விபூதி தத்துவம்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன்

அதாவது திருநீறு எப்பொழுது நெற்றியில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் தர்மம்.

அது இந்து கலாச்சாரமாகவும் இருந்தது, தமிழனும் இந்து என்பதால் அது அவனுக்கும் முக்கியமாய் இருந்தது

அது உண்மையில் சொல்வதென்ன?

மனித வாழ்வு சாம்பலாக முடிய கூடியது, இறுதியில் சாம்பலாக கூடிய உடல் இது. இதில் துளியும் ஆணவமோ அகங்காரமோ தலை தூக்க கூடாது என்பது

விபூதி தத்துவம் இதுதான்

இதனால்தான் அதை நெற்றியில் எப்பொழுதும் வைக்க சொன்னது இந்துமதம், அதை நினைவிலே நிறுத்து பாவம் செய்யமாட்டாய் என போதித்தது இந்துமதம்

இந்து ஆலயங்களில் அது பூசபடுவதின் அர்த்தமும் இதுவே

ஞானமான தத்துவம் அது

இன்னும் ஒருபடி மேலே போய் சுடுகாட்டில் சிவன் சாம்பல் பூசி ஆடுவதாகவும் அது சொன்னது, அதாவது மனிதனின் கடைசி புகலிடம் சாம்பல், அது சிவனின் காலடியில் சங்கமமாகும் என அறுதியிட்டு சொன்னது

இதனால் இந்தியாவில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் விபூதி அடையாளம் ஆனது, சிவநேச அடியார்களுக்கு இன்னும் கூடுதலாக அது அமைந்தது

உலகில் சில மதங்களில் அச்சாயல் உண்டு

குறிப்பாக யூதமதத்தில் இருந்திருக்கின்றது, பாவம் செய்தவர்கள் மன்னிப்பிற்காக சாம்பல் பூசி தவமிருப்பார்களாம், அதாவது “நான் தூசு என உணர்ந்துவிட்டேன் இறைவா என்னை மன்னித்துகொள்”

இதிலிருந்து வந்ததே கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்.

ஆக சாம்பல் எனும் நீறு பூசுதல் இந்து மதத்திலும் இன்னும் சில மதங்களிலும் காணபடும் சம்பிரதாயம்

அதற்குள் அது தமிழர் மரபு, தமிழனுக்கு மதமே இல்லை , தமிழரின் திரு நீறுக்கும் விபூதிக்கும் சம்பந்தமில்லை

தமிழன் சும்மா விபூதி பூசி அழகுபார்த்தான் என்பதெல்லாம் திராவிட புரட்டுக்கள்