும் வன்முறை என்பதற்குமுள்ள வித்தியாசமும் அதுதான்

யுத்தம் என்று வந்தால் வியூகம் முக்கியம், படைகளின் பலத்தினை விட வியூகம் மகா முக்கியம். எதிரியின் வியூகத்தை நொடிபொழுதில் அறிந்து, தங்கள் வியூகத்தில் இறங்கி, யுத்த போக்கினை பொறுத்து வியூகங்களை மாற்றும் ராணுவமே வெற்றிபெரும்

வியூகம் என்பது பெரிய விஷயமல்ல, எதிரியின் பலமறிந்து திட்டமிடுவது, திட்டமிட்டது போல போரிடுவது. ஆனால் கவனமாக செய்யவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் கழுத்திற்கு கத்தி

மிக எளிதாக அந்நாட்டை வென்றான் அலெக்ஸாண்டர், தோற்ற நாடு அவன் முன் கைகட்டி நின்றது, இனி அவர்கள் அவன் அடிமை.

எந்த மன்னரிடம் இல்லாத விஷேஷ குணம் அலெக்ஸாண்டரிடம் இருந்தது, தோற்ற நாட்டை அவன் அடிமை போல் நடத்துவதில்லை. தன்னை ஏற்றுகொண்டால் அவர்களை மாசிடோனியா மக்களை போலவே சுதந்திரமாக நடத்தினான், அந்த வீர்களை தன் படையிலே இணைத்தான், மொத்தமாக கொல்வதில் எல்லாம் அவனுக்கு விருப்பமில்லை

ஆனால் அடிபணிய மறுத்தால் அலெக்ஸாண்டரின் கோரமுகம் தெரியும்.

சிர்மஸ் மன்னனை அலெக்ஸாண்டர் அடித்த அடியினை கண்ட‌ பின்னாலும் , கிரேக்க வைக்கோ சத்தம் அடங்கவில்லை, “ஏ சிறுவனே, இது வீழா வீரம், மண்டியிடா மானம், கிரேக்கம் என்பது சிங்கத்தோடு மோதும் பூமி, சிறுவா உன்னிடமா அடிபணியும்” என ஏக முழக்கம்.

பாய்ந்து வந்தான் அலெக்ஸாண்டர், மிக மூர்க்கமான யுத்தம். அந்த நாடு அப்படி ஒரு அடியினை அலெக்ஸாண்டரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மொத்தமாக பிடித்தான் , மண்டியிட்ட நாடு அவன் முன் குனிந்து நின்றது

அதே பாணி கேள்வி, அடிபணிகின்றீர்களா இல்லையா? ஆனால் அது கிரேக்க வைகோ நாடல்லவா? இனிதான் இருக்கின்றது யுத்தம் என அந்த டெமஸ்தனிஸ் முழங்க, ஆம் என உரிமைகுரல் எழுப்பினார்கள்

கண்ணசைத்தான் அலெக்ஸாண்டர், நொடிபொழுதில் சரிந்தன தலைகள். மரண பயத்தில் விழித்துகொண்டிருந்தார் டெமஸ்தனிஸ்

இந்த நாடு சரிவராது, கலைஞர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்களை தவிர எல்லோரையும் அழித்துவிடுங்கள், என்ன இருந்தாலும் பெரியமனிதர் என்பதால் இந்த டெமஸ்தனிஸ் உயிரோடு இருக்கட்டும்

Image may contain: one or more peopleஅலெக்ஸாண்டர் என்பவன் யார் எனற செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள இவர் உயிரோடு இருக்கட்டும் என சொல்லிவிட்டு மாசிடோனியா கிளம்பிவிட்டான்

அதன் பின் கிரேக்க வை.கோ டெமஸ்தனிஸ் கீச்சுகுரல் கூட எழுப்பவில்லை, கேட்க மட்டும் செய்தார்

மொத்தமாக கிரேக்கத்தை அடக்கி ஒடுக்கி தனிபெரும் அரசனாக நிமிருந்து நின்றான் அலெக்ஸாண்டர். ஆனாலும் மற்ற கிரேக்க நாடுகளை அவன் நேசநாடாகத்தான் நடத்தினான்

20 வயது அலெக்ஸாண்டர் கிரேக்க மாமன்னாக அமர்ந்தபொழுதும் , அவன் சிந்தனை வேறுமாதியே இருந்தது. அரிஸ்டாட்டில் சொன்னதும், தந்தை சொன்னதும் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.

நாம் கிரேக்கர்கள், மிக உயர்ந்த வீரமும் தத்துவமும் அறிவும் பெருமையும் கொண்டவர்கள், இது இங்கே மட்டும் வாழகூடாது, உலகமே நம் கலாச்சாரபடி வாழவேண்டும், எல்லா இனமும் நாமே உயர்ந்தவர்கள் என கிரேக்கர்களை ஏற்றுகொள்ள வேண்டும்

என்ன செய்யலாம்? நமக்குள் சண்டையிட்டோம், இப்பொழுது வாள்முனையில் அடக்கி வைத்திருக்கின்றேன், நிச்சயம் இனி எவனும் வாலாட்டமாட்டான். ஆனால் சொல்லமுடியாது வந்தாலும் வரலாம்

கிரேக்கம் நிரந்தர அமைதியாக இருக்க, மகா ஒற்றுமையுடன் இருக்க என்ன வழி?

தமக்குள் அடித்துகொள்ளும் கிரேக்கர்கள், மொத்த கிரேக்கர்கள் மானபிரச்சினை என்றால் ஒன்றுபடுவார்கள், அதற்கு பிரச்சினை கிரேக்கத்திற்கு அப்பால் இருந்து வரவேண்டும்

(என்னதான் காங்கிரஸ், பிஜேபி, திமுக என நமக்குள் அடித்துகொண்டாலும் இந்தியா எனும் வரும்பொழுது கிரிக்கெட்டோ, எல்லை யுத்தமோ மொத்த இந்தியாவும் ஒன்றாக எழும்பும் அல்லவா? அப்படி

தங்களுக்குள் அடித்துகொண்டாலும் திமுக என்றவுடன் ஒன்றாகிவிடுகின்றார்கள் அல்லாவா அதிமுகவினர், அப்படி)

அந்த பாரசீகர்கள் பெரும் தொல்லை, 200 ஆண்டுகாலமாக அசைத்து பார்க்கமுடியாத வல்லரசு அவர்கள். பல அரசர்கள் உள்ள பாரசீகம் தான். சில சிற்றரசுகள் உட்பட அசைக்கமுடியாத பாபிலோன் மன்னர் டார்சியஸ் வரை பெரும் அசுரர்கள் வாழும் நாடு

எப்படி எல்லாம் தோற்றோம், ஒரு வெற்றியினை கொண்டாட ஒருவனை எப்படி எல்லாம் ஓடவிட்டு , அவனும் செத்து அவன் நினைவாக மாரத்தான் எல்லாம் ஓடுகின்றோம், அந்த ஓட்டபந்தயம் நடக்கும்பொழுதெல்லாம் , அந்த பாரசீகர்களிடம் நாம் பட்ட அடி நினைவுக்கு வந்து கொண்டே இருக்கின்றது.

இனி அதுதான் சரி, கிரேக்கத்தின் தலைசிறந்த நாடாக மாசிடோனியா ஆகிவிட்டது, இனி உலகின் மிக சிறந்த நாடாக கிரேக்கத்தை ஆக்கினால் என்ன?

திட்டம் ரெடி, ஆனால் மொத்த கிரேக்கமும் ஆதரிக்கவேண்டுமே, படை திரட்டவேண்டும் இன்னும் ஏராளமான வேலை இருக்கின்றது. மிரட்டி திரட்டலாம் அது நிச்சயம் ஒரு நாள் காலைவாரிவிடும் அப்படி நடந்தால் பாரசீகர் வாய்விட்டு சிரிப்பார்கள்

உடனே கிரேக்க சபையினை கூட்ட உத்தரவிட்டான், சிற்றரசரும், தத்துவ ஞானிகளும் வந்திருந்தார்கள், அங்கு தன் கோரிக்கையினை தந்திரமாக வைத்தான் அலெக்ஸாண்டர்.

“பெரியோர்களே, நான் இந்த உலகின் சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காகவோ, மாசிடோனியா பெரும் வல்லரசு ஆகவேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை தொடங்கபோவதில்லை

மிக உயர்ந்த நம் கலாச்சாரம் உலகெல்லாம் பரப்பபட வேண்டும், கிரேக்க புகழ் உலகெல்லாம் கொண்டாடபடவேண்டும், இந்த கிரேக்க பெருமைக்காகவே இந்த யுத்தத்தை தொடங்குகின்றேன்

என்னிடம் பலமான ராணுவம் உண்டு, ஆயினும் பாரசீகர்கள் அதாவது நம் 200 ஆண்டுகால எதிரிகள் பலமானவர்கள், அவர்களை வீழ்த்த உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்” என கோரி நின்றான்

இந்த அணுகுமுறை கிரேக்கர்களை யோசிக்க வைத்தது, நிச்சயமாக இவன் வீரன், இதுவரை வெற்றிதான் பெற்றிருக்கின்றான், அந்த பாரசீகர்களுடன் மோதும் தைரியம் கிரேக்கத்தில் இவனிடம்தான் இருக்கின்றது, சரி அப்பல்லோ மீது பாரத்தை போட்டு அனுப்பிவைப்போம்

அந்த சபைக்கு ஒரு ஞானி வரவில்லை, அவர் பெயர் டாய்க்னிஸ், அவரிடம் ஆலோசனை பெற நேரில் சென்றால் அலெக்ஸாண்டர்

காலை வெயிலில் ஒய்யாரமாக படுத்திருந்தார் டயாக்னிஸ், வந்து அவர்முன் நிழலாக நின்றான் அலெக்ஸாண்டர், அவர் ஏன் வரவில்லை என கேட்டான், தன் நோக்கத்தை எடுத்து சொன்னான்

அவர் அமைதியாக கேட்டார், நீதான் அலெக்ஸாண்டரா, ஒரு உதவி செய்? , என்ன என ஆவலாக கேட்ட அலெக்ஸாண்டரிடம் சொன்னார்

“நீ வெயிலை மறைக்கின்றாய், தள்ளிபோ”

சுற்றி நின்றவர்கள் வாளை உருவினார்கள், சிரித்துகொண்டே தடுத்தான் அலெக்ஸாண்டர், இம்மனிதர் எவ்வளவு பெரும் அறிவாளி தெரியுமா? , அறிவாளிகள் சாக கூடாது விட்டுவிடுங்கள்

இதுதான் அலெக்ஸாண்டர், மிக நிதானமானவன், தொலைக்க வேண்டியவரகளை தொலைத்தான், தொழவேண்டியவர்களை தொழுதான்.

சரி, அந்த டயாக்னிஸ் ஏன் அப்படி சொன்னார்? என்ன இருந்தாலும் ஞானி அல்லவா?, இது ஏன் வேண்டாத வேலை, கிரேக்க பெருமையினை வாள்முனையிலா பரப்புவது என யோசித்திருக்கலாம்

கொஞ்சமும் அசரவில்லை அலெக்ஸாண்டர், பெரிய அறிவாளியிடம் ஆலோசனை கேட்டோம், அவர் சொல்லவில்லை அதனால் என்ன நம் பலத்தோடு இறங்கலாம் என தீர்மானித்தான்

பெரும் படை திரட்டபட்டது, அலெக்ஸாண்டர் குதிரைபடையினை பலமாக வைத்திருந்தார். அந்த குதிரைகளுகு அனுபவமும், பலமும் அதிகம்

குதிரை என்பது கூட்டத்தை கண்டு மிரள கூடாது, ஓசைக்கு அஞ்ச கூடாது, தாண்ட சொல்லும் இடத்தை தாண்டவேண்டும், நிற்கவேண்டிய இடத்தில் நிற்கவேண்டும், ஓடவேண்டிய இடத்தில் ஓடவேண்டும், அந்த துல்லிய பயிற்ற்சி கொடுக்கபட்டது

அடுத்து ஈட்டிபடை , அதில் இருவகை இருந்தது எடை குறைவான அதிக தூரம் வீசகூடிய ஈட்டிகள், இன்னொன்று கையில் வைத்திருக்கும் ஈட்டி அதோடு ஒரு கோடாரியினை சேர்த்து வித்தியாசமான ஆயுதமாக்கினான்

இன்னும் மருத்துவபடை , உளவுபடை எல்லாம் தயாராயின. உளவுபடைக்கு மிக தந்திர பயிற்சிவழங்கபட்டது. உளவு தகவல்தான் பாதிவெற்றி

மிக நுட்பமான இன்னொரு காரியத்தை செய்தான், அதுவரை வீரர்கள் என்பவர்கள் அடிமைகள், அரசன் கொடுத்ததுதான் ஊதியம். அவர்கள் தமிழக காவல்துறை போல முணுமுணுத்துகொண்டிருந்தார்கள் பாவம் மாமூல் கூட வாங்கமுடியாத நிலை

அலெக்ஸாண்டர் சொன்னான், வீரர்களே, நாம் வெற்றிபெறும் நாட்டில் கிடைக்கும் பொருள் எல்லாம் உங்களுக்கே, அதற்கு முன் உங்கள் வீட்டிற்கு என்ன குறை என சொல்லுங்கள், இன்றே தீர்த்துவிடுகின்றேன்

வீரர்கள் அலெக்ஸாண்டர் பின்னால் அணிவகுத்துவரவும், உற்சாகமாக போரிடவும் இந்த தந்திரம்தாம் காரணாம். அதுவரை யாரும் செய்யா தந்திரம்

யுத்தம் என வந்துவிட்டால் தகவல் தொடர்பு மிக முக்கியம், அதற்கு கையில் காட்டும் சமிக்ஞை, குழாய் ஊதி செய்யபடும் சமிக்ஞை என பல விஷயம் அறிமுகபடுத்தபட்டது ( பாகுபலி படத்தில் இது அழகாக யுத்தத்தில் காட்டபடும், எல்லாம் அலெக்ஸாண்டர் கொடுத்தது)

எல்லாம் சரி, இனி பாரசீகததில் நுழையலாம், ஆசியா மைனரை தாண்டினால் பாரசீகம் (ஆசியா மைனர் என்பது இன்றைய துருக்கி), செல்லலாம் அதற்கு முன் தெய்வத்திடம் அனுமதி கேட்பது முக்கியம், கடவுளே பிராதானம்

டெல்பியும், அப்பல்லோவும் அவர்கள் பிராதன கடவுள், அந்த ஆலய சந்நிதியில் பூசாரிகளிடம் குறிகேட்டான் அலெக்ஸாண்டர்

அவர்கள் முணகினார்கள், மன்னா மாதம் சரியில்லை, இந்த மாதத்தில் நாட்டைவிட்டு வெளியே சென்ற யாரும் உயிரோடு கிரேக்கம் திரும்பமுடியாது, கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்

அலெக்ஸாண்டர் கேட்டான், இதுவரை யாரும் முயற்சித்திருக்கின்றார்களா?

இல்லை என பதில்சொன்னார்கள் பூசாரிகள்

ம்ம் இந்த மாதத்தில் செல்வதுதானே பிரச்சினை, சரி காலண்டரை மாற்றுங்கள், இந்த மாதத்தை முன்னால் போட்டு நல்ல மாதத்தை இம்மாததிற்கு மாற்றினால் சரிதானே , உங்களுக்கு மாதம்தானே பிரச்சினை?

மன்னன் பேச்சிற்கு மறுபேச்சு ஏது, ஆனாலும் மூத்த பூசாரி மனதிற்குள் சொன்னார், அலெக்ஸாண்டரை கடைசியாக பார்ப்பது போல் இருக்கின்றது

(அது பலித்தது என்பது வேறு விஷயம்)

படை ரெடி, அதற்கான சப்ளைசெய்யும் ஆட்களும் ரெடி, மருத்துவகுழு ரெடி இனி கிளம்பவேண்டியதுதான், எங்கே பாரசீகம்?

அதற்கு முன் கிரேக்கத்தை கடைசியாக பார்த்து சொன்னான், அலெக்ஸாண்டர், ஏ கிரேக்கமே உன் புகழை உலகெல்லாம் பரவசெய்யும் பெரும் பணியினை செய்யபொகின்றேன், கிரேக்க கடவுள் எனக்கு துணையிருக்கட்டும்

அப்பொழுது அவனுக்கொரு நுட்பம் புலபட்டது, நாம் வெளியேறிவிட்ட பின் அந்த தைரியத்தில் யாராவது மாசிடோனியாவினை கைபற்றிவிட்டால்? ஆம், நம்பகமான ஒருவனை அமர்த்திவிட்டு செல்லலாம், ஆண்டிபேட்டர் மற்றும் பார்மீனியோதான் நம்பதகுந்தவர்கள்

ஆண்டிபேட்டர் இங்கிருக்கட்டும், பார்மீனிய்யோ என்னோடு வரட்டும்

புக்கிலேசில் அலெக்ஸாண்டர் செல்ல, கூடவே பிரியாமல் பார்மினியோவும் சென்றார், தந்தை பிலிப்பிடம் இருந்தவர் இப்பொழுது மகன் அலெக்ஸாண்டரிடமும் இருக்கின்றார்

சொல்லிவிட்டு தன் புக்கிலேசில் துள்ளி ஏறினான், அதுவும் உற்சாகமாக கிளம்பிது,

(பாகுபலி கட்டப்பா எனும் பார்த்திரத்தில் நீங்கள் எதனை கண்டீர்களோ தெரியாது, ஆனால் பார்மீனியோ எனும் அற்புத வீர விசுவாசியின் பாத்திரம் அது, அதுவேதான்.)

அலெக்ஸாண்டர் படை கிளப்பிய புழுதி மேகமாய் திரண்டிருந்தது, பாரசீகம் தன் நிம்மதியினை தொலைக்க தயாராகிகொண்டிருந்தது

தொடரும்…

 
 
%d bloggers like this: