அந்நிய முதலீடு ???

அமெரிக்க காக்னிசென்ட் நிறுவணம் சென்னையில் கட்டடம் கட்ட 26 கோடி லஞ்சம் கொடுத்தது அமெரிக்க கோர்ட்டில் நிரூபிக்கபட்டது : செய்தி

ஆக அந்நிய முதலீட்டுக்கு இந்த அரசு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றது, மாநாடுகளை எல்லாம் நடத்துகின்றது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

(உண்மையில் மிகபெரும் ஊழலாக வெடித்திருக்க வேண்டிய விஷயமிது

ஆனால் மிக சாதாரணமாக கொடநாடு கொலை போல அசால்ட்டாக கடந்து செல்கின்றது அரசு, யாரும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை

எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினாலும் ஒரு கட்டத்தை தாண்ட முடியவில்லை என்பதுதான் ஆச்சரியம்)

காக்னிசென்ட் – லஞ்சம்

காக்னிசென்ட் எனப்படும் அமெரிக்க நிறுவணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சென்னையில் கட்டபட்ட கட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்திருக்கின்றதாம்

விஷயம் அமெரிக்க நீதிமன்றத்தில் பற்றி எரிகின்றது, தமிழகத்தில் முறைகேடில் ஈடுபட்டது என அமெரிக்காவில் விவகாரம் விஸ்வரூபமாகின்றது

இதுதான் வாய்ப்பு விட கூடாது என திமுக வரிந்து கட்டுகின்றது, பெரும் ஆதாரங்களோடு களத்திற்கு வருகின்றார் ஸ்டாலின்

ஆனால் அதே விஷயம் இவர்கள் பக்கம் திரும்பும் என்பதை ஏனோ மறக்கின்றார்

ஆம் இந்த சர்ச்சை நடந்தது 2012 முதல் 2014ம் ஆண்டுகளில் என்கின்றது ஆவணங்கள்

அப்பொழுது இந்திய பிரதமர் யார்? மன்மோகன் சிங் அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி எது திமுக‌

இவ்விஷயம் உலக அரங்கில் அதிமுகவின் ஆட்சி என அறியபடவே இல்லை, அவர்களை பொறுத்தவரை அதிமுக என்பது மிக சிறிய மாநில கட்சி

இந்தியாவினை அப்பொழுது ஆண்டது மன்மோகன் சிங்கும் அவரின் திமுக கூட்டணியுமே

உலகம் அப்படித்தான் நோக்கும்

இன்று அதிமுக காக்னிசென்ட் ஊழல் என திமுக கொடிபிடிக்க, உலகமோ மன்மோகனின் ஆட்சி கால இந்தியாவில் கான்னிசென்ட் முறைகேடு செய்துள்ளது என்றுதான் சொல்லிகொண்டிருக்கின்றது

ஒரு மாபெரும் அமெரிக்க நிறுவணம் பாரத பிரதமருக்கு தெரியாமலா சென்னையில் லஞ்சம் கொடுத்தார்கள்? அது சாத்தியமா? என்றெல்லாம் எதிர்குரல்கள் வருகின்றன‌

மன்மோகன் ஆட்சியில் யார் கூட்டணி சாட்சாத் திமுக‌

காக்னிசென்ட் என்ற மிகபெரும் நிறுவணம் ஏன் மத்திய அரசின் உதவி பெறாமல் மாநில அரசுக்கு அள்ளி கொடுத்திருக்கின்றது

ஒருவேளை அவர்கள் அதிகம் கேட்டிருப்பார்களோ? அதை இனி அமெரிக்க கோர்ட்தான் நமக்கு சொல்லும்

முன்பெல்லாம் புயல், சுனாமி, பயங்கரவாத தகவல் என சொல்லிகொண்டிருந்த நாடு அமெரிக்கா, இப்பொழுது ஊழல் செய்திகளையும் சொல்ல தொடங்கியிருக்கின்றது, நல்ல முன்னேற்றம்