ஈழ அழிவுக்கு காரணம் யார்

ஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள்
இதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார்
ஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் இருந்தது
கலைஞரின் ஆதரவில் உண்மையான அபிமானமும் நியாயமும், நேர்மையும் ஈழம் அமைந்துவிடாதா என்ற முயற்சியும் இருந்தது
ஈழமக்களுக்காக மொத்த இந்தியாவினையும் திரட்டியவர் கலைஞர், ஆனால் பிரபாகரனை கண்டிக்காமல் அவனின் சகோதர கொலைகளில் மவுனம் காத்து டெசோ தலைவர்களான வாஜ்பாய், அப்துல்லா எல்லோரும் புலி இருக்கும் வரை ஈழம் உருப்படாது, டெசோ இயங்காது என சொன்னபொழுது கலைஞரின் டெசோவினை முறியடித்ததாக மகிழ்ந்தார் ராமசந்திரன்
அமிர்தலிங்கம் முதல் பலரை புலிகள் கொன்றபொழுதும் ஈழவிடுதலைக்காக புலிகளை கலைஞர் ஆதரிக்கத்தான் செய்தார்
கலைஞர் பாஷையில் சொல்வதாக இருந்தால் அது கடி நாய் என்றாலும் காவல்நாய் என சொல்லலாம்
ஆனால் சிக்கல் எங்கு முளைத்தது என்றால் அமைதிபடை அனுப்பபடும்பொழுது முளைத்தது
புலிகளால் வடமாரட்சி வளைக்கபட்டு முதல் முள்ளிவாய்க்கால் நடக்க இருந்தபொழுது இந்தியா நேரடியாக தலையிட்டு அமைதிபடையினை அனுப்ப முயற்சித்தது
பெரும் அறிவாளியான கலைஞருக்கு தொடக்கத்திலே பொறிதட்டிற்று, இது ஒருகட்டத்தில் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான மோதலாகும், இந்திய ராணுவத்தை புலிகளால் வெல்லமுடியாமல் போகும்பொழுது நிலமை சிக்கலாகும் என்றெல்லாம் யோசித்து அமைதிபடையினை அனுப்ப வேண்டாம் என்றார்
நிச்சயம் அது ராஜதந்திரமான முடிவு, அமைதிபடை செல்லாமல் சிங்கள அரசை இந்தியா ஆட்டிவைக்கும் முடிவு
அப்பக்கம் ராமசந்திரன் அற்புதமாக ஆடினார், இங்கே புலிகளிடம் இந்தியாவிற்கு அடங்காதே என்பார், அப்பக்கம் ராஜிவிடம் ஆட்சி எல்லாம் கலைக்க வேண்டாம், புலிகள் என்பேச்சை மீற மாட்டார்கள் என்பார்
இப்படியாக இருபக்கமும் அரசியல் செய்தவருக்கு உட்கட்சியில் புது சிக்கல் முளைத்தது, அதன் பெயர் ஜெயலலிதா
ஜெயலலிதாவினை ராஜிவ் வளர்த்துவிட முயன்றார், அவரை துணை முதலமைச்சர் ஆக்கு என சொல்லும் அளவு ராஜிவின் ஜெயா பாசம் இருந்தது
ராமசந்திரன் என்ன இருந்தாலும் கலைஞரிடம் அரசியல் பயின்றவர் அல்லவா? அவரும் அட்டகாசமாக ஆடினார்
அதாவது ஜெயாவினை நீர் தூண்டிவிட்டால் நான் தமிழகத்தில் புலி ஆதரவினை கையில் எடுப்பேன், கலவரம் நடக்கும் என புன்னகைத்தார்
இதில் கொஞ்சமும் ஈழநலமோ, ஈழமக்கள் நலமோ, போராளிகள் சாவோ ராமசந்திரனுக்கு கவலையே இல்லை
தன் ஆட்சி நிலைக்க வேண்டும், ஜெயா வளரகூடாது என்பதற்காக ஈழநலனை பலிகொடுத்து அமைதிபடையினை அனுப்ப சம்மதித்தார்,
ராஜிவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள் என பிரபாகரன் அழைத்தும் பண்ருட்டி ராமசந்திரனை விட்டுவிட்டு தப்பி வந்தவர் இந்த அதிமுக ராமசந்திரன்
கலைஞரோ அமைதிபடையினை அனுப்புவது ஈழ அழிவுக்கு சமம் என எதிர்க்க, ராமசந்திரனோ சத்தமே இல்லை காரணம் ஜெயாவிற்கான ஆதரவினை ராஜிவ் குறைத்தார்
அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது, திலீபன் மரணம், கொக்குவில்லில் இந்திய ராணுவம் தாக்க தொடங்கியபொழுது ராமசந்திரன் வாயே திறக்கவில்லை
அவரை யாரும் ராஜினாமா செய் என சொல்லவுமில்லை
அமைதிபடை புலிகள் மோத, ராமசந்திரன் ராஜிவோடு கைகோர்த்து நின்றார், ஜெயா ராஜிவ் அலுவலகத்தில் காவல் கிடந்தார். நடராஜன் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தார்
கலைஞரோ அமைதிபடையினை வாபாஸ் வாங்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போல பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார்
இந்நேரத்தில் ராமசந்திரன் மரணமடைய காட்சிகள் திரும்பின‌
அந்நேரத்திலும் கலைஞர் அமைதிபடையினை திரும்ப பெற சொல்லிகொண்டே இருந்தார், அப்பொழுது நடந்த தேர்தலில் கலைஞர் முதல்வரானார், சொந்த ராணுவத்தை புலிகள் கொல்ல புலிகளுக்கோ தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அளவு கலைஞரின் தேசதுரோகம் ஈழ ஆதரவும் இருந்தது
பத்மநாபா புலிகளுக்கு அஞ்சி சென்னை வந்தபொழுது பாதுகாப்பு கொடுக்க மறுத்தார் கலைஞர், தொட்டுவிடும் தூரத்தில் ஈழம் இருப்பதால் பத்மநாபாவினை வடக்கே போ என விரட்டிவிட்டார்
விபிசிங்குகு அழுத்தம் கொடுத்து அமைதிபடையினை மீட்டவர் கலைஞர், முதல்வராக இருந்தும் அதை வரவேற்க மாட்டேன் என சொல்லி அதிர்ச்சியினை ஏற்படுத்தினார்
புலிகளின் செயல்பாடு தமிழகத்தில் அதிகமானது,பத்மநாபா கொல்லபட்டார், புலிகளின் கடத்தல் , இன்னபிற விஷயங்கள் உச்சம்பெற்றன‌
ராமசந்திரனுக்கு பின் வலுவான தலைவராக வந்த ஜெயா இதனை சாடினார், புலிகள் ஆதவிரனை கலைஞர் செய்கின்றார், அவர் அரசு கலைக்கபட வேண்டும் என ராஜிவ் மூலம் நெருக்கினார்
ராஜிவ்வால் சந்திரசேகர் அரசு கவிழ கலைஞர் அரசு ஆளுநர் அறிக்கை இன்றியே கலைக்கபட்டது, ஜனநாயக படுகொலை என்பது அதுதான்
அதன்பின் ராஜிவ் ஜெயா கூட்டணி ஏற்பட்டது, இது அமைதிபடையினை அடுத்து அனுப்பும் கூட்டணி என புலிகளே அஞ்சினர்
இந்த நேரத்தில்தான் ராஜிவ் கொல்லபட்டார், ஜெயா முதல்வரானார்
ராஜிவ் கொலையில் திமுக முக்கிய பங்கு என்ற கோணம் எழும்பி அது தடை செய்யபடும் அளவு சென்று மீண்டது
மீண்டதிமுகவினை புலிகளுக்காக கட்சியினை உடைத்து அழித்தார் வைகோ, பின்பலம் புலிகள். அவர்களுக்கு கலைஞர் முக்கியமே அல்ல வைகோவே முக்கியம்
கடிநாயானாலும் காவல்நாய் என கலைஞர் அணைத்த புலிகள் வெறிநாயாய் மாறியதை உணர்ந்த கலைஞர் ஒதுங்க தொடங்கினார்
ஜெயாவோ பிரபாகரனை தூக்கில் இடவேண்டும் என சொல்லிகொண்டே இருந்தார்
கலைஞரோ ஜெயின் கமிஷன் தன் அறிக்கையில் திமுகவினை சிக்கவிட்டதால் அமைதி காத்தார்
இந்நேரத்தில் கலைஞரை புலிகள் தேடவே இல்லை, சுத்தமாக இல்லை
அப்படி ஒரு மனிதர் இருப்பதெல்லாம் அவர்களுக்கு படுகொலைகள் செய்யும் நேரத்தில் மறந்துவிடும், பின் அவர்கள் அடிபடும் பொழுது தேடுவார்கள்
அப்படி 2006ல் அடிபடும்பொழுது தேடினார்கள், 1991க்கு பின் 
புலிகளை வெறிநாய் வகையில் இந்தியா வைத்திருந்தபொழுது கலைஞரால் மீறமுடியவில்லை
ஏற்கனவே பலமுறை புலிகளால் ஏமாற்றபட்ட கலைஞரால் இம்முறை அவர்களை நம்ப முடியவில்லை, அவர் என்ன புலிகளின் கடந்த காலத்தை அறிந்த யாரும் அவர்களை நம்பவில்லை
ஈழப்போர் சர்வதேச விவகாரமாக கலைஞர் கையினை விட்டு எங்கோ சென்றது, அவர் ஆட்சியினை இழந்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை
இதனால் திட்டமிட்டு அவரை பழித்தனர், அவரோ கண்டுகொள்ளவில்லை, உண்ணாவிரதம் என கிளம்பி புலிகள் சரணடைய அவகாசம் கொடுக்கவும் அவர் தயங்கவில்லை
ஆனால் வைகோ உள்ளிட்ட புலிகளின் ஆலோசனையால் பிரபாகரன் தவறாக முடிவெடுத்து எல்லாம் அழிந்தது
ஈழசிக்கலை 1991க்கு முன் 1987க்கு முன் என பிரிக்க வேண்டும், 1991க்கு பின் அது அழிந்துவிட்ட ஒன்று
இதில் திமுக 1991க்கு பின்பே புலிகளை கைவிட்டது, அப்படியும் 2009 வரை ஈழமக்களின் அநியாய சாவினை தடுக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்தது
இதில் அதிமுக 1987க்கு முன்பே அதாவது ராஜிவின் கடைக்கண் பார்வைக்காக, அன்றே அதாவது புலிகள் அடாவடியில் ஈடுபடுவதற்கு முன்பே சுயநலத்தால் ஈழமக்களை பலிகொடுக்க துணிந்தது
எப்படி பார்த்தாலும் திமுக இருமுறை ஈழ விவகாரங்களுக்காக ஆட்சி இழந்திருக்கின்றது, அமைதிபடைக்கு எதிரான புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்து தேசதுரோகம் செய்தது
அமைதிபடையினை வரவேற்காமல் ஆட்சி போனாலும் கவலை இல்லை என துணிந்து நின்றார் கலைஞர்
ஆனால் அதிமுக பக்கம் என்ன?
ஜெயாவினை நீ தொடாதே, அமைதிபடையினை நான் தடுக்கமாட்டேன் , ஈழம் எப்படி ஆனால் எனக்கென்ன என்ற ராமசந்திரனின் மாபெரும் பாதகமும். ஈழமக்கள் எப்படியும் சாகட்டும் முடிந்தால் ராஜிவும் சாகட்டும் நான் ஆட்சிக்கு வருவது முக்கியம் என்றிருந்த ஜெயலலிதாவும் கலைஞரிடம் இவ்விஷயத்தில் பக்கம் வரவே முடியாது
இதில் பட்டிமன்றம் வைக்க எல்லாம் அவசியமில்லை, திமுக புலிகளுக்கும் ஈழமக்களுக்கும் உதவி பெற்ற கசப்பான அனுபவம் அதிகமென்றால், அதிமுக புலிகளுக்கும் ஈழத்திற்கும் செய்த துரோகம் ஏராளம்
இது வரலாறு முழுக்க கிடக்கின்றது, இது தெரியாதவனே திமுக ஈழவிரோதி என சொல்லிகொண்டே இருப்பான். அந்த மாதிரி நபர்கள் அவனுக்கே எதிரி

 

எக்கோவ், டாக்டருக்கு படிக்க அனுப்பினால் நீர் தெருவில் இறங்கி போராடவா செய்தீர்? இதெல்லாம் அடுக்குமா
ஈழபோராட்டத்தில் பாஜக பங்கு என்றால் வாஜ்பாய் கூட டெசோவில் இருந்தார் என்றால் தீர்ந்தது விஷயம்
இதற்காக இவ்வளவு பெரிய பொய் எதற்காக‌
Image may contain: 1 person, text and closeup
—————————————————————————————————————————————–

 

பேரறிவாளனின் வாழ்க்கையே வீணாகி விட்டது : அற்புதம்மாள்
ராஜிவ் உட்பட 17 பேர் வாழ்வே முடிந்தது, ஏராளமானோருக்கு படுகாயத்துடன் அங்கஹீனம் ஏற்பட்டது
அதெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத அற்புதம்மாளுக்கு தன் மகனின் வாழ்வு வீணானதுதான் கவலையாம், மகனாவது உயிரோடு இருகின்றான் என்ற எண்ணமில்லை
தன் மகன் யாரோடு பழகுகின்றான்? என்ன செய்கின்றான்? என்பது தாய்க்கு தெரியாதா?
அன்றே பேரரிவாளன் காதை திருகி, இந்த திராவிடம் பேசி திரியாதே, புலிகளோடு சேராதே என திருத்தி இருந்தால் இந்நிலை வந்திருக்குமா?
நாட்டுபற்று இல்லாத பொறுப்பற்ற பிள்ளையினை வளர்த்துவிட்ட குற்றவாளி அற்புதம்மாள், அவர் அழுகையில் பாசம் இருக்கலாமே தவிர உண்மை, நேர்மை என்பது துளியுமில்லை
—————————————————————————————————————————————–

இந்த பழனிச்சாமி கோஷ்டி

ஒரு மனிதன் தடுமாறலாம் ஆனால் இப்படி குப்புற விழகூடாது, டாஸ்மாக் நடத்தும் அரசுதான் ஆனால் இப்படி போதை போடாமலே உளற கூடாது

அப்படி என்ன உளறல்?

இலங்கையில் நடந்த இன அழிப்பினை திமுக எதிர்க்கவில்லையாம், அதை எதிர்த்து அதிமுக ஆர்பாட்டமாம்

அட பதர்களா? அது நடந்து 10 வருடம் ஆக போகின்றது, அவர்களே மறந்தாயிற்று, இவர்கள் இப்பொழுதுதான் விழித்திருக்கின்றார்கள்

சென்னையில் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தவர் ராமசந்திரன், கண்டித்தது கலைஞர்

ஈழசிக்கலில் அமைதிபடையினை அனுப்பாதே என்றவர் கலைஞர், அமைதிபடையினை அனுப்பிய ராஜிவோடு கைகோர்த்து நின்றவர் ராமசந்திரன், அமைதிபடை சென்றதுதான் முதல் சிக்கல்

ராஜிவ் கொலையில் அவருடன் அன்று கூட்டணியில் இருந்த ஜெயா ஏன் திருபெரும்புதூர் செல்லவில்லை என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு

எல்லாவற்றிற்கும் மேல் “2009ல் ஈழநெருக்கடிக்காக கலைஞர் மத்திய அரசுக்கான ஆதரவினை விலக்கினால் அதிமுக காங்கிரசை ஆதரிக்கும்” என வலிய சொன்னவர் ஜெயலலிதா
2009 முள்ளிவாய்க்கால் உச்சத்தில் இருக்கும்பொழுது கலைஞராவது உண்ணாவிரதமாவது இருந்தார், ஆனால் ஜெ என்ன செய்தார்?
“போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்” என அசால்ட்டாக சொல்லிசென்றார். அதுதான் அநியாயம்

பிரபாகரனை இந்திய ராணுவத்தை அனுப்பி பிடித்து வந்து தூக்கில் இடவேண்டும் என தீர்மானமிட்டவர் ஜெயலலிதா

ஆக இந்த பழனிச்சாமி கோஷ்டி ஈழவிவகாரத்திற்காக கண்டித்து போராடவேண்டும் என்றால் ஜெயா சமாதி முன் போராடட்டும், சட்டசபையில் உள்ள ஜெயாபடத்தினை செருப்பால் அடித்து கண்டனம் தெரிவிக்கட்டும்

அதனை செய்துவிட்டு இப்பக்கம் வரட்டும்

கோமாவில் இருந்த பழனிச்சாமி கோஷ்டி இனி படிபடியாக இந்திராவினை கொன்ற பியாந்த்சிங்கிற்கும், காந்தியினை கொன்ற கோட்சேவிற்கும் அவனை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்க்கும் எதிராக போராடும்

அப்படியே வெள்ளையனை எதிர்த்து சுதந்திரத்திற்காக‌ போராடும் காட்சிகளும் வரலாம்

(சரி 2011ல் இருந்து இன்றுவரை ஆளும் அதிமுக அதன் பின் ஈழமக்களுக்கோ இல்லை போர்குற்றத்திற்கோ என்ன செய்தது என் யாரும் கேட்டுவிட கூடாது

டெல்லியில் இருக்கு 37 ..கள் என்றாவது டெல்லியில் ஈழம்பற்றி பேசினார்களா எனவும் கேட்க கூடாது

அப்படியே செங்கோட்டையனும், ஏ.சி சன்முகமும் எதற்கு இலங்கை சென்றார்கள், சிங்கள அரசுடன் அவர்களுக்கு என்ன பல்லிளிப்பு எனவும் கேட்க கூடாது..)


 

மிஸ்டர் எடப்பாடி & கோ, உங்கள் தகவலுக்காக…
சொன்னது யாருமல்ல, உங்கள் தலைவி புரட்சி தலைவி அம்மாவே தான். கொஞ்சம் அறிவிருந்தால் இந்த போராட்டத்தை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கவும்
இதில் பின்வாங்கினால் உங்களுக்கு ஒன்றும் மானம் போய்விடாது, ஏனென்றால் இருந்தால் தானே அது போவதற்கு?
Image may contain: 1 person

மிஸ்டர் எடப்பாடி
மோடியே ராஜபக்சேயோடு டெல்லியில் கைகுலுக்கி ரொட்டி சாப்பிடும்பொழுது இந்த ஈழ‌ போராட்டம் என்ன ரகம்?
முடிந்தால் “ரத்தகறை படிந்த ராஜபக்சேயுடன் கை குலுக்கிய அராஜக மோடியே …” என சொல்லுங்கள் பார்க்கலாம்
அட உங்கள் அமைச்சர்களில் ஒருவரை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
முடியாதல்லவா? பின்னர் ஏன் இந்த மோசடி போராட்டம்
உலகிலே ஆளும்கட்சி எதிர்கட்சியினை கண்டித்து போராடும் அதிசயத்தை நீங்களே நிகழ்த்துகின்றீர்கள்

பங்கு, பெட்ரோல் விலை ஏறிகிட்டே போகுது, இதனால மத்திய அரசுக்கு நல்ல வருமானம்னு அருண்ஜெட்லி ஆபீஸ் பக்கம் பேசிக்கிறாங்க, நாமும் டாஸ்மாக் சரக்கின் விலையினை கூட்டினால் என்ன?

பங்கு, பெட்ரோல் விலை 100 வந்தாலும் திட்டுவானே தவிர ஒரு பயலும் பெட்ரோல் ஊற்றாமல் இருக்கமாட்டான், ஊற்றிவிட்டு அவன் போக்கில் போய்விடுவான்

ஆனால் டாஸ்மாக்கில கைவைத்தால் அவ்வளவுதான், தமிழகம் தாங்காது. குடிமக்கள் நம்மை சும்மா விடுவார்களா? அவர்களே டெல்லிக்கு நடைபயணம் செய்து நம்மை கவிழ்த்துவிடுவார்கள்

ஆமாம் பங்கு, அவனுகள மட்டும் பகைக்கவே கூடாது, வாங்க குடிமக்களை பார்த்து கும்பிட்டுக்குவோம்

Image may contain: 2 people, people smiling

ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல

பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை

“அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று

எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி இருந்து டெல்லிக்கு ராஜபக்சே வந்தால் கத்துவார்கள்

இப்பொழுது பழனிச்சாமி முதல்வராகவும், மோடி பிரதமராகவும் இருப்பதால் சத்தமே இல்லை

ராஜபக்சே சென்னை வந்து சாதாரணமாக டீ குடித்தாலும் இவர்கள் கண்டுகொள்ள போவதில்லை

இவர்கள் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மாநிலத்தில் திமுக ஆளவேண்டும் , மத்தியில் காங்கிரஸ் இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் ராஜபக்சே மெரீனா பக்கம் கிரிக்கெட் விளையாடினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்

Image may contain: 2 people, people smiling, people standing and beard
—————————————————————————————————————————————–

 

ஈழமக்கள் இந்த புலி இம்சைகளை சுத்தமாக மறந்து வாழ ஆரம்பித்தாயிற்று, அந்த கொடும் காலங்களை மறக்க நினைகின்றார்கள்

கம்போடியாவின் போல்பாட் போல புலிகள் கசந்த அனுபவத்தின் எச்சம் ஆகிவிட்டார்கள், அவர்களை நினைக்க யாரும் விரும்பவில்லை

அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வந்தாயிற்று, இலங்கை சென்ற ஓவியாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பே அதற்கு சான்று

கவனியுங்கள் அவ்வளவு பெரிய கூட்டம் ஓவியாவிற்கு கூடி இருக்கின்றது, தமிழர் கூட்டம்

ஒருவனாவது ராஜிவ் கொலையாளியான‌ முருகனை விடு, சாந்தனை விடு என கத்தினானா? இல்லை. அவர்கள் அந்த நினைப்பே இல்லாமல் இருக்கின்றார்கள்

சத்தம் உள்நாட்டில்தான் கேட்கின்றது

ஓவியாவிற்கே இப்படி என்றால் ரஜினி சென்றால் எப்படி இருக்கும்?

ஈழமக்கள் முழுக்க மகிழ்வாய் இருப்பதாக தோன்றும், இந்த சைமானிய திருமா திருமுருகன் கதை எல்லாம் கிழிந்துவிடும்

இதனால்தான் ரஜினி செல்வதை குறுக்கே விழுந்து தடுக்கின்றார்கள்

எமது அனுமானம் சரியென்றால் நிச்சயம் 2.0 படத்தினையொட்டி ரஜினி இலங்கை செல்லலாம், ராஜபக்சே போன்றோரின் வருகையும் இன்னபிறவும் அதற்கு கட்டியம் கூறுகின்றன‌

அன்று எவனாவது ரஜினி ஈழம் போக கூடாது என சொன்னால், அவனை பிடித்து முருகன், நளினி இடையே ஆயுள் கைதியாக வைத்துவிட வேண்டும்

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Image may contain: 1 person, glasses and close-upஇலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று

பன்மொழி ஆற்றல் முக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர்

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, “நாவலரே வருக..” என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர்

நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான்

இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்

அமிர்தலிங்கத்தி அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்

Image may contain: 1 person, standing1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா

அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது

ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார்

இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை

அது மகா உண்மையும் கூட‌

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர்

அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்

Image may contain: 2 people, people standingஅவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள்

போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள்

(ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்)

புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம்

தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.

இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல…”

துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌

ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர்?, விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை

அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்”

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி

இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்

“அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை” என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள்

அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள்

கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா?

புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான்

அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர்,

ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான்

கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை

எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்?, அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான்

அமிர்தலிங்கத்தை போலவே வரலாற்றில் நின்றுவிட்டான் அந்த நல்ல சிங்களன்

பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்.

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர்

புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம்

புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார்,

பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார்.

பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார்

எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள்

அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று

ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம்

இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும்

பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ்

அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம்

அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது

இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்

இன்று அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் பிறந்த நாள்

ஈழதமிழருக்காக உயிர் கொடுத்து ராஜிவினை எச்சரித்தவர் அவர்

நிச்சயம் தமிழகத்தில் ஈழபிரச்சினையினை கொண்டுவந்தவர் அவரே, அவர் மூலமே ராமசந்திரன் கலைஞர் எல்லாம் ஈழசிக்கலில் நுழைந்து, பின் இந்திய அரசு நுழைந்து பல முயற்சிகள் நடந்தது

எல்லாம் புலிகளின் விபரீத புத்தியால் நாசமானது

அவர் தமிழகத்தில் விதைத்த விதைதான் வளர்ந்தது, ஆனால் அவரை யார் கொன்றார்களோ அவர்களையே தீரர்கள், வீரர்கள் என சொல்லும் கூட்டம் இங்கு பின்னாளில் வந்தது

இதனை விட அறிவுகெட்டதனம் இருக்கவே முடியாது.

எது எப்படி ஆயினும் ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

வட இலங்கை தமிழர்கள் இலங்கை அமைச்சரிடம் மனு

இந்த வட இலங்கை தமிழர்கள் குறிப்பாக மீணவர்கள் இலங்கை அமைச்சரிடம் ஒரு மனுவினை கொடுத்திருக்கின்றார்கள்

என்ன மனு?

“இந்திய மீணவர்களான இந்திய தமிழ் மீணவர்கள் நம் பகுதியில் வந்து இன்னமும் மீன்பிடித்து எம் தொழிலை கெடுக்கின்றார்கள், இந்த படகை பிடித்து வைத்தல், சிறை வைத்தல் எல்லாம் போதாது , இன்னும் கடுமையாக நடவடிக்கை வேண்டும்..” என கடுமையான வார்த்தைகளை சொல்லி இருக்கின்றார்கள்

இலங்கை அமைச்சரான அந்த சிங்கள விஜயமுனி என்பவர் பொறுப்பான பதிலை சொல்லியிருக்கின்றார்

இந்தியா நமக்கு நிறைய உதவிகளை செய்கின்றது, துறைமுகங்களை எல்லாம் கட்டி தருகின்றது

ஏன்? உங்கள் இந்துமதமும் எங்கள் புனிதமான புத்தமதமும் அங்கிருந்துதான் இலங்கைக்கு வந்தது, அவர்களை எப்படி பகைக்க முடியும்?

கவனியுங்கள், இந்திய மீணவர்களை பிடித்து உதையுங்கள் என மனுகொடுக்க போனது தொப்புள் கொடி உறவுகள்

ஆனால் இந்தியா நட்புநாடு அவர்களை பகைக்கமாட்டோம் என சொல்பவன் சிங்களன்

புரிய முடிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகள்

Image may contain: house and outdoor

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகளில் முதல் பகுதி வீடுகள் நேற்று ஈழதமிழர்களுக்கு ஒப்படைக்கபட்டிருக்கின்றன‌

இதில் நமது பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கெடுத்திருக்கின்றார்

ஈழம் , தொப்புள் கொடி அது இது என கத்தும் கோஷ்டி, இங்கு பிரியாணி அண்டாவும் இசுஸ் காருமாக சுற்றும் கோஷ்டி, ஐரோப்பாவில் தமிழர் பெயரை சொல்லி கறக்கும் கோஷ்டி எல்லாம் ஏதாவது ஈழதமிழருக்கு செய்ததா?

இல்லை ஐரோப்பாவிலும் கனடாவிலும் நியூசிலாந்திலும் இருந்து கொண்டு “சேவ் டமில்” இந்தியா ஒழிக என கத்தும் கும்பல் அவர்களுக்கு ஏதாவது செய்ததா?

சுத்தமாக இல்லை

ஆனால் இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவில் அழிந்த வீடுகளை கட்டி கொடுத்து அம்மக்களை குடி அமர்த்துகின்றது

இந்த திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் அளித்தது காங்கிரஸ் அரசு, ப.சிதம்பரத்தின் பங்கு இதில் அதிகம்

நேற்றுமுதல் அந்த வீடுகள் ஒப்படைக்கபட தொடங்கியாயிற்று, இந்தியா ஈழதமிழருக்கு செய்யும் மிக பெரும் உதவி இது

இந்த ஈழ உணர்வாளர்களில் ஒருவராவது இதற்கு இந்திய அரசிற்கு நன்றி என சொன்னார்களா? ஒருவார்த்தை சொன்னார்களா என்றால் சொல்லமாட்டார்கள்

காரணம் ஈழவிவகாரங்களில் இந்திய அரசு எடுக்கும் எந்த நல்ல முயற்சிகளும் இவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும்

அங்கே அமைதி நிலவுவதையோ, அம்மக்கள் நிம்மதியாக இருப்பதோ இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது

அங்கே அவர்கள் செத்துகொண்டே இருக்கவேண்டும் அதை காட்டி இவர்கள் இங்கு கத்திகொண்டே இருக்கவேண்டும் என்பது இவர்களின் கேடு கெட்ட ஆசை

அவர்கள் அப்படித்தான், அவர்கள் கொடுமதியும் அப்படித்தான்

அழிக்க தெரிந்த, அழிவிற்கு மட்டும் துணைபோகும் கூட்ட்டம் அது, அவற்றிற்கு எதையும் உருவாக்க‌ தெரியாது.

முன்னதாக மலையக மக்களிடம் சென்ற, அவர்களை சந்தித்த இரண்டாம் மிகபெரும் தலைவனாக மோடி அறியபடுகின்றார், அவர்களுக்கு மருத்துவமனை கட்டிகொடுத்தது மோடியின் அரசு

மலையக மக்களை சந்தித்த முதல் உலக தலைவன் யாரென்றால் மாவீரன் சேகுவேரா

மோடியின் சேவை இன்னும் தொடரட்டும், அம்மக்களுக்கு நன்மைகள் பெருகட்டும், அமைதி நிலைக்கட்டும்

இந்திய அரசின் செயல்பாடுகளை நாம் வரவேற்கின்றோம், மோடி அரசு செய்திருக்கும் இந்த மாபெரும் நல்ல விஷயத்திற்காக மோடிக்கு இந்திய தமிழனாக நன்றி தெரிவிக்கின்றோம்.

(இந்த தும்பிகள் இன்னும் வாய்திறக்கவில்லை, “ஏ மானத்திற்கும் வீரத்திற்கும் பெயர் போன தமிழினமே, துரோகி இந்தியா கட்டிதந்த வீட்டில் நீ இருக்கலாமா?

உடனே வெளியேறு, நடுத்தெருவிற்கு வா. அந்த வீட்டில் இருக்காதே” என விரைவில் தும்பி கூட்டம் கத்தினாலும் கத்தும்”

அப்படி கத்தினால் ஈழத்திலிருந்து கள்ளதோணி வழியாகவாவது வந்து அவர்கள் தும்பிகளை பிளந்துவிடுவார்கள்)

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?

Image may contain: one or more people, crowd and outdoorஇலங்கை தமிழர்கள் பிரச்சினை என எடுத்துகொண்டால் ஈழதமிழர், மலையக தமிழர், இந்த தமிழ்பேசும் இஸ்லாமியர் என மூவரும் கலந்ததே வருவார்கள், தீர்வு இவர்களை உள்ளடக்கியே கொடுக்கபட வேண்டும்

ஆனால் புலிகள் ஈழதமிழருக்கு தனிஈழம் என்ற நிலைபாட்டில் இருந்தனரே தவிர மலையக தமிழர், தமிழ்பேசும் இஸ்லாமியர் எல்லாம் அவர்கள் கணக்கிலே வரவில்லை, ஏன் என்றால் ஈழபோராட்டம் ஈழதமிழனுக்கானது எனும் குறுகிய புத்தி அது

இந்தியா இவர்கள் கலந்த ஈழ‌ சிக்கலுக்கு முடிவினை கொடுக்க விரும்பியது, புலிகள் விரும்பவில்லை. முதல் சிக்கல் இங்குதான் தோன்றிற்று

ஒருவேளை ஈழம் கிடைத்தாலும் மலையக மக்களுக்கோ இல்லை தமிழ்பேசும் இஸ்லாமியருகோ புலிகள் ஆட்சியில் ஒரு பலனும் கிட்டி இருக்காது

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?

அவர்கள் மூர்ஸ் என அழைக்கபடும் இனம், தமிழ் பேசும் இஸ்லாமியர். தமிழ் பேசிவிட்டால் மட்டும் போதாது, இனம் என்பது வேறு வகை என்பது ஈழகொள்கை அல்லவா?

சிங்களருக்கு இவர்கள் ஆகாது, ஈழத்தவருக்கு அறவே ஆகாது. இலங்கையில் மலையக தமிழருக்கு அடுத்து மிக பரிதாபமனா இனம், ஆனால் உழைக்கும் கடுமையாக உழைக்கும்

கொஞ்சம் தமிழகத்து மார்வாடிகள் போல செழிப்பான இனம்.

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது இருந்த வெறுப்பினை போலவே, இம்மக்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு வந்தது, சிறுபான்மை சமூகம் வசதியாக வாழ பெரும்பான்மை சமூகம் எங்கும் ஒப்புகொள்வதே இல்லை

வெள்ளையர் காலத்திலே சிங்களர் அவர்களை கொல்வார்கள் , யாழ்பாணர் லண்டனில் சென்று இஸ்லாமியரை கொல்வது கொலை அல்ல என வாதிட்டு வெற்றியும் பெறுவார்கள், அந்த ஈழதமிழனை சிங்களர் தேர் ஏற்றி கொண்டாடுவார்கள்

Image may contain: one or more people, shoes and foodஅதன் பின் ஈழனும், சிங்களனும் அவர்களை போட்டு சாத்துவான்.

இப்படிபட்ட மூர்ஸ் இனம், யுத்தகாலத்திலும் கடும் பாடுபட்டது. வடக்கு கிழக்கினை இணைக்கும் இந்திய ஒப்பந்தத்தை புலிகள் எதிர்க்க பெரும் காரணமே அங்கு வாழும் இஸ்லாமியர்தான், இதுதான் முதல்படி.

புலிகள் அமைக்க நினைத்தது தூய்மையான ஈழம், சீமானின் தமிழ்தேசியம் போன்றது. இஸ்லாமிய பெருமக்களோ தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தவர்கள், வலுகட்டாயமான காலத்தில் புலிகளுக்கு வரியும் கட்டினார்கள்,புலிகளுக்கு போதாதல்லவா?

அது அமைதிபடை வெளியேறிய 1990ம் ஆண்டு காலங்கள், புலிகளின் ஏகபோகம் உச்சகாலங்கள்.

நமது பக்கத்தின் சுடலை ஆண்டவருக்கு குடும்பத்தில் ஒரு கடா வெட்டுவார்கள், அல்லது சுடலை விடமாட்டார். அப்படி ஈழத்தில் குடும்பத்தில் ஒருவரை பிரபாகரனுக்கு பலிகொடுக்க வேண்டும் கூடவே அள்ளியும் கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் சாமி விடமாட்டார்.

அப்படிபட்ட சாமிக்கு இஸ்லாமியர் கிள்ளிகொடுப்பது பிடிக்கவில்லை, துரோகிகள் என அறிவித்தார். துரோகிகளுக்கு புலிகளின் தண்டனை கொலை. அப்படி கிழக்கு மாகாணத்தில் புலிகளின் அட்டகாசம் தொடங்கியது

இஸ்லாமியர் கையில் ரூ.500 பணம் மட்டும் கொண்டு செல்லலாம் என அறிவித்தார்கள், நகைகளை வாகனங்களை தொட கூடாது, பலர் கிளம்பினர், கொஞ்சம் பேர் இருந்து பார்க்கலாம் என இருந்த இஸ்லாமியர் மீது பிரபா சாமி நெற்றிகண் திறந்தது, சுடலை வாள் வீசிற்று

இதே ஆகஸ்ட் 3

ஏறாவூரில் கொல்லபட்டதில் 10 வயதிற்குட்பட சிறுவர்கள் உண்டு,காத்தன்குடி பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இஸ்லாமியரை மசூதிக்குள் புகுந்து வெட்டினர், கிட்டதட்ட 90 இஸ்லாமியர் என புலிகளே சொன்னால் கணக்கு 500க்கு மேல் இருக்கலாம் என்பது ஒரு தியரி, இன்றுவரை தெரியாது

புனிதமான மசூதி அன்று ரத்தகாடாயிற்று, குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.

வரலாற்றில் ஐஎஸ் இயக்கத்திற்கு முன்னோடியாக அந்த காட்டுமிராண்டி தனத்தை நிகழ்த்தியது புலிகள்.

அம்மக்கள் காலம் காலமாய் வாழ்ந்த இடத்திலிருந்து அவர்களை விரட்ட புலிகளுக்கு என்ன உரிமை? யார் கொடுத்தது?

யார் காப்பாற்றுவார்? சிங்களம் வராது, இந்தியா வராது, யாரும் வரமாட்டார்கள், அது புலிகள் துரோகிகளுக்கு கொடுத்த தண்டனை,

ஆனால் முள்ளிவாய்க்கால் உலகமே செய்த இனபடுகொலை அப்படித்தான் நீங்கள் நம்பவேண்டும்.

ஒருவேளை இந்திய அமைதிபடை தொடர்ந்து இருந்திருந்தால் இந்த மாபெரும் அவலம், அநியாயம் நிச்ச்யம் தடுக்கபட்டிருக்கும், இதற்கெல்லாம் இந்தியபடை அனுமதிக்காது.

இதனை எல்லாம் மிக சாதரணமாக கடந்து சென்றன புலிகளின் பிரச்சார ஊடகங்கள், அப்பாவிகளும் நம்பின, ஆனால் சர்வதேசம் குறித்துகொண்டே இருந்தது,

இறுதி யுத்தத்தில் ஈரான் ஓடிவந்து சிங்களனுக்கு உதவ இதுவும் காரணம்.

அப்படி இஸ்லாமிய குடும்பங்களை எல்லாம் விரட்டிவிட்டுத்தான் ஏராளமான தங்கங்களை அபகரித்தார்கள், அவற்றில் ஆயுதம் வாங்கினார்கள், இன்றும் அவர்கள் புதைத்து வைத்த தங்கத்தை தேடித்தான் சிங்களன் அலைகின்றான், கொஞ்சம் மீட்கவும் பட்டது அதனை மறைத்த விஷயம்தான் பொன்சேகா, ராஜபக்சே சண்டையின் முதல்படி

சிங்களனும், புலிகளும் அந்த இஸ்லாமியருக்கு செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த இஸ்லாமியர் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிக கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி.

1983ல் கொழும்பில் தமிழரை சிங்களன் அடித்து கொன்றதற்கும், 1990ல் புலிகள் இஸ்லாமியரை கொன்று விரட்டி தமிழர் தூய்மை செய்ததற்கும் என்ன வித்தியாசம்?

சிங்களன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், இந்த புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் சுட்டுகொல்லபட்டனர், இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் படத்தினை பிடித்து போராட முடியும்?

அப்பொழுதும் இஸ்லாமிய மக்கள் இலங்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா? அனுபவமான வார்த்தைகள் அவை

பெரும் கொடுமை நடந்துவிட்டது, இதை எல்லாம் இறைவன் பார்த்துகொண்டிருக்கின்றான், அவன் கணக்கு தப்பாது, பாவிகள் அவனிடம் தப்பமுடியாது

நாங்களும் ஆயுதம் ஏந்தினால் சரி என சொல்கின்றார்கள், அப்படி நாங்கள் ஆசைபட்டால் நொடியில் எங்கள் காலடியில் நவீன ஆயுதங்கள் குவியும் எங்கிருந்தெல்லாமோ வரும்

ஆனால் அது பெரும் அழிவினை தரும், இந்த அழிவினை விட அது பெரும் அழிவினை கொடுக்கும் என்பதால் ஆயுதம் தொடாமல் நகர்கின்றோம்

எப்படிபட்ட வார்த்தைகள், உண்மையான இஸ்லாம் என்பது இதுதான்

இப்படியாக புலிகளின் கோரமுகம் பயங்கரமானது

சபாரத்தினத்தை கொல்ல வேண்டாம் என கலைஞர் கெஞ்சியும் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவனை கொன்றனர் புலிகள்

அமிர்தலிங்கத்து கொலை கலைஞரை அதிர வைத்தது, ராஜிவ் கொலையில் வெலவெலத்தது திமுக‌

அடுத்து இந்த அப்பாவி இஸ்லாமிய கொலைகளில் பிரபாகரன் இருக்கும் பக்கம் தலைவைத்து படுக்காமல் ஒதுங்கினார் கலைஞர்

ஆக சிங்களம் என இலங்கையிலும், ராஜிவ் கொலை என இந்தியாவுடனும், இஸ்லாமிய கொலை என உலகையும் பகைத்து முள்ளிவாய்க்கால் மக்களோடு அழிந்தனர் புலிகள்

ஆனால் பழிமட்டும் கலைஞர் கெடுத்தார், கலைஞர் துரோகி. பெரும் கொடுமை என்பது இதுதான்

ஆகஸ்ட் 3, புலிகளின் இஸ்லாமிய வெறுப்பினை கொடூரமாக உலகிற்கு சொன்ன நாள், ஹிட்லரின் இனவெறுப்பினை போல புலிகளின் இனவெறுப்பு உலகை மிரட்டிய நாள்

(இப்பொழுதும் வந்து பிரபாகரனை பற்றி உனக்கு தெரியாது, இஸ்லாமியர் எல்லோரும் துரோகிகள், இந்தியபடைக்கு தகவல் சொன்னவர்கள் அதனால்தான் அண்ணன் கொன்றார் என சொல்வார்கள் பாருங்கள், அங்கே தான் பெரும் வெறுப்பும் பரிதாபமும் வரும்)