நடந்த வரலாறு என்ன?

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம்

இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்?

நடந்த வரலாறு என்ன?

அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை

அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது

இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர்

பிரிவுகள் இருந்ததே தவிர மூல கொள்கையில் வழிபாட்டில் சிக்கலே இல்லை

அப்பக்கம் அதாவது சிந்து நதிக்கு அப்பக்கம் இருந்தவர்களுக்கு குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுக்கு இவர்களை எப்படி அழைப்பது என சிக்கல் வந்தது

சிந்துநதிக்கு அப்பக்கம் இருப்பது (இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சி என்பது அவர்களுக்கு ஹி என மாறும், அப்படித்தான் சிந்து இந்துநதி ஆனது, கிரேக்கர் அதை இன்டஸ் என்றே அழைத்தனர்

சில எழுத்துக்கள் அப்படி மாறும், ஜெருசலேம் இங்கு எருசலேம் ஆகும், யாழ்பாணம் ஜாப்னா ஆகும் , அப்படித்தான் சிந்து என்பது இந்து ஆனது, சிந்து மலை, சிவ மலை என்பதெலாம் இந்துகுஷ் மலை, இமயமலை என்றானது)

ஹிந்தஸ், இந்து , இந்தியா என்றானது இப்படித்தான்

அதாவது இந்து என்பது அந்நியர் சூட்டிய பெயர், அது நிலைத்துவிட்டது

உலகில் யார் தனக்கு சொந்த பெயர் சூட்டினார்கள்? எல்லா பெயர்களும் இன்னொருவரால் சூட்டபடுபவையே

சொந்தமாக பெயர் சூட்டுவதும், தனக்குதானே பட்டமளிப்பதும் திராவிட கட்சிகளின் கலாச்சாரம்

இங்கிருக்கும் நிலபரப்பும் அதில் வாழ்ந்த கலாச்சாரமும் இந்து எனும் பெயர் அன்னியனாலே அழைக்கபட்டது

இங்கு அது சைவம் வைணவம் என பல பிரிவுகளாக இருந்ததது, அந்நியர் மொத்தமாக இந்து என்றார்கள்

அதற்காக இந்து என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இல்லை அப்படி ஒரு மதமே இல்லை என்றால் எப்படி?

இதற்கெல்லாம் நன்றாக கேள்வி கேட்பவர்களின் காதை பிடித்து திருகி நாமும் கேட்டிருகின்றோம்

இந்த திராவிடம் என்பது எங்கே உண்டு? எந்த பண்டை இலக்கியங்களில் உண்டு

அட தமிழ்நாடு என்பதே எங்கே உண்டு? தமிழ் கூறும் நல்லுலகம் என சொன்னதே அன்றி தனி தமிழ்நாடு என எந்த இலக்கியம் சொல்லிற்று?

இங்கே சேர சோழ பாண்டி மன்னன், கடையேழு வள்ளல் நாடு என ஏகபட்ட நாடுகள் இருந்திருக்கின்றன‌

என்று இது திராவிட நாடு? தனிதமிழ் நாடு என இருந்தது?

இதை எல்லாம் கேட்டால் பதில் வராது, வரவே வராது

இந்து எனும் வார்த்தை அந்நியனால் இங்கிருக்கும் மதத்திற்கு சூட்டபட்டது, பல பிரிவுகளை கொண்ட மதம் ஒரே வார்த்தையில் அறிய அப்படி அழைக்கபட்டது

ஆனால் திராவிடம் என பெயர் சூட்டியவன் யார்? அதன் நோக்கம் என்ன? அப்பெயரால் இங்கு செய்யபடும் அரசியலுக்கு யார் மூலம் என்பதெல்லாம் சொல்லவே மாட்டார்கள்

அது முழுக்க தெரிந்தாலும் தெரியாதவர் போல் இருப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

தொன்மை வாய்ந்த இந்துக்களுக்கு பல அடையாளம் உண்டு, தொன்மை வாய்ந்த திராவிட அடையாளம் என ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம்