கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்

Image may contain: 1 person, close-up

எனது வேண்டுகோளை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதற்கு நன்றி: கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்

நெஞ்சை பிடித்துகொள்ளுங்கள், இந்திரா முதல் யாராலும் தீர்க்க முடியாத காவிரி பிரச்சினையினை, சுப்ரீம் கோர்ட்டாலும் தீர்க்க முடியாத பிரச்சினியினை விஷால் தீர்த்துவிட்டாராம், இவர் கேட்டவுடன் கன்னட அமைச்சர் நீர் கொடுக்க சம்மதித்தாராம்.

இப்படி புருடா விட தொடங்கிவிட்டார் விஷால், இனி எங்காவது அடிபட்டாலும் படலாம்

உண்மையில் என்ன நடந்தது?

பெங்களூரில் சினிமா விழாவில் இவர் கன்னடம் காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்றார், கன்னட நீர்பாசன துறை அமைச்சர் விரைவில் 92 டிஎம்சி திறப்போம் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

ஏன் அப்படி சொல்லவேண்டும்?

தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கின்றது, நீர் என்பது ஒளித்து வைக்கமுடியாதது, அவர்கள் அணைகள் நிரம்பினால் இங்கு திறந்துவிட்டே ஆக வேண்டும்

ஆக பருவமழை தொடர்ந்தால் நீர் திறப்போம் என அவர் சொல்லியிருக்கின்றார்

இது விஷால் அல்ல, அங்கு ஆடுபிடிக்க போகும் தமிழக வியாபாரி கேட்டாலும் அவர் அதனைத்தான் சொல்லியிருப்பார், அல்லது அணை நிரம்பினால் சொல்லாமலே திறந்திருப்பார்

ஆக தானாக நடக்க வேண்டிய விஷயத்தில் விஷால் எப்படி எல்லாம் நடிக்க வந்துவிட்டார் பார்த்தீர்களா?

இந்த திருமுருகன் காந்தி கைதால் அங்கிள் சைமன் அப்செட், அதற்கென்ன இப்பொழுதே குறித்துகொள்வார்.

காவேரிக்கு நான் நீர் கொண்டுவந்தேன் என இனி பெயர் வாங்கி அரசியல் செய்வது எப்படி தெரியுமா?

கன்னடனிடம் நீர் கேட்க வேண்டியது அங்கு அணைகள் நிரம்பும் தருவாயில் , அப்படி தானாக நீர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக கேட்க வேண்டும்,

எல்லா கன்னட அணைகளும் நிரம்பிவிட்டதா என உளவாளிகள் மூலம் விசாரிக்க வேண்டும், நிரம்பாவிட்டால் ரஜினி ஒழிக, கன்னடன் ஒழிக என சொல்லிவிடலாம், நிரம்பி நீர் திறக்கும் நிலை வந்துவிட்டால் உடனே சுதாரிக்க வேண்டும்

நீர் வரும்பொழுது எங்கள் கோரிக்கையினை ஏற்ற கன்னடனுக்க்கு நன்றி அல்லது எங்கள் மிரட்டலுக்கு பயந்தவனுக்கு நன்றி என சுவரொட்டி ஒட்ட வேண்டும்

எப்படி எல்லாம் அரசியல் செய்கின்றார்கள்??

அதெல்லாம் சரி, பருவமழை சரியாக பெய்யாவிட்டால் கன்னட அமைச்சர் நீர் திறக்க மாட்டார், அப்பொழுது விசால் என்ன செய்வார்?

அதனால் இப்பொழுது பருவமழைக்காக தவமிருப்பவர் விசால் தான், மழை இன்னும் தீவிரமாக பெய்யாமல் காவேரி தமிழகம் வராமல் போனால் விசால் எபப்டி தலைகாட்டுவாரோ தெரியாது

எனினும் யாராலும் தீர்க்கமுடியாத பிரச்சினையினை விசால் தீர்த்துவிட்டதாக சொல்லிகொண்டிருக்கும்படியால் கொஞ்சம் அவரை இலங்கை பக்கம் அனுப்பி பார்க்கலாம்

எதற்கும் விசாலை அவர் குடும்பத்தாரோ, வரலட்சுமியோ கொஞ்சம் பத்திரமாக பார்த்துகொள்வது நல்லது

ஒருவேளை காவேரி வெள்ளம் வந்தால் அதில் குதித்துவிட்டு கல்லணை பக்கம் ஒதுங்கி, மல்லாக்க கிடந்து, ஏ தமிழர்களே நான் காவேரியினை இழுத்துவந்து கல்லணையில் அடைத்துவிட்டேன் என சொல்ல இவர் தயார்

ஆனால் அந்த வெள்ளம் இவரை சுழியில் மூழ்கடித்து சோலி முடித்துவிட கூடாது என்பதால் மேற்கண்டவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

 
 

பின்னூட்டமொன்றை இடுக