அய்யன் கோவில்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஒரு சுடலைமாடன் ஆலயம் உண்டு, அய்யன் கோவில் என அதற்கு பெயர்

ஆடிமாதம் அந்த கோவிலில் கொடை கொடுப்பார்கள், ஏராளமான ஆடுகள் பலியிடபடும்

சாமியாடி ரத்தம் குடிப்பது யாரென்றால் ஒரு பிராமண குடும்பம்.

சுடலை என்பவர் தென்பகுதி கேரளா தொடங்கி தாமிரபரணி வரை அரசாட்சி செய்யும் ஒரு தெய்வம். அதெல்லாம் அவரின் பேட்டை

அக்காலத்தில் வள்ளியூர் அக்ரஹார வீதி வீடு பிராமண குடும்பம் ஒன்றின் நடுவீட்டில் வந்து அமர்ந்தாராம் சுடலை, அவர்கள் “நாங்கல்லாம் சுத்த சைவம்,இங்கிருந்து போங்கோ?” என விரட்டியும் சுடலை அசையவில்லை

அவர்களும் பெரிய பெரிய தெய்வத்திடம் முறையிட்டிருக்கின்றார்கள், சுடலை அதன் போக்கில் நடுவீட்டிலே சம்மணம் போட்டு அமர்ந்து ” ஆடு கொண்டு வா..” என ஆர்டர் போட்டிருக்கின்றது

அந்த குடும்பத்துக்கு வேறு வழிதெரியாததால் ஒரு ஆலயம் அமைத்து கொடுத்துவிட்டார்கள்

அத்தோடு விட்டாரா சுடலை?

உன் குடும்பம்தான் ஆடவேண்டும் என உத்தரவும் போட்டுவிட்டார்

அதிலிருந்து அக்குடும்பமே வம்சம் வம்சமாக சாமியாடி வருகின்றது

பிராமணன் சுடலைமாடன் கோவிலுக்கு செல்லமாட்டான் என்பதெல்லாம் அபத்தம்

எனக்கு தெரிந்து இப்படி சில கோவில்களில் பூசாரியும் , சாமியாடியும் பிராமணரே

தெய்வங்களுக்குள் பேதமில்லை வழிபாட்டு முறையிலும் பேதமில்லை

அந்தந்த ஆலய விதிப்படி அவை அவை இயங்கிகொண்டிருக்கின்றன‌.

சிறு தெய்வங்கள் தங்களுக்கு யாரை பிடிக்க்குமோ அவர்களை சிக்கென பிடித்து அதுபோக்கில் அட்டகாசமாக வாழ்கின்றன‌

சும்மா இந்துத்வா.. பிராமணன்…. என எதற்கெடுத்தாலும் தும்முவது அரசியல் உள்நோக்கம் கொண்டதன்றி வேறல்ல..

பிராமணன் சிறிய ஆலயங்களுக்கு வரமாட்டான் என சொல்லி அரசியல் செய்வனை வெட்ட அரிவாளோடு அங்கு இருக்கின்றார் சுடலை

எவனும் பகுத்தறிவாளன், பிராமண எதிர்ப்பாளன் இருந்தால் அக்கோவில் கொடை அன்று சென்று பார்த்து வரவும்.

இப்படி பின்னாளில் பிரமணன் மேல் பழிவரும் என்றுதான் அன்றே ஒரு குடும்பத்தை அந்த சாமி இழுத்து வைத்துகொண்டதோ என்னமோ?

கொஞ்சம் விவரமான சாமியாக இருக்கும் போலிருக்கின்றது.

(அப்படில்லாம் இல்லண்ணே பிராமணன் சூது பிடிச்சவன், எல்லா கோவிலும் நமக்குத்தான், இந்த கோவிலும் நம்ம ஆதிக்கத்தில் வரணும்னு ரத்தம் கூட குடிக்க வாரான் பார்ப்பான்,

அவன‌ நம்பாதீங்க என எவனாவது பகுத்தறிவாளன் வரட்டும், அதன்பின் இருக்கின்றது)