சாம்பல் புதன்

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு

அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள்

மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு பைபிளில் இதெல்லாம் இல்லை என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்

சரி இதற்கு ஏன் சாம்பல் பூசி தொடங்கவேண்டும்?

அக்காலத்தில் ஒருவனுக்கு தன் பாவம் பற்றி நினைவுக்கு வந்து, அட நாமும் மண்ணாய், சாம்பலாய் அழிய போகின்றவர்கள் அல்லவா? பின் ஏன் இப்படி இருக்கவேண்டும்.

சாம்பலை பூசி நான் அழிய கூடியவன் என்பதனையும், என் பாவ வாழ்வு சாம்பலை போலாகிவிட்டது என்பதையும் உலகிற்கு சொல்வது ஆசிய சம்பிரதாயம்

ஆசியா முழுக்க இது பரவியிருந்தது, அதுவும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதிகம்

யூத மதம் இந்த வழக்கத்தை எடுத்துகொண்டது, அதில் பலர் சாம்பல் பூசி மனம் திரும்பியதை பார்க்கமுடியும். யூத நூல் என்றால் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு, அதில் ஏராள சம்பவம் உண்டு

பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள் உடல் முழுக்க சாம்பல் பூசி விரதமிருப்பது அக்கால யூத வழக்கம்

கிறிஸ்தவம் யூத தொடர்ச்சி என்பதால் கிறிஸ்து சொல்லாமலே அந்த சம்பிரதாயமும் இங்கு கலந்துவிட்டது, இயேசு மனம் திரும்புங்கள் என சொன்னாரே அன்றி, சாம்பல் பூசி விரதம் இருங்கள் என சொன்னதே இல்லை

பிற்காலத்தில் கிறிஸ்தவம் யூதரில் இருந்து உதித்த காரணத்தால் அதில் இந்த சாம்பல் பூசும் சம்பிரதாயம் இடம்பெற்றுவிட்டது

கத்தோலிக்க ஆலயங்களில் இன்று எல்லா கிறிஸ்தவர் நெற்றியிலும் “மண்ணால் உண்டாக்கபட்ட நீ மண்ணிற்கே திரும்புவாய்” என சொல்லி சாம்பல் பூசுவார்கள்

சிலருக்கு “மண்ணாய் போ” என திருவாக்கு அருளும் பாதிரியும் உண்டு.

மண்ணாய் போகும் உடலுக்கு நெற்றியில் மண் பூசினால் என்ன ஏன் சாம்பல் பூசவேண்டும் என ஒருபயலும் கேட்க மாட்டான் என்பது அவர்களின் கூடுதல் வசதி

நேற்று இரவே அக்கப்போரினை தொடங்கியாயிற்று, சாம்பலை பூசி கொண்டு அவர்கள் பாவங்களை நினைக்க தொடங்கிவிட்டார்களாம், மனம் திரும்பவேண்டுமாம், உலகம் சமீபத்தில் அழியுமாம் (2000 ஆண்டுகளாக அதனைத்தான் சொல்கின்றார்கள் என்பது வேறு விஷயம்) என ஏக அழிச்சாட்டியம்

வருடத்தில் ஒருமுறை நெற்றியில் சாம்பலை பூசிவிட்டு இவ்வளவு அட்டகாசம்

கிறிஸ்தவ போதிப்பின் படி உடல் மண்ணுக்கு போக கூடியது, அப்படி சொல்லிவிட்டு மண்ணுக்கு பதிலாய் சாம்பல் பூசுவது ஏன்?

தலை நிறைய மண்ணை அல்லவா கொட்டிவிட வேண்டும், சாம்பல் ஏன்?

இங்குதான் அந்நாளைய யூத மதத்திற்கும் இந்துக்களுக்கும் உள்ள தொடர்பினை நோக்க வேண்டும்

இந்துக்கள் உடலை எரித்தார்கள், இப்படி மிஞ்சுவதுதான் வாழ்வு என ஞானம் பெற்றார்கள். ஆதியில் இருந்த இந்து ஞானம் அது.

இந்த உடல் அழிய கூடியது, சாம்பலாய் போக கூடியது, இந்த நினைவு எக்காலமும் ஒரு மனிதனிடம் இருக்கவேண்டும் என்ற தத்துவத்திலே சாம்பல் பூசபடுகின்றது

அந்த தத்துவத்திலே இந்துக்கள் அனுதினமும் விபூதியினை நெற்றியில் பூசிகொள்கின்றார்கள்

எல்லா இந்து ஆலயங்களும் விபூதி கொடுக்கும் தத்துவமும் இதுவே, காலை எழுந்து குளித்து இந்துக்கள் நெற்றிநிறைய விபூதி பூசும் தத்துவமும் அதுவே

கங்கை கரையில் சாதுக்கள் கூட்டம் சாம்பல் மேனியாக அலையும் பெரும் தத்துவமும் இதுவே

“நீறு இல்லா நெற்றி பாழ்” என சொல்லியே வைத்திருக்கின்றார்கள்

அதுவும் மூன்று கோடுகளை இட்டு, படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலை செய்பவன் மூவொரு இறைவன் என தியானித்து அவர்கள்முன் மனிதன் வெறும் சாம்பல் எனும் இந்து தத்துவம் அவ்வளவு உயர்வானது

கிறிஸ்தவர்களுக்கோ ஒரு நாள் தான் அந்த தத்துவம் நினைவுக்கு வருகின்றது, அவர்களுக்கோ எந்நாளும் எந்நேரமும் நினைவில் இருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் இந்த விபூதி தத்துவத்தில் இந்துக்கள் உலகிற்கே வழிகாட்டியவர்கள், காட்டிகொண்டிருப்பவர்கள். ஆதி கால அந்த ஆசிய தத்துவத்தை இன்றுவரை கடைபிடித்து வரும் மதம் அது

அனுதினமும் சாம்பலை நெற்றியில் பூசி வாரத்தின் எல்லா நாட்களையும் அனுசரிக்கும் மதத்தவர்கள் அவர்கள்

ஆக கிறிஸ்தவம் மட்டும்தான் இதனை சொல்கிறது என ஒருவன் சொல்வானானால் அவனை பரிதாபமாகவே பார்க்கமுடியும்

உலகின் பெரும் மானிட தத்துவ குறியீட்டினை இந்துக்கள் அனுதினமும் அனுசரிக்க, ஒரு நாள் மட்டும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தினம் இன்று

இந்த விபூதி புதன் எவ்வளவு பெரும் விஷயம் தெரியுமா? என கடும் பிரார்த்தனை செய்து , நெற்றியில் சாம்பலை பூசும் கிறிஸ்தவர்களை நல்ல இந்துக்கள் அர்த்தமுள்ள புன்னகையுடன் கடந்து செல்வார்கள்

ஐரோப்பாவில் ஆப்ரிக்காவில் கிழக்காசியாவில் இந்த விபூதி புதனை அனுசரிப்பதில் அர்த்தம் உண்டு,

ஆன்மீக பூமியான இந்தியாவில் அதுவும் சுற்றிலும் எல்லோரும் விபூதியும் பட்டையுமாக அலையும் நாட்டில் வருடத்தில் ஒருநாள் சாம்பல் பூசிகொள்வதில் பெருமைபடவோ, அர்த்தபடவோ ஒன்றுமே இல்லை

இந்த விபூதி தத்துவத்தில் இந்து மதம் ஒரு படி அல்ல பல கிலோ மீட்டர் உயர‌ நிற்கின்றது.