ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி – தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி – தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது

நாட்டில முக்கால்வாசி தொழிலதிபர்கள் வங்கி கடனிலில்தான் வாழ்ந்திருக்கின்றார்கள் , ஒரு பயலும் சரி இல்லை.

தாரளமயமாக்கபட்டபின் வங்கிகளுக்கு வெளிநாட்டு நிதிகள் பாய்ந்திருக்கின்றன என்பதும், முறையாக தொழில் செய்யாமல் இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர் என்பதும் புரிகின்றது

இன்னும் ஏராளமான வங்கி மோசடிகள் வரும் போலிருக்கின்றது

இவ்வளவு வங்கிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்? பல்லாயிரம் கோடிகள் சாதரணமாய் புழங்கும் மர்மம் என்ன?

முன்பு இப்படித்தான் பாலஸ்தீனத்தில் நிலவங்கி என்று ஒன்று உதயமானது, கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்தார்கள், பின் கட்டமுடியாதவரிடமிருந்து நிலம் வாங்கினார்கள், கட்டியவர்களிடம் அந்த பணத்தை கொண்டும் அவர்களிடமே வாங்கினார்கள்

முதலில் உல்லாசமாக செலவழித்தாலும் பின் அரேபியர்கள் சுதாரிக்குமுன் நிலங்களில் பெரும்பரப்பு வங்கிக்கு சென்றது

வங்கிக்கு பின்னால் இருந்தவர்கள் யார்? யூதர்கள்

பாலஸ்தீனின் பெரும் நிலபரப்பை இப்படி வாங்கிவிட்டபின்புதான் யூதர்கள் மிக உரிமையாக பாலஸ்தீனில் குவிந்தார்கள், அதன் பின் அவர்களுக்கு நாடு கிடைத்தது எளிதானது

இந்திய வங்கிக்கு பின்னால் எந்த சக்தி இருக்குமோ தெரியவில்லை, ஆனால் பின்னாளில் நிச்சயம் தெரியவரும்

ஒருவேளை கனடா அதிபர் உதவியுடன் தமிழர்கள் இந்தியாவினை வங்கி மூலம் விலைக்கு வாங்கிகொண்டிருப்பார்களோ?

 
 
Advertisements

எந்நாளும் ஒரே கலைஞர்தான் போதுமா?

Image may contain: 6 people, people sitting

இந்த பேப்பரில் வந்த மூன்றாம் கலைஞர் விளம்பரம் எல்லாம் உண்மை இல்லை என்றால் நம்பினீர்களா?

இதுக்காக வீட்டிலிருந்து வந்து அறிவாலயத்தில் நுழைந்து பார்த்தால்தான் நம்புவேன் என்பதா? மூன்றாம் கலைஞர் இங்கெல்லாம் வரமாட்டார், நம்புங்கள்.

பாருங்கள் இதெல்லாம் அல்லக்கைகள் சும்மா போட்ட விளம்பரம், நீங்கள் எந்நாளும் ஒரே கலைஞர்தான் போதுமா?

 

ரஷ்யாவின் நிரந்தர அதிபர் இனி புட்டீன்

Image may contain: 1 person, sunglasses and close-up

சீனாவின் நிரந்தர அதிபராக ஜின்பெங் அமர்ந்தாயிற்று இனி அவர் காலம் முழுக்க அவர்தான் சீனாவினை ஆள்வார்

இது சீனாவின் அண்டை நாடான வடகொரியாவிலும் உண்டு, அந்த வெள்ளை பூசனிதான் வடகொரியாவின் ஒரே தலைவர்

சீனாவின் அருகே இருக்கும் ரஷ்யா மட்டும் இந்த சென்டிமென்டினை விடுமா என்ன? ஆனால் அங்கு தேர்தல் உண்டு

புட்டீன் அட்டகாசமாக வென்று 4ம் முறை அதிபராகின்றார். ரஷ்ய சட்டபடி ஒருவர் இருமுறைதான் அதிபராக இருக்க முடியும்

புட்டீனோ இது மக்கள் தீர்ப்பு என சொல்லிவிட்டு அவர்போக்கில் இருக்க்கின்றார். சட்டத்தை மாற்றி நிரந்தர அதிபராக நீடிப்பீர்களா? என கேட்டால் “நான் சட்டத்தை எல்லாம் மாற்றமாட்டேன் மக்கள் விரும்பும் வரை பதவியில் இருப்பேன்” என சொல்கின்றார்

ஆக ரஷ்யாவின் நிரந்தர அதிபர் இனி புட்டீன்

சோவியத் காலத்திற்கு பின் ரஷ்யா உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவது, எண்ணெய் வியாபாரத்தை சீராக்கி ரஷ்ய பொருளாதாரத்தை காத்து நிற்பது என பல விஷயங்களால் மக்களும் அவரை ஆதரிக்கின்றனர்

லண்டனில் நடக்கும் உளவாளிகள் படுகொலையால் எதிகட்சிகளும் மகா அமைதி

வடகொரிய, சீன அதிபர்களை தொடர்ந்து ரஷ்யாவின் நிரந்தர அதிபர் இனி புட்டீன், தேர்தல் எல்லாம் திமுக உட்கட்சி தேர்தல் போல இனி சம்பிரதாயம்

உலகில் இது இன்று பிரதான செய்தி ஆகிவிட்டதல்லவா? இனி மோடி இந்தியாவின் நிரந்தர பிரதமர் ஆவார் என தமிழிசை கோஷ்டி சிரிக்காமல் சொல்லும்

நாமும் சிரிக்காமல் கேட்டுகொள்ள வேண்டும்

இது இனி திமுக உட்கட்சி தேர்தலிலும் எதிரொலிக்கலாம்

“பாருங்கள், உலகெல்லாம் மாபெரும் நாட்டு தலைவர்கள் நிரந்தரமாக இருக்கின்றார்கள், கேவலம் இந்த மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தலா? உலகம் நம்மை பார்த்து சிரிக்காதா? நாங்களே இருந்துவிட்டு போகின்றோமே” என்ற குரல் கேட்கலம்

 

பிராமணாளை எதிர்த்ததெல்லாம் எங்க மாமனார் காலத்தோட போயிடுத்து

Image may contain: 3 people, people smiling, people standing

“பிராமணாளை எதிர்த்ததெல்லாம் எங்க மாமனார் காலத்தோட போயிடுத்து

எங்க ஆத்துக்காரர விடுங்கோ, என் பையன் உதயநிதி இருக்கானோ இல்லியோ, இப்ப கூட 3ம் கலைஞர்னு சொல்றாளே, அவன் அப்படி ஒரு சமத்து

அவன் காலத்திலே பிராமணாள் எல்லாம் நன்னா ஷேமமா வாழலாம் , கவலைபடாம இருங்கோ”

 

நாஞ்சில் சம்பத் இப்பொழுது திமுகவிற்கே தேவை

Image may contain: 1 person, smiling

அரசியலில் நண்பரும் பகைவரும் நிரந்தமாக இருந்ததே இல்லை

இப்பொழுது திமுகவிற்கு தேவை சவுண்ட் பார்ட்டியே தவிர மனுஷ்யபுத்திரன் போல எரிச்சல்கள் அல்ல‌

நாஞ்சில் சம்பத் மேல் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் இறுதிவரை அவர் திராவிட குரலே பேசிகொண்டிருந்தார் என்பதனை மறுக்க்க முடியாது

அவரின் உலகளாவிய அறிவும், இலக்கியம் , சொல்லாற்றலும் சாதாரணம் அல்ல. அவர் மீது சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் பல திறமைகள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது

இலக்கியம் முதல் அரசியல்வரை அவர் எல்லா திசையிலும் விரித்த சிறகுகள் மிக பெரியவை.

வைகோவுடன் சென்ற எல் கணேசன் முதல் கண்ணப்பன் சபாபதி மோகன் என எல்லோரையும் ஏற்றவர்கள், வைகோவினையே ஏற்றவர்கள் நாஞ்சில் சம்பத்தை ஏன் விட்டுவைக்க வேண்டும்?

அழைத்து அருகில் வைத்து ஆர்.கே நகரில் தினகரன் வென்ற கதையினை நாஞ்சில் சம்பத் விளக்குவார் என திமுக மேலிடம் சொன்னால் எப்படி இருக்கும்?

கலைஞர் நலமாக‌ இருந்திருந்தால் “இம்மரத்து பறவை ஒன்று திசைமாறி பிரிந்து சென்று பொல்லோர் நடுவே அமர்ந்தது

வல்லூறு கூட்டத்தில் நல்லோர் அமர முடியுமா?, முள்மரத்திலே அது சுகம் காணல் நடக்குமா?

ரத்தம் சிந்த, கிழிந்த சிறகோடு வந்திருக்கும் இக்கூட்டு பறவையினை அதன் காயத்தை துடைத்து, புண்ணுக்கு மருந்திட்டு கழகம் அணைத்துகொண்டது” என அரவணைத்திருப்பார்

நாஞ்சில் சம்பத் இப்பொழுது திமுகவிற்கே தேவை, அவரை அழைத்து அணைத்துகொள்ளலாம் ஒன்றும் சிக்கல் இல்லை.

மிக சிறந்த பேச்சாளர், அரசியல் அனுபவமும் பல களங்களும் கண்ட ஒருவர் ஆதரவன்றி நிற்கும்பொழுது பிடித்து அருகே வைத்துகொள்வதே திமுகவிற்கு நல்லது.

 

இதிலென்ன ஆச்சரியம்? இது அதிசயமல்ல மாறாக தைரியம்

No automatic alt text available.

இதிலென்ன ஆச்சரியம்? இது அதிசயமல்ல மாறாக தைரியம்

ராமசந்திரன் ஜாணகியினை அழைத்துவந்தபொழுது இப்படி அழைப்பு அடிக்க தைரியம் இருந்ததா?

ஜெயலலிதாவோடு நேபாளத்தில் திருமணம், கண் காணா கோவிலில் ராமசந்திரனுக்கு திருமணம் என்றபொழுது இப்படி அழைப்பு அடித்தார்களா?

சோபன் பாபு ஜெயலலிதா சர்ச்சையில் இப்படி அழைப்பு அடிக்கபட்டதா?

நிச்சயம் இல்லை

அவ்வகையில் அக்கட்சியில் ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் இல்லா தைரியம் சசிகலா புஷ்பாவிற்கு வந்திருகின்றது

அந்த தைரியத்திற்கு வாழ்த்த வேண்டமா?

புஷ்பா ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள்.

சும்மாவே இந்த அம்மணி எனக்கு பாதுகாப்பில்லை என பல இடங்களில் அழுதது, எனவே ரஜ்யசபா சபாநாயகர் இந்த ஜோடிகளின் தேனிலவு முதல் பல பவுர்ணமி, அம்மாவாசைகளுக்கு எல்லாம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

 

ரகுவரன் நினைவு நாள் அஞ்சலிகள்

Image may contain: 1 person, close-up

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர்

முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம்

அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் நடிகரன்

குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் நின்றார்

ஆர்ப்பாட்டமில்லா ஆனால் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தினார், மிக மிக வித்தியாசமான ஸ்டைலும் வில்லதனமும் அவரிடம் இருந்தது.

எல்லா தரப்பு மக்களும் அவரை கொண்டாடினர்

300 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் நடிப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் போதை பழக்கம் அவர் உயிரை பறித்தது என்கின்றார்கள்

1980க்கு பின் முத்திரை பதித்த நடிகர்கள் குறைவு. கமலஹாசன் என்ற ஒற்றை நடிகரே ஸ்டார் வரிசையில் நடிகன் எனும் வகையறாவிற்குள் வருவார், ரஜினி எல்லாம் அவ்வகை அல்ல‌

நாசர், பிரகாஷ்ராஜ் , ஜனகராஜ், சத்யராஜ், ரகுவரன் போன்ற மிக சில நடிகர்களே நடிப்பு எனும் வகையில் வருவார்கள்

ரகுவரன் அதில் பின்னி எடுத்தார், பூவிழி வாசலிலே குழந்தையினை கொல்லதேடும் வில்லனாக வந்த அவரே அஞ்சலியில் மகளை காக்க போராடும் தந்தையாக பின்னி எடுத்தார்

ஒரு நடிகனின் வெற்றி அவன் நடித்த படத்தை இன்னொருவன் நடிக்க முடியாது என்பதில் இருக்கின்றது

ஆம் ரகுவரனின் படங்களை ரீமேக் செய்வதாக வைத்தாலும் அவரின் இடத்தை இன்னொரு நடிகன் நிரப்ப முடியுமா?

பாஷா படத்தை ரீமேக் செய்தால் ரஜினியின் இடத்தை பாபி சிம்ஹா கூட நிரப்பலாம், ஆனால் ரகுவரன் இடத்தை யார் நிரப்புவார்?

கலைஞனாய் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழ் சினிமா அபிமானிகளிடம் அவரைபற்றி கேட்டால் நிச்சயம் ஒரு புன்னகையும் அவர் மிக விரைவில் இறந்துவிட்ட அந்த பரிதாபமும் தோன்றும்

இதனை விட ஒரு கலைஞனுக்கு என்ன வேண்டும்?

அவர் இசைபிரியராகவும் இருந்திருக்கின்றார் , சமீபத்தில் அவர் மனைவி ரோகினியும் ரகுவரன் மகனும் அவர் இசை அமைத்த பாடல்களை ஆல்பமாக வெளியிட்டனர்

அவரின் இன்னொரு முகம் அப்பொழுதுதான் தெரிந்தது, அவரின் மகனையும் அப்பொழுதுதான் பார்க்க முடிந்தது

பாஷா போன்ற வில்லன் ரோல்களை விடுங்கள், ரகுவரனின் நடிப்பு அவர் தந்தை வேடத்தில் நடித்தபொழுது ஜொலித்தது

அது அஞ்சலியாக இருக்கட்டும்,லவ் டுடேவாக இருக்கட்டும், யாரடி நீ மோகினியில் வந்த அந்த தந்தை வேடமாக இருக்கட்டும்

மனிதர் அப்படியே தந்தை பாசத்தை கண்முன் நிறுத்தினார்.

அவரின் கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் மகன் உழைப்பில் வாழ விரும்பா தந்தையாக அவர் சீறிய நடிப்பு ஒருகாலமும் அகலாது

உன் சம்பாத்தியத்தில சாப்புட்ற காலம் வருதுண்ணு வச்சிக்கோயேன், செத்திருவேன் என அவர் சொன்ன அந்த காட்சி தேவர் மகனில் சிவாஜி கமல் சட்டையினை இழுக்கும் காட்சிக்கு சற்றும் குறைந்ததல்ல‌

ஆனால் கமலும் சிவாஜியும் ஸ்டார் நடிகர்கள், ரகுவரன் அப்படி அல்ல என்பதால் பெரும் அபிமானம் பெறவில்லை , பெரும் விருதுகளும் பெறவில்லை

திரை அந்தஸ்து யாருக்கு வேண்டும்? விருதுகளில் என்ன உண்டு?

இன்றும் மக்களின் மனதில் ரகுவரன் நிலைத்து நிற்கின்றார், அதுதான் வெற்றி

ரகுவரன் மகனை பார்த்தபொழுது அந்த பாசமிகு தந்தை காட்சி மனதில் வந்து போனது

நடிப்பிலே தந்தை வேடத்தில் பின்னி எடுத்த ரகுவரன் மகன் மீது எப்படி எல்லாம் பாசத்தை பொழிந்திருப்பார்? அதை நினைக்கையிலே மனம் வெம்பத்தான் செய்தது

இன்று அந்த மாபெரும் நடிகனுக்கு நினைவுநாள்

எம்.ஆர் ராதா, பாலையா வரிசையில் மிக சிறந்த நடிகனாக அமர்ந்திருக்கும் அந்த ரகுவரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்