ஹிட்லர் சகாப்தம் முடிந்த நாள் இன்று

74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது

ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள்

உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே அழியும் என ஆளாளுக்கு யோசித்துகொண்டிருந்தார்கள்

ஹிட்லர் மீது இருந்த பிம்பம் அப்படி..

ஆனால் ரஷ்யாவிலிருந்து நாஜிக்களை துரத்திய செம்படையினர் தீரமாக ஜெர்மனில் நுழைந்து ஹிட்லரை தேடின, இறுதியில் எரிந்த நிலையிலிருந்த இரு உடலை கைபற்றின, ஒன்று ஹிட்லர் எனவும் இன்னொன்று ஈவா பிரவுண் எனவும் சொன்னார்கள், கூடவே ஹிட்லரின் பிரியமான நாயின் சடலமும் கிடைத்தது

ஹிட்லர் தன்னை சுட்டு செத்தார், உடலை எரிக்க சொன்னார் என அவரின் காவலர்களில் ஒருவன் வாக்குமூலம் சொன்னான்.

அவன் மட்டும்தான் ஹிட்லர் உடலை கண்ட சாட்சி, அவன் சொன்னதகவல்தான் உலகெல்லாம் சொல்லபடது, ஹிட்லர் தன் தாயின் புகைபடத்தை பிடித்தவறு செத்துகிடந்தார் என அவன் தான் சொன்னான்

அதன் பின் அந்த உடல் எரிக்கபட்டு, எரிந்த உடலைத்தான் ரஷ்யர்கள் கைபற்றினார்கள். ஹிட்லரின் முகத்தை யாரும் காணவில்லை

பின்பு அந்த மண்டையோட்டை ஆராய்ந்த ரஷ்யர்கள் திகைத்தார்கள், காரணம் அது ஹிட்லரின் மண்டையோடு அல்ல, அல்லவே அல்ல.

அப்படியானால் ஹிட்லர்?

இன்றுவரை தெரியாத மர்மம், ஜெகஜால கில்லாடியான ஹிட்லரின் இறுதிகாலம் இன்றுவரை மர்மமே, இதில் பலவகையான அரசியல் உண்டு

இந்த உலக அரசுகள் எல்லாம் மர்மமானவை, அவை ஏன் சில விஷயங்களை சொல்லாமல் இருக்கின்றன என்பதில் பெரும் அரசியல் உண்டு

உதாரணம் நேதாஜி என்ன ஆனார் என்பது, இன்றும் பிரபாகரனுக்கு சிங்கள அரசு மரணசான்றிதழ் கொடுக்க தயங்குவது, பின்லேடனை கொன்றதாக சொன்ன அமெரிக்கா கடைசிவரை அவர் முகத்தை காட்டாதது

ஆனால் சதாமினை தூக்கிலிட்டார்கள் ஏன்? அது அரபு உலகை ஆட்டி வைக்க, ஆனால் பின்லேடனை மர்மமாக புதைத்தார்கள்

இப்படிபட்ட மர்மங்களில் பெரும் மர்மம்தான் ஹிட்லரின் கடைசி காலம், அவனின் சாவு

ஹிட்லர் வாழ்ந்த நாட்களில் அவன் மீது நடத்தபட்ட கொலைமுயற்சி ஏராளம், அதனால் அப்பொழுதே அவன் தன்னை போல ஒருவனை நடமாட விட்டுவிட்டு அவர் பதுங்கிகொண்டார் என்பதும் ஒரு தியரி

அதனை உறுதிபடுத்தும் விதமாக அவருக்கு கொடுக்கபடும் உணவுகளை உண்டு சரிபார்த்து கொடுத்த பெண்ணின் சந்தேகமும் முக்கியமானது, அவள்தான் தினமும் ஹிட்லருக்கு முன்பு சாப்பிடுவாள், அவள் சாகவில்லை என உறுதிபடுத்தபட்டால்தான் ஹிட்லர் அந்த உணவினை உண்பார்

அப்பெண்ணும் கடைசி காலங்களில் ஹிட்லரை காணவில்லை என்றுதான் சொன்னாள்.

இன்னொன்று தோல்வி முகம் தெரிந்தவுடன் அவர் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் எனும் தியரி உண்டு, அக்கால அரசியல் அப்படி

இத்தாலி, ஜப்பான், ஜெர்மன் என்றொரு கூட்டணிதான் நமக்கு தெரியும், தெரியாத கூட்டணி அர்ஜெண்டினா. அதற்கு கத்தோலிக்க மதம், பிரிட்டன் எதிர்ப்பு என ஏராளமான காரணங்கள்

ஐரோப்பாவில் ஹிட்லர் படைகள் தோற்க தோற்க அவர்கள் எல்லாம் அர்ஜெண்டினாவிற்குத்தான் தப்பினார்கள், ஹிட்லரின் தளபதி ஈச்மென் கூட இஸ்ரேலால் பின் கொண்டுவரபட்டது எல்லாம் வரலாறு

அப்படி ஹிட்லரும் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் என ஏகபட்ட தியரிகள் உண்டு, ஆனால் அவர் சிக்கவில்லை

அக்காலத்தில் ஹிட்லரிடம் நவீன வாகனங்கள் இருந்தன, நீர்மூழ்கி கப்பல்கள் இருந்தன, பறக்கும் தட்டு போன்ற ஒரு அதிவேக விமானம் அவனிடம் இருந்தது என்பது உண்மை

அதிலொன்றில் அவர் தப்பியிருக்கலாம் என தேடினார்கள், அந்த ஜெகஜால கில்லாடி சிக்கவே இல்லை

ஆக ஹிட்லர் தப்பி அர்ஜெண்டினாவிற்கு சென்றான் என்பது உளவுதுறைகளின் முடிவு, அவன் அகப்படவில்லை, மண்டையோடும் அவனது இல்லையெனில் அவன் எங்கே?

ஹிட்லருக்கு பின் அமெரிக்காவும் ரஷ்யாவும் மோதலில் இறங்க, ஹிட்லரை தேடுவதை குறைத்தார்கள், அவன் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்ற ஒரு நிலையும் காரணம்

இந்த உலகத்திற்கு புரியாத புதிர் ஹிட்லர், இன்றுவரை அவனை முழுக்க யாருக்கும் புரியவில்லை, ஆனால் மகா அசாத்தியமான மனிதன்

அவனின் மரணம் கூட மர்மம்தான், அவன் போர்கலை வித்தகன், அவனின் போர்வியூகங்கள் எல்லாம் அபாரமானவை

நார்மாண்டி முற்றுகை நடந்தால் கூட எப்படி முறியடிக்க வேண்டும் என வியூகம் எழுதிவைத்துதான் தூங்கிகொண்டிருந்தான், அவனை எழுப்பாமலே ஜெர்மன் படை அந்த வியூகத்தில் போரிட்டது

அப்படிபட்ட ஹிட்லர் தான் தோற்றால் என்ன செய்யவேண்டும் என நிச்சயம் யோசித்திருப்பான், அதனால்தான் அவன் தப்பியது 100% வாய்ப்புள்ள விஷயம் என உலகம் சொல்கின்றது

மற்றபடி அவனின் இறுதிநாட்கள் என சொல்லபடுவதெல்லாம் கட்டுகதைகள், அந்த மர்மான நாட்கள் ஹிட்லருக்கும் ஈவா பிரவுணும் மட்டுமே அறிந்த ரகசியங்கள்

எப்படியோ, உலகத்தை தன் கண் அசைவில் ஆட்டுவித்த ஒரு பெரும் சத்திவாய்ந்த தலைவனின் சகாப்தம் முடிந்த நாள் இன்று

உலகம் தன் கனவுகளை, தன் திட்டங்களை, தன் ஆராய்ச்சிகளை பயன்படுத்தி பல துறைகளில் முன்னேறிகொண்டிருப்பதை பார்த்துகொண்டே தென் அமெரிக்காவில் எங்கோ வாழ்ந்தபடி மறைத்திருக்கின்றான் ஹிட்லர்.

முக்கியமானவர்களின் மரணங்களில் மர்ம ஆட்டம் ஆடும் வல்லரசுகள், ஹிட்லர் தப்பிய மர்மத்தை சொல்லாமல் அதனை எப்படியோ வசனம் எழுதி மறைக்கபார்த்தன , முழுதும் மறைக்க முடியவில்லை

ஹிட்லர் கடைசியிலும் தன் எதிரிகள் முகத்தில் பூசிய கரி இன்றுவரை அப்படியே இருக்கின்றது

உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று

உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று

இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்கின்றார்கள்

இங்கு எதில்தான் அரசியல் இல்லை எல்லாவற்றிலும் இருந்து தொலைக்கின்றது

அத்வாணி மேல் பாபர் மசூதி இடித்த வழக்கு உண்டு அதற்கு தீர்ப்பு வரவே வராது, ஆனால் சசிகலா என்றால் மட்டும் சரியான நேரத்தில் வரும்

நீதிமன்றம் பல சர்ச்சையான விஷயங்களை தீர்ப்பாக சொன்னது , உதாரணம் அந்த ஓரின சேர்க்கை விவகாரம், தாகத உறவு குற்றமல்ல என ஏராளம்

சபரிமலை பற்றிய தீர்ப்பு உலகிற்கே தெரியும்

எச்.ரஜா சொன்னது போல ஒருமாதிரியான மன்றமாகத்தான் இருந்தது

இப்பொழுது அந்த நீதிபதி கோகாய் என்பர்மேல் பாலியல் வழக்கு

நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?

உலகில் பெரும் அதிபர்கள் கூட சிக்கிய வழக்கு இது, இதில் இவரும் சிக்கிவிட்டார்

அவர் விசாரணையினை எதிர்கொள்வதுதான் முறை, வீண் அனுதாபம் தேடி ஆகபோவது ஒன்றுமில்லை

ஈஸ்டர்

ஈஸ்டர் என்பது மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை அது

முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது

கிறிஸ்தவம் அந்த கலாச்சாரத்தை, அந்த திருவிழாவினை கிறிஸ்துவின் உயிர்ப்போடு கலந்து எடுத்துகொண்டு அதனை ஈஸ்டர் பண்டிகையாகவே மாற்றிவிட்டது, இது ஈஸ்டர் பெயர் வரலாறு

கிறிஸ்து உயிர்த்து கல்லறையினை விட்டு வெளிவந்ததை யாரும் காணவில்லை, ஆனால் அவரின் கல்லறை வெறுமையாயிருந்தது

இந்த புள்ளியில் அவர் உடல் திருடபட்டது என யூதர்கள் கதைகட்டிவிட்ட பின் இன்றுவரை அந்த இனம் வேறு ஒரு இயேசுவினை எதிர்பார்க்கின்றது, பார்க்கட்டும்

சிலுவையில் இறந்த இயேசு உயிர்த்தார் எங்களுடன் பேசினார் உண்டார் என்ற அவரின் சீடர்கள் நம்பினர், அதன் பின் உலகமும் நம்பியது,

ஆனால் சாகுமுன் பகிரங்கமாக போதித்த இயேசு அதன்பின் மக்கள்முன் தோன்றவே இல்லை . இவ்வளவிற்கும்
அவர் உடலோடே பரலோகம் சென்றார் என்கின்றது கிறிஸ்தவம்

இந்த நிகழ்வுக்கு பின்னரே கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து, வெகு வேகமாக மலர்ந்தது, சுருக்கமாக சொன்னால் உயிர்பெற்று எழுந்தது கிறிஸ்து மட்டும் அல்ல, கிறிஸ்தவமும் கூட‌

வீரியமாக எழும்பிய கிறிஸ்தவம் அன்றைய உலகின் வல்லரசான ரோமானியரின் ஆட்சியினை கைபற்றியதின் தொடக்கபுள்ளி இதுதான்

இந்நாளைய சத்குரு போன்ற சர்சை சாமியார்களுக்கெல்லாம் முன்னோடியான ரஜனீஷ் எனும் ஓஷோ சொல்வார், கிறிஸ்து ஒரு அரசையும் ஏற்படுத்தவில்லை, கிறிஸ்து சொன்னது நடக்கவில்லை, அவர் ஒரு பிராடு என அள்ளிவிடுவார்

ஆனால் அப்படி அல்ல‌, , ஓஷோ சொன்ன பெரிய பொய் அது..

சாதரண யூத இளைஞனின் போதனையும் மரணமும் அவனின் உயிர்ப்பு செய்தியும் பெரும் புரட்சியினை உலகில் ஏற்படுத்தின, ரோமையின் அரசை அது கைபற்றியது

கிட்டதட்ட 1500 ஆண்டு காலம் அது உலகின் வல்லரசாக விளங்கியது, மார்ட்டின் லூத்தராலும் அதனை அசைக்க முடியவில்லை. நெப்போலியன் காலத்தில் அது கொஞ்சம் அசைந்தது

19ம் நூற்றாண்டில்தான் அது பின்னடைவினை சந்தித்திருக்கின்றது, என்றாலும் இன்றுவரை கிறிஸ்துவின் வாரிசான போப்பிற்கு இருக்கும் மரியாதையும், சக்தியும் சாதரணம் அல்ல‌

கிறிஸ்து ஏற்படுத்திய அந்த அரசாலும், அவரின் தாக்கத்தாலும் எல்லா நாடுகளும் பலன் அடைந்தன, இந்தியாவில் கூட மருத்துவ மனைகளும், முல்லைபெரியாறு போன்ற அணைகளும் கட்டபட்டதென்றால் கிறிஸ்துவும் மறைமுக காரணம், அவரின் உயிர்ப்பும் முக்கிய காரணம்

அவர் உயிர்த்தார் என விசுவசிப்பவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவம் அந்த நம்பிக்கையில்தான் இயங்குகின்றது, இல்லையென்றால் பழைய இறைவாக்கினர் வரிசையில் கிறிஸ்துவும் மானிடனாக வரலாற்றில் சேர்ந்திருப்பார்

அந்த மகா முக்கிய, வரலாற்றினை திருப்பி போட்ட நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் எனும் சம்பந்தம் இல்லா பெயரோடு கொண்டாடுகின்றார்கள், அது அவர்கள் நம்பிக்கை

ஈஸ்டர் கொண்டாடும் எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

என்ன இருந்தாலும் அந்த இயேசு கிறிஸ்து மீது ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு

உயிர்த்த இயேசு ஒரு நாள் கழித்து உயிர்த்திருக்க கூடாதா? அவர் மிக சரியாக யூத காலண்டர் படி ஞாயிறு எனும் முதல்நாளில்தான் உயிர்த்தார்

யூதருக்கும், தமிழரை போல ஞாயிறுதான் வாரதத்தின் முதல்நாள், பெருமாள் பக்தர்களை போல சனிகிழமைதான் ஓய்வுநாள்

ஆனாலும் இயேசு முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா?, கிறிஸ்தவன் ஐரோப்பிய மதம் ஆகி, உலகெல்லாம் பரவும், அப்பொழுது ஞாயிறு விடுமுறையாகும், திங்கள் கிழமை வேலைநாளாகும் என்பது தெரியாதா?

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க திங்கள் கிழமை உயிர்த்திருக்க கூடாதா? என்ன அவதாரம் இவர்??

யூத வழக்கபடி பாவங்களுக்கு ஒரு ஆடு பலியிடபடும், அப்படி எல்லா மக்களின் பாவங்களுக்காக இயேசு பலியானார் என்கின்றது கிறிஸ்தவம்

அவர் பலியான அன்று ஒரு செம்மறியும் அவருக்காக வெட்டவில்லை, ஆனால் அவர் உயிர்த்த அன்று ஏராளமான ஆடுகள் உயிரை துறந்திருக்கின்றன, கூடவே ஏராளமான கோழிகளுடன் பலியாயிருக்கின்றன‌

பொறுமையில் பெரும் பொறுமை இயேசுவுடையது, அதே பொறுமையினை ஒரு நாள் கழித்து திங்கள் கிழமை அவர் உயிர்த்திருக்கலாம், நன்றாக இருந்திருக்கும்..

இயேசுவுக்கும் மீனுக்கும் உள்ள தொடர்பு

இயேசுவுக்கும் அவரின் தத்துவார்த்த போதனைக்கும் யூதனுக்கும் என்ன தொடர்பு என்பதை விட நாம் கவனித்தது இயேசுவுக்கும் மீனுக்கும் உள்ள தொடர்பு

அவருக்கும் மீனுக்குமான உறவு மிக மிக வலுவானது

அவர் பழகியது மீணவ சமூகத்திடமே, அவரின் சீடர்களும் மீணவர்களே

அவர் போதனையிலும் அவசர தேவையிலும் மீனையே குறிபிட்டிருக்கின்றார்

சீடரோடு இயேசு மீன் பிடித்திருகின்றார், சுவைத்திருக்கின்றார் அவர்கள் மீன் இன்றி சிரமபடும் பொழுது தன் வல்லமையால் நிறைய பிடிக்க செய்திருக்கின்றார்

தான் மட்டுமல்ல தன்னை நம்பி வந்த கூட்டத்துக்கே பல இடங்களில் இருக்கும் மீனை பெருக செய்து பசி தீர்த்திருக்கின்றார்

ஏன் ஆடு கோழி மாடு என அவர் இறங்கவில்லை? மீனில் மட்டும் இறங்கினார்

அதுதான் மீனின் சுவை

சிலுவையில் மரித்து உயிர்த்தபின் அதாவது ஒரு கட்புலனாகா உடலோடு அவர் சுற்றிய 40 நாட்களில் என்ன செய்தார்?

போதித்தாரா? இல்லை யூத குருவுடன் மல்லுக்கு நின்றாரா?

இல்லை , பைபிளை நன்றாக கவனியுங்கள்

உயிர்த்த இயேசு முதலில் மதலேன் மரியாளுக்கு தோன்றினார், அந்த அம்மணி அவர் காலை பிடித்து அழுதது

என்னை விடு என உடனே கிளம்பிய இயேசு கடற்கரைக்கு சென்று மீன் சாப்பிட்டிருக்கின்றார்

அவ்வளவுக்கு அவருக்கும் மீனுக்குமான பிணைப்பு இருகின்றது

இதோ இயேசு உயிர்த்துவிட்டார், உயிர்த்த அவர் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் தேடி வருவார் என சர்ச்சில் சொல்கின்றார்கள்

இந்த படுபாவியினை தேடி வந்தால் அவருக்கு கொடுக்க மீனை தவிர எது பொருத்தமாக இருக்க முடியும்?

இதோ சங்கம் மீன்கடை நோக்கி ஓடுகின்றது

இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது

கொஞ்ச நாளாக இல்லா குண்டுவெடிப்பு இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது

பன்னாட்டு உளவு நிறுவணங்கள் எச்சரித்து கொண்டேதான் இருந்தன , அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதுகாப்பு பலபடுத்தபட்டபின் கிழக்காசிய மற்றும் ஐரோப்பியர் கூடும் ஆப்ரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்றது போல நடக்கலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள்

இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முதல் சர்வதேச தீவிரவாதிகள் உலவுவது ஒன்றும் ரகசியம் அல்ல, உலகின் ஆபத்தான குண்டர்கள் இலங்கையின் சிங்கள பாதாள உலக ரவுடிகள் என்கின்றது ஆய்வு

எவ்வளவு என்றால் இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு மிகுந்த காரை கூட அவர்கள் வாங்க போட்டி போட்டனர், பின்பு அதை கடலில் போட்டது அரசு

அவ்வளவு பொல்லா கூட்டம் அது, சிங்கம் 2 படத்தில் கூட இயக்குநர் ஹரி அந்த சாயலை காட்டி இருப்பார்

ஆக ஏதோ ஒரு சர்வதேச தீவிரவாத இயக்கம் உள்ளூர் கும்பலோடு கைகோர்த்து இந்த பாதகத்தை நடத்திவிட்டது

உறுதியாக சொல்லலாம் புலிகள் மேல் எவ்வளவு சர்ச்சை இருந்தாலும் கிறிஸ்தவ ஆலயங்கள் பக்கம் வந்ததே இல்லை வந்தால் ஐரோப்பா பக்கம் செல்ல முடியாது

இது முழுக்க முழுக்க ஐரோப்பா பக்கம் செல்லமுடியாத ஏதோ ஒரு தீவிரவாத இயக்கம் செய்திருக்கும் சதி செயல்

எமக்கு வருத்தம் என்னவென்றால் புனித அந்தோணியார் ஆலயத்தில் இந்த சதிசெயலை செய்திருக்கின்றார்கள்

நிச்சயம் புனித அந்தோணியார் அந்த சதிகாரர்களை அடையாளம் காட்டுவார்

பிரான்ஸ் ஆலயத்தை தொடர்ந்து உயிர்ப்பு நாளில் இலங்கை ஆலயமும் சிதைந்து கிடப்பது கிறிஸ்தவர்களுக்கு வலியே

ஆனால் எப்படிபட்டது கிறிஸ்தவம்? இதை போல ஆயிரம் சம்பவங்களை கண்டது மீண்டது

இந்த சர்வதேச சதிசெயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்

ஆனால் நான் அதிகாரத்தில் இல்லாத நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது என ராஜபக்சே வரிந்து கட்டி கிளம்புகின்றார்

அவர் இதை பிடித்து சர் சர்ரென அரசியலில் ஏறி வருவார், பொறுத்து பாருங்கள்

நிச்சயம் கிறிஸ்தவரை ஐரோப்பியரை குறிவைத்து நடந்த தாக்குதல் இது, அவர்கள்தான் குறி

இது கோவை சம்பவம் போல தொடர் குண்டுவெடிப்பு என்பதால் இப்போதைக்கு 80 பேர் காயம் எனும் செய்திதான் வந்திருக்கின்றது

தகவல் வர வர தொடர்ந்து தருகின்றோம்

தயவு செய்து இந்திய மீடியாக்களை மட்டும் பார்த்து தொலைக்காதீர்கள்

கடவுளின் மகனால் அன்றி வேறுயாரால் சாத்தியம்

ஒரு யூதனிடம் பேசும் பொழுது இப்படித்தான் சொன்னான்

நண்பரே இயேசு உயிர்த்திருக்கலாம் ஆனால் உயிர்த்தவர் என்ன செய்திருக்க வேண்டும், ஏரோது முன்னாலும் பிலாத்து முன்னாலும் வந்து சிரித்திருக்க வேண்டும்

இயேசு இறந்துவிட்டார் என சான்றிதழ் கொடுத்தது லூக்காஸ் என்கின்றார்கள், ஆம் இரண்டாம் நற்செய்தி எழுதிய அந்த லூக்கஸ்

ஆனால் இயேசு ஏன் வரவில்லை, அவர் உயிர்த்தது உண்மை என்றால் மறுபடியும் போதிக்க வந்திருக்கலாம் கைப்பஸும் அன்னாசும் அலறி இருப்பார்கள்

ஆனால் அவர் அப்படி செய்யவில்லையே ஏன்?

அதனால்தான் சொல்கின்றோம் , கிறிஸ்தவம் என்பது அவர் உடலை திருடி அவரின் அப்போஸ்தலர் செய்த ஏமாற்று வேலையே அன்றி வேறல்ல, ஆனால் அவர் ஒரு இறைவாக்கினர் என்பதில் சந்தேகமில்லை”

இஸ்லாமியனிடம் கேட்டால் இயேசு என்பவர் ஈசா நபி ஆனால் அவர் சிலுவையில் அறையபடாமல் மலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டார் அறையபட்டது இன்னொருவர்

இயேசு விண்ணகம் ஏறி சென்றார் கடைசி நாளில் வருவார்

ஆக யூதரும் இஸ்லாமியரும் இயேசு பற்றி சொல்வது இதுதான்

ஆனால் கிறிஸ்தவர் சொல்வது இதுதான்

கிறிஸ்து உயிர்த்தபின் தன்னை நம்பியவர்களுக்கு மட்டும் தோன்றினார், இன்னும் தன்னை நம்பியவர்களுக்க்கு அவர் கண்முன் நிற்கின்றார்

ஆம் அதுவும் சரிதான், ஒரு சாதாரண மனிதனின் சாவென்றால் அது இவ்வளவு பெரும் வீச்சினை உலகில் ஏற்படுத்தியிருக்க முடியாது

இந்த உலகில் மாபெரும் மாற்றத்தை இயேசுவின் மரணமும் அவர் உயிர்த்தார் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தியது

அவர் மெசியவா இல்லை இன்னொருமுறை வருவாரா என்பது விஷயம் அல்ல‌

அவரிடம் ஏதோ இருக்கின்றது, பெரும் அருள் அவரோடு இருந்திருக்கின்றது

இல்லை என்றால் 2000 ஆண்டு கடந்தும் ஒருவன் உலகினை பாதித்து கொண்டே இருக்க முடியுமா?

அந்த இயேசு சிலுவையில் இருக்கும் பொழுது அந்த நூற்றுவர் தலைவன் சொன்னதுதான் சரி

ஆம் அவர் உண்மையிலே கடவுளின் மகனாய் இருந்தார்

எந்த ரோமை அரசு இயேசுவினை கொன்றதோ அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கத்தியின்றி ரத்தமின்றி கிறிஸ்தவம் கைபற்றி 2000 ஆண்டுகளாக அசைக்க முடியாத வகையில் அமர்ந்திருப்பது கடவுளின் மகனால் அன்றி வேறுயாரால் சாத்தியம்

நடிகை ராதிகா கொழும்பில் சிக்கியிருக்கின்றார்

நடிகை ராதிகா கொழும்பில் சிக்கியிருக்கின்றார்

நடிகை ராதிகாவின் தாயார் இலங்கையர் என்பதால் அந்நாடுக்கும் ராதிகாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகம், அதை ராதிகாவின் சீரியல்களில் கூட நீங்கள் பார்க்கலாம்

அடிக்கடி அங்கு செல்லும் ராதிகா இரு தினங்களுக்கு முன்பு அங்கு சென்றிருக்கின்றார்

குண்டுவெடிப்பு நடந்த இடம் அருகேதான் அவர் தங்கியிருந்தார் என்கின்றன செய்திகள்

சில தரப்பு சொல்லும் தகவல் உறுதிபடுத்தபடவில்லை

இலங்கையில் அவசரநிலை பிரகடனபடுத்து வாட்சப் முகநூல் இன்னும் பல விஷயம் முடக்கபட்டிருப்பதால் ராதிகா தரப்பு ஒரு வித கலக்கத்தில் இருக்கின்றது

ஒரு காலத்தில் தனுஷ்கோடி புயலில் சாவித்திரி சிக்கியது போன்ற நிலை இது

ராதிகா மிக நலமாக திரும்புவார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது, நிச்சயம் அவர் நலமுடன் திரும்புவார்