நாயன்மார்கள் 02 : அப்பூதி நாயனார்

“ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்..” :‍ சுந்தரமூர்த்தி நாயனார்

சோழநாட்டில் திருவையாறு பக்கம் இருக்கின்றது அந்த திங்களூர். அது அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. சந்திரனுக்கான ஆலயம் அமைந்த‌ பிரதான தலம் அது. இதனால் திங்களூர் என்றாயிற்று.

அன்று அந்த ஊரில் மதிப்பும், மரியாதையும், பக்தியுமாக, குற்றம் குறை சொல்லமுடியாத‌ சிவனடியாராக வாழ்ந்து கொண்டிருந்தார் அந்த அப்பூதி அடிகள். சிவத்தொண்டும் சிவனடியாருக்கான தொண்டுமே தன் சுவாசமாக கருதி , அதுவே தன் பிறப்பின் கடமையாக கருதி பழுதற செய்து கொண்டிருந்தவர்.

அந்த குடும்பமே சிவபக்தியின் உச்சத்தில் இருந்தது, அவரின் மனைவியும் கணவனுக்கேற்ற மகராசி. கணவன் ஏற்றுக்கொண்ட சிவதொண்டுக்கு முழு உதவியாய் இருந்து வந்தார், கணவனை போலவே முழு சிவபக்தை.

இவர்களுக்கு இரு மகன்கள், எல்லா வகையிலும் ஆசீர்வாதமான வாழ்வு அவர்களுக்கு இருந்தது.

அப்பூதி அடிகள் சிவத்தொண்டர் . ஆனால் ஒரு மிக சிறந்த சிவனடியாரை தன் குருவாக கொண்டிருந்தார், அவரிலே சிவனை கண்டார், அவரே நடமாடும் சிவன் என்றும் அவரே தன் உயிருக்கு உயிரான குரு எனவும் மனதில் கொண்டு நாளெல்லாம் அவர் நினைவில் திருப்பணிகள் செய்தார்.

ஆம், அந்த குரு திருநாவுக்கரசர். இவரின் சமகாலத்தவர்.

ஏகலைவன் துரோணரை நினைத்தே உயர்ந்தது போல திருநாவுக்கரசை நினைத்தே சிவத்தொண்டில் இருந்தவர். அனுதினமும் அவர் புகழை பாடுவார், அவரைப் பற்றிய விஷயங்களை ஆவலாய் கேட்பார். காரணம் சைவத்தை வளர்க்க பல அற்புதங்களை செய்து சமணரை திருநாவுக்கரசர் வென்று கொண்டிருந்த காலங்கள் அவை.

இவ்வளவுக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை.

திருநாவுக்கரசர் எனும் தன் குரு பெயரை எங்கெல்லாம் நிறுத்தமுடியுமோ அங்கு நிறுத்தினார், அவர் வீடு திருநாவுக்கரசு மாளிகை, அவரின் இரு மகன்கள் பெயர் திருநாவுக்கரசர், அவர் கட்டி வைத்த சத்திரங்களும், வெட்டி வைத்த குளங்களும், வழிப்போக்கருக்கு அமைத்த தண்ணீர் பந்தலும் திருநாவுக்கரசர் பெயரையே தாங்கி நின்றன.

எங்கோ பிறக்கும் நதி எங்கோ பாய்வது போல, மலைமேல் பிறக்கும் தென்றல் வழிநடந்து செல்லுதல் போல, எங்கோ நடமாடிய திருநாவுக்கரசரின் புகழ் இந்த அப்பூதி அடிகளை அப்படி கொண்டாட வைத்திருந்தது.

மணமிக்க சாம்பிராணி தெருவெல்லாம் மணம் பரப்புவது போல அப்பூதியாரின் புகழ் சோழநாடெங்கும் பரவி மெல்ல திருநாவுக்கரசரையும் அடைந்தது. அந்த குருவிடம் அவரின் கண் காணா சீடனின் புகழ் சென்று அடைந்தது

அவன் பெயரில் அல்லாது தன் பெயரில் அவன் செய்யும் நலப்பணிகளை கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் உருகினார். ஒப்பற்ற சிவனடியார் எனும் ஒரே காரணத்துக்காக அப்பூதி அடிகள் தன் பெயரை கொண்டாடுவதை அவர் உள்மனம் உணர்ந்தது.

ஒரு மனிதன் தான் செய்யும் செயலில் எல்லாம் அவனை மறந்து, அவன் பெயரை மறைத்து சிவனடியாரான தன்னை முன்னிறுத்துகின்றான் என்றால் தன்மேலான அன்பும், அதற்கு மேல் சிவன் மேலான பக்தியும் அவரை மனதால் உருக செய்தன.

அப்படி ஒரு சிவத்தொண்டனா? அவனைப் பார்க்க வேண்டுமே என திங்களூருக்கு நடந்தார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசருக்கு சிவனைத் தவிர எவரையும் தெரியாது. அப்பூதி அடிகளுக்கு திருநாவுக்கரசரைத் தவிர எவரையும் தெரியாது.

இருவருக்கும் இருக்கும் ஒரே இணைப்பு சிவன், இரு சிவனடியாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கப் போவதை உணர்ந்த சிவன் ஒரு விளையாட்டு ஆட விரும்பினார்.

திங்களூரை அடைந்தார் திருநாவுக்கரசர். எங்கும் அவர் பெயரில் அன்னசத்திரம் , மண்டபம் , குளம், நீர்ப்பந்தல் எல்லாம் அமைந்திருந்தன. நீர்ப்பந்தல் கூட கீற்று வேயப்பட்டக் குடிலில் மணலை குளிராக்கி அதில் புதைக்கப்பட்ட பானைகளில் குளிர்ந்த நீர் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது, கடும்வெயிலில் வருவோர் தாகசாந்தி செய்யும் பொழுது திருநாவுக்கரசை நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

அந்த ஊரில் திரும்பும் இடமெல்லாம் தன் பெயர் இருப்பதையும், தன்மேல் அப்பூதி அடிகளுக்கு இருக்கும் அன்பையும் உணர்ந்து மெல்ல அவர் வீட்டுக்கு சென்றார் திருநாவுக்கரசர். முன்பின் பார்த்ததில்லை என்பதால் அப்பூதி அடிகளுக்கு அவர் திருநாவுக்கரசர் எனத் தெரியவில்லை. வழக்கமாக சிவனடியார்களை வரவேற்று உபசரிக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரையும் ஒரு சிவனடியாராக எண்ணி வரவேற்றார் .

திருநாவுக்கரசர் தான் யாரென சொல்லாமல் , “அன்பரே, நீங்கள் நிறைய தொண்டுகளை செய்கின்றீர்கள், ஆனால் உங்கள் பெயரால் செய்யாமல், ஏன் யாரோ ஒருவர் பெயரில் செய்ய வேண்டும்” என கேட்க, அப்பூதி அடிகளின் முகம் மாறியது. “யாரோ ஒருவர் பெயரில்” எனும் அந்த வார்த்தை அவர் உள்ளத்தைச் சுட்டது.

கொஞ்சம் ஆத்திரமாக “அய்யா, நீர் சிவனடியார்தானே, உமக்கு திருநாவுக்கரசரைப் பற்றி தெரியாமல் இருந்தால் அது நம்பும்படியாக இல்லை. அவர் சமணரை வென்று சைவம் தழைக்க செய்தவர். கடலிலே கல்லைக் கட்டி எறிந்தபொழுதும் கல்லில் தோணிபோல் மிதந்தவர், மதுரை கூன் பாண்டியனின் கொடுநோயினை தீர்த்து அவரை சைவம்பால் திருப்பியவர். சிவனின் முழு அருள்பெற்ற அவரை யாரோ ஒருவர் என்பதா . அவர் எனக்கு தலைவன், குருநாதர், அவரால் சைவம் வாழ்கின்றது.

நாமெல்லாம் சிவனடியார், ஆனால் உம்மாலும் எம்மாலும் செய்ய முடியாத பெரும் விஷயங்களை சிவன் அருளால் அவர் செய்கின்றார் என்றால் அவர் பெயர் நிலைக்க வேண்டுமா. அல்லது என் பெயர் ..உன் பெயர் நிலைக்க வேண்டுமா..

அவர் முன் நான் ஒரு தூசு, அவர் அருகே கூட நிற்கத் தகுதியற்றவன். என்னால் முடிந்தது நான் செய்யும் நற்கிரியைகளில் அவர் பெயரை முன்னிறுத்துவது. அதைச் செய்கின்றேன். அவர் பெயர் வாழவேண்டும். காலமெல்லாம் நிலைக்க வேண்டும். என்னில் இருந்து அவர் செயலாற்றும் பொழுது அவர் பெயரை இடாமல் வேறு எவர் பெயரை இடுவது?

அவரை அறியாத நீர் சிவனடியார் என்பதில் சந்தேகம் வந்து விட்டது, நீர் கிளம்பலாம்” என சொல்லி விட்டார்.

ஆம். தன் குரு மேல் கொண்ட பக்தி அவரை அப்படி சொல்ல வைத்தது. தன் சீடன் தன்மேல் கொண்டிருக்கும் அன்பை அவன் வாயாலேயே கேட்டு மகிழ்ந்து திருநாவுக்கரசர் மெல்ல தன்னை வெளிப்படுத்தினார்.

யாரோ ஒரு அடியாரிடம் பேசுகின்றோம் என நினைத்திருந்த அப்பூதி அடிகளுக்கு அவர்தான் தன் குருநாதர் திருநாவுக்கரசர் என்றவுடன் மனம் துள்ளியது. ஆர்ப்பரித்தது. கண்கள் கலங்கின. ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

தெய்வம் கண்ட பக்தன் போல, கண் பெற்ற குருடன் போல அவ்வளவு ஆனந்தம். சற்று நேரம் பேசாமல் அப்படியே சிலையாய் நின்றார், மெல்ல மூச்சு வாங்கியது, மூச்சு பெரும் அழுகையாய் ஓலமிட்டு உயர்ந்தது.

ஆனந்தத்தில் கதறினார் அப்பூதி அடிகள். அவர் வாழ்வில் அதுதான் மகா மகா உன்னதமான நொடி. யாருடைய‌ புகழ் கேட்டு, சிவ பக்தி கேட்டு குருநாதர் என மனதால் வணங்கினாரோ, அவரே தன் வீட்டுக்குத் தன்னைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்.

தன் குடும்பத்தாரை அழைத்தார் . ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அவர் பாதம் கழுவி தன் குடும்பமாய் குடித்தார், தலையில் தெளித்துக் கொண்டார், வீடெல்லாம் தெளித்தும் கொண்டார்.

அவரைக் கொண்டாடினார். தெய்வம் வந்தபின் விழா எடுக்காமல் எப்படி .விழா என்றால் உணவு இல்லாமல் எப்படி.

அப்பூதி அடிகளின் இல்லாள் இல்லாத வகையில்லை என சொல்லும் அளவு சமையலை வகைவகையாக செய்யத் தொடங்கினார்.

அப்பூதி அடிகள் அவரை கண் கொண்டாமல் பார்த்துக் கொண்டே அவரின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தார், திருநாவுக்கரசரும் இவரின் சந்தேகங்களை எல்லாம் போக்கிக் கொண்டிருந்தார்.

அப்பூதி அடிகள் மனதில் எரிந்து கொண்டிருந்த சிவபெருமான் மீதான ஞான நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டிருந்தார் திருநாவுக்கரசர்.

நாழிகைகள் நகர்ந்தன, அமுது படைக்கும் நேரம் நெருங்கிற்று.

அந்த அப்பூதி அடிகள் அந்தணர், திருநாவுக்கரசரோ வேளாளர். ஆனால் இப்போது அவர்களெல்லாம் ஒரே சாதி, சிவனடியார் சாதி. அந்த அந்தணர் அப்பூதி அடிகளுக்கு வேளாளர் திருநாவுக்கரசர் சாதி தெரியவில்லை. மாறாக சிவமே தெரிந்தார். வணங்கினார், கொண்டாடினார்.

அப்பூதி அடிகளின் மனைவி நைவேத்தியம் தயாரிக்கும் பக்குவத்துடன் அர்ப்பணிப்புடன் சமையல் முடித்தார், அப்பூதி அடிகளின் மகன்களான சின்ன திருநாவுக்கரசும், பெரிய திருநாவுக்கரசும் ஓடி ஓடி வேலை செய்தனர் . உண்ணும் இடத்தை சுத்தம் செய்து விட்டு பெரிய திருநாவுக்கரசு சமையலறைக்குள் நுழைந்தான், விதி கூரிய விஷப்பற்களோடு காத்திருப்பது அறியாமல் தாயார் அவனை வாழை இலை அறுத்துவர அனுப்பினார்.

வாராது வந்த மாமணியான அந்த மகானுக்கு, திருநாவுக்கரசருக்கு மகாராஜாவுக்கும் கிடைக்கா வரவேற்பினை அக்குடும்பம் உளமார‌ கொடுத்துக் கொண்டிருந்தது.

வாழை இலை அறுக்கப் போனான் மூத்த திருநாவுக்கரசு. நல்ல இளம் இலையாய் அவன் அறுக்கும் பொழுது அங்கு மறைந்திருந்த பாம்பு அவனைத் தீண்டிற்று.

அந்நாளில் பாம்பு கடிக்கு சில மருத்துவம் உண்டு, ஆதுரச்சாலை எனப்படும் வைத்தியசாலை உண்டு, ஆனால் உடனடியாக செல்ல வேண்டும். சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதே முதல் வேலை என கருதிய அந்த பாலகன், ஆதுர சாலை செல்லாமல் வீட்டுக்கு ஓடிவந்து இலையைக் கொடுத்தான். தன் கடமையினை நிறைவேற்றிய மகிழ்வில் வாயில் நுரைதள்ள சரிந்தான், அப்பூதி அடிகளின் வளர்ப்பு அப்படி.

உள்ளே திருநாவுக்கரசர் உணவுக்கு அமர்ந்திருக்க, அடுப்பறையில் மகன் இறந்துகிடக்க அதிர்ச்சியில் உறைந்த அப்பூதி அடிகளின் மனைவி உள்ளுக்குள் அழுதாள், பொங்கிவரும் அழுகையினை கட்டுப்படுத்தி மெல்லிய இயல்பான குரலில் கணவனை அழைத்தார்.

ஆம், சிவனடியார் மனதை நோகடிக்கக் கூடாது எனும் உறுதி அவளுக்கு இருந்தது.

உள்ளே சென்ற அப்பூதி அடிகள் மகனின் உடலை கண்டு கலங்கினார். பிள்ளை சடலம் கண்டபின் துடித்து கதறாத பெற்றோர் மனம் உண்டா..

அவர் வாழ்வில் மிகப் பெரும் சந்தோஷம் நடந்த சில நாழிகையிலேயே மாபெரும் துயரமும் நடந்தேறிற்று.

உள்ளே மகனின் சடலம், வெளியே உணவுக்காய் காத்திருக்கும் குரு திருநாவுக்கரசர்.

எவர் பெயரால் அப்பூதி அடிகள் ஊரெல்லாம் நீரும், சோறும் போட்டு திருப்பணி செய்தாரோ அந்த திருநாவுக்கரசருக்கு தன் கரங்களால் அப்பூதி அடிகள் அமுது பரிமாற வேண்டிய நேரமிது. தகப்பனாக மகனுக்கு அழுது கருமாதி செய்ய வேண்டிய நேரமும் அதுவே.

மகனை நினைத்து அழுவதா, திருநாவுக்கரசுக்கு செய்யும் சேவையைத் தொடர்வதா.. கதிகலங்கி நின்றார் அப்பூதி அடிகள், மகனை மடியில் போட்டு மனதால் அழுது கொண்டிருந்தாள் அந்த மாதரசி.

நடப்பதை ஓரமாக பார்த்து திகைத்து நின்று கொண்டிருந்தான் சின்ன திருநாவுக்கரசு.

“ஏ அப்பூதியே உன் வழக்கமான கடமையான சிவனடியாரை அதுவும் உன் குருவான சிவனடியாரை உபசரிக்க போகின்றாயா.. இல்லை அவரை புறந்தள்ளிவிட்டு மகனுக்காய் அழப்போகின்றாயா” என மனசாட்சி கேட்டுக் கொண்டிருக்க, இறுகி அமர்ந்திருந்தார் அப்பூதி அடிகள்.

அவர் முகத்தையே பார்த்து மனதால் கதறிகொண்டிருந்தாள் மனைவி, அருகே இளையவன்.

அப்பூதி அடிகள் சிவனடியார் வந்த வேளை சரியில்லை என்று குறை கூறி அடித்து விரட்டிவிட்டு மானிட இயல்பில் கதறித் துடித்து அழுவாரா , அல்லது சிவனடியாருக்கு உணவிடுவாரா எனும் சோதனையின் கடைசி நொடி நெருங்கிற்று

“அப்பூதி..” என குரல் கொடுத்தார் திருநாவுக்கரசர்.

“அய்யா, ஒரு நிமிடம்” என எழுந்தார் அப்பூதி அடிகள். அவர் குரல் கேட்ட கணம் மனம் சிவத்தால் நிறைந்தது, மனம் தெளிவானது, சிவனே நிரந்தரம். சிவனடியார்களை உபசரிப்பதே தன் சுயதர்மம் . அதுவே முதல் கடமை எனும் தெளிவு பெற்றவராய் எழுந்தார்.

மனைவியினை நோக்கினார், “நான் சொல்வதை கேட்பாயா” என்றார். கணவனுக்கு அடங்கிய அந்த பதிவிரதை அதைத் தவிர என்ன செய்வேன் என்றாள்

“மனையாளே, நிச்சயம் இவன் இனி திரும்பப் போவதில்லை, முடிந்தது முடிந்ததுதான். ஆனால் இது தெரிந்தால் நாம் கால்வைத்த நேரம் இப்படி ஆயிற்றே என குருநாதர் மனமுடைவார், தனக்காக இலை அறுக்கச் சென்று இறந்தான் பாலகன் என கதறித் துடிப்பார்.

அது அவரின் மனதை பாதிக்கும், அழவைக்கும். மிகப்பெரும் பொறுப்பை ஏற்று சிவனுக்காக வாழும் அவர் மனதில் ஏற்படும் அத்துன்பம் அவரின் சிவத்தொண்டை பாதிக்கும். நாம் அதற்கு காரணமாய் இருத்தல் கூடாது

விஷயத்தை அவரிடம் மறைப்போம், இப்போதைக்கு எதுவும் காட்டாமல் உணவிட்டு அவரை அனுப்பிவிட்டு அதன்பின் துக்கத்தை ஏற்போம், இது சிவனடியாரை ஆதரிக்கும் வீடு, நாமோ சிவனடியாரை உபசரிப்பதை கடமையாய் கொண்டவர்கள். மகன் என்றல்ல நானே இறந்திருந்தாலும் இதுதான் நடந்தாக வேண்டும்”

மனைவியும் மகனும் அதை மவுனமாக ஏற்றனர். ஓலைப்பாய் ஒன்றில் மூத்தவன் உடலை சுற்றி ஒளித்து வைத்துவிட்டு இலையும் அமுதுமாக திருநாவுக்கரசை நோக்கி ஓடி வந்தனர்.

உணவருந்து முன் உடலை முறையாக சுத்தம் செய்து, திறுநீர் இட்டு அமர்ந்தார் திருநாவுக்கரசர், அவர்களையும் முறையாக வரசெய்து திருநீறு இட்டு அமரப் பணித்தார்.

அந்த இலையினை இட்டாள் அப்பூதி அணிகளின் மனைவி . அதில் அவள் கண்களை மீறி ஒரு துளி கண்ணீர் விழுந்தது.

மாபெரும் ஞானியான திருநாவுக்கரசருக்கு ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பது விளங்கிற்று. எனினும் வெளிக்காட்டாமல் எல்லோரும் என்னுடன் அமருங்கள் என்றார் . மூவரும் அமர்ந்தனர்.

“எங்கே மூத்த மகன் திருநாவுக்கரசு அவனையும் அழையுங்கள், நாம் சிவன் புகழ் பாடிவிட்டு அமுது உண்ணலாம்” என கோரினார் திருநாவுக்கரசர்.

“அய்யா அவன் இப்போது உதவமாட்டான் நாம் உண்ணலாம்” என சொன்னார் அப்பூதி அடிகள்.

“அவன் வராமல் நான் உண்ணமாட்டேன்..” என அன்னம் தொடாமல் கையெடுத்தார் திருநாவுக்கரசர், அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் வாய்விட்டு அழுதார் அப்பூதி அடிகளின் மனைவி.

அவள் சொல்லாததை அவள் கண்ணீர் சொல்லிற்று..

ஓடிச் சென்ற திருநாவுக்கரசர் பாயில் சுற்றப்பட்ட பாலகன் உடலைக் கண்டு அதிர்ந்தார், அவனை தன் கையால் சுமந்து சிவாலயம் அடைந்தார் . பதிகம் பாடி மன்றாடத் தொடங்கினார் .

“ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது.தானே”

“ஒன்றே நினைப்பார் சிவனடியார், அந்த‌ சிவனையே நினைப்பார் சிவனடியார். பாம்பின் விடம் வெப்பமானது, நிலவின் ஒளியோ குளிர்ச்சியானது. நிலவினை சூடியிருக்கும் பெருமானே !இப்பாலகன் உடலிலிருந்து வெம்மை விடம் நீக்கி உடலைக் குளிர்ச்சியுறச் செய்து உயிர்ப் பிழைக்க வைப்பாய்..” என்று பொருள்படப் பாடினார்.

இப்படி இரண்டு கொலாம், மூன்று கொலாம் எனத் தொடங்கும் பத்து பாடல்களைப் பாடினார் திருநாவுக்கரசர். இது விடம் தீர்த்த படலம் என பெரியபுராணத்தில் வரும். முடிந்தால் வாசியுங்கள்

பாடலை உருக்கமாக திருநாவுக்கரசர் பாடப்பாட விஷம் பாலகன் உடலில் இருந்து இறங்கிக் கொண்டே வந்தது, விஷத்தால் உருவான நீலகருப்பு மறைந்து மெல்ல அவன் இயல்பான‌ நிறம் உடலில் படர்ந்தது.

நம்பமுடியாத அதிசயமாக அதைப் பார்த்து கொண்டிருந்தது மக்கள் கூட்டம், அப்பூதி அடிகளும், அவர் மனைவியும் ,மகனும் வியப்பின் உச்சிக்குச் சென்றனர்.

எத்தனையோ அதிசயங்களை சிவன் பெயரால் செய்த திருநாவுக்கரசர், பத்தாம் பாடல் பாடி முடிக்கவும் மெல்ல கண்திறந்தான் பெரிய திருநாவுக்கரசு.

பத்துமாதம் கழித்து பிறக்கும் பிள்ளை போல், பத்தாம் பாடல் முடிவில் மறுபிறப்பாக உயிர்பெற்று வந்தான் அவன்.

கூட்டம் பேச்சற்று நின்றது, நன்றியாலும் கண்ணீராலும் நிறைந்து மகனை அணைத்து கொண்டு கதறிக்கொண்டிருந்தாள் அப்பூதி அடிகளின் மனைவி.

எதுவுமே நடக்காதவர் போல் நின்று கொண்டிருந்தார் திருநாவுக்கரசர், மிக இயல்பாய் நின்றார். எல்லாம் சிவனருளால் நடந்ததன்றி தன்னால் ஏதுமில்லை என்பது அதில் தெரிந்தது.

மகன் செத்துப் பிழைத்த அந்நிலையிலும் மகனை நோக்காமல் “அடியாரே நீர் இன்னும் சாப்பிடவில்லையே, வீட்டுக்கு வந்து உணவருந்துங்கள், மீதியினை பின்னால் பேசலாம்” என குனிந்து நின்றார் அப்பூதி அடிகளார்.

அந்த நொடியில் திருநாவுக்கரசரே அதிர்ந்தார். அவர் என்ன வானலோகமே அசைந்தது, கயிலாயத்து சிவனுக்கே கண்ணீர் துளிர்த்து.

ஆம், ஒரு சிவனடியார் என்ற ஒரு காரணத்துக்காக, ஒரே ஒரு காரணத்துக்காக இப்படி தன்னை மறந்து, தன்னிலை மறந்து அவர்களை இப்படி சிவன் போல் கவனிக்கின்றார் அப்பூதி அடிகள். , இந்த பக்திக்கு எதை கொடுப்பது..

எதை கொடுத்தாலும் ஈடாகுமா..இந்த அன்புக்கு என்ன கொடுப்பது..

“சிவனே ..சிவனே ..உனக்கு இப்படியும் ஒரு அடியாரா.. உன் அம்சம் இப்படியும் உண்டா ” என மனமுருகி சொல்லிக் கொண்டே அவரை அணைத்துக் கொண்டார் திருநாவுக்கரசர்.

கூட்டம் ஆர்ப்பரிக்க, அப்பூதி அணிகளின் மனைவி உயிர் பெற்ற தன் மகனை நெஞ்சோடு அணைத்து சிவனை நோக்கி நன்றியாய் அழுது கொண்டிருந்தார். தானும் தன் கணவனும் குடும்பமாய் செய்த சிவத்தொண்டு தன் மகன் உயிரை காத்து தன் குடும்பத்தைக் காத்தது என்பதை உணர்ந்தாள்.

நிச்சயம் இது தன் குடும்பத்துக்கு வந்த பேராபத்து. எப்படியும் இந்த ஆபத்து வந்திருக்கும். அந்த அரவம் பாலகனை இன்று இல்லையென்றால் இன்னொரு நாள் கூட தீண்டியிருக்கலாம்

அந்த ஆபத்தை யார் நீக்கமுடியுமோ அவர் இருக்கும் நேரம் அதை அனுமதித்து அதை நீக்கியும் விட்டது இறை.

ஆம் சிவன் அவரைக் கண்காணித்து கொண்டே இருந்தார், சரியான நேரத்தில் மிக சரியான அடியாரை அனுப்பி தன் பக்தனைக் காத்தும் கொண்டார், மிக அற்புதமாக செய்தார்.

பின் சில நாட்கள் அப்பூதி அடிகள் வீட்டில் தங்கியிருந்த திருநாவுகரசர் அவர்களை எல்லாம் ஆசீர்வதித்து விட்டு வேறிடம் சென்றார்.

தன் குருமேலான மிகப் பெரும் பக்திக்குச் சாட்சியாக, சிவன் மேல் கொண்ட அன்பு காரணமாய் உதித்த அன்பில் கிடைத்த குருவினை சிவனாக நினைத்து பின் தொடர்ந்து பெரும் சிரமத்தையும் தியாகத்தையும் செய்ததால் அப்பூதி அடிகள் நாயன்மார்களில் ஒருவரானார்.

ஆம் . சிவன் மேலான அன்பே அவரை சிவனடியார்களை கொண்டாடச் செய்தது, அப்படி மிகப்பெரும் அடியாரான திருநாவுக்கரசரை ஞானகுருவாக கொண்டு அவர் கொஞ்சமும் வழிதவறாமல் நடந்ததே, மிகப் பெரும் துயரத்திலும் தன் இறைத்தொண்டில் வழுவாமல் நின்றதே அவரை நாயன்மார்களில் ஒருவராக்கியது.

அப்பூதி அடிகளிடம் அகங்காரமில்லை, பேராசை இல்லை, நான், என் குடும்பம் எனும் சுயநலமில்லை. மாறாக சிவனை யாரெல்லாம் தேடுவார்களோ , அவருக்காக வாழ்வார்களோ, அப்படிப்பட்டவர்களுக்காக நான் வாழ்வேன் என நின்றார்.

சிவனை, சிவனடியார்கள் போற்றினால் நான் அவர்களை போற்றுவேன், அடியார்க்கும் அடியார் நான் என தாழ்ச்சியாய் அவர் எடுத்த முடிவே அவரை அந்த மிகப்பெரும் இடத்துக்குக் கொண்டு சேர்த்தது.

சிவன் மேல் கொண்ட அன்பும், அந்த அன்பினை சிவனடியார்மேல் பணிவாய் காட்டியதுமே அவரின் பெரும் உயர்வுக்கு காரணம்.

இந்த அப்பூதி அடிகளார் காலத்தில் அந்த திங்களூரில் ஏகப்பட்ட செல்வந்தர்கள் இருந்தனர், மிராசுதரும், இன்னும் பணமும் படையும் செல்வாக்கும் மிக்கோரும் இருந்தனர். ஆனால் இன்றுவரை மட்டுமல்லாது என்றும் அப்பூதி அடிகள் மட்டும் நிலைபெற்றது எப்படி?

ஆம் . அவர் அழியக் கூடிய‌ பணமோ, நிலமோ, பொருளோ, பெண்ணோ தேடவில்லை . மாறாக நிரந்தரமான சிவனை தேடினார். அழியாப் புகழ் பெற்றார்

சிவனை நினைந்து சுமந்து திரியும் அடியவருக்கு செய்வதெல்லாம் சிவனுக்கு செய்வதே, அந்த அடியார்களுக்கு தாழ்ச்சியாய் ஒரு கிண்ணம் நீர் கொடுத்தாலும் அது சிவனுக்கே .

அதைக் கணக்கில் வைத்து கண்காணிக்கும் சிவபெருமான் உரிய காலம் வரும்பொழுது நமக்கு பல மடங்காக திருப்பித் தருவான்.

எப்படி நோக்கினாலும் அப்பூதி அடிகளார் வாழ்வு சொல்வது இதுதான் .

சாமான்ய பக்தனுக்கும் ஒரு நல்ல குரு கண்டிப்பாய் வேண்டும், அந்த குருவினை அவன் அணுபிசகாமல் பின்பற்றவும் வேண்டும்.

குரு கிடைக்கவில்லை என்றாலும் மனதால் ஒரு அடியாரை குருவாகக் கொண்டால் இறையருளால் அக்குரு நம்மைத் தேடிவருவார், நம்மை பரமனிடம் சேர்ப்பார்.

காரணம் இயங்குவதும் இயக்குவதும் சிவனே. தேடினால் கண்டடையலாம் அவன் சந்நிதியில் தட்டினால் அக்கதவு திறக்கப்படும், இது முக்கால உண்மை.

தைமாதம் ஒரு சதய நட்சத்திரம் நாளில் அவர் முக்தி அடைந்தார், அன்றிலிருந்து தை மாத சதய நாளில் அவருக்கு குருபூஜை நடத்தப்படுகின்றது, அன்று திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அவர் நினைவு கூறப்படுவார்.

திங்களூர் கைலாசநாதர் ஆலயம் எக்காலமும் அப்பூதியடிகள் நாயனார் புகழைச் சொல்லி அங்கு நிலைப்பெற்றிருக்கும், ஒப்பற்ற சிவபக்தன் வழிபட்டதால் அந்த ஆலயம் அழியாப் புகழுடையதாய் நிற்கின்றது.

முடிந்தால் அங்கு சென்று வழிபட்டு வாருங்கள், சிவனடியார்களுக்கு உதவிய புண்ணிய பலன் உங்களுக்கும் கிடைக்கும், உங்களுக்கும் நல்ல குருநாதர் அமைவார், அவர் உங்களை சிவனில் வழிநடத்துவார்.

Image may contain: 5 people, people standing

நாயன்மார்கள் : 01- அதிபத்தர்.

அந்த நுளமபாடி சோழ நாட்டின் கடற்கரையில் இருந்த ஊர். நாகப்பட்டினம் எனும் அன்றைய பெருநகருக்கண்மையில் இருந்தது. அது மீன்பிடி கிராமம், மீனும், சங்கும் , சிப்பியும், சங்கினை அறுத்து செய்த‌ வளையலும் நிரம்பக் கிடைக்கும் ஊர். பரதவர்கள் நிரம்பிய குடியிருப்பு.

அந்த பரதவக் கூட்டத்தில் ஒருவர் தான் அந்த அடியவர். அவரின் இயற்பெயர் அறியப்படவில்லை. ஆனால் அவரின் இயல்பான காரியத்தால் அதிபத்தர் என்ற காரண பெயர் வந்தது. இயல்பான காரியம் என்னவென்றால் வேறு ஒன்றுமில்லை. சிவன் மேலான பக்தி, யாராலும் காட்டமுடியாத பக்தி, மகா அர்ப்பணிப்பான பெரும் அன்பான பக்தி.

இதனால் அவர் அதிபக்தர் என அழைக்கப்படலானார், அது அதிபத்தர் என திரிந்து நிலைபெற்றுவிட்டது.

அதி என்றால் மிகப் பெரிய என்ற பொருளில் வரும். அதிவீரர், அதிமதுரம், அதிமேதாவி, அதிபர் எனும் வரிசையில் அதிபத்தர்.

(பத்தன் என்பதன் பொருள் மாசுமறுவற்ற குற்றமற்றவன் என்பது இன்னொரு விஷயம்.)

அந்த அதிபத்தர் மிகப்பெரும் சிவனடியார், கடலில் மீன்பிடித்து வந்து விற்பது அவரின் தொழில், அனுதினமும் காலை சிவனை நினைந்து வழிபட்டு, மடியேறி கடல் புகுந்து, வலைவீசி, மீன்பிடித்து அந்த மீன்களில் மிகப் பெரியதும் நல்லதுமான மீனை சிவனுக்கு அர்ப்பணமாக கடலிலே சிவன் நாமத்தை சொல்லி விட்டுவிடுவார்.

அக்கால மரபு அது. விவசாயி என்றால் தன் விளைச்சலில் சிறந்ததை கோவிலுக்கு செலுத்துவான். ஆடுமாடு வளர்ப்பவன் என்றால் மந்தையில் சிறந்ததை கோவிலுக்கு காணிக்கையாக்குவான்.

எது உன்னில் இருப்பதில் பெரிது என கருதுகின்றாயோ அதை சிவனுக்கு கொடு என்பது தான் சைவ பூமியான தமிழக தத்துவம், எல்லாம்வல்ல பரம்பொருளுக்கு தன்னிடம் இருப்பதில் மிக‌ச் சிறந்ததை கொடுப்பது அந்நாளில் உணர்வில் கலந்த விஷயம்.

இவரோ மீனவன், அவருக்கு கோவில் தெரியாது, வேதம் தெரியாது, சொல்லிக்கொடுப்பார் யாருமிலர், சொன்னாலும் புரியாது, விரதம் தெரியாது, யாகம் தெரியாது, வழிபடத் தெரியாது. சிவனுக்கு லிங்க உருவம் எதனால் என்றும் தெரியாது.

அவருக்கு தெரிந்ததெல்லாம் சிவன் முழுமுதல் கடவுள், அவனே வாழ வைக்கின்றான், அவனே கடலாக ஆடுகின்றான், அவனே படகாக வருகின்றான், அவனே மீன்பிடித்து தான் வாழ உடன் இருக்கின்றான். வாழ்பவனும் அவனே, வாழ வைப்பவனும் அவனே..

அவருக்கு சகலமும் சிவன், சிவனன்றி வேறல்ல, எல்லாம் அவனே, எந்நாளும் அவனே.

அப்படி ஒரு அன்பும் , பக்தியும் சிவன் மேல் அவருக்கு இருந்தது.

அனுதினமும் பிடிபடும் மீன்களில் தலையானதை இழப்பது என்பது பெரும் விஷயம். ஆனால் சிவன் மேலான அன்பு அவரை அதை செய்ய வைத்தது, கொஞ்சமும் தயக்கமின்றி சிவன் கொடுத்தது சிவனுக்கே என அன்போடும் மகிழ்வோடும் அனுதினமும் மிகப் பெரிய நல்ல மீனை கடலில் விட்டார்.

ஒருநாள் கூட அவர் அதில் தவறவில்லை, தன் அன்றாடக் கடமையாக அதைக் கருதினார். சுற்றி இருப்போர் பக்தியின் பித்து நிலை என்றார்கள், வாய்ப்பைத் தவறவிடும் மடையன் என்றார்கள், கடவுளின் ஆசியினை கடலில் எறியும் பைத்தியம் என்றார்கள்.

அவரோ அவர்போக்கில் தன் கடமையில் சரியாக இருந்தார். அந்த மீனின் மதிப்போ பணமோ எதுவும் அவருக்குத் தெரியவில்லை. தன் மீன்களில் எது மிக மதிப்பானதோ , எது உயர்வானதோ அதை சிவனுக்கு கொடுப்பதில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி.

அதில்தான் திருப்தி.

“வெறுங்கையோடு கடலுக்கு செல்கின்றேன், மீன்கள் சிவன் கொடுப்பது, அதில் மிகச் சிறந்ததை அவனுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அது சாஸ்திர மீறலா, விதிமீறலா என்பதெல்லாம் தெரியாது. என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுக்கின்றேன்” என்பது அவர் நம்பிக்கை.

வில்வ இலை தூவி இன்னும் பல ஆகம முறைகளில் வழிபட வேண்டிய சிவனை மீனை கடலில் விட்டு வழிபடுவது அவரை அவமானபடுத்துவதற்கு சமம் , அபச்சாரம் என்ற குரல்கள் அவர் காதில் விழுந்தாலும் என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுப்பேன் என அவர்போக்கில் இருந்தார்.

அனுதினமும் காணிக்கையாய் சிறந்த மீனை கொடுத்தாரே தவிர சிவனிடம் அவர் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.

பிரதிபலன் பார்ப்பது உண்மையான பக்தி ஆகாது , அது வியாபாரம்.

உலகாளும் சிவனுக்கு இவரைத் தெரியாதா.. அனுதினமும் இவர் பக்தியாய் கடலில் சமர்ப்பிக்கும் மீனை ஏற்றுக்கொண்டே வந்தார்.

ஒரு பாமரன் அதுவும் பரதவன், கடலும் படகும் தவிர ஏதும் அறியாத அவன் காட்டும் அன்பில் நெகிழ்ந்தார் .

ஆனால் ஒரு சாஸ்திரமும் , வேதமும் அறியா பாமரன் ஒருவன், மிகப்பெரும் சக்தியினை மனதால் உணர்ந்து, அதில் பக்தி கொண்டு, அனுதினமும் அந்த பரம்பொருளுக்கு காணிக்கை சமர்ப்பிப்பது அவரை உருக்கியது.

எல்லாம்வல்ல பரம்பொருள் தூய்மையான அன்போடு தன்னை வணங்கும் மனிதனை நோக்கி அன்போடு ஓடிவரும், அவனை மனதால் கொண்டாடும். அவன் அருகேதான் நிற்கும். அவன் மனதை கண்டு மகிழும்.

மனிதனால் தான் அதை உணரமுடியாதே தவிர, மனதால் தேடி உயிரால் குரல் கொடுத்தால் சிவம் ஓடிவரும்.

அதிபத்தரின் உன்னத பக்தியில் உருகிய சிவன், அவரின் மாபெரும் பக்தியினை உலகுக்கு உணர்த்த‌ சித்தம் கொண்டார்.

அதற்காக இதோ பக்தன் என சொல்லிவிட முடியாது, அவனின் பக்தி நிரூபிக்கப்பட வேண்டும், மகா இக்கட்டான நேரத்திலும் அவனின் பக்தி நிலையாய் நிற்க வேண்டும், எந்நிலையிலும் அவன் அன்பு மாறவில்லை என்பது தெரிய வேண்டும்.

யாருக்கு தெரியவேண்டும் ?சிவனுக்கா? இல்லை. உலகத்தாருக்கு .

அப்படி ஒரு சூழல் வந்தாக வேண்டும், பரம்பொருள் அப்படி உருவாக்கும் சூழலின் பெயர்தான் சோதனை, பறவை தன் குஞ்சு இனி பறக்கும், கீழே விழாது என எப்படி நம்பும் நிலை வந்தபின் பறக்க கற்று கொடுக்குமோ, கங்காரு எப்படி தன் குட்டி இனி நடக்கும் என தெரிந்தபின் அதை இறக்கிவிடுமோ, அப்படி தன் பக்தன் நிச்சயம் வெல்வான் என அறிந்த பின்பே சோதனையினை கொடுப்பார் சிவன்.

அதுவரை பறவை தன் செட்டைகளில் குஞ்சுகளை காப்பது போல, கங்காரு தன் பையில் குட்டியினை காப்பது போல் காத்து கொண்டிருப்பார்.

யாருக்கு எவ்வளவு தாங்கமுடியுமோ அவ்வளவுதான் சோதனை, தாங்கமுடியா சோதனை என எதுவுமில்லை, அன்பின் ஆழம் எவ்வளவோ அந்த அடிவரை சோதிப்பார் சிவன்.

அப்படி அதிபத்தருக்கும் சோதனை ஆரம்பித்தது, அவர் வலையில் மீன்கள் குறைய ஆரம்பித்தன. அதிபத்தர் எந்த சலனமும் கொள்ளவில்லை கிடைத்ததில் நல்ல மீனை தன் நன்றிகடனாய் கடலில் இட்டு கொண்டே இருந்தார்.

ஆயிரம் மீன்கள் ஐநூறானது, ஐநூறு நூறானது, நூறு பத்தானது. அந்நிலையிலும் அதிபத்தர் இன்முகத்தோடு சிவனுக்கு ஒரு மீன் அளித்து கொண்டே இருந்தார்.

மீன்கள் குறைய குறைய வீட்டில் செல்வம் குறைந்தது, வறுமை முளைவிட்டது, பணியாளர் இல்லை எங்கும் பற்றாக்குறை.

வீட்டில் வறுமை வளர வளர பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை குறைந்து இரண்டு என்ற எண்ணிக்கைக்கு‌ வந்தது, அப்பொழுதும் இரண்டில் எது நல்லதோ அதை சிவனுக்கு கொடுத்தார் அதிபத்தர்.

சோதனையின் உச்சகட்டம் வந்தது, வீட்டில் ஒரு நேர உணவு தடுமாற்றம் வந்தது, கடனும் இன்னும் சிக்கலும் தளைத்து வளர்ந்தன. இல்லாமை எங்கும் நிறைந்திருந்தது.

அப்பொழுது கடலுக்கு சென்ற அதிபத்தருக்கு ஒரு மீனே கிடைத்தது, அந்நிலையிலும் “என் வறுமை என்னோடு, சிவன் பொருள் சிவனோடு” என அதையும் கடலில் சிவனுக்காக இட்டு வெறும் கையாக திரும்பினார்.

வீட்டின் வறுமை அவருக்கு வருத்தம் கொடுத்தது, வீட்டில் உணவு கூட இல்லை என்பது கவலை கொடுத்தது, மீன்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது, கண்களை அடிக்கடி துடைத்து கொண்டார்.

ஆனால் சிவனுக்கு கொடுக்க ஒரு மீன் கிடைத்ததே எனும் அந்த சந்தோஷம் அவரை எல்லா கவலையினையும் மறக்க வைத்தது

ஆனால் ஊர் உலகம் விடுமா? “சிவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாயே அதிபத்தா, உன் முடிவு என்ன? பைத்தியகாரதனத்தின் உச்சம் நீ. இப்பொழுது தெருவில் நிற்பது நீயா? சிவனா?

அவனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் எக்காலமும் உண்டு, உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்ன உண்டு?, காலம் பார்த்து கடல் கொடுத்ததை நாசமாக்கிய கயவன் நீ..” என காதுபட சொன்னார்கள்.

“சிவன் கொடுத்தான், சிவனே எடுத்தான். எனக்கு இப்பொழுது அவனுக்கு கொடுக்க ஒரு மீன் கிடைகின்றதே, அதுவரை அவன் என் கடமையினை சிவன் சரியாக இயக்குகின்றான்” என கொஞ்சமும் நழுவா உறுதியில் இருந்தார் அதிபத்தர்.

அவரும் நம்பிக்கையாய் கடலுக்கு செல்வதும், ஒரு மீன் மட்டும் கிடைப்பதும் அவர் அதையும் மகிழ்வோடு சிவனுக்கு கொடுப்பதும் வாடிக்கையனானது.

இந்த நிலையில் கொடும் வறுமை அவரை வாட்ட உற்றார் விலகினர், பந்தம் விலகியது, குடும்பமும் ஒதுக்கியது, கட்டுமரத்திலே தூங்குவதும், யாசக உணவு உண்பதுமாக காலம் கடத்தினார் அதிபத்தர்.

அப்பொழுதும் ஒரு மீன் கிடைப்பதும், அதை அவர் சிவனுக்கு படைப்பதும் நிற்கவில்லை

சிவனும் ஆட்டத்தை நிறுத்தவில்லை, அதிபத்தரும் கொஞ்சமும் வாடவில்லை, அந்த பாச பக்தி விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஆட்டம் அதன் போக்கில் இருந்தது, இருவரும் சளைக்காமல் ஆடினர். கடைசியாக மிகபெரும் சோதனை ஒன்றை காட்டிவிட்டு ஆட்டத்தை முடிக்க திருவுளம் கொண்டார் சிவன்.

ஆம், மிக மிக இக்கட்டான சோதனை வைக்கப்பட்டது. சிவன்மேல் அதிபத்தர் கொண்ட அன்பினை உலகுக்கு நிரூபிக்கும் சோதனை அது.

அன்று ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாள், ஏதோ விழாவுக்காக கடற்கரை களை கட்டியிருந்தது, அதில் ஆர்வமின்றி வழக்கம் போல் மீன்பிடிக்க கிளம்பினார் அதிபத்தர். அவருக்காக அல்ல , மாறாக‌ ஒரு மீன் கிடைக்கும் அதை சிவனுக்கு கடலில் அர்ப்பணிக்கலாம் எனும் அதே பக்தியோடு படகேறினார்.

அதைத் தவிர என்ன தெரியும் அவருக்கு?

அன்று வழக்கம் போல ஒரு மீனுக்கு வலைவிரித்து அதிபத்தர் காத்திருக்க நெடுநேரம் ஒன்றும் சிக்கவில்லை, எந்நாளும் கிடைத்த ஒரு மீன் கூடவா இன்று சிவனுக்காக சிக்கவில்லை என வருந்திய அதிபத்தர் நெடுநேரம் காத்திருந்தார்.

நெடுநேரம் கழித்து ஒரே ஒரு மீன் சிக்கியது , ஆனால் அது மகா மகா அபூர்வ மீன்.

ஆம், அதன் செதில்கள் தங்கமாய் இருந்தன, கண்களைச் சுற்றி மாணிக்கம் ஒளி வீசியது, வாலில் ரத்தினங்கள் இருந்தன. பற்களில் வைடூரியம் ஒளி வீசிற்று. தங்க சூரியன் கையில் இருப்பது போல அதிபத்தர் கையில் அப்படி மின்னியது அந்த மீன்.

ஒரே நொடியில் ஏழ்மையின் ஆழத்தில் இருந்து கோபுரத்துக்கு அதிபத்தரை தூக்கி செல்லும் மீன் அது, ஏழு தலைமுறைக்கும் அவருக்கு தேவையானதைக் கொடுக்கும் மீன் அது

கடலில் அதை அவர் பிடித்ததும் அக்கம்பக்கப் படகுக்காரர்கள் வந்தார்கள். இத்தோடு அதிபத்தரின் வறுமை ஒழிந்தது என்று கூவினார்கள். சிவன் அவரை கைவிடவில்லை என்றார்கள், தங்கள் வலையினை சோகமாக நொந்து கொண்டார்கள்.

அதிபத்தரின் நிலை ஒருவகையில் சிக்கலாய் இருந்தது, உடன் இருந்த மானிடரோ அதிபத்தருக்கு வாழ்வு வந்தது, சிவன் தன் பக்தரை வாழ வைத்தான் என கூக்குரலிட்டனர், இனி சிவனுக்கு ஆலயம் கட்டி அள்ளி கொடுப்பார் அதிபத்தர் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தன.

அதே நேரம் வானில் இருந்து சிவனும் பார்வதியும் பூத கணங்களும் நந்தியும் அதிபத்தரை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

நிலைமையினை கவனியுங்கள்.

கையில் இருப்பதோ தங்கமீன், வீட்டில் இருப்பதோ கொடும் வறுமை. நிச்சயம் இது சிவனின் கருணை, சந்தேகமில்லை. நாளெல்லாம் சிறந்த மீனை அதிபத்தர் கொடுத்ததற்கு, ஒரே மீனையும் கொடுத்த பலனுக்கு, அந்த பக்தனுக்கு சிவன் கொடுத்த பெரும் பரிசு.

ஆனால் கிடைத்திருப்பது ஒரு மீன், இதை எடுத்துச் சென்றால் அவரின் பக்தி பலன் எதிர்பார்த்தது என்றாகி விடும், இதுகாலம் காத்த தவம் போலி என்றாகி நொடியில் சரியும், தங்கமீனுக்காகத் தவமிருந்தான் அதிபத்தன் எனும் பழி வரும். அவரும் சராசரி பக்தனாகி விடுவார், பின் எங்கிருந்து தனித்து நிற்பது?

இந்தப் புள்ளியில் வசமாக சிக்கினார் அதிபத்தர்.

சிவன் புன்னகை பூக்க அவரை பார்த்து கொண்டிருந்தார், பூத கணங்களும் , பார்வதியும், தேவர்களும் நந்தியும் அவர் என்ன செய்ய போகின்றார் என இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனை.

இது பக்தியின் பரிசு என சொல்லி பெரும் கோவில் கட்டுவார் என்றது ஒரு பூதம், தன்னை நம்பிய பக்தனை சிவன் கைவிடவில்லை என அவர் புகழ் நிலைக்கும் என சொன்னது மற்றொரு பூதம்.

“கூட ஒரு மீன் கொடுத்திருக்கக் கூடாதா நாதா.. இதென்ன விளையாட்டு ” என சொல்லிக் கொண்டிருந்தார் தேவி.

அதிபத்தர் கையில் இருப்பது ஒரு மீன், அவரின் வாழ்வும் அதில்தான் இருக்கின்றது, அவர் சிவன் மேல் கொண்ட பக்தியும் அதில்தான் இருக்கின்றது.

வாழ்வா? சிவன் மேல் கொண்ட அன்பா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் அதிபத்தர் என எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிபத்தர் மீனை தூக்கிப் பிடித்தார், “சிவனே, என்னை ஆட்கொண்ட பெருமானே. எக்காலமும் என் கையில் இருக்கும் மீன்களில் எது சிறந்ததோ , அதை உனக்கு தந்தேன், இதோ மீனகளிலெல்லாம் மகா உயர்ந்த தங்கமீன் கிடைத்திருக்கின்றது.

மிக சிறந்த மீனை உனக்காக கடலில் விடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ எடுத்துக் கொள், ஓம் சிவோஹம்” எனச் சொல்லி சிவனுக்கு கடலில் அர்ப்பணம் செய்து விட்டார்.

அந்த முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ கலக்கமோ இல்லை, பெரும் தனபொருள் கைவிட்டு போகின்றதே எனும் சிந்தனை துளியுமில்லை.

தன் நிலை கலங்காது எந்நாளும் எப்படி மீனை சிவனுக்காய் கடலில் விட்டாரோ அப்படியே இதையும் செய்தார். அதன் விலை என்ன? பலன் என்ன? இன்னபிற லாப சிந்தனையெல்லாம் அவரில் இல்லை.

கிடைத்த பொக்கிஷமான மீனையும் சிவனுக்குப் படைத்தோம் எனும் திருப்தி மட்டும் அவரின் முகத்தில் ஒளிர்ந்தது.

அவரின் கொடிய வறுமை அவருக்கு நினைவிலில்லை, ஊரின் ஏளனமும் , சீண்டலும் அவருக்கு நினைவிலில்லை, எல்லோரும் கைவிட்டு தனிமனிதனாய், அனாதையாய், பிச்சைக்காரனாய் நின்றதும் அவருக்கு வருத்தமாக இல்லை.

எந்நிலையிலும் என்னிடம் உள்ளதில் சிறந்தது எதுவோ அதை என் அப்பன் சிவனுக்கு தருவேன் என நின்றார். அந்த மீன் அவரை மயக்கவில்லை, குழப்பவில்லை, சுயநலத்தைத் தேடச் சொல்லவில்லை.

எல்லோரும் மீனால் அவருக்கு வாழ்வு என சொல்ல, அவரோ சிவனுக்குக் கொடுக்க, மிகப்பெரும் அர்ப்பணிப்பு பாக்கியம் கிடைத்தது என்று தான் அந்த மீனைக் கண்டார்.

ஆம். அவர் அவருக்காக வாழவில்லை, அவரின் வாழ்வும், நோக்கமும், எண்ணமும் எல்லாமே சிவம், சிவம், சிவம் ஒன்றே.

அந்த அன்பு சிவனை தோற்கடித்தது, மகா தூய்மையான அன்பின் உச்ச பக்தியில் சிவனையே தோற்கடித்தார் அதிபத்தர்.

அந்த நொடி, சிவன் பெயரைச் சொல்லி தங்கமீனை அதிபத்தர் கடலில் இட்ட அந்த நொடி..

அவர் புன்னகையும் நிம்மதியும் கொண்டு , துளி சஞ்சலமின்றி அந்த தங்கமீனை சிவனுக்காக கடலில் விட , வானில் பேரொளி தோன்றிற்று, ஒளியின் நடுவில் சிவபெருமான் ரிஷபம் மேல் பார்வதியுடன் இருந்தார்.

ஊர் அறிய உலகறிய அவரின் பக்திக்குச் சான்றாக சிவனே அங்கு வந்தார், வந்து அருள் புரிந்தார். அதிபத்தர் இழந்த எல்லா வாழ்வும் திரும்பிற்று.

“எல்லாவற்றையும் விட என்மேல் அன்பு வைத்து அதை நிரூபித்தும் காட்டிய அதிபத்தா, உன் புகழ் எக்காலமும் நிலைக்கும், அத்தோடு கயிலையில் நீ என் திருவடியில் இருக்கும் பாக்கியம் பெறுவாய்..” என சொல்லி வாழ்த்தி சென்றார் சிவன்.

அதன் பின் பெருவாழ்வு வாழ்ந்த அதிபத்தர் பூமியில் வாழ்வு கடன் முடித்தபின் சிவலோகப் பதவி அடைந்தார்.

எந்நிலையிலும் கலங்காத, குறையாத சிவனின் மேலான அன்பு அவரை நாயன்மார்களில் முதலிடத்தில் வைத்தது.

63 நாயன்மார்களில் முதல் நாயன்மார் இந்த அதிபத்தரே.

இது எப்படி சாத்தியமாயிற்று?

அதிபத்தர் சாமான்யன், அவருக்கு வேதம் தெரியாது, லிங்கம் தெரியாது, அபிஷேகம் தெரியாது, மந்திரம் தெரியாது, வில்வ இலை அர்ச்சனை தெரியாது, சிவன் மூலகடவுள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது.

ஆனால் அந்த பக்தியில் உன்னதமாய் உறுதியாய் இருந்தார், தன் மனதில் சிவனுக்கு அவ்வளவு பெரும் இடம் கொடுத்திருந்தார். அந்த அன்பின் உறுதியே அவரை இயக்கிற்று. அந்த அன்பின் தன்மையே அவரை நாயன்மார்களில் முதல் நபராக்கிற்று, காலாகாலத்திற்கும் முதலிடத்தில் அவரை சேர்த்தும் விட்டது.

அவரை நாயன்மார் வரிசையில் சேர்த்தது கல்வியா? வேதமா? வழிபாடா? யாகமா? தவமா? எதுவுமில்லை. மாறாக அன்பு, எனக்கு உன்னை தவிர ஏதும் தெரியாது சிவனே என சரணடைந்த அந்த தூய அன்பு.

அதிபத்தரை வாழ்த்திவிட்டு கயிலாயத்தில் அமர்ந்திருந்தார் சிவன், பூலோகம் எங்கும் அதிபத்தரின் சிவ‌ அன்பும் , சிவன் அவனுக்கு காட்சி கொடுத்ததுமே பேச்சாய் இருந்தது.

சிவனை நோக்கி மெல்ல சிரித்தாள் தேவி, “என்ன சிரிப்பு இது “, என வினவினார் சிவன்.

“நாதா, உங்கள் மேல் அன்பு கொண்ட அடியவரே இவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருந்தால், அவர் வணங்கும் நீங்கள் எவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருக்க முடியும். அன்பே சிவம்” என மெல்ல சொன்னார் தேவி.

“ஆம் தேவி, எந்த சக்தியாலும் கட்டமுடியாத என்னை அன்பு எனும் ஆயுதம் கட்டிப் போடுகின்றது. இதை உணர்ந்து தான் அசுரரும் தவமிருந்து என்னை உருகச் செய்து அவர்களுக்கு வேண்டிய வரத்தை பெறுகின்றனர்.

அன்பு கொண்டு எவர்வரினும் நான் அவர்கள் யாரென பார்ப்பதில்லை, நோக்கம் பற்றி சிந்திப்பதில்லை, அன்பு ஒன்றே அவர்கள் முகவரி. அன்பு என்ற கயிறால் என்னை கட்டுகின்றார்கள், அன்பால் என்னை அடைந்து அவர்கள் கேட்கிறார்கள்.. நான் கொடுத்து விடுகின்றேன் தேவி..”

ஆம், சிவன் எனும் மிகப்பெரும் பரம்பொருள் யாகத்துக்கோ, பலிக்கோ, வழிபாட்டுக்கோ, இல்லை பிரார்த்தனைகளுக்கோ கட்டுப்படுபவர் அல்ல. அவர் அன்பே உருவானவர், அன்பு ஒன்றுக்கே அந்த சிவம் அசையும் என்பதை நிரூபித்து முதல் நாயன்மார் எனும் பதத்தை அடைந்தார் அதிபத்தர்.

அவரை தன் காலடியில் சேர்த்து அது மகா உண்மை என நிரூபித்தார் சிவன். சிவனும் சிவனடியாரும் அன்பும் வேறல்ல, மூன்றும் ஒன்றே.

இன்றும் நாகையில் வருடாவருடம் அந்தக் காட்சி நடைபெறும். திருசெந்தூர் சூர சம்ஹாரம் போல, மதுரை மீனாட்சி கல்யாணம் போல நாகையில் ஆவணிமாதம் ஆயில்ய நட்சத்திர நாள் தங்கமீனை படகில் சென்று கடலில் விடும் நிகழ்வு நடைபெறும்.

அந்த நுளம்பாடி இருந்த இடம் இப்போதைய நாகையின் நம்பிக்கை நகர் பகுதியாகும்.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் இருந்து கிளம்பும் ஊர்வலம் அப்படியே அமுதீசர் கோவிலை அடையும் . அமுதீசர் கோவிலில் இருந்து தங்கமீன் சிலையினை எடுத்து செல்லும் அதிபத்த நாயனாரின் வாரிசில் ஒருவர் (ஆம் அவரின் வாரிசுகள் இன்றும் உண்டு) அந்தத் தங்க மீனை சிவன் பெயரை சொல்லி கடலில் விடுவர். அப்பொழுது மேளம் இசைக்கப்படும். ஆலய மணி முழங்கும்.

மிக விமரிசையாக நடக்கும் அந்த விழாவும், திருத்தொண்டர் புராணமும் எக்காலமும் அதிபத்தரின் அன்பினை பக்தியினை சொல்லிக் கொண்டே இருக்கும்.

நாகை கடல் அலை அதிபத்தரின் நினைவினை சுமந்து கொண்டே வீசிக் கொண்டிருக்கின்றது.

கடலும் மீனும் உள்ள அளவும் நிலைத்திருப்பார் அதிபத்தர்.

மீனையும் கடலையும் காணும் பொழுதெல்லாம் அதிபத்தர் உங்கள் நினைவில் வந்தால் சிவனின் அருள் உங்களையும் வந்தடையும்.

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருக்கு ஏதோ பூர்வ ஜென்ம தொடர்ச்சி மிக சரியாக இருக்கின்றது

அவர் பிறந்தபின் உத்திரபிரதேசத்தை அரசர் போல் ஆண்டுகொண்டிருந்த நேரு குடும்பம் செல்வாக்கினை இழக்க தொடங்கியது, இந்திரா மிகபெரும் சவால்களை சந்தித்தார்

அவர் வளர வளர நேரு குடும்பம் பல சோதனைகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்தது

அவர் அரசியலில் 18 வயது இளைஞனாக கால்வைத்த 1990க்கு பின் காங்கிரஸின் கடைசி நம்பிக்கையான ராஜிவும் இல்லாது போனார், அதே வருடம் மசூதியும் இல்லை

அப்பொழுது யோகி வீட்டை விட்டு நீங்கி 18 வயதிலே சன்னியாசம் ஏற்று கோரக்பூர் மடத்தில் இருந்தார்

மக்கள் சேவை மகேசன் சேவை எனும்பொழுது மகேசன் தொண்டன் ஒருவன் மக்கள் சேவகனாக ஏன் இருக்க முடியாது? அப்படி அரசியலுக்கும் வந்தார் அவர்

காங்கிரஸ் செய்த பெரும் தவறு சோனியாவினை தலைவராக்கி உபிபக்கம் அழைத்து சென்றது, அதை உபிமக்கள் விரும்பவில்லை அதை முலாயம்சிங், மாயாவதி கன்ஷிராம் ஆகியோர் கன கச்சிதமாக பயன்படுத்தி ஆட்டம் போட்டனர்

என்ன இருந்தாலும் இந்தியாவின் மத்திய அரசை நிர்ணயிக்கும் மாநிலமாக அதுதான் விளங்கிற்று. நேரு, சாஸ்திரி முதல் பலர் அங்கிருந்துதான் வந்தார்கள், இன்னும் வருவார்கள்

காங்கிரஸ் வீழ்ந்த நேரத்தில் , அரசியல் குழப்பம் கூடிய நேரத்தில் அங்கு தனி கவனம் பெற்று வளர்ந்தார் அவர், தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு அவரை அனுப்பி கொண்டே இருந்தது அந்த மண்

ஒரு கட்டத்தில் நேரு குடும்பம், மாயாவதியின் அடாவடி, முலாயம் குடும்பத்தின் வாரிசு சண்டை என பார்த்து சலித்த உத்திரபிரதேசம் அவரிடம் சரணடைந்தது

அதன் பின் உபி முதல்வராக தன் 46ம் வயதிலே அமர்ந்திருக்கின்றார் அவர்

ஆம் சந்நியாச பெயரான யோதி ஆதித்த்யநாத் என்ற பெயரை கொண்ட அஜய்சிங் பிஸ்த்

அவர் மேல் யார் என்ன சொன்னாலும் சில விஷயங்களை நம்மால் உறுதிபட சொல்லமுடியும்

அவருக்கென சொத்து இல்லை, ஊழல் என ஒரு குண்டூசி கூட காட்டமுடியாது. ஒரு குடிசையில் தவகோலத்தில் வாழ்ந்து வருகின்றார் அவர்.

அவரே சந்நியாசி ஆனபின் குடும்பத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை அவரின் குடும்பமோ 4ம் பங்காளியோ கூட ஊழல் செய்யமுடியாது.

எங்கு சென்றாலும் காவிவேட்டியும், அந்த மண்ணின் அடையாளமாய் செல்கின்றார்.

அரசியல் என்பது பக்திமார்க்கம் போன்றது, பந்த பாசத்தில் சிக்கியவன் அதில் பூரணமாக செயல்பட முடியாது.

Image may contain: 1 person, sitting and indoor

ஆயிரம் விலங்குகளில் சிக்கி தவிக்கும் அவனால் ஆட்சி எனும் வண்டியினை இழுக்க முடியாது, பற்றற்ற ஆசையற்ற பாச விலங்கற்ற குடும்ப உறவுக்கு அப்பாற்பட்ட கர்ம வீரனே அரசியலுக்கு சரி

காமாராஜரும் சாஸ்திரியும் அப்படி சந்நியாச கோலத்தில் நின்றார்கள், வரலாறு ஆனார்கள். அந்த வரலாற்றின் தொடர்ச்சியே யோகி.

நிச்சயம் உபி அவரை மதவெறியராய் பார்க்கவுமில்லை, அவர் அப்படி நடந்து கொள்ளவுமில்லை.

உபியில் சந்நியாசிகளும் இஸ்லாமியரும் மிக நெருக்கமாக பழகுவது பாரம்பரியமான ஒன்று என்பதால் இஸ்லாமியர்கள் அவரை தயக்கமின்றி ஏற்றுகொண்டார்கள்

யோகியின் அதிகாரிகள் முதல் அலுவலர் வரை இஸ்லாமியர்களே

அவரின் வெற்றி இதுதான், அவர் உபியின் சக்திவாய்ந்த தலைவராக உருவாக்கிய காரணங்கள் இவைதான்

பணத்துக்கு அலையாத மனம், கொஞ்சமும் பகட்டு இல்லா குணம், கொடிய எதிரியும் குற்றம் சொல்ல முடியா ஒழுக்கம், பக்தி மிகுந்தவன் மனசாட்சிக்கு கட்டுபட்டு ஆட்சி நடத்துவான் எனும் எதிர்பார்ப்பு

இவைதான் அந்த சக்திமிக்க மனிதனை உருவாக்கியிருக்கின்றது

இன்னொன்று மகா உன்னிப்பாக கவனிக்க வேண்டியது

500 ஆண்டுகளுக்கு முன் இடிக்கபட்ட ராமர்கோவில் அவரின் காலத்தில் கட்டபட வேண்டுமென விதியின் முடிவு எங்கோ யாராலோ எடுக்கபட்டிருக்கின்றது

அதனாலே அவரை விதி இழுத்து கொண்டு அந்த அரியணையில் வைத்து அதை கட்டவும் வகை செய்தது

ஆம், யோகி அரசியலை விரும்பவில்லை , பதவிக்கு வரவேண்டும் என ஆசைபட்டதுமில்லை. ராமர்கோவில் கட்டவேண்டும் என்றுதான் விரும்பினாரே தவிர தன் ஆட்சியில் கட்டவேண்டும் என அவர் விரும்பியதே இல்லை

காலம் அவருக்கான வழியினை செதுக்கியது, தடைகள் யாவையும் காலமே அகற்றியது, அதுவே மிக சரியான நேரத்தில் அவரை அமர வைத்து செங்கோலையும் கொடுத்தது

அதுவும் காங்கிரசும் , கம்யூனிஸ்டுகளும், மூன்றாம் அணி இம்சை குழப்பங்களும் ஓய்ந்த காலத்தில் மிக அழகாக வாழ்த்தி கொடுத்தது, இனி அவருக்கு சவால் என ஏதுமில்லை.

அது விதி என நம்பினால் விதி, தெய்வம் என நம்பினால் தெய்வம்

அவர் தெய்வத்தை நம்புகின்றார், மக்கள் அவரை நம்புகின்றனர், தேசம் அவரை கவனிக்கின்றது

நிச்சயம் பல தசாப்தங்கள் உபி பகுதியினை ஆண்ட நேரு குடும்பம் ஏதாவது உருப்படியாக செய்திருந்தாலோ இல்லை ராமர்கோவிலுக்கு ஒரு செங்கல் எடுத்து வைத்திருந்தாலோ ஏன் அவர்கள் வீழபோகின்றார்கள்?

காலம் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தது அவர்கள் அதை வீணடித்தார்கள், காலம் இப்பொழுது யோகியினை வைத்து தன் கடமையினை செய்கின்றது.

இன்று இந்தியாவின் நம்பிக்கைகுரிய இளம் தலைவராக அறியபடுபவர் அந்த யோகி, அவருக்கு இன்று பிறந்தநாள்.

விவேகானந்தர் சொன்னார் அல்லவா? தேசபற்றும் ஆன்மீகமும் அறிந்த 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் இந்த தேசத்தை நான் மாற்றுகின்றேன் என கர்ஜித்தார் அல்லவா?

அந்த கனவின் உருவம், விவேகானந்தர் கண்ட 100 இளைஞர்களின் மொத்த உருவம்

அவரிடம் விவேகானந்தரின் சாயல் இருக்கின்றது, அமெரிக்காவில் “எமக்கு ஒரு கனவு உண்டு” என முழங்கிய மார்ட்டின் லுத்தர்கிங்கின் சாயல் இருக்கின்றது

அப்படியே “இது எம் மண், எங்கள் கலாச்சாரத்தை மீட்டெடுத்து மாபெரும் வரலாறு படைப்போம்” என சொல்லி ஈரானில் மிகபெரும் எழுச்சியினை ஏற்படுத்தி இன்றுவரை ஈரான் தனித்து நிற்க காரணமானானே அந்த கொமேனியின் சாயலும் இருக்கின்றது

ஆம், அந்த யோகி ஒரு ஆச்சரியம், காலம் உருவாக்கிய ஒரு நம்பிக்கை

இந்த மண்ணின் மரபறிந்த, ஞானம் அறிந்த மக்களின் உணர்வறிந்த, அறம் அறிந்த , இந்நாட்டின் தாத்பரியமும் தர்மமும் பாரம்பரியமும் அறிந்த ஒருவனே இந்த ஞானபூமிக்கு நல்வழி காட்டமுடியும்

யோகி அதை அழகாக செய்கின்றார்.

நாம் முன்பே சொன்னபடி உபி என்பது பிரதமர்களை கொடுக்கும் மாநிலம், சாஸ்திரி போன்ற அபூர்வ பிரதமர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்

அப்படி பின்னொரு நாளி காவி அணிந்த சாஸ்திரியாக, காவி அணிந்த காமராஜராக அவர்களின் வாரிசாக யோகி ஒரு நாள் பிரதமர் பதவியில் அமர்வார்

அன்று ஈரானிய எழுச்சி போல, கரிபால்டி உருவாக்கிய இத்தாலி போல, கமால் பாட்சா உருவாக்கிய நவீன துருக்கி போல இத்தேசம் தன் பொற்காலத்தை அடையும்

கங்கை கரையில் சந்திரகுப்தன் ஆண்டபொழுது பாரத கண்டம் எப்படி பொற்காலத்தில் இருந்ததோ அதே பொற்காலத்தை நிச்சயம் மீட்டெடுக்கும்

காலம் மிகபெரும் கடமையினை நோக்கி அவரை அழைத்து சென்றுகொண்டிருகின்றது, அந்த தர்மவாதி தன் பிறவிகடமையினை, மிக பாரமான கர்மாவினை நிச்சயம் நிறைவேற்றுவார்

எல்லா தெய்வங்களும் அவருக்கு அந்த ஆற்றலையும் வலிமையும் வழங்கும், தேசம் செழிக்கும், தர்மம் அரங்கேறும்.

காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை

அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள்

அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள்.

டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி

கவனியுங்கள்

குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா தலித்

ஸ்டாலினுக்கு பெரும் அடித்தளம் அமைத்த 60 வருடம் தமிழக அரசியலை ஆட்டி வைத்த கருணாநிதி ஒரு தலித்

திமுகவின் பலம் வாய்ந்த கனிமொழி தலித், ஆ.ராசா தலித்

மீடியாவில் கோலோச்சும் சன்டிவியின் கலாநிதிமாறன் வரை யார்? தலித் வம்சம், மறுக்க முடியுமா?

இது போக பாஜகவின் மாநில தலைவர் முதல் ஏகபட்ட தலித்துக்கள் மேல் மட்டத்தில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர்

இது போக ஏகபட்ட சட்டங்களும் இப்பொழுது அவர்களுக்கே சாதகம்

கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு என ஆதிக்கம் செலுத்தும் சாதி எது?

உயர்சாதியா? மற்ற சாதியா? எது ஆதிக்கம் செலுத்தும் சாதி?

ஆக இப்பொழுது ஆதிக்க சாதி யாரென்றால் சாட்சாத் இவர்கள்தான்

ஆம், “பார்ப்பபானை ஏ பார்ப்பானிய பயலே, ஆரியனே, பூனூலே..” என கண்டபடி திட்டலாம், சட்டம் பார்த்துவிட்டு “ஓ அவர்களையா திட்டட்டும், அவர்களை சாதிபெயர் சொல்லி திட்டினால் தண்டிக்க இடமில்லை” என அதன் போக்கில் இருக்கும்

ஆனால் வேறு சாதிகள் பெயரை உச்சரித்தாலோ , தொழிலை சொன்னாலோ சட்டம் இரும்புகரமாய் பாயும், கொடும் வழக்கு பாயும்

ஆக யாருக்கு இருக்கின்றது பாதுகாப்பு? யாருக்கு இருக்கின்றது ஆதிக்கம்? எது ஆதிக்க சாதி?

தாங்கள்தான் ஆதிக்க சாதி என தெரியாமல் இப்பொழுதும் வேறு யாரையோ கைகாட்டி அவர்கள்தான் ஆதிக்கசாதி என சொல்பவர்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது

அய்யன்மீர்… இப்பொழுது ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க சாதி நீங்கள்தான், அதை முதலில் உணருங்கள்

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

அது 1974ம் ஆண்டு, ஈழ தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது.

இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. கொண்டுவந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக, தந்திரகாரி அவர்.

யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ.

அதாவது இடஒதுக்கீடு எனும் முறையை ஒரு சட்டம் மூலம் கொண்டுவந்தார் அதன்பெயர் தரப்படுத்துதல்.

தரபடுத்துதல் என்றால் ஈழதமிழர் நிலைக்கு சிங்களரை தரம் உயர்த்தபோகின்றாராம் அவ்வளவுதான் விஷயம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நமது மாநிலத்தில் 95% மதிப்பெண்பெற்ற உயர்சாதி மாணவனுக்கு கிடைக்கும் உயர்படிப்பும் அரசு வேலையும் 35% எடுத்த தாழ்த்தபட்டமாணவனுக்கு கிடைக்கின்றதல்வா?

அதேதான் அங்கே தரபடுத்துதல், உயர்வகுப்பு மாணவன் நிலையில் ஈழமாணவர்களும், தாழ்த்தபட்ட வகுப்பில் சிங்கள மாணவர்களும் வையுங்கள் புரியும்.

(இங்கே இட ஒதுக்கீடு என்பது வேண்டும் என கத்தும் கும்பல்கள்தான், சிங்களன் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தபொழுது எதிர்த்தன சமஉரிமை வேண்டும் என்றன‌ என்பது வரலாற்று காமெடி)

இந்தியா என்பது வித்தியாசமான அரசியல், உயர்வகுப்பினர் யாரும் கலவரம் செய்யவில்லை, ஆனால் ஈழமக்கள் கல்வியை உயர்வாய் கருதுபவர்கள் பொங்கிவிட்டார்கள்.

உண்மையில் இட ஒதுக்கீடு என்பது அநீதி, திறமை இருக்கும் ஒருவனுக்கு, தகுதி உள்ள ஒருவனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், தகுதி அற்ற திறமை அற்ற ஒருவனுக்கு வலிய கொடுக்கும் அநீதி

இந்த அநீதி இந்தியாவில் புரட்சி, ஆனால் இலங்கையில் பெரும் ஈழ எழுச்சியாயிற்று

சொல்லபோனால் ஈழபிரச்சினை பெரும் திருப்பமாக இங்குதான் மாறிற்று, மாணவர்கள் போராட இறங்க, அரசியல்வாதிகள் தீ மூட்டினார்கள்.

மாணவர்கள் கூட்டமைப்பு ஆயுதம் தாங்க தீர்மானித்தது, சிவகுமாரனும் அதில் ஒருவர்.

அப்படி புறப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் சிவகுமாரன், முதல் போராளி நிச்சயம் அவனே.

நமது மதிப்பெண்கள் குறைக்கபட்டுவிட்டன, இனி எதிர்காலமில்லை என அரசியல்வாதிகள் முழக்கமிடும் கூட்டத்தில் எல்லாம் அவன் முன்னணியில் இருந்தான்,

சிங்களனோடு பேசும் தமிழர்கள் துரோகிகள் என்பதை குறித்துகொண்டான், அவர்கள் கைகாட்டிய திசையில் ஆல்பர்ட்துரையப்பா இருந்தார், அவர் அப்போது யாழ்பாண மேயர்.

அவரை குறிவைத்தார் சிவகுமாரன், அவரது வாகனத்திற்கு குண்டுவைத்ததான் சிவகுமரன், ஆனால் உயிர்தப்பினார் துரையப்பா.

(பின்னாளில் அவர் பிரபாகரனால் கொல்லபட்டார்)

ஆனால் ஈழத்தில் தமீழத்திற்காய் முதலில் வெடித்தகுண்டு இதுதான். 1975ல் தொடங்கிய அந்த ஓசை அதன் பின் 2009ல்தான் ஓய்ந்தது

அதன்பின் காவல்துறையின் தீவிரசோதனையில் அகப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கபட்டான், ஒரு பைசா குறையாமல் சிவகுமாரனின் தாய் தாலியை விற்று கொடுத்த பணத்தில் ஒரு தமிழ் வக்கீல், கவனிக்கவும் தாலிவிற்ற பணத்தில் தமிழ்வக்கீல் வாதாடி ஜாமீனில் வெளிவந்தான் சிவகுமாரன்.

அந்த வழக்கறிஞரும் ஒரு தமிழரே.

அப்பொழுதுதான் 1974 யாழ்பாண உலகதமிழ்மாநாடு நடைபெற்றது, சிங்கள அரசு ஒரு தமிழ்பேச்சாளருக்கு தடைவிதித்திருந்தது, சீமான் போன்ற ஒரு மாதிரியான பேச்சாளர் அவர், அவரை மேடையில் ஏற்ற போலிஸ் தடை விதித்திருந்தது.

ஆனால் ரகசியமாக கொண்டுவரபட்ட அந்த பேச்சாளருக்கு போதை பழக்கமும் இருந்தது, திடீரென அவர் மேடையேறினார், அங்கேயே கைதுசெய்ய நினைத்த போலீசுக்கும் மக்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

பெரும் கலவரம் அங்கு துப்பாக்கிசூட்டில் முடிந்தது, 11 பேர் பலியாகி இருந்தார்கள், துரதிருஷ்டவசமாக‌ மின்கம்பி அறுந்து விழுந்து செத்தவர்களும் இதில் உண்டு

இலங்கை அரசு இதில் சர்வதேசம் முன் வசமாக மாட்டி கொண்டது

ஒரு மிகபெரிய ரத்தசரித்திரத்தின் முதல் துளி அந்த மாநாட்டில்தான் நடந்தது, ஈழமக்கள் முழுவதும் கொந்தளித்த தருணம் அது

துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டவர் அமைச்சர் சந்திரசேகர. மாநாட்டு பந்தலிலே அமைச்சரை கொல்வேன் என சூளுரைத்தவர் சிவகுமாரன்.

அமைச்சர் மீதான எல்லா கொலைமுயற்சியும் தோல்வியில் முடிந்தது, அமைச்சருக்குஆயுள் கெட்டி.

ஆனாலும் இளைஞர்களை திரட்டி போராடிகொண்டிருந்தார் சிவகுமாரன், சிங்கள அரசின் உளவாளியாக யாழ்பாணத்தில் இருந்த நடராஜா என்பவரை கொல்லும் திட்டத்தில் இருந்த சிவகுமாரனை, நடராஜனை உலவவிட்டு சுற்றிவளைத்தது போலீஸ்.

ஒருமுறை சிக்கி அனுபவித்த சித்திரவதைகளை எண்ணிய சிவகுமாரன், இம்முறை சயனைடு கடித்து உயிர்விட்டார்.

அந்த மரணம் ஈழ மக்களை உலுக்கிற்று, மொத்த ஈழமும் அவனுக்காய் அழுதது. ஈழ மக்களை ஒரு புள்ளியில் மொத்தமாய் குவித்து அழவைத்த சம்பவம் அது.

ஈழ இளைஞர்களிடையே அத்தருணம் ஒரு எழுச்சி ஏற்பட்டது,மிக பெரிய சுனாமிக்கு அவர்கள் தயாரானர்கள், தாய்மார்களும் அவர்களை தடுக்கவில்லை

ஏன் ஈழவரலாற்றிலே முதல்முறையாக பெண்களும் சுடுகாடுவரை சென்று அஞ்சலி செலுத்தினர் என்றால் சிவகுமாரன் ஏற்றிவைத்த உணர்ச்சி எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ளலாம், சில வாரங்கள் தொடர்ந்து அவனுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.

ஈழத்தின் முதல் விடுதலை குண்டும் அவன் வீசியது, முதல் தற்கொலை போராளியும் அவனே.

அதன்பின் நடந்ததெல்லாம் உலகம் அறிந்தவை.

ஆனால் தமிழக தமிழர் தற்போது அறிபவை ஒன்றே ஒன்றுதான். ஈழம் என்றால் பிரபாகரன், போராட்டம் என்றால் பிரபாகரன்.

இடஒதுக்கீடு எனும் தரபடுத்ததுதல் சட்டமும், கல்வி இல்லை என்றால் வாழ்கை இல்லை எனும் பயமுறுத்தலும் அவனை போராளி ஆக்கிற்று.

இந்த சலசலப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது, ஈழதமிழர் கண்ணீர் என செய்திகள் வந்தது, இந்தியா லேசாக தலையிட்டது

இந்திய மாநிலங்களில் இட ஒதுக்கீடு இல்லையா? என சிறீமாவோ கேட்ட கேள்விக்கு இந்தியா பதில்கூறமுடியவில்லை.

அன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த முத்தமிழ் நாயகன், உலக தமிழர்களின் தலைவரான கருணாநிதியால் இந்த இடத்தில் வாய் பேசமுடியவில்லை

பிராமணனுக்கு எதிராக செய்தால் புரட்சி, ஈழதமிழனுக்கு எதிராக செய்தால் இனவிரோதமா என சிங்களன் கேட்ட கேள்விக்கு எந்த இந்திய தமிழனிடமும் பதில் இல்லை

இடஒதுக்கீடு இல்லாமல் இந்தியாவில் எந்தமாநிலத்தில் ஆட்சிசெய்யமுடியும்? வாக்கு வங்கியின் ஆதாரமே அதுதானே. ஜனநாயக ஆட்சிதான் ஆனால் மெஜாரிட்டி வோட்டுவங்கி இருக்கும் இடம்தானே அரசியலுக்கு முக்கியம்.

ஆனால் திறமைக்குத்தான் முக்கியம் என சொல்லி, அதிக மதிப்பெண் எடுத்தவனுக்குத்தான் முன்னுரிமை என ஈழமாணவர் அமைப்புகள் கேட்டது எக்காலத்திலும் தவறாகாது.

சிவகுமாரன் சாவினை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது, மாணவர்கள்பால் ஈழமக்களிடையே அனுதாபம் தோன்றிற்று இனகலவரங்கள் வெடித்தன‌

ஒருநாடும் எட்டிபார்க்காத நிலையில்தான் இந்தியா கொஞ்சம் மனிதாபிமானத்தோடு களமிறங்கிற்று..

கொழும்பு கலவரத்தை காரணமாக கொண்டு களமிறங்கி ஆடிபார்த்தது, அது இந்திரா படுகொலையாலும், ஜெயவர்த்தனேவின் ராஜதந்திரத்தாலும், பிரேமதாசாவின் நரித்தனத்தினாலும் வெளியேறிற்று.

இன்று என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டது.

ஆனால் ஈழபோராட்டத்தை முதலில் ஆயுதபோராட்டமாக துணிவுடன் தொடங்கியர் இந்த பொன்.சிவகுமாரன்.

அந்தோ பரிதாபம், ஈழத்திற்காக போராடுகின்றோம், களமாடுகின்றோம் என கத்தி கத்தி முஷ்டிமடக்கும் யாரும் அவனை நினைவுகூறவில்லை.

ஈகிகள் என ராஜிவ்கொலையாளிமுதல் சாஸ்திரிபவன் முன்னால் இறந்த முத்துக்குமார் வரை நினைவு கூறுபவர்கள், முதல் தற்கொலை போராளியான இவரை , குட்டிமணி குழுவை, உமா மகேஸ்வரனை, சபாரத்தினத்தை எல்லாம் அம்னீசியா நோயாளிகளாக மறந்துவிடுவதும் வேடிக்கை,

இப்படி எத்தனையோ பெரும் தியாகிகள், போராளிகள் அங்கு உண்டு, இவர்களை எல்லாம் மறைத்துவிட்டு நாங்கள் மட்டும் தான் என இறுதிவரை சொன்னவர்கள் புலிகள், இவர்களை போன்றவர்களுக்காக ஒரு தீக்குச்சி கூட புலிகள் கொளுத்தவில்லை

பிரபாகரனின் ஒருவிதமான சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச கொள்கை அது, தான் மட்டும்தான், என் சொல் கேட்டவர்கள் மட்டும் போராளிகள், தமிழகத்தில் அது மட்டும்தான் தொடர்ந்தது

பிரபாகரனுக்காய் செத்தவர்கள்தான் மாவீரர்கள் போராளிகள் என்பது பிற்காலத்தில் உருவான பச்சை பொய், பொன் சிவகுமாரன் சாகும்பொழுது பிரகாரன் குட்டிமணி கும்பலில் துப்பாக்கி துடைக்கும் வேலையில்தான் இருந்தார்.

இவர்கள் எல்லாம் ஈழத்திற்காய் அல்லாமல் காதல்தோல்வியிலோ அல்லது கடன் தொல்லையிலா செத்தார்கள்?

இன்று ஜூன் 5 அந்த மாவீரனின் நினைவுநாள்.

இதை எல்லாம் நினைத்துபார்த்து அவனை நினைவுகூறகூட யாருமில்லை என்பதுதான் உண்மையான ஈழ சோகம்.

சுருக்கமாக சொன்னால் இன்றுதான் 1974ல் ஈழம் புதுபோராட்டத்துடன் களமிறங்க பெண்கள் கூட சிவகுமாரனின் சாம்பலில் சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள்,

ஆனால் பிரபாரனுக்காய் செத்தவர்கள்தான் “போராளிகள்”,பிரபாகரனை ஆதரித்தவர்கள்தான் “இன‌உணர்வாளார்கள்”, இப்படித்தான் ஈழவரலாறு இப்பொழுது தமிழகத்தில் திருத்தி எழுதபடுகின்றது.

உண்மையான ஈழஎழுச்சி இந்த நாளில்தான் தொடங்கியது . பின்பு பற்றி எரிந்தது, பல குழுக்கள் உருவாயின, பின்பு புலிகள் எல்லோரையும் அடக்கி தானும் அழிந்தனர், ஈழபோராட்டம் முற்றுபெற்றது

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

இன்றும் அவன் ஈழத்தில் வணங்கபடுவான் என்றும் வணங்கபடுவான்

அவனுக்கு சிலையும் உண்டு, அவன் செத்த இடத்தில் வழிபாடும் உண்டு

சிவகுமாரன் யாரென மெதுவாக அங்கிள் சைமனிடம் விசாரியுங்கள்,

“அட அவன தெரியாதா நம்ம பைய, நானும் அண்ணனும் பொட்டம்மானும் புட்டு சாப்பிட்டபொழுது கதலி பழம் உரிச்சி தந்தவனே அவன் தானே, அவன் கூட கோலி எல்லாம் விளையாடினேன்” என சிரிக்காமல் சொல்வார்.

Image may contain: 1 person, hat

மத்திய அரசை வாழ்த்துகின்றோம்.

கொரோனா காலத்தில் தன் மகளின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை மக்களுக்கு செலவிட்ட மதுரை மோகன் என்பவரை முன்பே மோடி பாராட்டியிருந்தது குறிப்பிடதக்கது.

இப்பொழுது அவரை இன்னும் கவுரவத்திருக்கின்றது அரசு

அதாவது மோகனை அழைத்து கட்சியில் சேர்க்கவில்லை, ஒன்றிய தலைவர் பதவி கொடுக்கபடவில்லை அது அரசியல்

அதை விட பெரும் கவுரவத்தை செய்திருக்கின்றது மத்திய அரசு.

ஆம் எந்த மகளுக்காக சேர்த்துவைத்த பணத்தை மோகன் மக்களுக்கு செலவிட்டாரோ, அதனால் எந்த மகளுக்காக கலங்கி நின்றாரோ அந்த மகளை ஐ.நாவுகான நல்லெண்ண தூதராக அறிவித்திருக்கின்றது இந்திய அரசு

இது வாழ்த்துகுரிய விஷயம், தேசத்துக்காக தன்னலமற்று உழைக்கும் யாரையும் தேசம் கைவிடாது எனும் மிகபெரிய நம்பிக்கை

மத்திய அரசை வாழ்த்துகின்றோம்

படித்து நாட்டிற்காக பணியாற்ற வேண்டிய அந்த பெண், இனி ஐ.நா நல்லெண்ண தூதராக பணியாற்றி மென்மேலும் பெரும் கல்வி பெற்று உயர்ந்து நாட்டுபணியாற்ற நாமும் வாழ்த்துவோம்.

ஒரு நல்ல தலைவன் மாபெரும் நல் வழிகாட்டுவான், மிக பெரும் உற்சாகத்தை தேசத்துக்கு கொடுப்பான் என்பது இதுதான்

மதுரையின் ஏழை சிறுமியினை அப்படி அந்த நல்ல தலைவன் உலகறிய செய்திருகின்றான்.

நாமும் அக்கட்சியினை கவனிக்கின்றோம், இன்று உத்திர பிரதேச முதல்வர் யோகிக்கு பிறந்த நாள் அவருக்கு வாழ்த்துக்கள்

யார் யோகி?

பணமும், படிப்பும், பெரும் பின்புலமுமற்ற வெறும் ஆண்டி பண்டாரம். ஆனால் தேசம் நலம்பெற வேண்டும் என விரும்பும் ஆண்டி

அவனுக்கு திருவோடு கூட இல்லை, காவி உடை தவிர ஆடையுமில்லை ஆனால் நாடுவாழ ஆசை மட்டும் இருந்தது

அவரை மாநில முதல்வராக அமரவைத்த கட்சி அது, தாழ்த்தபட்ட ஒருவரை குடியரசு தலைவராக வைத்திருக்கும் கட்சியும் அது

அடிமட்டத்தில் கிடக்கும் ஒருவனின் நாட்டுபற்றையும் அவனின் உழைப்பையும் கண்டு கைதூக்கி உயர மின்னும் வாய்ப்பளிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே

அதை மறுக்க யாராலும் முடியாது. அந்த தன்மை ஒன்றாலே ஆலமரமாய் நிற்கின்றது அக்கட்சி.

இந்திய சீன முறுகலில் ஒரு நாடு கனத்த அமைதி , அது யாரென்றால் ரஷ்யா.

என்னதான் கொரோனா என்றாலும் அமெரிக்கா வரதுடித்து என்னவெல்லாம் சொல்லும் களத்துக்கு ரஷ்யா வராமல் இருப்பது ஆச்சரியமாக பார்க்கபட்டது

இப்பொழுது இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் எதையோ சம்பிரதாயத்துக்கு சொல்லியிருக்கின்றாரே தவிர விஷயம் வேறு எங்கோ செல்கின்றது

இந்தியாவும் சீனாவும் வைத்திருப்பது ரஷ்ய சாதனங்களே, இனி யுத்தம் என வந்தால் ரஷ்ய ஆயுதங்களே இருபக்கமும் பாயும்

பாகிஸ்தானும் பெரும்பாலும் இப்பொழுது சீனாவுடன் சாய்வதால் இனி இந்திய எல்லையில் எந்த யுத்தம் வந்தாலும் ரஷ்ய ஆயுதமே வெடிக்கும்

சீன தயாரிப்பு சில உண்டு என்றாலும் சீனா பெரிதும் நம்புவது ரஷ்ய எஸ் 400 சாதனம் உட்பட சில ரஷ்ய தயாரிப்புகளே

இந்தியா இதை எப்பொழுதோ உணர்ந்துதான் அமெரிக்காவிடமும் கைகொடுக்க தவறவில்லை, இரு நாடுகளும் ரஷ்ய ஆயுதமே பயன்படுத்துவது என்பது முழுக்க சரியுமல்ல, முழு தவறுமல்ல‌

எவ்வளவு பாதுகாப்போ அவ்வளவுக்கு பாதுகாப்பு குறைபாடும் அதுவே

ஆனால் இந்தியாவுக்கு எப்பொழுதும் ரஷ்ய ஆயுதங்களுக்கு பதிலீடு தேவை என்பதால் இந்தியா அமெரிக்க பக்கமும் மெல்ல சரிகின்றது

அமெரிக்காவுக்கு இந்தியா எந்நாளும் விருப்பமான நாடே, ஆனால் நேரு மற்றும் காங்கிரஸின் முடிவே அவர்களை பாகிஸ்தான் பக்கம் தள்ளியது

இப்பொழுது இந்தியா மெல்ல அமெரிக்க பக்கம் சரிகின்றது

இதன் விளைவாக ரஷ்யாவும் மெல்ல பாகிஸ்தான் பக்கம் சரிகின்றது, சில அறிக்கைகள் அதை தெளிவாக சொல்கின்றன‌

உலக அரசியலும் இப்படித்தான் அடிக்கடி மாறும். ஆளாளுக்கு நெருங்குவார்கள் பின் மாறுவார்கள் ஒருவரை ஒருவர் ரகசியமாக எச்சரிப்பார்கள், அவர்கள் மொழி அவர்களுக்குத்தான் புரியும்

இப்பொழுது உலகுக்கு புரிவது என்னவென்றால் மோடியின் இந்தியா வலுவான கூட்டணிகளை உலகுக்கு வழங்குகின்றது

பாகிஸ்தானை கைகழுவிட்டு இந்தியா பக்கம் சாயும் அமெரிக்கா இனி பெரும் ஆச்சரியங்களை இந்தியாவுக்கு கொடுக்கும்

ஏற்கனவே சீனபிடியில் கழுத்து கை கால் என இருக்கும் பாகிஸ்தானில் எஞ்சியுருப்பது சில விரல்களும், தலை முடியுமே. அதையும் ரஷ்யாவிடம் கொடுத்துவிட போகின்றது பாகிஸ்தான்

பாவம் அவர்கள் ஜாதகம் அப்படி.

சீனா , நேபாள அடிமைக்கு ஒரு வில்லங்கமான திட்டத்தை கொடுத்தது.

நேபாள அமைச்சர் ஒருவரும், பிரதமர் ஓலியும் ஒரு வரைபடத்தை வைத்து கொண்டு இந்தியா எங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது என கூப்பாடு போட்டதற்கு இந்தியா பதிலேதும் சொல்லவில்லை

காரணம் இரு நாடுகளும் ஒப்புகொண்ட வரைபடம் உண்டு, அதில் சர்ச்சைகுரிய பகுதிகள் இந்திய பகுதி என்பது என்றோ தீர்வாயிற்று

நேபாளத்தில் சில குழப்பவாதிகள் தூக்கிதிரியும் படம் நேபாள அரசால் அங்கீகரிக்கபட்ட படமல்ல என்பதால், அது மெட் இன் சைனா என்பதால் இந்தியா அதன் போக்கில் இருந்தது.

(நாம் தமிழர் கோஷ்டி வைத்திருக்கும் அகண்ட ஈழம் அல்லது தமிழ்நாட்டு படத்தை யாராவது கண்டு கொள்வார்களா? அப்படி)

சீனா , நேபாள அடிமைக்கு ஒரு வில்லங்கமான திட்டத்தை கொடுத்தது,

அதன்படி இந்த வில்லங்க மேப்பினை அதாவது சீனா உருவாக்கி கொடுத்த வரைபடத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதன் பின் அது அங்கீரமாகிவிடும் அதன் பின் இந்தியா அலறும் என சொல்லிகொடுத்தது

நேபாள சீன‌ அடிமை ஓலியும் அதை பாராளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்கின்றார், ஆனால் ஆளும் கட்சி எதிர்கட்சி என யாரிடமும் ஆதரவில்லை

காரணம் இந்திய நேபாள உறவு அப்படியானது, நேபாள ராணுவ தளபதியே சம்பிரதாயத்துக்கு இந்திய குடியரசு தலைவர் கையாலே பதவி ஏற்பார்

இதுபோக ஏக தொடர்புகள் உண்டு, இதனால் நேபாளத்தில் இம்மாதிரி குழப்பங்களுக்கு ஆதரவில்லை, நேபாள ராணுவத்துக்கே கடும் ஆத்திரம், அவர்கள் இந்தியாவுடன் நல்லுறவினை விரும்புபவர்கள்

விஷயத்தை கவனிக்கும் சீனா, நேபாள காமெடி அடிமையினை அந்த திருட்டு வரைபடத்துடன் ஐநாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கின்றது

இந்தியாவோ “டேய் காமெடி செய்யாதீர்கள், காஷ்மீர் சிக்கலையே ஐ.நாவில் ஒன்றுமில்லாமல் செய்தவர்கள் நாங்கள், இவனுக வேற புதுசு புதுசா படம் வரைஞ்சி விளையாடிகிட்டு” என அதன் போக்கில் இருக்கின்றது

சீன நிறைய சிக்கலிலே சிக்கியிருக்கின்றது!

சீனாவினை கட்டம் கட்டி தீருவது என முடிவு செய்துவிட்ட அமெரிக்கா , சில ராஜதந்திர நகர்வுகளை முன்வைக்க ஆடிபோய் கிடக்கின்றது சீனா

ஆம் ஹாங்காங்க் சீனாவின் ஒரு பகுதி என சீனா சட்டம் கொண்டுவருவது பெரும் சர்ச்சையாகி பிரிட்டனும் அமெரிக்காவும் களத்துக்கு வந்து குதிக்கின்றது

அப்படி சட்டம் வந்தால் ஹாங்காங் வாசிகளுக்கு பிரிட்டன் குடியுரிமை அளிப்போம் என்கின்றது பிரிட்டன், அப்படியானால் அந்த பிரிட்டன் குடிமக்களின் சொத்து என ஹாங்காங்கில் பிரிட்டன் தலையிட முடியும்

இன்னொரு பக்கம் அமெரிக்க மிரட்டல் வேறுமாதிரியானது

அதாவது சீனாவின் நாணயம் ரென்மென்பி, இந்தியாவில் ரூபாய், ரூப்பீஸ், ருப்ப்பியா என்பது போல சீனாவின் ரூபாய் யுவான் என்றிருந்தது, பின் அதிகார பூர்வ நாணயம் ரென்மென்பி ஆனது

எனினும் அது சீனாவுக்குள் யுவான் என்றும் உலக அரங்கில் யுவான் அல்லது ரென்மென்பி என்றும் அழைக்கபடும்

Yuan என்றும் RMB என்றும் சீனபணம் குறிக்கபடும்

இந்த ரென்பென்பி என்பது சீனாவில் செல்லும், ஹாங்காங்கிலும் மக்காவ் தீவிலும் செல்லாது

ஆம், ஹாங்காங்கும் மக்காவும் சுயாட்சி பகுதிகள், பிரிட்டனும் போர்ச்சுகல்லும் குத்தகைக்கு எடுத்து சமீபத்தில் கொடுத்த பகுதிகள்

இதனால் அங்கு ஹாங்காங் டாலரும், மக்காவ் பட்டாக்காவுமே நாணயம்

ஹாங்காங் சுயாட்சி என்பதால் சீன ரென்மென்பி செல்லாது ஹாங்காங் டாலரும் அமெரிக்க டாலரும் யூரோவும் செல்லுபடியாகும், அமெரிக்கா செய்த சில ஏற்பாடுகள் அப்படி

இப்பொழுது அமெரிக்கா என்ன மிரட்டுகின்றது என்றால் ஹாங்காங் சீனாவின் பகுதி என்றானால் ஹாங்காங் டாலர் செல்லாது என்கின்றது, அது சரியானது கூட‌

சீனா எனும் நாட்டுக்கு இரு கரன்சி இருக்க முடியாதல்லவா?

அப்படி ஹாங்காங் டாலர் இல்லையென்றால் சீன பண பரிவர்த்தனை அதாவது சீன யுவானில் செய்யபடும் பரிவர்த்தனை சீனாவுக்கு கடும் நஷ்டத்தை உண்டு பண்ணும்

ஹாங்காங் டாலரில் இதுகாலம் பெரும் பரிவர்த்தனையினை செய்யும் சீனா அதன்பின் தடுமாறும்

தேர்ந்த ராஜதந்திரத்தில் குறிவைத்து அடிக்கின்றது அமெரிக்கா. இதன் விளைவுகளை கணிக்கும் சீனா இனி ஹாங்காங் பக்கம் அமைதி காப்பார்கள் போல் தெரிகின்றது

ஹாங்காங் எனும் மிகபெரும் அங்குசம் அமெரிக்கா கையில் கிடைத்துவிட்டது, அந்த அங்குசத்தை வைத்து சீன எனும் யானையினை படாதபாடு படுத்துகின்றது அமெரிக்கா

கூடவே ஹாங்காங் டாலர் எனும் வெல்லகட்டியினை காட்டி ஆசை காட்டி அதை அடக்குகின்றது

இந்தியா அந்த சீன யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடி வைப்பது போல் எல்லையில் சில விஷயங்களை லாவகமாக செய்து வாயில் ஊட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றது, இந்தியாவில் அதுதான் டிரென்ட்

ஆக சீன சிகப்பு யானை கொஞ்சம் அல்ல நிறைய சிக்கலிலே சிக்கியிருக்கின்றது

Image may contain: 1 person

தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

தமிழக நிலவரம் கொரோனாவில் மகா மோசமாக சென்று கொண்டிருப்பது சாதரண விஷயமாக படவில்லை. உயிர்பலிகள் அதிர வைக்கின்றன‌

சென்னை இதுவரை மகா சிக்கல்களை, மிரட்டல்களை சந்தித்த நகரம் அல்ல. முதல் உலகபோரில் ஜெர்மன் நீர்மூழ்கி குண்டு வீசியதை தவிர எந்த மிரட்டலும் வந்ததில்லை

மழை வெள்ளம் மட்டும் மிரட்டும், வேறு எந்த பெரும் மிரட்டலும் பாதிப்பும் இதுவரை வந்ததில்லை

ஆனால் கொரோனா சென்னை வரலாற்றிலே மிகபெரும் சவாலாக உருவெடுத்து நிற்கின்றது, திரும்பும் இடமெல்லம் கொரோனா என அது மிகபெரும் திகிலை கொடுக்கின்றது. அணுவெடிப்பு வேகத்தில் அதன் பரவல் இருப்பது மிகபெரும் ஆபத்து.

குழந்தைக்கு கொரோனா , 17 வயது மாணவி மரணம் இன்னும் சில பிரமுகர்கள் ரகசிய சிகிச்சையில் இருக்கின்றார்கள் என்பது கலங்க வைக்கும் விஷயம்

சென்னையிலும் இதர தமிழகத்திலும் மிக வேகமாக‌ பரவி கொண்டிருக்கும் கொரொனா தொற்று உலகை அதிர வைக்கின்றது, இந்திய அரசே சிறிது பதற்றத்தில் இருக்கின்றது.

மெல்ல உலகம் இயங்க ஆரம்பிக்கும் நேரமிது, ஜூன் 15க்கு பின் சர்வதேச போக்குவரத்துகள் தொடங்கபடலாம்

ஆனால் இனி உலகெல்லாம் இயங்க ஆரம்பிக்கும் பொழுது சென்னை துண்டிக்கபடும், சர்வதேச விமானங்களோ கப்பலோ சென்னைக்கு வராது.

இது பெரும் முடக்கத்தை கொடுக்கும், இன்னும் சில நாட்களில் சென்னையின் கொரோனா அளவு மிக கடுமையாக இருக்கும் என்கின்றார்கள், அப்பொழுது சென்னை முழுவதும் துண்டிக்கபடலாம்

வேறு வழி இருப்பதாக தெரியவில்லை

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் நிலமை சரியாக இல்லை, ஒருவித வேகமான கொரோனா அலை தெரிகின்றது.

நிச்சயம் மிக பெரிய நடவடிக்கை எடுத்து இன்னும் இரு வாரங்களுக்கு மகா கடுமையான இறுக்கமான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நேரமிது ஆனால் அரசு தயங்குகின்றது

அரசு வருமானம் பாதிக்கும், மாநில அரசு இயங்கமுடியாது எனும் சுயநலத்தில் மிகபெரிய விலை கொடுக்க தயாராகின்றது பழனிச்சாமி அரசு

இருந்து பாருங்கள் இது சாதாரணமாய் தீராது

இந்நிலையிலும் மிக வருத்தமளிக்கும் அல்லது கண்டிக்கதக்க விஷயம் என்னவென்றால் பழனிச்சாமி சென்னை முடங்கி தவிக்கும் நிலையிலும் ஏதும் நடக்காதது போல உலகின் விமான நிறுவணங்களுக்கு அழைப்பு விடுப்பதும், தொழில் நிறுவணங்களுக்கு அழைப்பு விடுப்பதாகும்

நேற்று ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ராக்கெட் பற்றி படித்திருப்பார் போல, உடனே அந்த கம்பெனி நிறுவணர் எலோன் மாஸ்க்குக்கு ஒரு கடிதம் எழுதுவிட்டார், “அன்புடையீர்,பாரில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டில் ஏன் நீங்கள் கம்பெனி திறக்க்க கூடாது?”

ராக்கெட் டாஸ்மாக் சரக்கில் பறக்கும் என நினைத்திருப்பார் போல‌

சென்னை மகா மோசமான நிலைக்கு தள்ளபடுகின்றது, தமிழகத்தின் இதர சூழலும் சரியாக இல்லை, மிக பெரும் நெருக்கடியில் மாநிலம் சிக்க போகின்றது

பொறுப்பற்ற மக்கள் இருந்தால் அரசு உறுதியாய் இருந்து அடக்குதல் வேண்டும், அரசு பொறுப்பற்று இருந்தால் மக்கள் பொங்கி திருத்தவேண்டும்

இரண்டு தரப்புமே பொறுப்பற்று இருந்தால் ஒரு மாநிலம் எப்படி நாசமாகும் என்பதற்கு தமிழகமே சான்று

பலத்த எச்சரிக்கை தமிழகத்துக்கு விடபடும் நேரமிது, புயல் ஆபத்துக்கெல்லாம் ஓடி ஓடி பாதுகாக்கும் தமிழகம், கொரோனாவில் கோட்டை விட்டது மட்டுமல்ல இன்னும் ஆபத்தை உணர மறுப்பது சோகம்

இனி சர்வதேசம் இயங்கும் பொழுது துண்டிக்கபடுவது சென்னையாக மட்டும் இராது, திருச்சி மதுரை போன்ற விமான நிலையங்களாக இருக்கலாம் தூத்துகுடியாகவும் இருக்கலாம்

இப்பொழுது முடக்கினாலும் சென்னை மீள சில மாதமாகும் என்பதால் நிலமையின் வீரியம் மகா ஆபத்தானது

சென்னை போலவே சிக்கியிருக்கும் இன்னொரு நகரம் மும்பை, அங்கு இனி பருவமழை தொடங்க போகின்றது, மும்பையின் மழை சாதாரணாம் அல்ல‌

அந்த கொடும் மழையில் தனித்திருந்த்தல் சமூக இடைவெளி சாத்தியமில்லை, மும்பைக்கு விடபட்டிருக்கும் எச்சரிக்கை சிகப்பு எச்சரிக்கை

தமிழக மக்கள் இனியும் விழித்து கொள்ளாவிட்டால் அதற்கு கொடுக்க போகும் விலை மிக மிக அதிகமாக இருக்கலாம்