அதன் பாதிப்பு உலகெல்லாம் தெரிகின்றது

ஆட்டோ மொபைல் தொழிலில் இப்பொழுது சவால்கள் அதிகம், அமெரிக்க சீன உலோக வரி சிக்கல் சாமான்யம் அல்ல‌

உலகில் தொழில்நுட்பத்துக்கு பெரும் காப்புரிமை கொண்ட நாடு என்பதால் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆட்டோ மொபைல் தொழிலிலும் உண்டு

பெரும் நிறுவணங்கள் அதில் திகைக்கின்றன, அதன் பாதிப்பு இந்தியாவிலும் உண்டு

பெட்ரோல் பயன்பாட்டுக்கு ஒரு முடிவு கட்டி மின்சார கார்களை அதிகளவில் தயாரிக்க உலகநாடுகள் முடிவு செய்திருப்பதும் அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும் என்பதாலும் ஆட்டோ மொபைல் தொழிலில் ஒரு தாக்கம் வந்திருக்கின்றது

சரி ஆட்டோ மொபைல் தவிர எதில் வீழ்ச்சி என்றால் ஒருவனுக்கும் சொல்ல தெரியவில்லை

தன் அரோம்கோவின் மிகபெரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையினை இந்தியாவின் குஜராத்தில் திறக்கின்றது சவுதி அரேபியா

பெரும் பொருளாதார எதிர்பார்ப்பு இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை,பலர் பயமுறுத்துவது போல் பெரும் பாதிப்பு எல்லாம் வராது

ஆனானபட்ட சீனாவின் உற்பத்தியே 40 ஆண்டுகளில் முதன் முறையாக 30% சரிந்து சோக கீதத்தை காட்டுகின்றது

அதன் பாதிப்பு உலகெல்லாம் தெரிகின்றது, இந்தியாவில் அது லேசாக தெரியலாம்

அவ்வளவுதான் விஷயம்

ஏதோ பூரா பயலும் ராக்பெல்லர் குடும்பத்தின் வாரிசு போல பெரும் பரம்பரை பணக்காரனாக இருந்தது போலவும் இனி எல்லோரும் தெருவுக்கு வருவது போலவும் பயமுறுத்திகொண்டிருக்கின்றான்

Advertisements

இரு  மெண்டல்கள் மத்தியில்

வடகொரியா இனி சூரிய உதயம் தோறும் ஏவுகனை செலுத்தி அதை வணங்கி சூரிய நமஸ்காரம் செய்வது என முடிவெடுத்திருக்கின்றது

குறுகிய தூர ஏவுகனைகளை அனுதினமும் ஏவி பீச்சில் பலூன் சுட்டு விளையாடுவது போல விளையாடிகொண்டிருக்கின்றது

அமெரிக்க அதிபரிடம் புகார் சென்றாலும் ” அந்த வெள்ளை குண்டனா? அட அவன் கெட்டிக்காரனப்பா. அமெரிக்கா ஜப்பானை தாக்கும் அளவு நீண்டதூர ஏவுகனைகளை சோதிக்கமாட்டேன் என நூடுல்ஸில் சத்தியம் செய்திருக்கின்றான்

இப்பொழுதும் பாருங்கள், குறுகிய தொலைவு ஏவுகனைதான் சோதித்தான், நம்ம வழிக்கு வரமாட்டான், நல்ல பையம்லா” என சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றார்

வடகொரியா செய்வதும் அந்த விளையாட்டே, நீண்ட தூர ஏவுகனைகளை சோதிப்பதில்லை

ஆனால் இந்த குறுகிய தொலைவு ஏவுகனை தென்கொரியாவுக்கு ஆபத்தானது, தென் கொரியாவின் எல்லா இலக்கையும் தாக்கலாம்

இதனால் அலறி அடித்து “யோவ் குண்டா, பேச வாய்யா” என அழைக்கின்றது வடகொரியா

“அதெல்லாம் முடியாது பங்காளி, உன் ஓணர் அமெரிக்காவினை வரசொல் ” என சொல்லிவிட்டு அடுத்த ஏவுகனையினை சோதிக்கின்றது வடகொரியா

“யோவ் அவன் வரமாட்டான்யா, ஆபத்து எனக்குத்தான்யா, வாய்யா பேசுவோம்” என்கின்றது தென் கொரியா

“டேய் லூசு பங்காளி உன் நாட்டில் நீ மட்டுமல்ல 30 ஆயிரம் பேர்கொண்ட அமெரிக்க ராணுவ முகாமும் உண்டு. அதை நான் தாக்கும் ஆபத்து உண்டு என அந்த மரமண்டையன் டிரம்பிடம் சொல்லு” என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது வடகொரியா

தென்கொரியா டிரம்பிடம் அதையும் சொல்லிற்று, எங்கள் நாட்டில் இருக்கும் உங்கள் ராணுவ முகாமை அவன் ஏவுகனை தாக்கும் என சொல்லிபார்க்கின்றது அது

டிரம்போ “இருய்யா, சீனாவோட இன்னும் பேச்சு முடியல்லை, குண்டன் சும்மாய்யா, அவன் நம்ம பயலாயிட்டான், உங்களுக்கும் அவனுக்கும் பங்காளி தகறாறாக இருக்கும்” என சொல்லிவிட்டார்

இரு மெண்டல்கள் மத்தியில் மாட்டிகொண்டு தலைமேல் கைவைத்து அமர்ந்திருக்கின்றது தென்கொரியா

என்ன …. ஒழிப்பீர்கள் அமைச்சரே?

ஜாதி ஒழிய வேண்டுமானால் சாதி கயிறினை ஒழிக்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

முடி சிக்கலை தவிர்க்க மயிரை ஒழிக்க வேண்டும் என அன்னார் சொல்லாதவரை நல்லது.

ஜாதியினை இட ஒதுக்கீடு என வளர்ப்பது அரசியல், அந்த அரசியல் ஆட்சி அமைக்கும் பொழுது ஜாதி எப்படி ஒழியும்?

அமைச்சரே சில கல்வி கூடங்களின் பெயர் என்ன தெரியுமா?

சங்கர் ரெட்டியார் அரசு பள்ளி, அய்ய நாடார் கல்லூரி, நாடார் உறவின் முறை பள்ளி, தெட்சன நாடார் சங்க கல்லூரி இதெல்லாம் என்ன வகை?

பள்ளி, கல்லூரி பெயர்களிலே சாதியினை வைத்து கொண்டு, சாதி இட ஒதுக்கீட்டை கல்வியில் வைத்து கொண்டு என்ன …. ஒழிப்பீர்கள் அமைச்சரே?

இருவருக்கும் ஒரேஜாதகம் போலிருக்கின்றது

என்ன செய்தாலும் , எவ்வளவு குட்டிகரணம் அடித்தாலும் ஒன்றுமே நடக்காது என தெரிந்தாலும் கண்ணீரை துடைத்து கொண்டு சம்பிரதாயத்துக்கு போராட வரும் தலைவர்கள் இரண்டே பேர்

ஒருவர் இம்ரான் கான் , இன்னொருவர் முக ஸ்டாலின்

இருவருக்கும் ஒரேஜாதகம் போலிருக்கின்றது

நீங்கள் எல்லாம் ஒரு அக்கா…

அக்கோவ், நாங்களும் அனுதினமும் உங்களை அக்கா, அக்கா என அழைக்கும் ஒரே நபர் இந்த சங்கம் ஒன்றுதான்

ஆனால் இந்த சங்கத்து கை வெற்றாக இருக்கும் பொழுது எங்களை கடந்து பழனிச்சாமி அண்ணனுக்கு ராக்கி கட்டியிருக்கின்றீர்கள்?

உண்மையினை சொல்லுங்கள் அது அக்கா அண்ணனுக்கான கயிறா? இல்லை உன் பதவிக்கு நான் பொறுப்பு என் பதவிக்கு நீ பொறுப்பு என்ற ஒப்பபந்த கயிறா?

எங்கள் கைகளும் சும்மாதான் இருக்கின்றது, ம்ம்ம்ம்ம் நீங்கள் எல்லாம் ஒரு அக்கா…

பல ஆண்கள் மனைவிகளால் கொல்லவே படுகின்றார்கள்

கள்ளதொடர்பை கண்டித்ததால் மனைவி ஆத்திரம், காதலன் உதவியுடன் கணவன் மேல் கொதிக்கும் எண்ணெயினை ஊற்றினாள் மனைவி

ஒரு காலத்தில் நளாயினியும் கண்ணகியும் கணவனை அப்படி கொண்டாடினார்கள்

ராமனும், அர்ஜூனனும் மனைவிக்காக யுத்தம் நடத்தினார்கள், பெரும் ஆபத்தை கடந்தார்கள் அது ஒருகாலம்

பதிருஹரி போன்றவர்கள் மனைவியால் ஞானியாகிவிட்டார்கள் அதுவும் ஒரு காலம்

இப்பொழுதெல்லாம் பல ஆண்கள் மனைவிகளால் கொல்லவே படுகின்றார்கள்

கொலையும் செய்வாள் பத்தினி என்பார்கள், இப்பொழுதெல்லாம் பத்தினிகள் கணவனையே கொன்று தாங்கள் பத்தினிகள் என நிரூபிக்கின்றார்கள்

இச்செய்தியினை எல்லாம் படிக்கும் பொழுது இந்த Kasi Lingam, Senthil Kumar Krishnan போன்றவர்கள் கடவுளை வணங்கிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுகொள்கின்றார்கள்

மதசுதந்திரம் முழுமையாக கொடுத்திருக்கும் நாடு

நாம் முன்பே சொன்னதுதான், இந்நாடு மதசுதந்திரம் முழுமையாக கொடுத்திருக்கும் நாடுதான் ஆனால் அதை மிக தாரளாமக பயன்படுத்தி இம்சை செய்யும் கூட்டம் மேல் சில கட்டுபாடுகளை விதித்தல் வேண்டும்

இந்துக்கள் பெரும்பாலும் தங்களின் ஆலயத்தின் உள்ளேதான் பிரார்த்திப்பார்கள், இன்னொரு ஆலயம் கட்டுவது என்பது பொருட்செலவும் இன்னபிற சிக்கல்களும் கொண்டது என்பதால் பெரும்பாலும் பாரம்பரிய ஆலயங்களே

சிறுதெய்வ வழிபாடே அங்கு சிக்கல், அதை கட்டுபாடு இன்றி அவர்களால் எங்கும் தொடங்க முடிகின்றது. கல்லோ இல்லை தூணோ வைத்து ஒரு குங்கும சூடி வழிபட்டால் கோவில் ரெடி, தெய்வமும் வந்து அமர்கின்றது

சிக்கல் அவர்கள் வழிபாட்டில் இல்லை, அது யாருக்கும் தொந்தரவில்லை மிஞ்சி போனால் வருடத்தில் ஒரு நாள் கொடை முடிந்தது விஷயம்

சிக்கல் சாலை விஸ்தரிப்பு இல்லை பெரும் திட்டங்களை அமல்படுத்தும் பொழுது வரும், அந்த கோவில்களுக்கு பட்டாவோ முறையான ஆவணங்களோ இல்லாத நிலையில் அவை எதிர்காலத்தில் சிக்கல்

அவை முறைபடுத்தபட வேண்டும்

இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் மசூதியினை முறைப்படி அமைத்து தொழுவார்கள், எண்ணிக்கையும் அதிகமில்லை மிக மட்டுபடுத்தபட்ட எண்ணிக்கை கூட்டம் அதிகமானால் இருப்பதை விரிவுபடுத்துவார்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் அப்படியே

ஆனால் இந்த பிரிவினை மிஷினரி இம்சைகள் மத சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றன, புற்றீசல் கூட்டமாக , வெடித்துவிட்ட எருக்கம் பூவாக நினைத்த இடத்தில் நினைத்த நொடியில் அவர்களால் ஜெபவீடு அமைக்கமுடிகின்றது

அதுவும் பிறமத மக்கள் இருக்குமிடங்களில் கட்டுபாடே இல்லாமல் புகுந்து ஆலயங்களை அமைத்து இம்சை செய்ய முடிகின்றது

இதனையே எல்லா மதத்தாரும் செய்ய ஆரம்பித்தால் சமூகம் அமைதியாய் இராது, நாடு நாடாய் இராது

நாட்டை நேசிக்கும் ஓருவன் இவ்விஷயத்தில் என்ன சொல்வான் என்றால் நிச்சயம் புதிய வழிபாட்டு தலங்கள் அமைக்க கடும் கட்டுபாடுகள் தேவை

அது எந்த மதமாயினும் சரி

மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் நிபந்தனைகளுடனே வழிபாட்டு தலங்களுக்கான அனுமதி கொடுக்கபட வேண்டும், அனுமதியில்லா இடத்தில் வழிபாட்டு இம்சை செய்தால் தடை செய்ய வேண்டும்

சிறப்பு நாட்களுக்கு மட்டும் தனி அனுமதிபெற்று பொதுவிடங்களில் கொண்டாடிவிட்டு போகட்டும்

நினைத்த இடத்தில் எல்லாம் கோவிலும், ஜெபவீடும் இன்னும் ஏராளமான இம்சைகளை செய்து கொண்டிருப்பதை தடுக்க அவசர சட்டம் தேவை

அதை உடனே அரசுகள் செய்தால் நாடு நாடாக இருக்கும்

அவனவனுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் எதுவும் செய்யட்டும், அதுதான் உண்மையான மத சுதந்திரம்

நாட்டில் மக்களுக்கு மிக அளவுக்கு அதிகமான மத‌ சுதந்திரம் உடலில் சேரும் அளவுக்கு அதிமாகன் கொழுப்பை போன்று மகா ஆபத்தானது

அதை கட்டுபடுத்தி வைப்பது ஒன்றும் தவறே இல்லை