வைகுண்டராஜன் அண்ணாச்சி

வைகுண்டராஜனின் வங்கி கணக்குகள் முடக்கபட்டது, 5ம் நாளாக சோதனை, சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய திட்டம் : செய்தி

முன்பு கலைஞர் வைகுண்டராஜனை தொட்டபொழுது சீறி எழுந்து “ஜெயா டிவியின் பங்குதாரர் என்பதற்காக வைகுண்டராஜன் பழிவாங்கபடுகின்றார்” என பகிரங்கமாக மிரட்டினார்

அதன் பின் அண்ணாச்சி அவர்போக்கில் வலம் வந்தார்

அண்ணாச்சி மேல் சிறு உறுமல் என்றாலும் அப்பொழுது சீறுவார்கள்

விஜயகாந்த் வைகுண்டராஜனை பற்றி முதன் முறையாக குற்றசாட்டு எழுப்பியபொழுது நாடர் சங்கமும், சீமானும் பொங்கியது சுனாமி வேகம்

அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு சென்றார்க? எந்த கடலடியில் பதுங்கினார்கள் என்பது தெரியவில்லை

அண்ணாச்சியால் 40 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன என கதறியவர்களையும் காணவில்லை

அண்ணாச்சி டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பதையும் தாண்டி விவகாரம் எங்கோ இடிக்கின்றது

இதற்கு பல கோணங்கள் உண்டு

முதலவாது, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கபட்ட நிலையில் இன்னும் சிலரை எடப்பாடி பக்கம் இருந்து உருவினால் முடிந்தது விஷயம்

அண்ணாச்சி ஏற்கனவே விஜயகாந்த் கட்சியில் இருந்த மைக்கேல் ராயப்பனை கத்திரிக்காய் மூட்டை போல தூக்கி சென்றவர் என்பதால், ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்து அண்ணாச்சியினை நெருக்கலாம்

இரண்டாவது ஸ்டெர்லைட் சம்பந்தமானது, அண்ணாச்சிக்கும் சில கெமிக்கல் ஆலைகளில் சம்பந்தம் உண்டு. தூத்துகுடியினை மாசாக்கியதில் ஸ்டெர்லைட்டுக்கு மட்டுமல்ல அண்ணாச்சி ஆலைக்கும் பங்கு உண்டு என்பதை வெளிகொண்டுவரும் விஷயம் நடக்கலாம்

மூன்றாவது உறுதிபடுத்தமுடியாதது ஆனால் வாய்பிருப்பது, அதாவது அண்ணாச்சி குடும்பத்திற்கு குளிர்பான கம்பெனி இருப்பதும் அதனால் பெப்சி கோக்குக்கு எதிராக சிலரை கிளப்பிவிடுவதும் முன் வந்த செய்திகள், தாமிரபரணியில் இருந்து பெப்சிக்கு நீர் கொடுக்க கூடாது என கிளம்பிய காலத்திலே அண்ணாச்சி பெயர் அடிபட்டது, ஆக பன்னாட்டு விஷயங்களும் இருக்கலாம்

நான்காம் விஷயம் என்னவென்றால் கடற்கரையில் சாகர் மாலா திட்டத்தை செயல்படுத்துகின்றது மத்திய அரசு, அண்ணாச்சியோ தனியார் துறைமுகம் ஒன்றை உருவாக்கும் கனவில் இருப்பதாக சொல்லபடுகின்றது

அண்ணாச்சி ஒத்துழைப்பின்றி கடற்கரை பகுதிகளில் மத்திய அரசு திட்டங்கள் சாத்தியமில்லை என்பதால் அவரை வழிக்கு கொண்டுவரும் விஷயங்களும் நடக்கலாம்

5ம் விஷயம் என சிலர் சொல்வது காமெடியானது ஆனால் அதையும் சொல்லிவிடலாம், இதை சிரிக்காமல் படிக்க வேண்டும் என்பதுதான் சவால்

அதாவது காமராஜர் காலத்தில் நாடாராலும், பின் திராவிட கட்சியில் முதலியார்களாலும் அதன் பின் அதிமுக காலங்களில் தேவர் சாதியாலும் ஆளபட்ட தமிழகம் இப்பொழுது கவுண்டர்களால் ஆளபடுகின்றதாம், நாடாரில் முக்கியமானவர்களை ஒழித்துகட்டும் திட்டம் நடக்கின்றதாம், அதன் முதல் குறிதான் அண்ணாச்சியாம்

இந்த 5ம் கோணத்தை கிளப்பிவிட்டது நாடார் சங்கம் அல்லது டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்பதால் தள்ளிவிடலாம்

அதுதவிர மேற்கண்ட 4 வகைகளில் ஒரு வகை நோக்கி தள்ளி செல்லபடுகின்றார் அண்ணாச்சி

(ஏம்பா வருமானவரிதுறை, இந்த கொடநாடு மாளிகைக்கெல்லாம் மணல் கொடுத்தாரே மணல் ஆறுமுகச்சாமி அவரை எப்போ விசாரிக்க போறேள்….)

[ October 29, 2018 ]

Image may contain: 1 person
============================================================================

அண்ணாச்சி சிக்கல்ல இருக்காரு, ஏதும் விசாரணையில நம்ம பேரு வந்துருமோ

வீடியோ ஏதும் வச்சிருந்தா என்ன பன்றது? அந்தம்மா வேற அமெரிக்கா போயிட்டு விஷயம் தெரிஞ்சா வரவே வராது

அண்ணாச்சி வாய்திறந்தா சிக்கினாலும் சிக்கிருவோமோ..

[ October 29, 2018 ]
Image may contain: 1 person, closeup and text
============================================================================

“அதாவது நீங்க யார் மேலயாவது புகார் கொடுத்தா போலிஸ் ஸ்டேஷன்ல எப்.ஐ.ஆர் போடுவாங்க, போலிஸ் விசாரிக்க கூப்பிட்டா நாம போகணும்

அப்படித்தான் இதுவும், நான் ஒரு வியாபாரி அவங்க ஏதோ விசாரிக்க வந்துருக்காங்க, விசாரிக்கட்டும். என்னால முடிஞ்ச எல்லா உதவியும் நான் அவங்களுக்கு செய்றேன், வேற ஒண்ணுமில்ல‌..”

வருமானவரி துறையின் விசாரணை பற்றி கேட்டதற்கு அண்ணாச்சி சொன்ன பதில் இது

அண்ணாச்சி சிங்கம்ல.. இதுக்கெல்லாம் அசரமாட்டார்ல என சொல்லி கொள்கின்றார்கள் திசையன்விளை பகுதியினர்

[ October 30, 2018 ]

============================================================================